Isthihar Imadudeen

Isthihar Imadudeen Chairman (Since 2025) & Former Chairman of Akurana Pradeshiya Sabha (2018-2023) Imadudeen and Mrs. Sithy Fahida Umma as their first child.

•Family Background

Imadudeen Mohamed Isthihar more commonly known as Isthihar Imadudeen was born on the 27th of August in 1975 in Bulugohothanne, Akurana, in the Kandy District of Sri Lanka to Mr. He is married to Fathima Maheesha and is a father of three.


•Early childhood and Education

An outstanding old boy of Zahira College, Akurana where he schooled from Grade One to Advanced Level. Du

ring his school days itself he was identified a high performer and has a lot of achievements under his belt. He has been an eloquent orator from his school days, and it is evident as he was the captain of the school Debate team. In addition he was a member of school Prefects board which immensely helped him in developing his leadership traits. Further he excelled in Sports and Arts.

•Business Carrier

He had keen interest in business from early ages and after completing his schooling stepped into business and started very small. In 1995 he wanted to put things in order and started his venture Moon Lanka a private limited company as a small scale business. With his vision, help of his father and the blessings of the almighty the venture developed step by step with great effort and dedication he created a name of his own and this gave birth to a prestigious institution in the country within few years. Moon Lanka now a very successful entity in the Island, importing and distributing textile machineries and equipment to leading garment manufactures in Sri Lanka. Further with the expertise earned throughout the years now Moon Lanka provides consultancy services for the ones who desires to go that extra mile.

•Social Life

From the early days of this life Isthihar has shown acute interested in social service and has shown empathy to every living being. As an individual who believes in structured execution, he created his own CSR wing 2010, which was mainly to give back to the society part of his earning through his successful business venture. His CSR wing has a very wide spectrum including livelihood development, education and health. This made him very close to his people, and he started to get know real grass root issues faced by community and the general public at large. He wanted to help the needy to his best, and this paved his way into the political arena.


•Entry to Politics

A group of Professionals, civil activists and intellectuals from Akurana were working on creating an Organization to work towards the betterment of the society and formed PMJD (Peoples Movement for Justice and Development) as an independent political group. Isthihar who too had deep interest on the same is also a founder member of above initiative. He contested the 2011 local government election based on a collective decision made by above group and was elected as a member of Pradeshiya Sabha in 2011 for the first time, this is where his journey as a mainstream Politian began. He was dedicated to fulfilling a valuable service to the people during his tenure as a member. Later in 2018 he was reelected to Akurana Pradeshiya Sabha and was appointed as the Chairman. With his appointment as the Chairman, he has sure to become a people's leader who has won the hearts of thousands of people forever, thanks to the services rendered to the society under his patronage to the people in the Akurana Pradeshiya Sabha Divisional area.

🌿 ஒரு முன்மாதிரி நகரை உருவாக்கும் பயணத்தின் மேலும் ஒரு முன்னேற்றப் படி. 🏙️ 🌿 හරිත නගරයක් සඳහා අපි එක්වෙමු! 🌿அக்குறணை பிர...
02/06/2026

🌿 ஒரு முன்மாதிரி நகரை உருவாக்கும் பயணத்தின் மேலும் ஒரு முன்னேற்றப் படி. 🏙️ 🌿 හරිත නගරයක් සඳහා අපි එක්වෙමු! 🌿

அக்குறணை பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் ஒரு முன்மாதிரி நகரை உருவாக்கும் முயற்சியின் மேலும் ஒரு கட்டமாக, அலவதுகொடை பசுமை நண்பர்கள் ( Haritha Mithuru Forum ) சங்கமும் அக்குறணை பிரதேச சபையும் இணைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அலவதுகொடை நகரில் மரநடுகை நிகழ்ச்சியொன்றை முன்னெடுத்தனர்.

அலவதுகொடை நகரம் முழுவதும் இம்மரநடுகைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், எதிர்வரும் நாட்களில் அக்குறணை நகரிலும் இந்த வேலைத்திட்டம் முறையாக ஆரம்பிக்கப்படவுள்ளது. இயற்கை அனர்த்தங்களின் தாக்கத்தை குறைத்தல், நகரின் அதிகரித்துள்ள வெப்பநிலையை கட்டுப்படுத்தல் மற்றும் பசுமை நிறைந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த நகரை உருவாக்குதல் ஆகியவை இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

