பைரூஸ் அல் சுலைமான்

பைரூஸ் அல் சுலைமான் Invisible in a crowd

🚨 Facebook Live-இல் நிகழ்ந்த கொடூரம் - 10 வருட உழைப்பைத் தின்ற துரோகத்தின் பின்னணி! 🔴இலங்கையையே உலுக்கிய அந்த முகநூல் நே...
16/07/2026

🚨 Facebook Live-இல் நிகழ்ந்த கொடூரம் - 10 வருட உழைப்பைத் தின்ற துரோகத்தின் பின்னணி!

🔴இலங்கையையே உலுக்கிய அந்த முகநூல் நேரலை மரணத்தின் பின்னணியில் இருக்கும் நெஞ்சை பிளக்கும் உண்மைச் சம்பவம் இதோ!

யார் இந்த தினேஷ்? என்ன நடந்தது?
இலங்கையின் கரந்தெனிய, தல்கஹவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய தினேஷ் விஜேவர்தன என்ற இளைஞனே இவ்வாறு முகநூல் நேரலையில் தனது உயிரை மாய்த்துக்கொண்டவர்.
வறுமைக் குடும்பத்தில் பிறந்து, எப்படியாவது குடும்பத்தைக் கரைசேர்க்க வேண்டும் என்ற கனவோடு, தனது 25ஆவது வயதில் கொரிய மொழிப் பரீட்சையில் சித்தியடைந்து கொரியாவுக்குப் பயணித்தார் தினேஷ்.

🏠 வியர்வை சிந்திய உழைப்பும்... ஏமாற்றிய தாயும்!
கொரியாவின் கடுமையான குளிரிலும் வெயிலிலும் தினேஷ் சிந்திய ஒவ்வொரு சொட்டு வியர்வையும் பணமாக மாறியது.
பெற்ற தாயையும் அண்ணனையும் நல்ல நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்ற ஒரே நோக்கில், தான் சம்பாதித்த அத்தனை பணத்தையும் தாயின் பெயருக்கே அனுப்பினார்.
"ஒருநாள் இந்த வீட்டை உனக்கு எழுதித் தருகிறேன்" என்று தாய் கொடுத்த வாக்கை நம்பி, 6 வருட உழைப்பில் ஒரு அழகான மாளிகையைக் கட்டியெழுப்பினார்.

⚡ இடிமேல் விழுந்த பேரிடி!
அண்மையில் இலங்கை திரும்பி திருமணமும் செய்துகொண்டார் தினேஷ். ஆனால், மகிழ்ச்சி நீடிக்கவில்லை. மனைவியின் தூண்டுதலால் வீட்டைத் தன் பெயருக்கு மாற்றுமாறு தாயிடம் கேட்கப்போன தினேஷுக்குப் பேரிடி காத்திருந்தது!

🚫 அவர் இரவும் பகலும் உழைத்துக் கட்டிய வீடு, ஏற்கனவே தாயாரால் அவரது அண்ணனின் பெயருக்கு ரகசியமாக எழுதி வைக்கப்பட்டுவிட்டது! பெற்ற தாயும், உடன் பிறந்த சகோதரனும் செய்த இந்தத் துரோகம் அவரை மன ரீதியாக முற்றாக உடைத்துப் போட்டது.

🧾 எஞ்சியதையும் சுட்டெரித்த உள்நாட்டு இறைவரித் திணைக்களம்!
கையில் மிஞ்சியிருந்த சொற்பப் பணமும், ஒரு வேன் (Van) வண்டியும் மட்டுமே அவரிடம் இருந்தன. இந்நிலையில், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திலிருந்து (Income Tax) வந்த கடிதம் அவரது 10 வருட உழைப்பை அப்படியே சுட்டெரித்தது.
பெரிய தொகையொன்றை வரியாகச் செலுத்த வேண்டியிருந்ததால், வேனை விற்றுக் கிடைத்த பணத்தைக் கொண்டு வரியைச் செலுத்தி முடிக்க, அவரிடம் எஞ்சியது வெறும் 15 இலட்சம் ரூபாய் மட்டுமே! 💸📉

😔 சோகத்தில் முடிந்த போராட்டம்!
10 வருடக் கனவு, மாளிகை, குடும்பம் என அத்தனையையும் இழந்து நடுத்தெருவில் நின்ற தினேஷுக்கு, சுற்றத்தாரின் நிந்தனைகளையும், நிச்சயமற்ற எதிர்காலத்தையும் தாங்கிக் கொள்ளும் சக்தி இருக்கவில்லை. இறுதியில் முகநூல் நேரலையில் தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.

