NPP Addalaichenai NPP அட்டாளைச்சேனை

NPP Addalaichenai NPP அட்டாளைச்சேனை வளமான நாடு அழகான வாழ்க்கை

05/09/2026

#நமதுஅரசாங்கம்
#අපේආණ්ඩුව

 #අපේආණ්ඩුව  #நமதுஅரசாங்கம்
01/09/2026

#අපේආණ්ඩුව #நமதுஅரசாங்கம்

🏆 அட்டாளைச்சேனை இளைஞர் & விளையாட்டு சமூகத்துடன் விசேட சந்திப்பு!இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌர...
29/08/2026

🏆 அட்டாளைச்சேனை இளைஞர் & விளையாட்டு சமூகத்துடன் விசேட சந்திப்பு!

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ சுனில் குமார கமகே அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஆதம்பாவா அபூபக்கர் அவர்களுடன் இணைந்து அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

📅 திகதி: 30.08.2026 – ஞாயிற்றுக்கிழமை
⏰ நேரம்: மாலை 4.00 மணி
📍 இடம்: அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானம்

இளைஞர்களின் எதிர்காலம், விளையாட்டுத்துறையின் வளர்ச்சி மற்றும் பிரதேசத்தின் விளையாட்டு வாய்ப்புகள் தொடர்பாக நேரடியாக கலந்துரையாடுவதற்கான ஒரு முக்கிய சந்திப்பாக இது அமையும்.

அட்டாளைச்சேனை பிரதேசத்தின் அனைத்து விளையாட்டுக் கழகங்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.

🤝 ஒன்றிணைவோம்!
⚽ விளையாட்டை வளர்ப்போம்!
🚀 இளைஞர்களின் எதிர்காலத்தை வலுப்படுத்துவோம்!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) அரசாங்கத்தினால், விவசாயிகளின் நீண்டகாலத் தேவையாக இருந்த ஒலுவில் விளாங்காட்டு பாய்ச்சல் வாய்...
28/08/2026

தேசிய மக்கள் சக்தியின் (NPP) அரசாங்கத்தினால், விவசாயிகளின் நீண்டகாலத் தேவையாக இருந்த ஒலுவில் விளாங்காட்டு பாய்ச்சல் வாய்க்கால்களைக் கொங்ரீட் வாய்க்கால்களாக மாற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டம் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்!

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தொழில்நுட்ப வழிகாட்டலில், எமது அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும்
இக்கட்டுமானப் பணிகளை,

பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ அவர்களின் இணைப்பாளரும் அட்டாளைச்சேனை தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளருமான சுல்தான் சத்தார் அவர்கள்,

இன்று நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து நேரில் சென்று பார்வையிட்டு, களப்பயணம் ஒன்றை மேற்கொண்டார்.

விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், நீர்வளத்தைச் சரியாகப் பயன்படுத்தவும் எமது அரசாங்கம் எப்போதும் முன்னின்று உழைக்கும்.

நீர்கொழும்பு அல்-ஹிலால் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இன்று (26) பிற்பகல் நடைபெற்ற 42 ஆவது தேசிய மீலாதுன் நபி அர...
26/08/2026

நீர்கொழும்பு அல்-ஹிலால் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இன்று (26) பிற்பகல் நடைபெற்ற 42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச விழாவில் கலந்துகொண்டேன்.

தேசிய ஒருமைப்பாட்டிற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் அதேவேளை, மீண்டும் எந்த வித்திலும் இனவாதத்திற்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும், சர்வதேச ரீதியில் கௌரவத்திற்கும் அங்கீகாரத்திற்கும் பாத்திரமான ஒரு நாடாக இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்தினால் முடிந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினேன்.

அத்துடன், நபிகள் நாயகம் அவர்களின் போதனையான 'சட்டத்தின் முன் அனைவரும் சமம்' என்பதை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் கடந்த காலத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டது என்பதையும் வலியுறுத்தினேன்.

எமது நாட்டை ஒரு வளர்ச்சியடைந்த, சிறந்த அரசாகக் கட்டியெழுப்புவதில் மக்கள் சக்தியின் மீது பலமான நம்பிக்கையைக் கொண்டுள்ளோம் என்றும், தற்போதைய அரசாங்கம் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்காது என்பதுடன், மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் திரும்பப் பெறத் தயாராக இல்லை என்றும் இங்கு சுட்டிக்காட்டினேன்.

