Batticaloa - மீன்பாடும் தேன் நாடு

Batticaloa - மீன்பாடும் தேன் நாடு VOICE OF BATTICALOA

21/08/2026



சுதந்திரத்தின் உண்மையான வெளிப்பாடு என்பது நாம் வாழும் சுதந்திரத்தில் மட்டுமல்ல, பிறரின் சுதந்திரத்தையும், உரிமைகளையும் மதித்துப் பாதுகாப்பதில் தான் இருக்கிறது. , நம் நாட்டின் மேன்மைக்காகவும், அனைவரின் சமத்துவத்திற்காகவும் உழைப்போம் என்று உறுதி ஏற்போம்!
!

நீரைப் பாதுகாப்பதற்கான சில எளிய வழிகள்: * சோதனை செய்து சரிசெய்தல்: குழாய்கள் மற்றும் நீர் இணைப்புகளில் கசிவுகள் (Leaks) ...
21/08/2026

நீரைப் பாதுகாப்பதற்கான சில எளிய வழிகள்:
* சோதனை செய்து சரிசெய்தல்: குழாய்கள் மற்றும் நீர் இணைப்புகளில் கசிவுகள் (Leaks) இருந்தால் உடனடியாக அவற்றைச் சரிசெய்யுங்கள்.
* பயன்பாட்டைக் குறைத்தல்: பல் துலக்கும் போதும், பாத்திரம் கழுவும் போதும் தண்ணீரைத் தொடர்ந்து ஓடவிடாமல், தேவையான போது மட்டும் குழாயைத் திறக்கவும்.
* மறுபயன்பாடு (Reuse): காய்கறிகள் மற்றும் பழங்களைக் கழுவப் பயன்படுத்திய நீரைச் செடிகளுக்கு ஊற்றப் பயன்படுத்துங்கள்.
* சேமித்து வைத்தல்: மழைக்காலங்களில் மழைநீரைச் சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
ஒரு அன்பான வேண்டுகோள்:
நீர் என்பது வெறும் இயற்கை வளம் மட்டுமல்ல; அது நமது எதிர்காலத்தின் சுவாசம். இன்று நாம் வீணாக்கும் ஒவ்வொரு துளி நீரும், நாளை நமது பிள்ளைகளின் தாகமாய் மாறக்கூடும்.
வறட்சி என்பது இயற்கையின் சவால், அதை எதிர்கொள்ள நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் "சிக்கனம்". நாம் செய்யும் சிறிய நீர் சேமிப்பு கூட, மற்றொரு குடும்பத்திற்கு தாகம் தீர்க்கும் வரமாக அமையலாம். நீரை நேசிப்போம்; அதை உயிரெனக் காப்போம்!

21/08/2026

அன்பான நுகர்வோருக்கு,
தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக, உங்கள் பகுதியில் அவ்வப்போது நீர் விநியோகம் கட்டுப்படுத்தப்படலாம். எனவே, தேவையான அளவு நீரினைச் சேமித்து வைத்து சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். ஏற்படும் அசௌகரியத்திற்கு வருந்துகிறோம்.
* தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB)

21/08/2026

🚨 இலங்கையில் 4 மாவட்டங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு!
நாட்டில் நிலவும் கடும் வறட்சியான வானிலை காரணமாக வடமேல், வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும் 64,000-க்கும் மேற்பட்ட மக்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி வருவதாக அசம்பாவித நிவாரண சேவைகள் மையம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான குடிநீரை விநியோகிப்பதற்கான அவசர நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட உதவி செயலாளருமான பிரகீத் தனன்சூரிய தெரிவித்துள்ளார்.

20/08/2026

Post from Balakumuthan.

Thank you .
நாட்டில் உள்ள அரச வைத்தியசாலைகளில் அவசரமாக மேம்படுத்த வேண்டிய பல விடயங்கள் இருக்கிறது.