எத்தனையோ துரோகங்கள்... ஆனாலும் வாழ வேண்டும்!
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. நம்மை ஏமாற்றியவர்கள் பார்த்துப் பொறாமைப்படும் படி வாழ்ந்து காட்டுவதே அவர்களுக்கு நாம் கொடுக்கும் ஆகச்சிறந்த தண்டிப்பாகும்!
வறுமை அணுஅணுவாகக் கொல்லும் தான், சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலை வரலாம் தான்... ஆனாலும் வாழ வேண்டும்! போராடினால் நிச்சயமாக ஒருநாள் நிறைவாக வாழலாம்!

சிறைக்குள் பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகளை திட்டமிட்டு சிறைப் பிடித்து ஜிம்மில் இருந்த இரும்பு கம்பிகளால் அவர்களி...
07/07/2026

சிறைக்குள் பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகளை திட்டமிட்டு சிறைப் பிடித்து ஜிம்மில் இருந்த இரும்பு கம்பிகளால் அவர்களின் முகம் சிதையும் அளவுக்கு ஆக்ரோசமாகவும், மிருகத்தனமாகவும் அடித்தே கொன்றிருக்கிறார்கள்.

அத்தோடு இவர்களின் வெறித்தனம் அடங்கவில்லை கொன்றது போக கதவைத் திறந்து உடலை வெளியே வீசி எச்சரிக்கின்ற அளவுக்கு துணிச்சலும், ஈவிரக்கமற்ற கொடூர குணமும் இவர்களிடம் வெளிப்பட்டிருக்கிறது.

இந்தச் சம்பவத்தை எந்தவொரு நாகரீக சமூகமும் சாதாரணமாகக் கடந்து சென்று விட முடியாது.

இவ்வளவு கொடூரங்களை அரங்கேற்றிய பிறகும் இவர்களை அப்பாவிகள் என்று வாதாடுவதற்கு ஒரு கூட்டம் கிளம்பக் கூடும்.

ஆனால் உண்மை என்னவென்றால் இவர்கள் போதை என்ற அரக்கனின் பிடியில் சிக்கி மனிதத் தன்மையை முற்றிலுமாக இழந்து விட்டார்கள்.

போதை கிடைக்காத ஏக்கத்தில், ஒவ்வொருவனும் தங்களுக்குள் இருக்கும் மிருகத்தை வெளியே கொண்டு வந்து கண்ணில் பட்ட அதிகாரிகளைத் தங்களின் கொடூர வெறிக்கு இரையாக்கியுள்ளனர்.

தவறு செய்து விட்டு சிறைக்குள் வரும் கைதிகளைத் திருத்த முயலும் அதிகாரிகளுக்கு கைதிகளாலேயே மரணம் பரிசாகக் கிடைக்கிறது என்றால் இங்கு யாருக்குப் பாதுகாப்பு இருக்கிறது...?

இப்படிப்பட்ட ஈவு இரக்கமற்ற மனித உருவில் உலாவும் மிருகங்களை வெறும் சிறைத்தண்டனையால் மட்டும் அடக்கி விட முடியாது.

கடமையில் இருந்த அதிகாரிகளை அடித்துக் கொல்லும் அளவுக்குச் சட்டத்தை கையில் எடுப்பவர்களுக்கு அதே சட்டத்தின் மிகக் கடுமையான பக்கங்களைக் காட்ட வேண்டும்.

மிருகமாய் மாறியவர்களை மனிதர்களாக நடத்த முடியாது.

இத்தகைய ஆபத்தான, கட்டுப்பாடற்ற வன்முறையாளர்களை அடக்குவதற்கும் மற்ற அதிகாரிகளின் உயிரைப் பாதுகாப்பதற்கும் துப்பாக்கிச் சூடு போன்ற கடுமையான அதிரடி நடவடிக்கைகளே மிகச் சரியானதும், அவசியமானதும் ஆகும்.

