27/05/2026
நீரல்லை பாடசாலைக்கு முன்பாக தேங்கிக்கிடந்த கழிவுகள் துப்பரவு செய்யப்பட்டன(27.05.2026)
நீரல்லை பாடசாலைக்கு முன்பாக அமைந்துள்ள வடிகானில், பெருமளவிலான பிளாஸ்டிக் போத்தல்கள், உடைந்த மரக்குற்றிகள் மற்றும் திடக்கழிவுகள் தேங்கி நின்றதால், கழிவுநீர் வெளியேற முடியாமல் பெரும் அடைப்பு ஏற்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதுடன், டெங்கு போன்ற நோய்த்தாக்கங்கள் பரவும் அபாயமும் காணப்பட்டது.
இந்நிலையில், பொதுமக்களினதும் மாணவர்களினதும் நலனைக் கருத்திற்கொண்டு, குறித்த வடிகானில் தேங்கிக்கிடந்த அனைத்துக் கழிவுகளும் இன்று வெற்றிகரமாக அகற்றித் துப்பரவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் தடையற்ற நீர் ஓட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், சூழல் மாசடைவும் தடுக்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் இப்பகுதியில் கழிவுகளை வீசுவதைத் தவிர்த்து, சூழலைப் பாதுகாக்க ஒத்துழைக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
The accumulated waste in front of Neerella School was successfully cleared today (27.05.2026).
A severe blockage had occurred in the drainage canal located in front of Neerella School due to the accumulation of a large number of plastic bottles, broken tree branches, and other solid waste materials. As a result, wastewater could not flow properly, causing unpleasant odours and creating a potential risk for the spread of diseases such as dengue.
Considering the wellbeing of the public and the students, all waste materials obstructing the drainage canal were successfully removed and the area was thoroughly cleaned today. This initiative has restored the uninterrupted flow of water and helped prevent further environmental pollution.
The public is kindly requested to avoid dumping waste in this area in the future and to cooperate in maintaining a clean and healthy environment.