19/07/2026
*முடிவுக்கு வந்தது ஸ்மார்ட் சிட்டி சர்ச்சை..*.
ஸ்மார்ட் சிட்டி பெயர்ப் பலகை தொடர்பாக கடந்த 6 மாத காலமாக நிலவி வந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.
யல்கொடதெனிய என்ற பெயர் இப் பாதைக்கு இருந்து வந்ததாக ஒரு சிலர் முன் வைத்த வாதத்தையடுத்து அத்தனகலை பிரதேச சபையில் மொட்டு உறுப்பினரொருவர் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயர் வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்துப் பேசியிருந்தார். இதனால் உரிய பூரண தஸ்தாவேஜுகள் கையளிக்கப்பட்டிருந்தாலும் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரை வைப்பதற்கு சபையின் அங்கீகாரம் கிடைக்கப் பெறவில்லை.பல தடவைகள் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அத்தனையும் தோல்வியிலேயே முடிந்தது.
இந்த நிலையில் கடந்த 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அத்தனகலை பிரதேச சபை உப தலைவர் சந்திமால் விஜேசிங்கவுடன் ஒரு சந்திப்பினை ஸ்மார்ட் சிட்டி நிர்வாகத்தினர் எமது அமைப்பின் உப தலைவர் ருஷான் வீட்டில் ஏற்பாடு செய்திருந்தனர். சுமுகமான முறையில் இடம்பெற்ற இச் சந்திப்பின் போது ஸ்மார்ட் சிட்டி பெயர் வைப்பதில் இருந்து வந்த சர்ச்சைகள் குறித்து பேசப்பட்டது. இதன்போது பிரதேச சபை உப தலைவர் சந்திமால் விஜேசிங்க யல்கொடதெனிய என்ற பெயரை மேலே போட்டு ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரை கீழே ஓரளவு பெரிதாகப் போட்டு பெயர்ப் பலகையைத் தயார் செய்வது குறித்த தமது கருத்தை முன்வைத்தார்.
இந்த நிலையில் கஹட்டோவிட்ட 369 வட்டார சபைத் தலைவர் ஜவாத் இது தொடர்பான மாதிரி வரைபொன்றினை முன்வைத்தார்.அதற்கு இணக்கம் தெரிவித்த உப தலைவர் சந்திமால் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயர்ப் பலகைக்கான தனது அங்கீகாரத்தை வழங்கினார்.
பிரதேச சபை உறுப்பினர் இன்சாப், வட்டார சபைத் தலைவர் முஹம்மத் ஜவாத், ஸ்மார்ட் சிட்டி அமைப்பின் தலைவர் ஷாஜஹான்,உப தலைவர் எம்.எஸ்.எம்.ருஷான்,பொருளாலர் சட்டத்தரணி எம்.எச்.எம்.அஸ்லம்,உப செயலாளர் எம்.டி.எம்.நுஸ்ரத் ஆசிரியர் ஆகியோர் தமது சம்மதத்தினைத் தெரிவித்தனர்.
இச் சந்தர்ப்பத்தில் இப் பெயர்ப்பலகை விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கி சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வர ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் ஸ்மார்ட் சிட்டி அமைப்பின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
-சிராஜ் எம் ஷாஜஹான்-