இருட்டினில், அல்லது தெரியாத வியாபாரிகளிடம் அவதானமாய் இருங்கள்.இப்படி பெயிண்ட் பூசி பழுதடைந்த பழங்களும் விற்கப்படுகின்றன....
29/06/2026

இருட்டினில், அல்லது தெரியாத வியாபாரிகளிடம் அவதானமாய் இருங்கள்.

இப்படி பெயிண்ட் பூசி பழுதடைந்த பழங்களும் விற்கப்படுகின்றன.

#அவதானம்

🇱🇰 *1,200 வீரர்களின் உயிருக்காக மரணத்தைத் தழுவிய "சிறப்புப் படையின்" தனித்துவமான சிங்கம் - கர்னல் ஃபஸ்லி லாபீர்!* 🦅🛡️இலங...
19/06/2026

🇱🇰 *1,200 வீரர்களின் உயிருக்காக மரணத்தைத் தழுவிய "சிறப்புப் படையின்" தனித்துவமான சிங்கம் - கர்னல் ஃபஸ்லி லாபீர்!* 🦅🛡️

இலங்கை இராணுவ வரலாற்றின் மிகக் கொடூரமான போரின் நடுவில், எதிரியின் துப்பாக்கிச் சூட்டின் மத்தியில் தன் உயிரைத் தியாகம் செய்து 1,200க்கும் மேற்பட்ட சக வீரர்களின் உயிரைக் காப்பாற்றிய துணிச்சலான, அசாதாரண தலைவரின் வீரக் கதை இது. அவர் பெயர் கர்னல் அஸ்லம் ஃபஸ்லி லாபீர் (Colonel Aslam Fazly Laphir PWV, RWP, RSP).

இலங்கை இராணுவத்தின் பெருமைமிகு "சிறப்புப் படை" (Special Forces - SF) முன்னோடித் தலைவரான அவரின் அந்த வீரத் தியாகம் இதுதான்:

*🦅 சிறப்புப் படையின் (SF) நிறுவனர்*
இராணுவத்தின் ஆரம்பகால "காம்பாட் ட்ராக்கர்" (Combat Tracker Team) குழுவிலிருந்து இன்று நாம் காணும் மாபெரும், திறமையான "இலங்கை இராணுவ சிறப்புப் படை ரெஜிமென்ட்" (Special Forces Regiment) உருவாக்கவும் விரிவாக்கவும் கர்னல் லாபீர் முக்கிய பங்காற்றினார். அவர் 1வது சிறப்புப் படை ரெஜிமென்டின் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றினார்.

*⚔️ முல்லைத்தீவு மாபெரும் போர் மற்றும் வான் தாக்குதல் (1996)*
1996 ஜூலை 18 அன்று, முல்லைத்தீவில் இருந்த இராணுவ முகாம் LTTE போராளிகளால் கடுமையாக முற்றுகையிடப்பட்டது. முகாமிற்குள் 1,200க்கும் மேற்பட்ட வீர்கள் சிக்கி மரணத்தின் விளிம்பில் இருந்த தருணத்தில், அவர்களை மீட்கும் அதி ஆபத்தான "வான்வழி மீட்பு நடவடிக்கையை" (Airborne Rescue Mission) நடத்த கர்னல் லாபீர் தானாக முன்வந்தார்.

எதிரியின் கடும் துப்பாக்கிச் சூட்டின் மத்தியிலேயே, ஹெலிகொப்டர் மூலம் அவரும் அவரது சிறப்புப் படை வீரர்கள் குழுவும் போர்க்களத்தின் நடுவில் வானிலிருந்து இறக்கப்பட்டனர்.

*🩸 காயமடைந்தும் பின்வாங்காமல் முன்னேறினார்!*
சண்டையின் போது எதிரியின் தாக்குதலில் கர்னல் லாபீர் பலத்த காயமடைந்தார். ஆனால் உண்மையான தலைவராக தன் காயங்களைப் பற்றி நினைக்காமல், போர்க்களத்திலிருந்து வெளியேற மறுத்து, முன்வரிசையில் இருந்து தன் வீர்களை ஊக்கப்படுத்தி வழிநடத்தினார்.