புதிய அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாகவும் பொதுமக்களுக்குச் சட்டத்தின் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்துவதும், நீதியை நிலைநாட்டுவதை வினைத்திறனாக்குவதுமே எதிர்பார்க்கப்படுகின்றது என இங்கு சுட்டிக்காட்டினேன்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றவியல் வலையமைப்புகளை அழித்தொழிக்கும் பொறுப்பு நிறைவேற்றுவதாக உறுதியளித்ததுடன், அதற்காக ஒன்றிணையுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்தேன்.

பல வருடங்களாக முஸ்லிம் பள்ளிவாசல்களில் சமய நடவடிக்கைகளை மேற்கொண்டு தமது வாழ்வின் பெரும்பகுதியை அர்ப்பணித்த மௌலவிகள், சமூகத்திற்கு ஆற்றிய சேவையைப் பாராட்டுவதற்கு இங்கு சந்தர்ப்பம் கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைவதுடன், இந்தத் தேசிய விழாவை ஏற்பாடு செய்வதற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றிய புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய கலாசார திணைக்கள உத்தியோகஸ்தர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்தேன்.

42 වන ජාතික මීලාද්–උන් නබි රාජ්‍ය මහෝත්සවය සඳහා මීගමුව අල්– හිලාල් මධ්‍ය මහා විද්‍යාලයීය ක්‍රීඩාංගණයේදී අද (26) පස්වරුවේ එක්වීමි.

ජාතික සමගිය වෙනුවෙන් රජය කැපවී කටයුතු කරන අතරම යළිදු කිසිදු ආකාරයේ ජාතිවාදයකට ඉඩ නොතබන බවත් ජාත්‍යන්තර ඉදිරියේ ගෞරවයට සහ පිළිගැනීමට පාත්‍ර වූ රාජ්‍යයක් ලෙස ශ්‍රී ලංකාව මේ වන විට යළි ඔසවා තැබීමට රජය සමත් වී ඇති බවත් පෙන්වා දුන්නෙමි.

එමෙන්ම නබිනායකතුමාගේද ඉගැන්වීම වූ නීතිය ඉදිරියේ සැවොම සමානයි යන්නට පණ පෙවීමට ආණ්ඩුව ගතවූ කාලය තුළ කැපවී කටයුතු කළ බවද අවධාරණය කළෙමි.

අප රට දියුණු, යහපත් රාජ්‍යයක් ලෙස ගොඩනැඟීමේදී මහජන බලය කෙරෙහි දැඩි විශ්වාසයක් තබා තිබෙන බවත්, වත්මන් ආණ්ඩුව ජනතාවට අගතියක් වන කිසිදු ආකාරයේ තීන්දුවක් නොගන්නා අතරම ජනතාව වෙනුවෙන් ගන්නා කිසිදු තීන්දුවක් ආපසු හැරවීමට සූදානම් නොමැති බවද මෙහිදී පෙන්වා දුන්නෙමි.

නව ව්‍යවස්ථා සංශෝධනය තුළින්ද අපේක්ෂා කරන්නේ පොදු ජනතාව තුළ නීතිය පිළිබඳ තිබෙන විශ්වාසය තහවුරු කිරීමත්, යුක්තිය පසිඳලීම කාර්යක්ෂම කිරීමත් බව මෙහිදී පෙන්වා දුන්නෙමි.

රට ගොඩනැගීම වෙනුවෙන් විෂ මත්ද්‍රව්‍ය උවදුර සහ ඒ හා බැඳුණු අපරාධ ජාලය බිඳ දැමීමේ වගකීම ඉටුකරන බවද මෙහිදී සඳහන් කළ අතර, ඒ වෙනුවෙන් එක්වන ලෙසද සියලුදෙනාට ආරාධනා කළෙමි.