மேலும், நடப்படும் மரங்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளில், வர்த்தக சமூகத்தினரும் பிரதேச மக்களும் ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் இந்நிகழ்வில் ஹரித மிதுரு சங்க உறுப்பினர்கள், அக்குறணை பிரதேச சபை உறுப்பினர் மற்றும் சுற்றுச்சூழல் குழுத் தலைவருமான ஹமீட் ஏ. காதர் அவர்கள், அலவதுகொடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, அலவதுகொடை வர்த்தக சமூகத்தினர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

අකුරණ ප්‍රාදේශීය සභාව විසින් ක්‍රියාත්මක කරනු ලබන නගර අලංකරණ වැඩසටහනට සමගාමීව, අලවතුගොඩ හරිත මිතුරු සංසදය හා අකුරණ ප්‍රාදේශීය සභාව එක්ව අලවතුගොඩ නගරයේ රුක් රෝපණ වැඩසටහනක් පසුගිය ඉරිදා දින සාර්ථකව ක්‍රියාත්මක කරන ලදී.

අලවතුගොඩ නගරය පුරා මෙම වැඩසටහන ක්‍රියාත්මක වන අතර, ඉදිරි දිනවලදී අකුරණ නගරයේද මෙය පුළුල් කිරීමට සැලසුම් කර ඇත. ස්වාභාවික ආපදා අවම කිරීම, නගරයේ උෂ්ණත්වය පාලනය කිරීම සහ හරිත, පරිසර හිතකාමී නගරයක් ගොඩනැගීම මෙම වැඩසටහනේ ප්‍රධාන අරමුණු වේ.

මෙම රෝපණය කරන ලද ගස් ආරක්ෂා කිරීම හා නඩත්තු කටයුතු සාර්ථක කර ගැනීම සඳහා වෙළඳ ප්‍රජාව සහ ප්‍රදේශවාසීන්ගේ සහයෝගය අත්‍යවශ්‍ය වේ. එබැවින් මෙම හරිත මෙහෙවරට ඔබගේ දායකත්වය ලබා දෙන ලෙස කාරුණිකව ඉල්ලා සිටින අතර මෙම වැඩපිළිවෙල මෙහෙයවීම සිදුකරනු ලබන හරිත මිතුරු සංසදය හට ද මා ස්තූතිවන්ත වනවා.

🌿 பசுமை நகரை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம்! 🌿

🚫 මෙය සම්පූර්ණයෙන්ම අසත්‍ය පුවතකි. සමාජයේ ආගමික සංහිඳියාව, සාමය සහ එකමුතුකම බිඳදැමීමට හේතු වන මෙවැනි අසත්‍ය තොරතුරු සමාජ...
30/05/2026

🚫 මෙය සම්පූර්ණයෙන්ම අසත්‍ය පුවතකි.

සමාජයේ ආගමික සංහිඳියාව, සාමය සහ එකමුතුකම බිඳදැමීමට හේතු වන මෙවැනි අසත්‍ය තොරතුරු සමාජ මාධ්‍ය ඔස්සේ පැතිරවීම ඉතාමත් වගකීම් රහිත හා අනුමත කළ නොහැකි ක්‍රියාවකි.

මේ සම්බන්ධයෙන් වගකිව යුතු පුද්ගලයින් පිළිබඳව නීතිමය ක්‍රියාමාර්ග ගැනීමට අවශ්‍ය කටයුතු මේ වනවිටත් සූදානම් කරමින් පවතී.

සාමය, සංහිඳියාව සහ වගකීමෙන් යුතු සමාජයක් ගොඩනගා ගැනීමට සියලු දෙනාගේ සහයෝගය අපේක්ෂා කරමු.

🕋 எனது அனைத்து உள்ளங்களுக்கும் இதயம் கனிந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.Eid Al Adha Mubarak! 🌙🤍
28/05/2026

🕋 எனது அனைத்து உள்ளங்களுக்கும் இதயம் கனிந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Eid Al Adha Mubarak! 🌙🤍

26/05/2026

*மக்களுக்கு இலகுவாக குர்பானி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொடுக்க அக்குறணையில் விசேட நடமாடும் சேவைகள் பல!*
-இஸ்திஹார் இமாதுதீன்
தலைவர், அக்குறணை பிரதேச சபை

அக்குறணை பிரதேச சபையும் அக்குறணை மஸ்ஜித் சம்மேளனமும் இணைந்து, பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார் மற்றும் சமூக அமைப்புகளின் ஒத்துழைப்புடன், இம்முறை ஹஜ் பெருநாளை முன்னிட்டு அக்குறணையில் சில மஸ்ஜித்கள் ஊடாக விசேட நடமாடும் சேவைகள் அக்குறணை பிரதேச சபையினால் நடைபெறு வருகிறது.