இறுதியாக, 1996 ஜூலை 19 அன்று எதிரியின் குண்டுவெடிப்பில் சிக்கி இந்த துணிச்சலான அதிகாரி தாய்நாட்டுக்காக உயிர் நீத்தார். அவரின் அசைக்க முடியாத தலைமைத்துவம் மற்றும் எதிர் தாக்குதலால் சிக்கியிருந்த நூற்றுக்கணக்கான சக வீர்களின் உயிர்களைப் பாதுகாக்கும் சூழ்நிலை உருவானது.

*🎖️ அரச மரியாதை மற்றும் பதக்கங்கள்*
போர்க்களத்தில் அவர் காட்டிய தனித்துவமான வீரம் மற்றும் தலைமைத்துவத்திற்காக இலங்கையின் மூன்று உயர்ந்த இராணுவ விருதுகளாலும் அவர் கௌரவிக்கப்பட்டார்:

*பரம வீர விபூஷணய (PWV)*: எதிரிகள் முன் காட்டிய ஒப்பற்ற துணிச்சலுக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த போர் வீரர் விருது.
*ரண விக்ரம பதக்கம் (RWP)*: போர்க்களத்தில் காட்டிய சிறப்பு துணிச்சலுக்காக.
*ரண சூர பதக்கம் (RSP)*: செயல்பாட்டு போர் முனையில் காட்டிய சிறந்த தலைமைத்துவம் மற்றும் வீரத்திற்காக.

கர்னல் லாபீர் வீரின் பெயர் இன்றும் சிறப்புப் படையிலும் முழு இராணுவத்திலும் தலைமைத்துவத்திற்கும் தைரியத்திற்கும் நித்திய சின்னமாக உள்ளது. அவரை நினைவுகூரும் வகையில் இலங்கை தேசிய பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் (INSS) ஆண்டுதோறும் சிறப்பு நினைவு சொற்பொழிவுத் தொடரையும் நடத்துகிறது.

தன் உயிரை விட தன்னிடம் இருந்த வீர்களின் மற்றும் தாய்நாட்டின் பாதுகாப்பை பெரிதாக நினைத்த இந்த வீரச் சிங்கத்துக்கு முழு இலங்கையின் வணக்கமும் உரியது!

ஈரான்மீதான போருக்கு முன்பும், பின்பும். பகுத்தறிவு உள்ளவர்கள் கூறுங்கள். வென்றது யார் ? ஈரான் மீது போர் தொடுப்பதற்கு முன...
15/06/2026

ஈரான்மீதான போருக்கு முன்பும், பின்பும். பகுத்தறிவு உள்ளவர்கள் கூறுங்கள். வென்றது யார் ?

ஈரான் மீது போர் தொடுப்பதற்கு முன்பு அமெரிக்கா பின்வரும் பிரதான நிபந்தனைகளை ஈரான் மீது விதித்தது.

👉செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும்.

👉நீண்டதூர ஏவுகணைகளை அழிக்க வேண்டும். குறிப்பாக 200 km தூரத்துக்கு மேல் செல்லக்கூடிய ஏவுகணைகளை வைத்திருக்க முடியாது.

👉ஹிஸ்புல்லாஹ், ஹமாஸ், ஹௌதிகள் மற்றும் ஈராக்கில் செயற்படும் இயக்கங்களுக்கு உதவியை நிறுத்துவதுடன், தொடர்பினை துண்டிக்க வேண்டும்.

👉சுப்ரீம் லீடருக்கு முழு அதிகாரம் உள்ள மதவாத ஆட்சி ஒழிக்கப்படல் வேண்டும்.

போர் தொடங்கிய பின்பு அமெரிக்கா மீது ஈரான் விதிக்கும் நிபந்தனைகள். 👇👇👇

👉ஈரானிய சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேற வேண்டும்.

👉ஹோமொஸ் நீரினை ஈரானின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்.

👉ஈரான் மீதான பொருளாதார தடைக்கள் நீக்கப்படல் வேண்டும்.

👉ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படல் வேண்டும்.

👉முடக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துக்கள் விடுவிக்கப்படல் வேண்டும்.

