District Secretariat Batticaloa

District Secretariat Batticaloa This is our official page currently running or which is share the activities actively! So please be aware of it!

The older pages are not managed by us due to some technical problems!

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிதியுதவிடித்வா புயலால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன் வளர்ப்பை...
25/08/2026

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிதியுதவி

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன் வளர்ப்பை மேற்கொள்ளும் மீனவர்களுக்கான நிதியுதவிக் காசோலைகள் வழங்கும் நிகழ்வு நேற்று (24) மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜே. எஸ். அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு கலந்துகொண்டு பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கி வைத்தார்.

கரையோர நீர் வாழ் உயிரினங்கள் வளர்ப்பு அபிவிருத்தி திணைக்களத்தின் கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் எஸ்.ரவிக்குமார் அவர்களில் ஏற்பாட்டில் இடம் பெற்ற நிகழ்வில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 31 பயனாளிகளுக்கு சுமார் 14.25 மில்லியன் ரூபா பெறுமதியான நிதியுதவிக் காசோலைகளும், குளங்களில் மீன் குஞ்சு உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் 5 சங்கங்களுக்கு 1.75 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் மீன்பிடி அமைச்சின் மாவட்ட இணைப்பாளர் எஸ். எம். ஏ. நசார், மாவட்ட நீர்வாழ் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் உத்தியோகத்தர் ஜே. நெல்சன் உள்ளிட்ட நீர்வாழ் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
காசோலை வழங்கும் நிகழ்வில் கருத்துத் தெரிவித்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கந்தசாமி பிரபு, மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பி, அவர்களின் பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
அத்துடன், தற்போதைய எல் நினோ பாதிப்பினால் குடிநீரைப் பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்கும் மக்களுக்கு, குடிநீர் பவுசர்கள் மூலம் குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய எல் நினோ தாக்கத்தினால் மீன்பிடித் துறையில் வருமானம் குறைந்து வருவதுடன், குளங்களின் நீர்மட்டமும் குறைந்து வருவதால் மீனவர்களும் பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில்விளையாட்டுத்துறை பயிற்றுவிப்பாளர்களுக்கான திறன் விருத்திப் பயிற்சிகொழும்பு தேசிய விளையாட்டு அறிவியல் நிறுவ...
21/08/2026

மட்டக்களப்பில்விளையாட்டுத்துறை பயிற்றுவிப்பாளர்களுக்கான திறன் விருத்திப் பயிற்சி

கொழும்பு தேசிய விளையாட்டு அறிவியல் நிறுவனத்தின் (National Institute of Sports Science) அனுசரணையுடன், கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலக விளையாட்டுப் பிரிவும் இணைந்து மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் நோக்கில், விளையாட்டுத்துறைப் பயிற்றுவிப்பாளர்களுக்கான நான்கு நாள் திறன் விருத்திப் பயிற்சி நெறியை ஏற்பாடு செய்திருந்தன.

கடந்த 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை மட்டக்களப்பு வெபர் விளையாட்டு கட்டடத் தொகுதியில் இப்பயிற்சி நெறி சிறப்பாக நடைபெற்றது.

இதில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு உத்தியோகத்தர்கள், பாடசாலை உடற்கல்வி ஆசிரியர்கள், பாடசாலை விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் தனியார் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தேசிய விளையாட்டு அறிவியல் நிறுவனத்தின் விரிவுரையாளர்கள் வளவாளர்களாகக் கலந்துகொண்டு, பயிற்சியாளர்களுக்குத் தேவையான பல்வேறு பயிற்சிகளையும் அறிவுரைகளையும் வழங்கினர்.

பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 20ஆம் திகதி பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான ஜே. எஸ். அருள்ராஜ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

மேலும், ஓய்வுபெற்ற மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் பி. ஜெயக்குமார், மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். வை. ஆதம், புதிதாக நியமனம் பெற்றுள்ள மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஜி. பி. ஜோன்பிள்ளை மற்றும் தேசிய விளையாட்டு அறிவியல் நிறுவனத்தின் போதனாசிரியர் எம். சஜினாஸ் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தராக நீண்டகாலம் கடமையாற்றி அண்மையில் ஓய்வுபெற்ற பி. ஜெயக்குமார் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

மட்டக்களப்பில் இலத்திரனியல் முறையில் காணி உரித்துச் சான்றிதழ்களைப் பதிவு செய்வதற்கான பயிற்சி நெறிமட்டக்களப்பில் இலத்திரன...
21/08/2026

மட்டக்களப்பில் இலத்திரனியல் முறையில் காணி உரித்துச் சான்றிதழ்களைப் பதிவு செய்வதற்கான பயிற்சி நெறி

மட்டக்களப்பில் இலத்திரனியல் முறையில் காணி உரித்துச் சான்றிதழ்களைப் பதிவு செய்வது தொடர்பான பயிற்சி நெறி 20.08.2026 மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

கிழக்கு வலய பிரதி பதிவாளர் நாயகம் கே. நடராசா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் கலந்துகொண்டார்.