இந்த வேலைத்திட்டங்களின் மூலம், ஒரே காலப்பகுதியில் நடைபெறும் இரண்டு மத விழாக்களை முன்னிட்டு, பொதுமக்கள் எந்தவித இடையூறும் இன்றி ஹஜ் பெருநாள் கொருபானி நடவடிக்கைகளை ஒழுங்காக மேற்கொள்ளவும், குர்பானி நடவடிக்கைகளுக்குத் தேவையான அனுமதிப்பத்திரங்களை மிக இலகுவாகவும் விரைவாகவும் பெற்றுக்கொள்ளவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இதனைத் தொடர்பாக விழிப்புணர்வு மற்றும் ஒருங்கிணைப்பு கலந்துரையாடலொன்றும் அண்மையில் அஸ்னா மஸ்ஜித் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு, அக்குறணி மஸ்ஜித் சம்மேளனத்தின் தலைவர் ஷியாம் மௌலவி அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இதில் அக்குறணை பிரதேச சபை, சுகாதார வைத்திய அதிகாரி, அலவத்துகொட பொலிஸார், இறைச்சிக் கடை உரிமையாளர்கள், நலன் விரும்பிகள் மற்றும் பல சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலில் குர்பானி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது பின்பற்ற வேண்டிய சட்டவிதிகள், அனுமதி நடைமுறைகள், சுகாதார வழிமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. அதேவேளை, குர்பானி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இவ்விடயங்களில் அதிக பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டது.

🕋🤲📿🌙 இவ்வருட 2026 ஹஜ் குர்பானி (உழ்ஹிய்யா) அனுமதிப்பத்திரங்களை மக்கள் சிரமமின்றி பெற்றுக்கொள்ள அக்குறணை பிரதேச சபையினால்...
24/05/2026

🕋🤲📿🌙 இவ்வருட 2026 ஹஜ் குர்பானி (உழ்ஹிய்யா) அனுமதிப்பத்திரங்களை மக்கள் சிரமமின்றி பெற்றுக்கொள்ள அக்குறணை பிரதேச சபையினால் நடாத்தப்படும் நடமாடும் சேவை! 👇👇👇

🕌 அஸ்னா மத்திய பள்ளிவாசல்
மே 25, 26, 27 ஆகிய தினங்களில்
🕘 காலை 09:30 மணி முதல் - மாலை 05:00 மணி வரை

🕌 தாய் பள்ளிவாசல்
மே 26 மற்றும் 27 ஆகிய தினங்களில்
🕘 காலை 09:30 மணி முதல் - பிற்பகல் 03:00 மணி வரை

🕌 குருகொடை ஜும்ஆ பள்ளிவாசல்
மே26 மற்றும் 27 ஆகிய தினங்களில்
🕘 காலை 09:30 மணி முதல் - பிற்பகல் 03:30 மணி வரை நடைபெறும்.

தவிசாளர் - அக்குறணை பிரதேச சபை

🧱🚧🌱   ROAD DEVELOPMENT பல்லேவெலிகெடிய வட்டாரம் - அர்கம் மஹல்லா பாதை சேதமடைந்த நிலையில் காணப்பட்டதுடன் தொடர்ச்சியான மழை க...
23/05/2026

🧱🚧🌱 ROAD DEVELOPMENT பல்லேவெலிகெடிய வட்டாரம் - அர்கம் மஹல்லா பாதை சேதமடைந்த நிலையில் காணப்பட்டதுடன் தொடர்ச்சியான மழை காரணமாக பாதை தொடர்ந்து சேதமடைந்து வந்தது. இதற்கமைவாக அக்குறணை பிரதேச சபையினால் அண்மையில் இந்த பாதை அபிவிருத்தி செய்யப்பட்டது.

இந்த அபிவிருத்தி பணிகளை ஒழுங்கமைப்பு செய்த பிரதேச சபை உறுப்பினர் பாட்ஷா ஷியாம் அவர்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கிய பிரதேச மக்களுக்கும் நன்றி!

23/05/2026
🌙🕋🕌 எதிர்வரும் Eid Al-Adha (ஹஜ்) பெருநாளும் வெசாக் வாரமும் ஒரே காலப்பகுதியில் நடைபெறவுள்ளதால், மத நல்லிணக்கம், பொதுச் சு...
21/05/2026

🌙🕋🕌 எதிர்வரும் Eid Al-Adha (ஹஜ்) பெருநாளும் வெசாக் வாரமும் ஒரே காலப்பகுதியில் நடைபெறவுள்ளதால், மத நல்லிணக்கம், பொதுச் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஹஜ் பெருநாளில் நடைபெறும் குர்பானி (உழ்ஹிய்யா) நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்வது தொடர்பாக நேற்றைய தினம் அஸ்னா ஜும்ஆ பள்ளிவாசலில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

