Plantation Civil Society Org - Avissawella

Plantation Civil Society Org - Avissawella Lighting the Lives of the Plantation Peoples

24/10/2025

அவிசாவளை - பென்றித் மலையக மக்களுக்கு, நீர் குழாய் வெடிப்பின் போது அகற்ற வேண்டி இருந்த லயன் குறியிறுப்புக்கு கடந்த நல்லாட்சியின் போது வழங்கப்பட்ட காணியின் நிலைமை இன்னமும் வழங்கப்படவில்லை. கடந்த அரசியல் தலைமைகளின் அசமந்த போக்கினால் அவை முற்று முழுதாக கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. இதனையும் மீள் பரிசீலனை செய்யவும். S

17/07/2025

அவிசாவளை புனித மரியாள் கல்லூரி மாணவி லோஜினி 2024ஆம் வருடம் சாதாரண தர பரீட்சையில் தோற்றி பாடசாலை வரலாற்றில் 9A பெறுபேற்றினை பெற்று பெற்றோர்களுக்கும் பாடசாலைக்கும் பாடசாலை சமூகத்திற்கும் அதிபர் ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார். அவிசாவளை சமூகம் சார்ந்து நல்வாழ்த்துகள்.

17/07/2025

9A.......
அவிசாவளை புனித மரியாள் கல்லூரி மாணவி லோஜினி 2024ஆம் வருடம் சாதாரண தர பரீட்சையில் தோற்றி பாடசாலை வரலாற்றில் 9A பெறுபேற்றினை பெற்று பெற்றோர்களுக்கும் பாடசாலைக்கும் பாடசாலை சமூகத்திற்கும் அதிபர் ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார். அவிசாவளை சமூகம் சார்ந்து வாழ்த்துக்கள்.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2026 முதல்:புதிய பாடத்திட்டம் மற்றும் GPA முறைமை – விரிவான வழிகாட்டல்2026 ஆம் ஆண்டு முதல் அம...
17/07/2025

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2026 முதல்:

புதிய பாடத்திட்டம் மற்றும் GPA முறைமை – விரிவான வழிகாட்டல்

2026 ஆம் ஆண்டு முதல் அமுலாகவுள்ள க.பொ.ச. சாதாரண தர பரீட்சையின் புதிய பாட அமைப்பையும், GPA (Grade Point Average) மதிப்பீட்டு முறையையும் பற்றிய முழுமையான தகவல்கள் இங்கே வழங்கப்படுகின்றன.

இந்த மாற்றங்கள் மாணவர்களின் கல்விப் சுமையை குறைத்து, ஆழமான கற்றலுக்கு வழிவகுத்து, சர்வதேச தரங்களுக்கு ஏற்ற வகையில் அவர்கள் திறன்களை மதிப்பீடு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தும்.

🔹 புதிய பாடத்திட்டம்: மொத்தம் 7 பாடங்கள்

புதிய முறையில், மாணவர்கள் 10 பாடங்கள் கற்க வேண்டிய பழைய முறையைவிட, இப்போது 7 பாடங்கள் மட்டும் கற்க வேண்டியுள்ளது. இது மாணவர்களின் பாடங்களிற்கான பளுவை குறைத்து, ஆழமான கற்றலுக்கு வாய்ப்பு வழங்குவதாகும்.

✅ கட்டாய Subjects – 5:

இவை அனைத்து மாணவர்களும் கற்கவேண்டியபாடங்கள்:

1. தாய்மொழி – தமிழ், සිංහල அல்லது ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட தாய்மொழி (Credits: 3)

2. English – Communication skills, Reading, Writing, Speaking (Credits: 3)

3. Mathematics – Concepts, Problem solving, Logical thinking (Credits: 3)

4. Science – Physics, Chemistry, Biology உள்ளடக்கிய General Science (Credits: 3)

5. Religion – Buddhism, Hinduism, Islam, Christianity (Credits: 2)

🔸 மொத்த கட்டாய Subjects இற்கான Credits: 14

✅ தேர்ந்தெடுக்கக்கூடிய Subjects – 2:

மாணவர்கள் தங்கள் ஆர்வமும் எதிர்கால இலக்குகளையும் பொருத்து, பின்வரும் களங்களில் இருந்து 2 Subjects தேர்வு செய்யலாம். ஒவ்வொன்றுக்கும் Credits: 2.

Second National Language

Information and Communication Technology

History

Civic Education

Health and Physical Education

Technology :

Tourism and Hospitality Management Technology

Design and Engineering Technology

Livestock Product Technology

Artistic Product Technology

Entrepreneurship and E-commerce Technology

Geography

Aesthetics Education:

Oriental Music

Western Music

Carnatic Music

Oriental Dance

Bharatha Dance

Western Dance

Drama and Theatre

Art

Entrepreneurship and Financial Literacy

➡️ இந்த 7 Subjects அமைப்பில், மாணவர்கள் பல வகையான பாடங்களில் சிதறி இல்லாமல், தங்களுக்குப் பயனுள்ள துறைகளில் ஆழமாக கவனம் செலுத்த முடியும்.