உரித்து பதிவு செய்தல் பிரிவின் உதவிப் பதிவாளர் நாயகம் ஷாமிலி கருணாரத்னவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு, பயிற்சி நெறிக்கு வளவாளராகச் செயற்பட்டார்.

மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மற்றும் கல்முனை காணிப் பதிவகங்களில் கடமையாற்றும் காணிப் பதிவாளர்கள், மேலதிக காணிப் பதிவாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு, இலத்திரனியல் நவீன முறையில் காணி உரித்துச் சான்றிதழ்களைப் பதிவு செய்தல் மற்றும் வழக்குதல் தொடர்பான சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

காணி தொடர்பான நடவடிக்கைகளைத் துல்லியமாகவும் வினைத்திறனுடனும் முன்னெடுப்பதற்கும், காணி உரித்து ஆவணங்களைப் பதிவு செய்யும் பணிகளை மேலும் இலகுவாக்குவதற்கும் இப்பயிற்சி நெறி வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், காணி தொடர்பான பிணக்குகளைத் தவிர்த்து, உரித்துச் சான்றிதழ் பதிவுச் செயற்பாடுகளை நவீனமயப்படுத்தும் நோக்கிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமான கனடா புலம்பெயர்வை தடுப்பதற்காக உத்தியோகத்தர்களை தெளிவுபடுத்தும் செயலமர்வு!!சட்டவிரோதமான கனடா புலம்பெயர்வை த...
21/08/2026

சட்டவிரோதமான கனடா புலம்பெயர்வை தடுப்பதற்காக உத்தியோகத்தர்களை தெளிவுபடுத்தும் செயலமர்வு!!

சட்டவிரோதமான கனடா புலம்பெயர்வை தடுப்பதற்கான வழிமுறையினை கையாள்வது தொடர்பாக உத்தியோகத்தர்களை தெளிவுபடுத்தும் செயலமர்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களது நெறிப்படுத்தல் மற்றும் ஆலோசனைக்கு அமைவாக உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் அவர்களது பங்குபற்றுதலுடன் மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று 20.08.2026 திகதி குறித்த உத்தியோகத்தர்களை தெளிவுபடுத்தும் செயலமர்வு
இடம்பெற்றது.

குறித்த தெளிவூட்டல் செயலமர்வினை கனடாவிற்கான பாதுகாப்பற்ற புலம்பெயர்வினை தடுக்கும் செயற்றிட்டங்களை முன்னெடுத்துவரும் அமைப்பின் உயர் மட்ட பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இடம்பெற்ற செயலமர்வின் போது கனடாவிற்கான பாதுகாப்பான புலம்பெயர்வினை எப்படி மேற்கொள்வது, அதற்கான முன்னெடுப்புக்களை எந்த நிறுவனங்கள் எவ்வாறாக முன்னெடுக்கின்றனர். அதே வேளை பாதுகாப்பற்ற புலம்பெயர்வினால் ஏற்படும் தீமைகள் தொடர்பாகவும் இதன் போது தெளிவூட்டப்பட்டது.

குறித்த நிகழ்வில் மாவட்ட செயலக அதிகாரிகள், மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டு பயனடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய கைத்தொழில் மன்றத்தின் குழுக்  கூட்டம்!!மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய கைத்தொழில் மன்றத்தின்...
20/08/2026

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய கைத்தொழில் மன்றத்தின் குழுக் கூட்டம்!!