වසර ගණනාවක සිට මුස්ලිම් පල්ලිවල ආගමික කටයුතු සිදු කරමින් තම ජීවිතයේ වැඩි කාලයක් කැපකල මවුලවිවරුන් සමාජයට සිදු කළ සේවාව මෙහිදී ඇගයීමට ලැබීම පිළිබඳවද සතුටු වන අතර මෙම ජාතික උත්සවයේ සංවිධාන කාර්යයෙහිලා කැපවී කටයුතු කළ බුද්ධශාසන, ආගමික හා සංස්කෘතික කටයුතු අමාත්‍යාංශය සහ මුස්ලිම් ආගමික හා සංස්කෘතික කටයුතු දෙපාර්‌තමේන්තුවේ සියලුදෙනා වෙත ස්තූතිය පළ කළෙමි.

I attended the 42nd National Milad-un-Nabi State Celebration held this afternoon (26) at the Al-Hilal Central College Grounds in Negombo.

I emphasised that the Government remains firmly committed to promoting national unity and will not allow any form of racism or communalism to take root again. I also noted that the Government has succeeded in restoring Sri Lanka’s standing as a country that commands respect and recognition in the international community.

I further emphasised that, during the past period, the Government has remained committed to upholding the teaching of the Prophet Muhammad that all people are equal before the law and to giving practical effect to this principle.

I noted that, in building Sri Lanka into a developed and prosperous nation, we place strong confidence in the power of the people. The present Government will not make decisions that are detrimental to the people, while at the same time, it will not retreat from decisions taken in the interests of the people.

I also pointed out that the objective of the proposed constitutional amendments is to strengthen public confidence in the rule of law and to make the administration of justice more efficient and effective.

I further stated that the Government is committed to fulfilling its responsibility to eradicate the scourge of illicit drugs and dismantle the criminal networks associated with the drug trade as part of the effort to rebuild the country. I invited everyone to join this national endeavour.

I expressed my appreciation for the opportunity to recognise the valuable service rendered to society by the Maulavis who have devoted much of their lives to conducting religious activities at mosques over many years.

I also extended my gratitude to everyone at the Ministry of Buddhasasana, Religious and Cultural Affairs and the Department of Muslim Religious and Cultural Affairs for their dedicated efforts in organising this National State Celebration.

26/08/2026
🏠 “ரண்விமன” சமுர்த்தி வீடமைப்புத் திட்டம் – வீடுகள் திறப்பு விழா & அடிக்கல் நாட்டும் நிகழ்வு 🏠🇱🇰 தேசிய மக்கள் சக்தி அரசா...
26/08/2026

🏠 “ரண்விமன” சமுர்த்தி வீடமைப்புத் திட்டம் – வீடுகள் திறப்பு விழா & அடிக்கல் நாட்டும் நிகழ்வு 🏠

🇱🇰 தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மக்களுக்கான சேவைப் பயணத்தின் மற்றுமொரு முக்கியமான நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேசத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் ஏ. ஆதம்பாவா அவர்களும்
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் செயளாளர் மதிப்பிற்குரிய ஏ.சீ.அப்கர் ,
உதவிப்பிரதேச செயளாளர்
திருமதி நஹீஜா முஸப்Fபிர்,
கணக்காளர் திரு M.F.பர்ஹான்,
சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் A.M.ஹமீட் , பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா அவர்களின் செயளாளர்கள் தோழர் ஆரிப் ஆசிரியர் மற்றும் ஜெஸீல்,
பிரதியமைச்சர் தோழர் வசந்த பியதிஸ்ஸ அவர்களின் இணைப்பாளர்
தோழர் சுல்த்தான் சத்தார்,
கிராம உத்தியோகத்தர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், அட்டாளைச்சேனை பிராந்தியத்தின் பிராஜா சக்தி தவிசாளர்கள்,பொதுமக்கள்
என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

🏡 03 புதிய வீடுகளின் திறப்பு விழாவும்
🏗️ 03 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும்
இன்று இடம்பெற்று நிறைவடைந்தது.

