Namma Vellur நம்ம வெள்ளூர்

Namma Vellur நம்ம வெள்ளூர் namma vellur

27/08/2026
சிவகாசி வட்டம், வெள்ளூர் கிராமத்தில் நன்செய் /புன்செய் /நத்தம் பட்டா உள்ள பட்டாதாரர்கள் தங்களது கணினி பட்டாவில் ஏதேனும் ...
16/07/2026

சிவகாசி வட்டம், வெள்ளூர் கிராமத்தில் நன்செய் /புன்செய் /நத்தம் பட்டா உள்ள பட்டாதாரர்கள் தங்களது கணினி பட்டாவில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அதனை திருத்தம் செய்வது தொடர்பான சிறப்பு முகாம் சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை வெள்ளிக்கிழமை (17.07.2926) காலை10:00 மணியளவில் நடைபெற உள்ளது. என்பதனை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தேவைப்படுபவர்கள் பட்டா உள்ளிட்ட தக்க ஆவணங்களுடன்

Namma Vellur நம்ம வெள்ளூர்

விருதுநகர் மாவட்டம் வெள்ளூர் கிராம பகுதியைச்சார்ந்த 8 மாரியப்பன் அவர்கள் இன்று (11.05.2026) காலமானார் . #ஆழ்ந்தஇரங்கலை த...
11/05/2026

விருதுநகர் மாவட்டம் வெள்ளூர் கிராம பகுதியைச்சார்ந்த
8 மாரியப்பன் அவர்கள் இன்று (11.05.2026) காலமானார் .

#ஆழ்ந்தஇரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

பழைய நினைவுகள்  #கல்குவாரிஎதிர்ப்புபோராட்டம்  #வெள்ளூர் கிராமம் முதல் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நடந்தே ம...
06/05/2026

பழைய நினைவுகள்

#கல்குவாரிஎதிர்ப்புபோராட்டம்

#வெள்ளூர் கிராமம் முதல் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நடந்தே மனு கொடுக்க சென்ற கிராம மக்கள்

Photo google ai

NAMMA VELLUR  விருதுநகர் சட்டமன்ற தொகுதிக்கு  #வெள்ளூர் ஊராட்சி 7 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்கு விபரம் வெள்ளூர் பகுதி...
06/05/2026

NAMMA VELLUR

விருதுநகர் சட்டமன்ற தொகுதிக்கு
#வெள்ளூர் ஊராட்சி 7 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்கு விபரம்

வெள்ளூர் பகுதியில் உள்ள 5 வாக்குச்சாவடி மையம்.
சிதம்பராபுரம், முத்துக்குமாராபுரம் ஆகிய இரண்டு வாக்குச்சாவடி மையம்

வெள்ளூர் ஊராட்சியின் 7 வாக்குச்சாவடி மையத்தில் தமிழக வெற்றி கழகம்- 1292 வாக்குகள் அதிகம் பெற்று முதலிடம்.

தேசிய முற்போக்கு திராவிட கழகம் - 1066 வாக்குகள் பெற்று இரண்டாம்.

அதிமுக மூன்றாவது இடம், நாம் தமிழர் கட்சி நான்காவது இடம்.

நமது கிராமத்தில் அருகே உள்ள #கவுண்டம்பட்டியில் தேமுதிகவிற்கு ( 297 )அதிகம் வாக்கு செலுத்தி உள்ளனர். அங்கு TVK கட்சிக்கு 143 வாக்குகள் செலுத்தியுள்ளனர்.

வெள்ளூர் மத்தியசேனை, சிதம்பராபுரம் முத்துக்குமராபுரம் கவுண்டம்பட்டி நாட்டார்மங்கலம் ஆமத்தூர் ஆகிய பகுதிகளில்
தவெக- 3039,
தேமுதிக - 2654,
அதிமுக 1911,
நாம் தமிழர் கட்சி 438
வாக்குகள் பெற்றுள்ளது.

Namma Vellur நம்ம வெள்ளூர்
Virudhunagar Namma Vellur

@அனைவருக்கும் அன்பு வணக்கம் .,அன்பான வேண்டுகோள்.கோயில் நன்கொடை  #கல்வெட்டுகளில் ஜாதி பெயரை குறிப்பிட்டு இடம் பெறச்செய்யா...
27/04/2026

@அனைவருக்கும் அன்பு வணக்கம் .,
அன்பான வேண்டுகோள்.

கோயில் நன்கொடை #கல்வெட்டுகளில் ஜாதி பெயரை குறிப்பிட்டு இடம் பெறச்செய்யாதீர்கள்.

நமது பகுதியில் #கோயில் #ஆலயம், #வழிபாட்டுத்தலங்கள் கட்டுவது மகிழ்ச்சியான விஷயமாக இருந்தாலும் இந்த கோயில் கட்டுமான பணிக்காக ஊர் பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ,அமைப்புகள், கட்சிகள் ஆகிய இவர்களிடத்தில் இருந்து வரிப்பணம் அல்லது நன்கொடையாக பெறப்பட்டு கோயில் கட்டுமான பணியை கட்டி கொண்டாடி வருகிறீர்கள். அந்த கோயிலுக்குள் சாமி பெயரில் அழகிய சிலைகளுடன் காட்சிப்படுத்துகிறீர்கள். ஒவ்வொரு சிலைக்கும் ஒரு பெயர் வைத்து அதற்கான புராண வரலாறுகளை குறிப்பிட்டு மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்கிறீர்கள்.
பொதுவாக ஒரு குடும்பத்தினர் அல்லது #குழந்தைகள், இளைஞர்கள் மாணவர்கள், பெண்கள் பொதுமக்கள் யாராவது கோயிலுக்கு நுழைந்து கோயில் உள்ள ஒவ்வொரு சிலையும் அதனுடைய புராணக்கதை, தன்மைகளை படித்து அல்லது கேட்டு அறிந்து கொண்டு வரும் பொழுது இந்த சாமி பெயர் இப்படியா இப்படியெல்லாம் இந்த சாமி இருக்குமா என்று ஒரு ஆச்சரியத்தோடு கேட்பார்கள். இப்படி அடுத்தடுத்த சிலைகளை குறித்து அறிந்து கொள்வார்கள்.