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய கைத்தொழில் மன்றத்தின் விசேட குழுக் கூட்டம் மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களது தலைமையில் மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலக கேட்போர் கூட மண்டபத்தில்19.08.2026 திகதி இடம் பெற்ற கூட்டமானது
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய கைத்தொழில் மன்றத்தின் தலைவர் பேராசிரியர் ரீ.ஜெயசிங்கம் அவர்களது ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகள் மத்தியில் ஆளுமை திறன் மற்றும் தொழில் துறை மேம்பாடு, தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்ட மேலும் பல விடையங்கள் சார்ந்து அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து மேம்பாட்டு திட்டங்களை ஊக்குவிக்கும் நோக்கை இலக்காக கொண்டு பல்வேறு திட்டங்களை அமுல்ப்படுத்துவது தொடர்பாக இதன் போது விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

தொழில் பயிற்சி நிறுவனங்களை யும் கைத்தொழில் நிறுவனங்களையும் ஒன்றினைத்து பயணிப்பதே இம் மன்றத்தின் பிரதான நோக்கமாக கொண்டு அமைந்திருந்ததுடன், மாவட்டத்தில் நிலவும் தொழில் துறை சார்ந்த கேள்வி மற்றும் நிரம்பலுக்கு இடையில் பாரிய இடைவெளி காணப்படுவதனால் அந்த இடைவெளியை குறைப்பதே இந்த கூட்டத்தின் பிரதான நோக்கமாக காணப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபர் ஜீ.பிரணவன், மாவட்ட செயலக உயரதிகாரிகள், துறைசார் திணைக்கள அதிகாரிகள், தொழிலதிபர்கள், தொழில்சார் வல்லுனர்கள், சமூகம் சார் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்ததுடன், தமது ஆக்கபூர்வமான கருத்துக்களையும் தெரிவித்திருந்தனர்.

மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு மற்றும் மாவட்ட உள சமூக ஒன்றியம்  கூட்டம்!!மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு மற்றும் மாவட்ட...
20/08/2026

மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு மற்றும் மாவட்ட உள சமூக ஒன்றியம் கூட்டம்!!

மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு மற்றும் மாவட்ட உள சமூக ஒன்றியம் கூட்டம் மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களது தலைமையில் மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக,மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர், மாவட்ட உளவள துணை இணைப்பாளர் ஆகியோரது ஒருங்கிணைப்பில் குறித்த கூட்டமானது பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 18.08.2026 திகதி இடம்பெற்றது.

சிறுவர் மற்றும் மகளீர் விவகார அமைச்சின் வழிகாட்டலில் இடம் பெற்ற குறித்த கூட்டத்தின் போது கடந்த கால முன்னேற்ற மீளாய்வு மேற்கொள்ளப்பட்டதுடன், இதன் போது 18 வயதிற்கு குறைந்த சிறார்களை வேலைக்கு அமர்ந்துவது, சிறுவர் இல்லங்களின் தேவைப்பாடுகள் அவற்றை நிருவகிப்பதில் காணப்படும் இடர்பாடுகள்,
சறோஜா வேலைத்துட்டம், கட்டாய கல்வி குழு, கோட்ட மட்ட கல்விக்குழு ஆகியவற்றின் எதிர்கால மற்றும் நிகழ்கால செயற்றிட்டங்களின் முன்னேற்றம், அரசினால் முன்னெடுக்கப்படும் திவியட்ட சவிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம், கிராம மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக்களின் முன்னேற்றகரமான செயற்பாடுகள் தொடர்பாக இதன் போது விரிவாக ஆராயப்பட்டதுடன், அரசாங்க அதிபரினால் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை தொடர்வதற்கான ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டது.

அத்தோடு முன் பள்ளி பிள்ளைகளுக்காக வழங்கப்பட் டுவரும் நலன் திட்டங்கள் மற்றும் கற்பிணித்தாய்மார்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலன்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப் பட்டதுடன், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டும் வரும் சிறுவர் இல்ல பராமரிப்பு தொடர்பாகவும் மாவட்ட ரீதியாக தமது அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டங்கள் தொடர்பாகம் மாவட்ட இணைப்பாளரினால் இதன்போது விளக்கமளிக்கப்பட்டதுடன், பாடசாலைகளில் மேற்கொள்ளப்படும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாகவும், சிறுவர் பாதுகாப்பை மையமாக கொண்டு நடாத்தப்பட்டுவரும் சிறுவர் அம்பசிட்டர் திட்டம் தொடர்பாகவும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

மனோகரி திட்டம் தொடர்பாகவும்,
வாகரை பிரதேசத்தின் பொலிசில் சிறுவர் மகளிர் பிரிவில் பெண் உத்தியோகத்தர்கள் இல்லாமை கடந்த காலங்களில் சுட்டிக்காட்டப்பட்டிருந்ததாகவும் அதற்காக பெண் பொலிஸ் உத்தியோகத்தர் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டதுடன், அரச சார்பற்ற நிறுவன உத்தியோகத்தர்களும் தமது நிலைப்பாடுகள் மற்றும் ஆலோச னைகளையும் இதன்போது முன்வைத்தனர்.