👉லெபனான் உட்பட அணைத்து முனைகளிலும் போர் நிறுத்தப்படல் வேண்டும்.

போரில் ஈரானின் பலத்தை அறிந்துகொண்டதன் பின்பு "செறிவூட்டப்பட்ட யுரேனியம் பற்றிய பேச்சுவார்த்தை" என்ற வரிகளுடன் தனது மானத்தை காப்பாற்றிக்கொள்ள அமெரிக்கா முயல்கிறது.

ஆனால் நீண்டதூர ஏவுகணை, ஈரானின் ஆதரவு பெற்ற இயக்கங்களுக்கு வழங்கப்படும் உதவிகள், சுப்ரீம் லீடருக்கான அதிகாரத்தை நீக்குதல் ஆகியன பற்றி தற்போது அமெரிக்கா வாயே திறப்பதில்லை.

அவ்வாரென்றால் வென்றது மட்டுமல்லாது தன்னை ஒரு பலமுள்ள சக்தியாக உலகிற்கு நிரூபித்தது யார்?

 #கடல் அலைகளின் கோரப் பிடியில் மூன்று உயிர்கள் பலி; நுரைச்சோலையில் சோகத்தை ஏற்படுத்திய துயரச் சம்பவம்..நேற்று (06) மாலை ...
07/06/2026

#கடல் அலைகளின் கோரப் பிடியில் மூன்று உயிர்கள் பலி; நுரைச்சோலையில் சோகத்தை ஏற்படுத்திய துயரச் சம்பவம்..

நேற்று (06) மாலை புத்தளம் நுரைச்சோலை தழுவ கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த துயரச் சம்பவம், அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கடற்கரைக்கு சென்றிருந்த குடும்பத்தினரில் மூவர், எதிர்பாராத விதமாக கடலலைகளில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புத்தளம் தில்லையடி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரும், 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளம் பெண்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

கடற்கரையில் குதூகலித்துக்கொண்டிருந்த வேளையில் வீசிய பலத்த காற்றுடன் ஏற்பட்ட அலைகளில் சிக்கி அவர்கள் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுரைச்சோலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த துயரச் சம்பவம், கடற்கரைகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை நினைவூட்டியுள்ளது.

குறிப்பாக பலத்த அலைகள் காணப்படும் பகுதிகளில் எச்சரிக்கைகளைப் புறக்கணிக்காமல், உயிர் பாதுகாப்பை முதன்மைப்படுத்த வேண்டும் என்பதையும் இந்தச் சம்பவம் எமக்கு உணர்த்துகிறது.

🇮🇱 பிற்பகல் 2:00 மணிக்கு நெதன்யாகு: "இஸ்ரேலியப் படைகள் தயாராக உள்ளன. அமெரிக்கப் படைகள் தயாராக உள்ளன. ஈரான் நெருப்புடன் வ...
04/06/2026

🇮🇱 பிற்பகல் 2:00 மணிக்கு நெதன்யாகு:

"இஸ்ரேலியப் படைகள் தயாராக உள்ளன. அமெரிக்கப் படைகள் தயாராக உள்ளன. ஈரான் நெருப்புடன் விளையாடுகிறது."

🇮🇷 பிற்பகல் 2:05 மணிக்கு அராக்சி:

"நாங்கள் எதற்கும் அஞ்சவில்லை. மீண்டும் வாருங்கள். நீங்கள் எங்களைச் சோதித்தீர்கள். மீண்டும் சோதியுங்கள். முடிவு ஒன்றாகவே இருக்கும். நீங்கள் நெருப்பாக இருந்தால், அந்த நெருப்பை அணைக்க எங்களுக்குத் தெரியும்." 🔥

அராக்சி தனது பாணியில் நெதன்யாகுவை முற்றிலுமாக வாயடைக்கச் செய்தார். அதற்கு மிகுந்த தைரியம் தேவைப்பட்டது.

1. குறைஷிகள் நபிகளாரைக் கொலை செய்யச் சென்றபோது, அவர் ஃபஜ்ர் தொழுகைக்காக வெளியே வருவார் என்று எதிர்பார்த்து இரவு முழுவதும...
03/06/2026

1. குறைஷிகள் நபிகளாரைக் கொலை செய்யச் சென்றபோது, அவர் ஃபஜ்ர் தொழுகைக்காக வெளியே வருவார் என்று எதிர்பார்த்து இரவு முழுவதும் வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தனர்.