கோயில் உள்ள ஒவ்வொரு சிலை படைப்புகளையும் அறிந்து வரும் பொழுது கோயில் ஒரு பகுதியில் பெரிய கல்வெட்டு இருக்கிறது. இந்த கோயில் கட்டுமான பணிக்காக யாரெல்லாம் நன்கொடை, வரி கொடுத்தவர்களின் பெயர்களை குறிப்பிட்டு இருக்கிறீர்கள் அது தேவையானது.
அதில் சமுதாயம் ஜாதி 1.... ........
சமுதாயம் 2.....
சமுதாயம் 3.......
இப்படி குறிப்பிட்டு இதனைச்சார்ந்தவர்கள் இவ்வளவு தொகை கொடுத்தார்கள் என்று அவர்களின் பெயருடன் ஜாதிகளை குறித்து கல்வெட்டில் இடம்பெறச்செய்யாதீர்கள்.
ஒரு நபர் நன்கொடையாக கொடுத்தார்கள் என்றால் அவரது பெயருடன் முழு விவரமாக தந்தையின் பெயரை குறிப்பிடுங்கள் அவரின் படிப்பு, தொழில் விவரங்கள், அவருக்கான அடைமொழி பட்டப்பெயர்களை குறிப்பிடலாம் இதுதான் சரியாக இருக்கும். இப்படி பொதுவாக குறிப்பிடும் பொழுது நாமும் அதிகமாக கோயிலுக்கு கொடுக்க வேண்டும் ,அதிகம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும்.இதை விட்டுவிட்டு இந்த ஜாதிக்காரர் இவ்வளவு ரூபாய் பணம் வரி ,நன்கொடை கொடுத்தார் என்று எல்லாரும் அறிந்து கொள்ளும் வகையில் கல்வெட்டில் இடம் பெற செய்யாதீர்கள்.

கோயிலுக்குள் சுற்றி வந்தவர்கள் சாமி சிலைகளின் பெருமைகள் தன்மைகளை படித்து வந்தவர்கள் திடீரென்று கல்வெட்டை பார்க்கும் பொழுது பெயருடன் (ஜாதி) குறித்து படிக்கும் பொழுது குழப்பம்,முரண்பாடு ஏற்படுகிறது.

கோயிலில் அனைத்து மனிதர்களையும் சமமாக பார்க்கக்கூடிய இடமாக காணப்படுகிறது. எல்லா மனிதரும் மனிதர் என்ற அடையாளத்தோடு பார்ப்போம். ஜாதி அடையாளத்தோடு பிரித்துப்பார்க்கும் எண்ணத்தை உண்டாக்க வேண்டாம்.

கோயில் வழிபாட்டு தலங்களில் அனைத்து மக்களிடையே #சமாதானமும் #அன்பும் ஒற்றுமையும் பெருகட்டும் அதுதான் கடவுள் விரும்புகிறார்.
அங்கு தான் #கடவுள் இருக்கிறார்.

Namma Vellur நம்ம வெள்ளூர் Namma Vellur Virudhunagar

விருதுநகரில் அரசு அருங்காட்சியகம் புதிதாக திறக்கப்பட்டுள்ளது இதில் நமது  #வெள்ளூர் கிராமம் குறித்த வரலாற்று குறிப்புகள் ...
27/02/2026

விருதுநகரில் அரசு அருங்காட்சியகம் புதிதாக திறக்கப்பட்டுள்ளது இதில் நமது #வெள்ளூர் கிராமம் குறித்த வரலாற்று குறிப்புகள் கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளது.
நமது பகுதி பள்ளி கல்லூரி மாணவ ,மாணவிகள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சென்று பார்த்து வாருங்கள்.

விருதுநகரில் அரசு அருங்காட்சியகத்திற்கான புதிய கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (27.02.2026) வியாழக்கிழமை காணொளி மூலம் திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்ட புதிய பேருந்து நிலையம் - மாவட்ட விளையாட்டு மைதானம் (முனிசிபால் ஆபீஸ் சாலை) செல்லும் சாலையில் புதிய அரசு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

அருங்காட்சியகம் வெள்ளிக்கிழமை மற்றும் இரண்டாவது சனிக்கிழமைகளைத் தவிர மற்ற நாட்களில் காலை 10.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை திறந்திருக்கும். குழந்தைகளுக்கு ₹5 மற்றும் பெரியவர்களுக்கு ₹10 நுழைவு கட்டணம்.

கல்விச் சுற்றுலா செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இது இலவசம்.

வாழ்த்துகள்
மிக்க நன்றி... #தமிழ்நாடுஅரசு, தமிழ்நாடு தொல்லியல் துறை, விருதுநகர் மாவட்ட நிர்வாகம்

https://maps.app.goo.gl/poDQt1vUKGeszUa49?g_st=aw
0 .district Virudhunagar Collector Polimer News Namma Vellur நம்ம வெள்ளூர் Google M. K. Stalin Virudhunagar Hi-fashion Sivakasi

Address

Vellur , Amaththur (post) Virudhunagar District
Virudunagar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Namma Vellur நம்ம வெள்ளூர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share