குறித்த நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், கசுகாதார துறைசார்ந்த அதிகாரிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட துறைசார் திணைக்களங்களின் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாசிக்குடாவை மையமாகக் கொண்டு சுற்றுலா அபிவிருத்தி தொடர்பான மாவட்ட மட்ட பங்குதாரர்களுடனான கலந்துரையாடல்!!பாசிக்குடாவை மைய...
20/08/2026

பாசிக்குடாவை மையமாகக் கொண்டு சுற்றுலா அபிவிருத்தி தொடர்பான மாவட்ட மட்ட பங்குதாரர்களுடனான கலந்துரையாடல்!!

பாசிக்குடாவை மையமாகக் கொண்டு சுற்றுலா துறையை உலக வங்கியின் அனுசரனையுடன் அபிவிருத்தி செய்வது தொடர்பான மாவட்ட மட்ட பங்குதாரர்களுடனான கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜெ.எஸ்.அருள்ராஜ் தலைமையில் இடம் பெற்ற கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷனி ஸ்ரீகாந்த், இச்செயற்றிட்டம் தொடர்பான சாத்திய வளக்கூற்றறிக்கை தொடர்பாக ஆராய்வினை மேற்கொள்ளும் கிறன்ட் ரொரன்ட் வாறத் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மெஹாலி பட்டேல் மற்றும் ஆக்கிடெக் நிபுணர் ஜெயடுட் வைஸ்நவ் உள்ளிட்ட மாவட்ட செயலக உயரதிகாரிகள், சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்தீர்க்கும் வண்ணமான செயற்றிட்டங்களை உலகலாவிய ரீதியில் மேம்படுத்தும் நோக்கில் சிறந்த திட்ட முன்மொழிவினை முன்வைத்த குறித்த இந்திய நிறுவனமானது மீனவர்களுக்கும் உள்ளூர் சுற்றுலா துறைக்கும் பங்கம் ஏற்படாவண்ணமும்
வீதி புனரமைப்புக்கள் மேம்பாடு, சுற்றாடல், நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபை, உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயலகங்களுடன் இணைந்து செயற்படும் வண்ணமான செயற்றிட்ட முன்மொழிவுகள் இதன் போது அழிக்கை செய்யப்பட்டதுடன், திணைக்களம் சார் அதிகாரிகளின் கருத்துக்களும் கேட்டறியப்பட்டதுடன், மீனவர்களுக்கென தனியானதொரு அலகை கல்குடாவில் உருவாக்கி கொடுப்பது தொடர்பாகவும் இதன் போது திட்டங்கள் முன்வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் மீன்பிடி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது கடற...
20/08/2026

மட்டக்களப்பில் மீன்பிடி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 13.08.2026 நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு, மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து ஸ்ரீநேசன் ஆகியோரின் பங்கேற்புடன் இக்கூட்டம் நடைபெற்றது.

மாவட்டத்தில் மீன்பிடித் துறையை மேம்படுத்துவதுடன், மீனவர்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்தல், மீனவர்களுக்கான கட்டிடங்களை அமைத்தல், இறங்குதுறைகளுக்கான மின்விளக்குகளை அமைத்தல், ஐஸ் தொழிற்சாலையை மீள இயங்கச் செய்தல், மீனவர் வீதிகளை அமைத்தல், குட்டைகளில் மீன் வளர்த்தல், மாவட்டத்தில் உள்ள சிறிய குளங்களை அபிவிருத்தி செய்தல், எரிபொருள் நிலையங்களை அமைத்தல், மீன்பிடி நடவடிக்கைகளில் காணப்படும் சவால்கள், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் மீன்பிடி வளங்களைப் பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், கடந்த காலங்களில் அனுமதி வழங்கப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு மேற்கொள்ளப்பட்டதுடன், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துதல், மீன்பிடி உபகரணங்கள் தொடர்பான பிரச்சினைகள், கடல் மற்றும் நீர்நிலைகளில் மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், மீன்பிடி வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

