BT/BC/Meera Balika National School

BT/BC/Meera Balika National School BT/BC/Meera Balika National School was established on 06.01.1930 in Kattankudy.

எமது பாடசாலையின் ஆராதனை மண்டபத்திற்கு நீண்ட காலத் தேவையாகவிருந்த போடியம் ஒன்றினை காத்தான்குடி 1 ம் குறிச்சி கொழும்பு ஸ்ட...
25/03/2024

எமது பாடசாலையின் ஆராதனை மண்டபத்திற்கு நீண்ட காலத் தேவையாகவிருந்த போடியம் ஒன்றினை காத்தான்குடி 1 ம் குறிச்சி கொழும்பு ஸ்டோர்ஸ் என்று அழைக்கப்பட்டு வந்த மர்ஹூம் அல்ஹாஜ் MM முகம்மது இப்ராஹிம் அவர்களின் ஞாபகார்த்தமாக அந்நாரின் இழைய மருமகள் திருமதி சஹானா டில்பர்டீன் அவர்களால் இன்று(25/03/2024) பாடசாலையின் உபயோகத்திற்காக அதிபர், உதவி அதிபர்களிடம் வழங்கி வைத்த போது

24/03/2024
மட்/ மீரா பாலிகா தேசிய பாடசாலைக்கு  கல்வி அமைச்சின் ஊடாக  தேசிய கல்வி நிறுவனத்தினால் சுமார் 20 லட்சம் பெறுமதியான தொடர்பா...
17/03/2024

மட்/ மீரா பாலிகா தேசிய பாடசாலைக்கு கல்வி அமைச்சின் ஊடாக தேசிய கல்வி நிறுவனத்தினால்
சுமார் 20 லட்சம் பெறுமதியான தொடர்பாடல் உபகரணத் தொகுதிகள் வழங்கிவைப்பு

தரம் 8-11 ஆம் தரங்களுக்கான மாணவர்களின் எண்ம குடியுரிமைத் திறன்களை மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 8 -11 ஆம் தரங்களில் கற்கும் மாணவர்களுக்கான எண்ம திறன்களை விருத்தி செய்வதற்கான யுனிசெப் உதவியுடன் மேற்கொள்ளும் செயற்றிட்டத்தினை மட் / மீரா பாலிகா தேசிய பாடசாலையில் செயற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இத் தொடர்பாடல் உபகரணத் தொகுதியின் தேவைப்பாடு குறித்து இவ் வித்தியாலயத்தின் அதிபர். அஷ் ஷெய்க் UL மன்சூர் அவர்களினால் அன்மையில் கல்வி அமைச்சுக்கு வேண்டுகோள் விடப்பட்டிருந்தது.

இதற்கமைய இத் தொடர்பாடல் உபகரணத் தொகுதியினை கையளிக்கும் நிகழ்வு மகரகமவில் அமைந்துள்ள தேசிய கல்வி நிறுவனத்தில் 15.03.2024ம் திகதி வெள்ளிக்கிழை இடம்பெற்ற தேசிய நிகழ்வில் வைத்து இப் பாடசாலையின் உதவி அதிபரும் தொடர்பாடல் ஊடகக் கற்கை பொறுப்பாசிரியருமான திரு.ஏ.பி.எம். ஜலால்தீன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

06/03/2024
மீரா பாலிகா தேசிய பாடசாலையின் வித்தியாரம்ப நிகழ்வு 05.03.2024 செவ்வாய் கிழமை கல்லூரி அதிபர் அஷ் ஷெய்க் UL மன்சூர் அவர்கள...
06/03/2024

மீரா பாலிகா தேசிய பாடசாலையின் வித்தியாரம்ப நிகழ்வு 05.03.2024 செவ்வாய் கிழமை கல்லூரி அதிபர் அஷ் ஷெய்க் UL மன்சூர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ஜனாப் MHM றமீஸ் SLEAS - DDE, ஜனாப் AGM ஹக்கீம் SLEAS, மௌலவி MI அப்துல் கபூர் மதனி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். அத்துடன் பாடசாலையின் உப அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க செயலாளர் திருமதி றிப்கா ஹனீஸ், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் , பழைய மாணவர் சங்க ஆலோசகர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

ONCE AGAIN TO BALIKA  - மற்றுஞமொரு எதிரொலிகிழக்கு மாகாணத்தின் முதன்மையான பாடசாலையாக விளங்கும் மட்/மம/ மீராபாலிகா தேசிய ப...
06/03/2024