எந்த நேரத்திலும் அவர்களால் வீட்டிற்குள் புகுந்து, உள்ளே இருந்த அனைவரையும் அழித்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.

அவர்களில் ஒருவன் அந்த யோசனையை கூறியபோது அபூ ஜஹ்ல் அளித்த பதில்:

"நாம் மதில்களில் ஏறி, முஹம்மதின் மகள்களின் கண்ணியத்தை மீறிவிட்டோம் என்று அரபுகள் குறை சொல்வதற்கா?!"

குறைஷிகள் நிராகரிப்பாளர்ளாக இருந்தாலும் அவர்களிடம் குறைந்தபட்ச கண்ணியம் இருந்தது. அந்த வீட்டில் பெண்கள் இருக்கிறார்கள், வீட்டிற்குள் புகுந்து அவர்களை வெளியே இழுத்து அந்தரங்கத்தை மீறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அறிந்தே இருந்தனர்.

2. அபூ ஜஹ்ல் ஆத்திரத்தில் அஸ்மா (ரலி) அவர்களின் முகத்தில் அடித்தான். தவறை உணர்ந்து உடனே, "இதை மறைத்துக்கொள். வெளியே சொல்லி என்னை அவமானப்படுத்தி விடாதே!" என்று கெஞ்சினான்.

3. நிராகரிப்பாளராக இருந்த அபூ சுஃப்யான் ரோம் தேசம் சென்றபோது, பேரரசர் ஹெராக்லியஸ், முஹம்மது நபியைப் பற்றி விசாரிப்பதற்காக அவரை அழைத்தார்.

அரசர் கேட்டார்: "அவர் பொய் சொல்வாரா? அவர் துரோகியா? அவர் கொலை செய்திருக்கிறாரா?"

அபூ சுஃப்யான்:"அல்லாஹ் மீது ஆணை! நான் பொய் சொன்னதாகக் குற்றம் சாட்டப்படும் அவமானம் மட்டும் இல்லையென்றால், அவரைப் பற்றி பொய் சொல்லியிருப்பேன்."

இங்கு அபூ ஜஹ்ல் அல்லது அபூ சுஃப்யானின் நிலைப்பாட்டில் எந்த மகத்துவமும் இல்லை. மகத்துவம் அந்தச் சமூகத்திலேயே உள்ளது.

அன்று.. இஸ்லாத்திற்கு முந்தைய, இறைநம்பிக்கையற்ற சமூகத்தில்கூட, ஒழுக்கமும் கண்ணியமும் இருந்தன.

இன்றோ.. அரசியல் பிளவுகளால் பொது இடங்களில் திட்டுவதும் அவமானப் படுத்துவதும் சர்வ சாதாரணமாக நடக்கிறது.

நாம் ஒரு முஸ்லிமுடன் முரண்பட்டால், அவரை அவமானப்படுத்துகிறோம். கற்பனைக் கதைகளைக் கட்டவிழ்த்து விடுகிறோம். அவரைப் பற்றிய ஏதேனும் ஒரு செய்தி நம்மிடம் வந்துவிட்டால், அதை நம்பி உடனே பரப்புகிறோம்.

மார்க்கம் என்பது ஒழுக்கம் சார்ந்தது. வெறும் சடங்குகளும், சுவர்களில் தொங்கவிடப்பட்ட வசனங்களும் அல்ல.

✍️ நூஹ் மஹ்ழரி

வாயில் வலுக்கட்டாயமாக விஷம் ஊற்றியும், கிணற்றில் தள்ளியும், தலையை சுவரில் மோதியும் ஆமினாவைக் கொல்ல பலமுறை முயன்றதாக கூறப...
02/06/2026

வாயில் வலுக்கட்டாயமாக விஷம் ஊற்றியும், கிணற்றில் தள்ளியும், தலையை சுவரில் மோதியும் ஆமினாவைக் கொல்ல பலமுறை முயன்றதாக கூறப்படுகிறது. 13 மாதங்களுக்கும் மேலாக மருத்துவக் கல்லூரியில் கோமா நிலையில் இருந்தார் ஆமினா.

