Divisional Secretariat Manthai West / பிரதேச செயலகம் மாந்தை மேற்கு

  • Home
  • Sri Lanka
  • Adampan
  • Divisional Secretariat Manthai West / பிரதேச செயலகம் மாந்தை மேற்கு

Divisional Secretariat Manthai West / பிரதேச செயலகம் மாந்தை மேற்கு This page is the official page of the Divisional Secretariat, Manthai West

17/07/2026
இலவச சித்த மருத்துவ முகாம்📅 தேதி: 17.07.2026🕣 நேரம்: காலை 8.30 – மதியம் 2.00📍 இடம்: ஆண்டாங்குளம் மகா வித்தியாலயம்உங்கள் ...
16/07/2026

இலவச சித்த மருத்துவ முகாம்

📅 தேதி: 17.07.2026
🕣 நேரம்: காலை 8.30 – மதியம் 2.00
📍 இடம்: ஆண்டாங்குளம் மகா வித்தியாலயம்

உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள். குடும்பத்தினர், நண்பர்கள் அனைவரையும் அழைத்து வாருங்கள்!

📢📢 யாழ்ப்பாணம் மன்னார் வீதியினுடாக செல்லும் பார  ஊர்தி உரிமையாளர்களின் கவனத்திற்கு.
15/07/2026

📢📢 யாழ்ப்பாணம் மன்னார் வீதியினுடாக செல்லும் பார ஊர்தி உரிமையாளர்களின் கவனத்திற்கு.

📢 பொதுமக்களின் கவனத்திற்குதேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை இப்போது வீட்டிலிருந்தபடியே எளிதாக ஆன்லை...
14/07/2026

📢 பொதுமக்களின் கவனத்திற்கு

தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை இப்போது வீட்டிலிருந்தபடியே எளிதாக ஆன்லைனில் அறிந்து கொள்ளலாம். 🪪💻

✅ விண்ணப்பத்தின் முன்னேற்ற நிலையை சில எளிய படிகளின் மூலம் சரிபார்க்கலாம்.
✅ தயாரான தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளும் தகவலையும் அறிந்து கொள்ளலாம்.

📌 மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வழிகாட்டியைப் பின்பற்றுங்கள்.

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் 2026 ஆம் ஆண்டின் 2ஆம் காலாண்டிற்கான பிரதேசமட்ட சிறுவர் அபிவிருத்திக் குழு, ...
09/07/2026

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் 2026 ஆம் ஆண்டின் 2ஆம் காலாண்டிற்கான பிரதேசமட்ட சிறுவர் அபிவிருத்திக் குழு, போதைப்பொருள் ஒழிப்பு, உளநலம், விசேட தேவையுடையோர் மற்றும் பால், பால்நிலை தொடர்பான வன்முறைகளுக்கு எதிரான குழுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பின்வரும் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

✅ பொலிஸ் அலுவலர்கள் (இலுப்பைக்கடவை / அடம்பன்)
✅ வலயக் கல்விப் பணிமனை அதிகாரிகள்
✅ பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி
✅ பிரதேச சபை உத்தியோகத்தர்கள்
✅ தொழில் திணைக்கள அதிகாரிகள்
✅ அரச சார்பற்ற நிறுவனங்களின் அலுவலர்கள்
✅ உளநல வைத்திய அதிகாரி
✅ சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர்கள்
✅ சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள்
✅ பிரதேச செயலக அலுவலர்கள் (பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக கிராம அலுவலர், சிறுவர் பெண்கள் பிரிவு, சமூக சேவைகள் கிளை)

சிறுவர்களின் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு, உளநல மேம்பாடு, விசேட தேவையுடையோரின் நலன்பேணல் மற்றும் பால், பால்நிலை தொடர்பான வன்முறைகளைத் தடுப்பதற்கான ஒருங்கிணைந்த செயற்பாடுகள், முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இனி விண்ணப்பப் படிவங்களுக்காக பிரதேச செயலகத்தில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டியதில்லை! உங்கள் அனைத்து அரசுத் தேவைகளையும் ...
07/07/2026

இனி விண்ணப்பப் படிவங்களுக்காக பிரதேச செயலகத்தில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டியதில்லை! உங்கள் அனைத்து அரசுத் தேவைகளையும் எளிய 3 படிகளில் நிறைவேற்றுங்கள்:

படி 1: தகவல்களைப் பெறுங்கள். உங்கள் போனில் ⁠[https://mwservice.netlify.app/] என்ற இணையதளத்தைப் பார்வையிடுங்கள். அங்கு அனைத்து சேவைகள் பற்றியும் தெரிந்துகொள்ளலாம். படத்தில் உள்ளபடி எல்லாம் எளிதில் கிடைக்கும்.