ONCE AGAIN TO BALIKA - மற்றுஞமொரு எதிரொலி

கிழக்கு மாகாணத்தின் முதன்மையான பாடசாலையாக விளங்கும் மட்/மம/ மீராபாலிகா தேசிய பாடசாலையில் நீண்ட கால குறைபாடாhக் காணப்பட்ட பழைய மாணவர் சங்கத்திற்கான தனியான காரியாலயம் ஒன்று 05.03.2024ம் திகதி வெகு விமர்சையாக இவ் வித்தியாலய அதிபர் அசெய்க் UL . மன்சூர் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் திருமதி. றிப்கா கனீஸ் உட்பட பழைய மாணவர் சங்கத்தின் ஆலோசகர் அஸீஸ் (மனித உரிமை ஆணைக் குழு) உட்பட இவ் வித்தியாலயத்தின் பிரதி அதிபர்களும் உப, உதவி அதிபர்களும் கலந்து கொண்டனர்.

இவர்களுக்கான தனியான காரியாலயம் அமைக்கப்பட்டதன் மூலம் பாடசாலையின் பௌதீக வள அபிவிருத்தியில் பல முக்கிய திருப்பங்கள் எற்படும் என நம்பப்படுகின்றது.

சமூக விஞ்ஞானப் போட்டியில் தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவிகள் கெளரவிப்புசமூக விஞ்ஞானப் போட்டியில் கிழக்கு  மாகாண மட்ட...
04/03/2024

சமூக விஞ்ஞானப் போட்டியில் தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவிகள் கெளரவிப்பு

சமூக விஞ்ஞானப் போட்டியில் கிழக்கு மாகாண மட்ட த்தில் வெற்றியீட்டி தேசிய மட்டப் போட்டியில் கலந்து கொண்டு நான்காம் மற்றும் ஏழாம் இடங்களைப் பெற்று வெற்றியீட்டிய மீராபாலிகா தேசிய பாடசாலை மாணவிகள்
இன்று பாடசாலையில் நடைபெற்ற காலைக் கூட்டத்தில் கெளரவிக்கப்பட்டனர்.

ஆண்டு 11 யைச் சேர்ந்த சைபுதீன் லீனத் அசா தேசிய மட்டத்தில் நான்காம் இடத்தையும்
ஆண்டு 7 யைச் சேர்ந்த
கலீம் சகீனத் தேசிய மட்டத்தில் 7ம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

இவர்களுக்கு பிரதி அதிபர் திருமதி பிரதீபன் பாடசாலை அதிபர் அஷ்ஷெய்க் ULமன்சூரின் முன்னிலையில் மாலை இட்டு கெளரவித்தார்.

இப் போட்டியில் தேசிய மட்டத்தில் ஒன்று தொடக்கம் பத்து வரையான வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
தகவல்
UL MN.முபீன்
உதவி அதிபர்

ஜனாதிதிபதி விருது வழங்குவதற்கான பயிற்சிப் பட்டறையில் மீரா பாலிகா தேசிய பாடசாலை மாணவிகள் மகரகமவில் பங்கேற்றனர்.எமது மீரா ...
25/12/2023

ஜனாதிதிபதி விருது வழங்குவதற்கான பயிற்சிப் பட்டறையில் மீரா பாலிகா தேசிய பாடசாலை மாணவிகள் மகரகமவில் பங்கேற்றனர்.

எமது மீரா பாலிகா தேசிய பாடசாலையிலிருந்து தேசிய சுற்றாடல் அதிகார சபையினால் மகரகமவில் நடாத்தப்பட்ட மூன்று நாள் பயிற்சிப்பட்டறையில் இம்மாதம் 21, 22, 23ம் திகதிகளில் கலந்துகொண்டனர்

இம் மாணவிகள் ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வில் வெற்றி பெற இப் பாடசாலையின் கௌரவ அதிபர் அஸ்செய்க் யு.எல். மன்சூர் அவர்களும் பிரதி, உதவி அதிபர்களும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் , பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு என்பன இம் மாணவவிகள் வெற்றிவாகை சூட மனதார வாழ்த்துகின்றனர்.

எமது பாடசாலை நூலகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள e – Library   கற்றல் நடவடிக்கையில் இன்று தரம் 09 மாணவிகள் ஈடுபட்டபோத...
06/12/2023

எமது பாடசாலை நூலகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள
e – Library கற்றல் நடவடிக்கையில் இன்று தரம் 09 மாணவிகள் ஈடுபட்டபோது

03/12/2023

Address

Main Street
Batticaloa
30100

Telephone

+94652246584

Website

Alerts

Be the first to know and let us send you an email when BT/BC/Meera Balika National School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BT/BC/Meera Balika National School:

Share

Category