மீனவர் சங்கத்தினரால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் விளக்கமளித்ததுடன், அவற்றுக்கு நடைமுறைக்கு ஏற்ற தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இக்கூட்டத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி. கே. கோலித கமல் ஜினதாச, மீன்பிடித் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த, பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், பணிப்பாளர்கள், மீன்பிடித் திணைக்கள அதிகாரிகள், கடற்றொழில் சார்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள், பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

"சுத்தமான இலங்கை - அத்தம" தேசிய தூய்மை நாள் சிரமதான பணி வவுணதீவில் முன்னெடுக்கப்பட்டது."சுத்தமான இலங்கை" (Clean Sri Lank...
10/08/2026

"சுத்தமான இலங்கை - அத்தம" தேசிய தூய்மை நாள் சிரமதான பணி வவுணதீவில் முன்னெடுக்கப்பட்டது.

"சுத்தமான இலங்கை" (Clean Sri Lanka) "அத்தம" (Aththama) தேசிய செயற்திட்டத்தின் கீழ், தேசிய தூய்மை நாளை முன்னிட்டு மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புச் சிரமதான வேலைத்திட்டம் பான்சேனை மயான வளாகத்தில் மாவட்ட நிகழ்வாக முன்னெடுக்கப்பட்டது.

மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி என். சத்தியானந்தி அவர்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கே.பிரபு அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக:
மேஜர் ஜெனரல் கே. ஏ. டி. சி. ஆர். கன்னங்கர (23 ஆவது காலாட்படைப் பிரிவின் கட்டளை அதிகாரி), கோபாலப்பிள்ளை (தவிசாளர், மண்முனை மேற்கு பிரதேச சபை), டொக்டர் எஸ். இளங்கோ (சுகாதார மருத்துவ அதிகாரி, சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை, வவுணதீவு)
ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

காலை 9:30 மணியளவில் பான்சேனை மயானப் பகுதியில் ஆரம்பமான இச்சிரமதான நிகழ்வில், அப்பகுதியைத் தூய்மைப்படுத்தும் பணிகளும், கழிவுகளை முறைப்படி அகற்றும் நடவடிக்கைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.

இப்பணியில் மாவட்ட செயலக உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாதுகாப்புப் படையினர், பொலிஸார், சுகாதாரத் துறையினர், பிரதேச சபை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சூழலைத் தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டதுடன், அப்பகுதியில் யானை அச்சுறுத்தல் நிலவுவதனால் பற்றைக் காடுகளையும் துப்பரவு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்ட செயலக தலைமைக் காணி உத்தியோகத்தர் திருமதி குகதா ஈஸ்பரன் கிழக்கு மாகாண உதவி காணி ஆணையாளராக பதவியுயர்வு...
10/08/2026

மட்டக்களப்பு மாவட்ட செயலக தலைமைக் காணி உத்தியோகத்தர் திருமதி குகதா ஈஸ்பரன் கிழக்கு மாகாண உதவி காணி ஆணையாளராக பதவியுயர்வு!!

மட்டக்களப்பு மாவட்ட செயலக காணிப் பிரிவின் தலைமைக் காணி உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த திருமதி குகதா ஈஸ்பரன் பதவியுயர்வு பெற்று செல்கின்றமையினை யிட்டு அவரை பாராட்டி கெளரவிக்கும் பிரியாவிடை நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் காணிப் பிரிவில் கடந்த 18 வருடங்களாக தலைமைக் காணி உத்தியோகத்தராக தமது கடமையினை மிகவும் திறம்பட ஆற்றிவந்த நிலையில் கிழக்கு மாகாண காணி திணைக்களத்தின் உதவி காணி ஆணையாளராக பதிவியுயர்வு பெற்று செல்வதனையிட்டு பாராட்டி கௌரவிப்பதுடன், பிரியா விடை நிகழ்வும் 07.08.2026 அன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களது தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பதிவிநிலை உத்தியோகத்தர்களால் மாவட்ட செயலகத்தின் காணிப் பிரிவில் இவர் கடமையாற்றியமையினை பாராட்டி உரையாற்றியதுடன், பொன்னாடை போர்த்தி கௌரவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Address

Thiraaimadu
Batticaloa
30000

Opening Hours

Monday 08:30 - 16:30
Tuesday 08:30 - 16:30
Wednesday 08:30 - 16:30
Thursday 08:30 - 16:30
Friday 08:30 - 16:30

Telephone

+94652224435

Alerts

Be the first to know and let us send you an email when District Secretariat Batticaloa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to District Secretariat Batticaloa:

Shortcuts

Share