படி 2: படிவங்களைத் தரவிறக்கம் செய்யுங்கள். இணையதளத்தில் உங்களுக்குத் தேவையான எந்தவொரு சேவையின் விண்ணப்பப் படிவத்தையும் எளிதாகத் தரவிறக்கம் செய்யலாம். படத்தில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமும் நேரடியாக தரவிறக்கப் பக்கத்தை அடையலாம்.

படி 3: நேரத்தை மிச்சப்படுத்துங்கள். பூர்த்தி செய்த படிவங்களை பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்கலாம். உங்கள் வசதிக்கேற்ப இந்த சேவையைப் பயன்படுத்துங்கள்!

இந்த எளிய வழியை அனைவரும் தெரிந்துகொள்ள இந்தப் பதிவை ஷேர் (Share) செய்யுங்கள். டிஜிட்டல் மாந்தை மேற்கு சமூகத்தை உருவாக்குவோம்!

https://mwservice.netlify.app/

நமது பிரதேச செயலகத்தின் அனைத்து முக்கிய செய்திகள், அவசர கால அறிவுறுத்தல்கள் மற்றும் அரச அறிவிப்புகளை உடனுக்குடன் பெற்றுக...
07/07/2026

நமது பிரதேச செயலகத்தின் அனைத்து முக்கிய செய்திகள், அவசர கால அறிவுறுத்தல்கள் மற்றும் அரச அறிவிப்புகளை உடனுக்குடன் பெற்றுக் கொள்ள, எமது புதிய அதிகாரப்பூர்வ WhatsApp Channel-இல் இன்றே இணைந்து கொள்ளுங்கள்.

இணைவதற்கு இந்த 3 எளிய படிகளைப் பின்பற்றுங்கள்:

1️⃣ கிளிக் அல்லது ஸ்கேன் செய்யுங்கள்: கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை (Link) கிளிக் செய்யவும் அல்லது ⁠படத்தில் காட்டப்பட்டுள்ள QR Code-ஐ உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் ஸ்கேன் செய்யவும்.

2️⃣ Follow பட்டனை அழுத்தவும்: மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் WhatsApp Channel திறந்ததும், வலது மேல் மூலையில் உள்ள "Follow" பட்டனை அழுத்தவும்.

3️⃣ Notifications-ஐ On செய்யவும்: புதிய அறிவிப்புகள் உடனுக்குடன் உங்கள் திரைக்கு வருவதை உறுதி செய்ய, அங்கிருக்கும் '🔔' (Bell) ஐகானை அழுத்தி Notifications-ஐ ஆன் செய்து கொள்ளவும்.

https://whatsapp.com/channel/0029VbBTVJc9Bb62kfkJn21j

பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் (03.07.2026) பிரதேச செயலாளர் திரு.காந்திராசா காந்தீபன் அவர்களது ஒழுங்கமைப்பில் கௌரவ பா...
05/07/2026

பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் (03.07.2026) பிரதேச செயலாளர் திரு.காந்திராசா காந்தீபன் அவர்களது ஒழுங்கமைப்பில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான திரு ம.ஜெகதீஸ்வரன் அவர்களின் தலைமையில் எமது மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான திரு. செல்வம் அடைக்கலநாதன், திரு. துரைராசா ரவிகரன், திரு. செல்லத்தம்பி திலகநாதன் மற்றும் திரு. காதர் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.மேலும் அரச திணைக்களங்களின் பிரதிநிதிகள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் எமது அலுவலர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

மேற்படி கூட்டத்தில் பிரதேச அபிவிருத்தி தொடர்பான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

விதாதா வளநிலையத்தில் கச்சான் அடிப்படையாக கொண்ட தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.
02/07/2026

விதாதா வளநிலையத்தில் கச்சான் அடிப்படையாக கொண்ட தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.

விதாதா வளநிலையத்தில் 24.06.2026 அன்று கற்றாழையை அடிப்படையாக கொண்ட தொழில்நுட்ப பயிற்சி (Aloevera juice, Aloevera soap) நட...
02/07/2026

விதாதா வளநிலையத்தில் 24.06.2026 அன்று கற்றாழையை அடிப்படையாக கொண்ட தொழில்நுட்ப பயிற்சி (Aloevera juice, Aloevera soap) நடைபெற்றது.

Address

Main Road
Adampan
41160

Opening Hours

Monday 08:30 - 16:15
Tuesday 08:30 - 16:15
Wednesday 08:30 - 16:15
Thursday 08:30 - 16:15
Friday 08:30 - 16:15

Alerts

Be the first to know and let us send you an email when Divisional Secretariat Manthai West / பிரதேச செயலகம் மாந்தை மேற்கு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share