மனித மனசாட்சியையே உலுக்கும் கொடூரம்; ஒன்றரை வயது குழந்தை கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அஷ்கரால் வாழ்க்கையே சிதைந்த ஆமினாவின் வேதனைக் கதை.

திருவனந்தபுரம் பாலோடு பகுதியைச் சேர்ந்த ஆமினா என்ற இளம் பெண்ணின் நரக வாழ்க்கை, திருமணமான மறுநாளிலிருந்தே தொடங்கியதாக கூறப்படுகிறது. வெறும் 18 வயதில் அஷ்கர் என்ற நபரின் வாழ்க்கையில் இணைந்த ஆமினா, தன்னை ஒரு பெரிய துயரத்தின் பாதையில் இட்டுச் சென்றதை அப்போது அறிந்திருக்கவில்லை.

வரதட்சணை கோரி, அஷ்கரும் அவரது தாயும் சகோதரியும் இணைந்து ஆமினாவை தொடர்ந்து கடுமையான உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கியதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றன. கன்னத்தில் அறைவது, மூக்கில் குத்துவது, வயிற்றில் உதைத்தல் போன்ற தாக்குதல்கள் அவருக்கு அன்றாட நிகழ்வாக மாறியிருந்ததாக கூறப்படுகிறது.

கேட்கவே மனதை பதறச் செய்யும் பல கொலை முயற்சிகளும் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓடிக்கொண்டிருந்த ஆட்டோ ரிக்ஷாவில் இருந்து தள்ளிவிடுதல், வாயில் வலுக்கட்டாயமாக விஷம் ஊற்றுதல், கிணற்றில் தள்ளுதல் போன்ற பல வழிகளில் ஆமினாவைக் கொல்ல முயன்றதாக குற்றச்சாட்டு உள்ளது.

ஒரு முறை கடுமையான தாக்குதலுக்குப் பிறகு ஆமினா உயிரிழந்துவிட்டார் என்று நினைத்து, அவரை விசிறியில் தூக்கிட்டு தற்கொலையாக காட்ட முயன்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் சிறிது அசைவும் சத்தமும் எழுப்பியதால் அந்த முயற்சியை கைவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்பிறகு 2024-ஆம் ஆண்டு நடந்த ஒரு கொடூரமான தாக்குதலே ஆமினாவின் வாழ்க்கையை முற்றிலும் சீரழித்தது. அவரது தலையின் பின்பகுதியை சுவரில் பலமுறை மோதியதால் கடுமையான மூளை காயம் ஏற்பட்டது. அதன் பின்னர் அவர் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் 13 மாதங்கள் கோமா நிலையில் சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது.

தற்போது உடலின் பெரும்பாலான இயக்கத் திறன்களை இழந்த நிலையில், ஆமினா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

ஒரு ஒன்றரை வயது குழந்தையைக்கூட கொடூரமாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்படும் இந்த நபருக்கு, சட்டப்படி உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பிலிருந்து எழுந்துள்ளது. 🙏🙏

குறிப்பு: மேலே கூறப்பட்டவை ஊடகங்களில் வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள். வழக்கு தொடர்பான உண்மைகள் நீதிமன்ற விசாரணை மற்றும் சட்ட நடைமுறைகளின் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும்.

ஹஜ் பெருநாள் தினத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் – பெற்றோர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஒரு விழிப்புணர்வு செய்திமரண விசாரணை...
02/06/2026

ஹஜ் பெருநாள் தினத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் – பெற்றோர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஒரு விழிப்புணர்வு செய்தி

மரண விசாரணை அதிகாரியாக நான் விசாரித்த ஒரு வீதி விபத்து தொடர்பாக, சமூகத்தின் நலனுக்காக சில உண்மைகளை பகிர விரும்புகின்றேன்.

22 வயதுடைய யூசுப் சனீஜ் அஹமட் என்ற இளைஞன், ஹஜ் பெருநாள் தினத்தன்று தனது வீட்டில் தாயுடன் அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தார். பண்டிகை நாள் என்பதால் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவியது. தனது மகன் அருகில் அமர்ந்து தேநீர் அருந்துவதை பார்த்த அந்தத் தாய், இன்னும் சில மணித்தியாலங்களில் தனது மகனை உயிரற்ற நிலையில் காண நேரிடும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.