📍 அட்டாளைச்சேனை – 02 வீடுகள்
📍 பாலமுனை – 02 வீடுகள்
📍 ஒலுவில் – 02 வீடுகள்

என மக்களின் வீட்டுத் தேவையை நிறைவேற்றும் நோக்கில் பல்வேறு பகுதிகளில் இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இது வெறுமனே வீடுகளை வழங்கும் திட்டமல்ல;
ஒவ்வொரு குடும்பத்தினதும் பாதுகாப்பான வாழ்வுக்கும், நம்பிக்கையான எதிர்காலத்திற்கும் அடித்தளமிடும் ஒரு மக்கள் நலப் பணியாகும். ❤️🏡

மக்களின் அடிப்படைத் தேவைகளை முன்னிறுத்தி,
“நாம் ஒன்றாக நாட்டை மாற்றுவோம்!” 🇱🇰

#ரண்விமன
#சமுர்த்தி_வீடமைப்புத்திட்டம்
#தேசியமக்கள்சக்தி
#மக்கள்சேவை
#அட்டாளைச்சேனை
#பாலமுனை
#ஒலுவில்
#வீடமைப்பு

இஸ்லாமிய நாட்காட்டியின் 'ரபீஉல் அவ்வல்' மாதம் பிறப்பதன் மூலம், உலகவாழ் முஸ்லிம்கள், தியாகத்தை முன்நிறுத்தி மிகுந்த பக்தி...
25/08/2026

இஸ்லாமிய நாட்காட்டியின் 'ரபீஉல் அவ்வல்' மாதம் பிறப்பதன் மூலம், உலகவாழ் முஸ்லிம்கள், தியாகத்தை முன்நிறுத்தி மிகுந்த பக்தியுடன் கொண்டாடும் இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் ஜனனதின கொண்டாட்டமான மீலாதுன் நபி விழா இன்றாகும். சமத்துவமான ஒரு சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட இந்தத் தினம், வெறும் விழாவிற்கும் அப்பால் ஆழமான ஆன்மீக வடிவத்தை எதிர்பார்க்கும் ஒரு கொண்டாட்டமாகும்.

இருளிலிருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்வதற்காக, எல்லையற்ற பொறுமை மற்றும் கருணையின் வழியை வெளிப்படுத்திய முஹம்மது நபி(ஸல்) அவர்கள், மனிதகுலத்திற்கு அன்று முதல் இன்று வரை தோன்றிய மிகச் சிறந்த இறைத் தூதர்களில் ஒருவராவார். 23 ஆண்டுகள் அவர் எதிர்கொண்ட பல்வேறு இன்னல்கள் மற்றும் செய்த இணையற்ற தியாகங்களின் நோக்கம் அமைதி, சகோதரத்துவம், தூய்மை, நம்பகத்தன்மை மற்றும் நீதி நிலைகொண்ட ஒரு நல்ல சமூகத்தைக் கட்டியெழுப்புவதாகும்.

இனம், சாதி, நிறம் அல்லது குலத்தின் அடிப்படையில் மனிதனை மதிப்பிடுவதை நிராகரித்த அன்னார், முழு மனிதகுலமும் ஒரே மூலத்திலிருந்து தோன்றியது என்பதையும், உண்மைத்தன்மை, சகிப்புத்தன்மை மற்றும் கருணை போன்ற உன்னத நற்பண்புகளால் மட்டுமே மேன்மையை அளவிட முடியும் என்பதையும் உணர்த்தினார். சமூகத்தில் உள்ள பணக்கார-ஏழை இடைவெளியை அகற்றி, ஒடுக்கப்பட்டவர்களுக்கும் உரிய உரிமைகளைப் பெற்றுத் தந்து, அவர் சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் முக்கிய அடித்தளத்தை அமைத்தார். சட்டத்தின் ஆட்சி நிலவும், நீதிமிக்க மற்றும் அனைவரையும் சமமாக நடத்தும் ஒரு நாட்டையும் சகவாழ்வுடனான சமூகத்தையும் உருவாக்கும் நமது எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு தேவையான வழிகாட்டுதல் நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளில் ஏராளமாக காணப்படுகின்றன.

மனிதர்களின் உளத் தூய்மையையும், சமூகத்தின் நன்னடத்தையையும் சீர்குலைக்கும் அனைத்துக் தீமைகளையும் இஸ்லாம் நிராகரிக்கிறது. எனவே, நமது தாய்நாட்டில் பேரழிவாகப் பரவி வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட தேசிய செயற்பாடுகளைப் போன்ற, சமூக ஒழுக்கத்தை உயர்த்துவதற்கான திட்டங்களுக்கு நபிகளார் போதித்த இஸ்லாம் மார்க்கமும் அவரின் வாழ்க்கை முன்மாதிரியும் பெரும் பலத்தை அளிக்கின்றன.