அக்குறணை பள்ளிவாசல் சம்மேளனத்துடன் இணைந்து அக்குறணை பிரதேச சபை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், அலவத்துகொட பொலிஸார், பொது சுகாதார பரிசோதகர்கள், இறைச்சிக்கடை உரிமையாளர்கள் மற்றும் குர்பானி பணிகளில் ஈடுபடும் தரப்பினருடன் இணைந்து, பொதுமக்களுக்கு சிரமமின்றி நடைமுறைப்படுத்தக்கூடிய சட்டரீதியான திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

மேலும், இந்த விடயம் தொடர்பாக அரச அதிகாரிகள், அக்குறணை பள்ளிவாசல் சம்மேளனத்தின் தலைவர் அஷ்-ஷெய்க் ஷியாம் மௌலவி அவர்களின் பங்கேற்புடன் அக்குறணை பிரதேச சபையிலும் விசேட கலந்துரையாலொன்று இது தொடர்பாக சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.

🔹அரசாங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் படி, குர்பானி நடவடிக்கைகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ள நாட்கள் ( எதிர்வரும் 28 மற்றும் 29 ) ஆகிய இரு தினங்களாகும். சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு இணங்க முறையாக குர்பானி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் மிருகங்களுக்கு தொடர்புடைய அனுமதிப்பத்திரங்களைப் பெறுதல் கட்டாயமாகும்.

அதற்கிணங்க, அக்குறணை பிரதேச சபையின் மூலம், மே 25 திங்கட்கிழமையை, 26 செவ்வாய்க்கிழமை, 27 புதன்கிழமை ஆகிய தினங்களில் நடைபெறவுள்ள ( AKURANA PRADESHIYA SABHA MOBILE SERVICE ) நடமாடும் சேவை மையங்கள் மூலமாக அல்லது நேரடியாக பிரதேச சபைக்கு வருகை தந்து அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

✅ குர்பானிக்கான (மாடு, ஆடு ) போக்குவரத்து மற்றும் குர்பானி அறுப்பிற்கான உரிய அனுமதிப்பத்திரம் கட்டாயம் பெறப்பட வேண்டும்.
✅ விண்ணப்பப் படிவங்களை ( APPLICATION FORM ) அக்குறணை பிரதேச சபையினால் நடைபெறவுள்ள நடமாடும் சேவை மையங்கள் மூலமாக அல்லது நேரடியாக பிரதேச சபைக்கு வருகை தந்து இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
✅ பொது சுகாதார பரிசோதகர்களால் குர்பானி இடங்கள் மற்றும் மாடுகள் பரிசோதிக்கப்படும்.
✅ கழிவுகளை அகற்றுவது தொடர்பாக விசேட சுகாதார ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன.

🔹 அரசாங்கம் அங்கீகரித்த கட்டணங்களைத் தவிர வேறு எந்த தொகையையும் வழங்க வேண்டாம்.
🔹 தனிப்பட்ட ரசீதுகள் அல்லது அனுமதியற்ற வசூல்கள் குறித்து அவதானமாக இருங்கள்.
🔹 சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவது அனைவரினதும் பொறுப்பாகும்.
🔹 மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில், உணர்வுபூர்வமான காட்சிகளை சமூக ஊடகங்களில் பகிர்வதை தவிர்க்கவும்.
🔹 சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மிருகக் கழிவுகள் மற்றும் ஏனைய கழிவுகளை அகற்றுவது கட்டாயமாகும்.

~~~~~~~MOBILE SERVICE BY AKURANA PRADESHIYA SABHA~~~~~~

🕌 அஸ்னா பள்ளிவாசல்
25, 26, 27 ஆகிய தினங்களில்
🕘 காலை 09:30 மணி முதல் 🕟 மாலை 05:00 மணி வரை

🕌 தாய் பள்ளிவாசல்
26 மற்றும் 27 ஆகிய தினங்களில்
🕘 காலை 09:30 மணி முதல் 🕒 பிற்பகல் 03:00 மணி வரை

🕌 குருகொடை ஜும்ஆ பள்ளிவாசல்
26 மற்றும் 27 ஆகிய தினங்களில்
🕘 காலை 09:30 மணி முதல் 🕞 பிற்பகல் 03:30 மணி வரை நடைபெறும்.

Address

92, Kasawatta Road, Bulugahatenna
Akurana
20850

Alerts

Be the first to know and let us send you an email when Isthihar Imadudeen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Isthihar Imadudeen:

Share