அந்த வேளையில் நண்பர்கள் வீட்டிற்கு வந்து அவரை வெளியே அழைத்துச் சென்றுள்ளனர். ஒரு தாய் வழக்கம்போல், "பத்திரமாகப் போயிட்டு வா மகனே" என்ற எண்ணத்தோடு அனுப்பியிருப்பார். ஆனால் அந்தப் பிரிவு தான் இறுதிப் பிரிவாக மாறிவிட்டது.

விசாரணையின் போது கிடைத்த சாட்சியங்களின் அடிப்படையில், நான்கு இளைஞர்கள் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வேகப் போட்டி (Race) ஓடிக்கொண்டிருந்துள்ளனர். அந்த வேளையில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் ஒன்றுடன் ஒன்று உரசியும் மோதிக்கொண்டும் கட்டுப்பாட்டை இழந்துள்ளன.

விபத்தை நேரில் கண்ட சாட்சி தெரிவித்ததன்படி, மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் இருந்த யூசுப் சனீஜ் அஹமட் பலத்த வேகத்தின் காரணமாக தூக்கி எறியப்பட்டு சாலையில் விழுந்துள்ளார். அவர் விழுந்த இடத்தில் தலையில் மிகக் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. சாலையில் அசைவின்றியும் சுயநினைவின்றியும் கிடந்த அவரை பார்த்த நண்பர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவரை எழுப்ப முயற்சித்தும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. பின்னர் அவரை அவசரமாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். எனினும் மருத்துவ சிகிச்சை பலனின்றி அந்த இளம் உயிர் பிரிந்துவிட்டது.

இந்த விசாரணையின் போது மேலும் தெரியவந்த ஒரு கவலைக்குரிய விடயம் என்னவென்றால், மருதமுனை மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் சில இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் வேகப் போட்டி ஓடும் பழக்கம் தொடர்ந்தும் காணப்படுவதாகும்.

எனவே பெற்றோர்களிடம் நான் பணிவன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றேன்:

உங்கள் பிள்ளைகள் யாருடன் பழகுகின்றனர், எங்கு செல்கின்றனர், மோட்டார் சைக்கிள்களை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பவற்றில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பிள்ளைகளுக்கு வாகனம் வாங்கிக் கொடுப்பது மட்டும் பெற்றோரின் கடமை அல்ல; அதனைப் பாதுகாப்பாக பயன்படுத்தக் கற்றுக் கொடுப்பதும் மிக முக்கியமான பொறுப்பாகும்.

இளைஞர்களே,

வேகப் போட்டி உங்கள் திறமையை நிரூபிக்காது. அது உங்கள் உயிரையும் உங்கள் நண்பர்களின் உயிரையும் பறிக்கக்கூடிய ஒரு ஆபத்தான செயல். சில நிமிட சாகசத்திற்காக ஒரு குடும்பத்தின் வாழ்நாள் மகிழ்ச்சியை பறிக்காதீர்கள்.

இன்று அந்தத் தாய் தனது மகனுடன் அருந்திய இறுதி தேநீரை நினைத்து கண்ணீர் சிந்துகின்றார். அந்த வீட்டில் மகனின் சிரிப்பு இல்லை. பெற்றோரின் கனவுகள் சிதறியுள்ளன.

இந்தச் சம்பவம் மீண்டும் எந்தக் குடும்பத்திலும் நடைபெறக்கூடாது என்பதற்காகவே இந்த உண்மையை பகிர்கிறேன்.

"ஒரு நிமிட வேகப் போட்டி, ஒரு குடும்பத்தின் ஆயுள் முழுவதுமான துயரமாக மாறலாம்."

B. Fahad Zaman
(Inquirer into Sudden Deaths)
Base Hospital Kalmunai





Address

Main Street
Akkaraipattu

Telephone

+94770057312

Website

Alerts

Be the first to know and let us send you an email when பைரூஸ் அல் சுலைமான் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to பைரூஸ் அல் சுலைமான்:

Shortcuts

Share

Category