உடைந்த உள்ளங்களைக் குணப்படுத்தி, வெறுப்பிற்குப் பதிலாக அன்பையும், பிணக்கிற்குப் பதிலாக சகோதரத்துவத்தையும் மதிக்கும் ஒரு புதிய யுகத்தை நோக்கிய பயணத்தில், நபிகள் (ஸல்) அவர்களினால் போதிக்கப்பட்ட இணையற்ற தியாகம் மற்றும் மனிதநேயத்தின் ஒளி அந்த பாதையைப் பிரகாசமாக்கும் என்பது எனது பலமான நம்பிக்கையாகும். நபிகளாரின் வாழ்க்கை முன்மாதிரி, அர்ப்பணிப்பு மற்றும் மேலான முயற்சிகளை உண்மையாக அர்த்தமுள்ளதாக்கி, நமது வாழ்க்கைப் பயணத்தை வடிவமைத்துக் கொள்ள உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.

இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் அர்த்தமுள்ள மீலாதுன் நபி தின வாழ்த்துகள் உரித்தாகட்டும்!

அநுர குமார திசாநாயக்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு
2026 ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி

ඉස්ලාමීය චන්ද්‍ර දින දර්ශනයේ 'රබී අල්-අව්වල්' මස උදාවෙත්ම, ලෝකවාසී ඉස්ලාමීය බැතිමතුන් පරිත්‍යාගය පෙරටු කර මහත් භක්ත්‍යාදරයෙන් සමරන ශුද්ධ වූ මුහම්මද් නබිතුමන්ගේ ජන්ම දින සැමරුම හෙවත් මිලාද්-උන්-නබි සැමරුම අදට (26) යෙදී තිබේ. සමානාත්මතා සමාජයක් නිර්මාණය කිරීම පරමාර්ථ කරගත් මෙය, හුදු උත්සවයකට එහා ගිය ගැඹුරු ආධ්‍යාත්මික හැඩගැස්මක් අපේක්ෂා කෙරෙන සැමරුමකි.

අන්ධකාරයෙන් ආලෝකය වෙත කැඳවාගෙන යනු පිණිස, අසීමිත ඉවසීමේ සහ දයානුකම්පාවේ මාවත හෙළිපෙහෙළි කළ මුහම්මද් නබිතුමා, මනුෂ්‍ය වර්ගයා වෙත එදාමෙදාතුර පහළ වූ ශ්‍රේෂ්ඨතම ශාස්තෘවරයෙකි. වසර 23ක් පුරා උන්වහන්සේ අභිමුඛ වූ අනේකවිධ කම්කටොලු සහ සිදු කළ අසමසම පරිත්‍යාගවල පරමාර්ථය වූයේ සාමය, සහෝදරත්වය, පාරිශුද්ධභාවය, විශ්වාසනීයත්වය සහ යුක්තිය රජයන යහපත් සමාජයක් ගොඩනැගීමයි.

ජාතිය, කුලය, වර්ණය හෝ වංශවත් බව මත මිනිසා මැනීම ප්‍රතික්ෂේප කළ උන්වහන්සේ, සමස්ත මානව සංහතියම එකම මූලයකින් පැවත එන බවත්, ශ්‍රේෂ්ඨත්වය මැනිය හැක්කේ සත්‍යවාදී බව, උපේක්ෂාව සහ කරුණාව වැනි උතුම් සාරධර්මවලින් පමණක් බවත් පසක් කළහ. සමාජයේ ඇති-නැති පරතරය දුරලමින්, පීඩිතයාටත් නිසි අයිතිවාසිකම් දිනා දෙමින් උන්වහන්සේ ගොඩනැගුවේ සමාජ සාධාරණත්වයේ සහ සමානාත්මතාවේ හර පදනමයි. නීතියේ ආධිපත්‍යය රජයන, යුක්තිගරුක සහ සියලුදෙනාට සමානව සලකන රටක් සහ සහජීවන සමාජයක් බිහි කරලීමේ අපගේ අපේක්ෂාව යථාවක් කර ගැනීමට අවැසි මගපෙන්වීම නබිතුමන්ගේ දර්ශනයෙන් නොමඳව සැපයේ.