🔹 GPA (Grade Point Average) முறைமை:

பழைய A, B, C, S, F எனப்படும் Letter Grade முறைக்கு பதிலாக, GPA முறை அமலுக்கு வருகிறது. GPA என்பது மாணவர்கள் பெற்றுள்ள ஒட்டுமொத்த மதிப்பெண் நிலையை இலக்க முறையில் (Numerical Form) காட்டும் முறை.

இது சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட முறைமை ஆகும், மேலும் மாணவர்களின் முழுமையான கல்வி செயல்திறனை துல்லியமாக பிரதிபலிக்க உதவும்.

✅ GPA மதிப்பீட்டின் தர விகிதங்கள் உதாரணமாக):

% Marks Range Grade Point

90% - 100% 4.0
80% - 89% 3.7
70% - 79% 3.3
60% - 69% 3.0
50% - 59% 2.7
40% - 49% 2.0 (Pass)
Below 40% 0.0 (Fail)

👉 இந்த Grade Point values Education Ministry வழியாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் வரை இவை மாதிரிப் பட்டியல் மட்டுமே.

✅ GPA கணக்கீட்டு முறை:

மாணவர் ஒருவர் 7 Subjects கற்கின்றார் என எடுத்துக்கொள்வோம். அவர் பெற்றுள்ள Grade Points பின்வருமாறு:

Mathematics: 3.7

English: 3.3

Mother Tongue: 4.0

Religion: 3.7

Science: 3.0

Optional Subject 1: 3.5

Optional Subject 2: 3.2

📌 Total Grade Points = 3.7 + 3.3 + 4.0 + 3.7 + 3.0 + 3.5 + 3.2 = 24.4

📌 Final GPA = 24.4 / 7 = 3.48

இதன்படி, மாணவரின் Final GPA = 3.48 ஆகும்.

🔹 GPA முறைமையின் நன்மைகள்:

✅ துல்லியமான மதிப்பீடு: GPA system மாணவர்களின் ஒட்டுமொத்த திறனை துல்லியமாக பிரதிபலிக்கிறது

✅ குறைந்த மன அழுத்தம்: ஒரு Subject இல் குறைந்த மதிப்பெண் பெற்றாலும், மொத்த GPA அதிகமாக இருக்கலாம்

✅ International Recognition: உலக பல்கலைக்கழகங்களில் GPA முறை ஏற்கப்படுகிறது

✅ A/L Stream தெரிவில் உதவுகின்றது: திறன்கள் மற்றும் ஆர்வங்களை GPA மூலம் தெளிவாக அறிய முடியும்

✅ Relative Assessment: மாணவர்களிடையே ஒப்பீட்டு மதிப்பீடு செய்வது சாத்தியம்

🔹 சவால்கள் மற்றும் முக்கிய கவனத்துக்குரிய அம்சங்கள்:

📌 Awareness: GPA முறைமை பற்றி மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் சரியான விளக்கங்களைப் பெற வேண்டும்

📌 Minimum GPA for Pass: ஒருவரை Pass ஆகக் கருத தேவையான GPA மற்றும் ஒவ்வொரு Subject இல் Pass குறியீடு தெளிவாக இருக்க வேண்டும்

📌 Transparency: GPA கணக்கீட்டு முறை மற்றும் Grade Point Conversion பற்றிய நெறிமுறைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்

இந்த புதிய மாற்றங்கள் இலங்கையின் கல்வி முறைமைக்குள் விசேஷமான மாற்றத்தை உருவாக்கும். அதன் வெற்றி, சரியான திட்டமிடல், செயல் திட்டம், மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளின் ஒத்துழைப்பு ஆகியவற்றின் மீது தழுவியுள்ளது.

📌 மாணவர்களுக்கு அதிகப் பயனுள்ள, குறைந்த அழுத்தமுள்ள மற்றும் சர்வதேச தரத்திற்கு இணையான கல்வி அனுபவம் ஒன்றை இம்மூலம் வழங்க முடியும் என்பதே நம்பிக்கை.

இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

Students who participated in the scholarship program through the Seth Sarana Caritas Colombo organization, coordinated b...
27/04/2025

Students who participated in the scholarship program through the Seth Sarana Caritas Colombo organization, coordinated by the Avissawella Civil Society Organization, which is running through the program "Lighting of the Lives of the Plantation community", have achieved high grades this time. We congratulate and express our happiness for achieving excellent results and bringing pride to our scholarship program, the school, and their parents.
மலையக மக்களின் வாழ்வில் ஒளியேற்றம் நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக இயங்கும், அவிசாவளை சிவில் சமூக ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் Seth Sarana Caritas Colombo நிறுவனத்தின் ஊடாக புலமை பரிசில் நிகழ்ச்சி திட்டத்தில் பங்குபற்றிய மாணவர்கள் இம்முறை பொ.த. உயர் தரத்தில் சிறந்த பெருப்பேற்றினை பெற்று எமது புலமை பரிசில் திட்டத்திற்கும் பாடசாலைக்கும் தங்கள் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்தமையை இட்டு வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Today (15.02.2024) a program on 'value of Education' was held for the parents of Penrith estate students under the theme...
15/02/2025

Today (15.02.2024) a program on 'value of Education' was held for the parents of Penrith estate students under the theme "Let's Improve Education" through the Lighting the lives of Plantation peoples and organized by Plantation Civil Society Org - Avissawella. The Psychological Counselor and Motivational Speaker Mr. Samson was very fluent with their psychological suggestions. The event was graced by the presence of seth sarana Assistant Director of Caritas Colombo and Rev. Father and officials of the seth sarana.

අද (2024.02.15) වතුකරයේ සිවිල් සමාජ සංවිධානය - අවිස්සාවේල්ල විසින් සංවිධානය කරන ලද වතුකර ජනතාවගේ ජීවිතවලට ආලෝකය තුළින් අධ්‍යාපනය වැඩිදියුණු කරමු යන තේමාව යටතේ පෙන්රිත් වතු සිසුන්ගේ දෙමාපියන් සඳහා 'අධ්‍යාපනයේ වටිනාකම' පිළිබඳ වැඩසටහනක් පැවැත්විණි. මනෝවිද්‍යා උපදේශක සහ අභිප්‍රේරණ කථානායක සැම්සන් මහතා ඔවුන්ගේ මනෝවිද්‍යාත්මක යෝජනා ඉතා චතුර ලෙස ඉදිරිපත් කළේය. කොළඹ කරිටාස් සෙත් සරණ සහකාර අධ්‍යක්ෂ පියතුමා ඇතුළු සෙත් සරණ ආයතනයේ නිලධාරීහු මෙම අවස්ථාවට සහභාගි වූහ.

மலையக மக்களின் வாழ்வின் ஒளியேற்றம் நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக மற்றும் அவிசாவளை சிவில் சமூக ஒன்றியத்தின் ஏற்பாட்டில் "கல்வியை மேம்படுத்துவோம்" என்ற தொனிப்பொருளில், பென்றித் தோட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கு 'கல்வியின் மேன்மை' தொடர்பான நிகழ்ச்சி இன்று (15.02.2024) நடைபெற்றது. உளவியல் ஆலோசகர் மற்றும் உந்துதல் பேச்சாளர் திரு. செம்சன் அவர்களின் உளவள ஆலோசனைகளுடன் மிகவும் சரளமாக நடாத்தினார். இன்நிகழ்வில், Seth Sarana - Caritas Colombo நிறுவனத்தின் உதவி பணிப்பாளர் மற்றும் அருட் தந்தை மற்றும் அந்நிறுவனத்தின் அதிகாரிகள் கலந்துகொண்டமை சிறப்பானதாகும்.

11/02/2025
The Penrith Estate has been selected as the next step of the "Lighting the Lives of the plantation People" program, whic...
17/01/2025

The Penrith Estate has been selected as the next step of the "Lighting the Lives of the plantation People" program, which is to improve education ! Accordingly, today, the field conditions were examined by the officers of SEDEC and Caritas Seth sarana. During this, they met with the Zonal Education Office, Divisional Secretariat, C. C. Tamil Maha Vidyalaya, Estate manager and the parish priests, and finally they also met the people of Penrith Estate and obtained data.

*"மலையக மக்களின் வாழ்வின் ஒளியேற்றம்"* நிகழ்ச்சி திட்டத்தின் அடுத்த நகர்வான *கல்வியை மேம்படுத்துவோம்* என்ற எண்ணக்கருவில் பென்றித் தோட்டம் தெரிவாகி உள்ளது! அந்தவகையில், இன்றைய தினம் SEDEC மற்றும் கரிடாஸ் செத் சரண நிறுவன அதிகாரிகள் மூலம் கள நிலவரங்கள் ஆராயப்பட்டது. இதன் போது, கோட்டக் கல்வி காரியலயம், பிரதேச செயலகம், C. C. தமிழ் மகா வித்தியாலயம், தோட்ட அதிகாரி மற்றும் பங்குத் தந்தைகள் ஆகியோரை சந்தித்து, இறுதியாக பென்றித் தோட்ட மக்களையும் தந்தித்து தரவுகளை பெற்றுக்கொண்டனர்.

Address

Avissawella

Website

Alerts

Be the first to know and let us send you an email when Plantation Civil Society Org - Avissawella posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category