මනුෂ්‍යයාගේ අභ්‍යන්තර පාරිශුද්ධත්වය මෙන්ම සමාජයේ ආචාරධාර්මිකභාවය කිළිටි කරන සියලු විෂයන් ඉස්ලාම් දහම විසින් බැහැර කරනු ලබයි. එබැවින්, අප මාතෘභුමිය මත පිළිලයක්ව වැඩෙන විෂ මත්ද්‍රව්‍ය උවදුරට එරෙහිව රජය විසින් දියත් කරන ලද ජාතික මෙහෙයුම වැනි සමාජයීය ආචාරධාර්මිකභාවය ඉහළට ඔසවා තැබීම වෙනුවෙන් වූ වැඩපිළිවෙළවලට නබිතුමන්ගේ දහම සහ ජීවනාදර්ශය මගින් සැපයෙන්නේ මහඟු සවියකි.

බිඳුණු සිත් සුවපත් කරමින්, වෛරය වෙනුවට ප්‍රේමයත්, විරසකය වෙනුවට සහෝදරත්වයත් අගයන නව යුගයක් කරා යන ගමනේදී, නබිතුමන් විසින් පෙන්වා දෙන ලද අසමසම පරිත්‍යාගයේ සහ මනුෂ්‍යත්වයේ ආලෝකය එ’මග බබළවන බව මාගේ දැඩි විශ්වාසයයි. ශුද්ධ වූ නබි නායකතුමන්ගේ ජීවනාදර්ශය, කැපවීම සහ සද්-පරිශ්‍රමය සැබෑ ලෙස අරුත් ගන්වමින් ජීවන ගමන හැඩගන්වා ගැනීමට ඔබ සැමට ආරාධනා කරමි.
ශ්‍රී ලාංකික මෙන්ම ලෝකවාසී සමස්ත ඉස්ලාම් බැතිමතුන්ට අර්ථවත් මිලාද්-උන්-නබි උත්සවයක් වේවා!

අනුර කුමාර දිසානායක
ජනාධිපති
ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජය
2026 අගෝස්තු 26දින

As the month of Rabi' al-Awwal dawns in the Islamic lunar calendar, Muslims across the world today (26) commemorate Milad-un-Nabi, the birth of the Holy Prophet Muhammad, with deep devotion and reverence, placing sacrifice at the forefront. With the aim of creating a society founded on equality, this is a commemoration that seeks a profound spiritual transformation that goes beyond a mere celebration.

The Holy Prophet Muhammad was one of the greatest teachers to have ever been sent to humanity, illuminating the path of boundless patience and compassion to lead people from darkness to light. The purpose of the many hardships he endured and the unparalleled sacrifices he made over a period of 23 years was to build a virtuous society in which peace, brotherhood, purity, trustworthiness and justice would prevail.

Rejecting the notion of judging people based on race, caste, colour or nobility, the Prophet taught that all humanity originates from a single source, and that true greatness can be measured only by noble values such as truthfulness, tolerance and compassion. By narrowing the gap between the privileged and the disadvantaged in society and securing due rights for the oppressed, he established the fundamental principles of social justice and equality. The Prophet's vision provides us with abundant guidance to realise our aspiration of creating a country governed by the rule of law, justice and equal treatment for all, and a society founded on coexistence and harmony.

Islam rejects all forms of vice that corrupt both the inner purity of the individual and the moral fabric of society. Therefore, the teachings and example of the Prophet provide immense strength to programmes aimed at uplifting the moral fabric of society, such as the national campaign launched by the Government to combat the scourge of illicit drugs, which is spreading like a blight across our motherland.

It is my firm belief that, as we journey towards a new era in which broken hearts are healed, love is valued over hatred and brotherhood over estrangement, the light of the unparalleled sacrifice and humanity demonstrated by the Prophet will illuminate our path. I invite you all to shape your lives by giving true meaning to the life and example, dedication and noble endeavours of the Holy Prophet.

May Milad-un-Nabi be a meaningful celebration for all Muslim devotees in Sri Lanka and across the world!

Anura Kumara Dissanayake
President
Democratic Socialist Republic of Sri Lanka
26th August, 2026

Address

Main Street Addalaichenai
Ampara
32350

Alerts

Be the first to know and let us send you an email when NPP Addalaichenai NPP அட்டாளைச்சேனை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share