பொது வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக செல்லும் சாதரண குடிமக்கள் சகிப்புத்தன்மையினையும் கூடவே கூட்டிச்செல்ல வேண்டும். ஏனெனில் இலவச மருத்துவத்தை இந்த நாட்டு மக்கள் முழு திருப்தியுடன் அனுபவித்தனரா என்று கேட்டால் அந்த வரலாறே இல்லை என்ற பதில் தான் வரும். யதார்த்தம் அப்படித்தான் உள்ளது…

அப்படி மாற்றப்படவேண்டியவை பல இருக்கும் போது தேவையில்லாத ஆணியாகிப்போன கல்முனை வைத்தியசாலையின் ஆடை விவகாரம் இன்று இரு சமூகங்களிற்கிடையே ஒரு உணர்ச்சிக்கொந்தளிப்பையும்,வெறுப்புணர்வையும் விதைத்துள்ளது.

அந்த பெண் ஊழியர்கள் “ஹிஜாப்” அணிந்து பணி செய்வதால் என்னதான் குறைந்துவிடப்போகின்றது. யாருக்கு நட்டம் வந்து விடப்போகின்றது… அதனை தடுப்பதன் மூலம் எதைத்தான் சாதிக்கப்போகின்றார்கள். இந்த விடயத்தை நீண்டகால நிர்வாகத்துறைஅனுபவம் கொண்ட ஒரு வைத்திய அதிகாரி முறையாக கையாண்டிருக்கலாம்…!

இன்று அந்த விடயம் இனவாதிகளுக்கு தீனியாகி ஏற்கனவே எரிந்துகொண்டிருந்த தமிழ் முஸ்லீம் உறவில் எண்ணையினை ஊற்றி விட்டிருக்கின்றது.

ஒரு அரச சுற்றுநிருபத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருந்தால் எங்களால் எந்த அளவு பொறுத்துக்கொள்ள முடியாதோ இதுவும் அவ்வாறான ஒன்றே…? ஒரு ஒடுக்கப்படும் இனத்தை சேர்ந்தவன் என்றவகையில் இதனை சாதாரணமாக கடந்துசெல்ல முடியவில்லை.

சரி வைத்தியர் தான் விடயத்தை சரியாக கையாளவில்லை என்று பார்த்தால் அதனை தீர்த்து வைப்பதாக கூறி சுகாதார அமைச்சு எடுத்த நடவடிக்கை மேலும் பிரச்சினையினை பூதாகரமாக்கியுள்ளது. மேற்கத்தேய கலாசார ஆடைகளை வைத்தியசாலை ஊழியர்கள் அணியமுடியுமெனின் ஏன் “ஹிஜாப்”அணியக்கூடாது..

இஸ்லாமிய மக்களே இந்த பிரச்சனை தமிழ்மக்களால் திட்டமிட்டு செய்யப்பட்ட ஒன்று அல்ல. பெரும்பாண்மை தமிழ்மக்கள் இதற்கு எதிரான நிலைப்பாட்டில் தான் உள்ளனர். எனவே சமூக ஊடகங்களில் நிதானம் இழந்து கருத்துக்களை பகிர்வோர் வெறுப்புணர்வை விதைக்காமல் கொஞ்சம் பொறுப்புடன் செயற்படுங்கள்.

.

11/08/2026

Congratulations to all University students

பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் தகவல்களை வழங்குங்கள்.https://forms.gle/E6qZFt82MF5zw28M9Dear Participant,You are i...
10/12/2025

பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் தகவல்களை வழங்குங்கள்.

https://forms.gle/E6qZFt82MF5zw28M9

Dear Participant,

You are invited to take part in a short online survey aimed at understanding the impact of the Ditwah cyclone on university students in Sri Lanka, particularly in terms of physical, mental, and emotional wellbeing.

Thank you for your valuable time and input.
— Survey Team

https://forms.gle/E6qZFt82MF5zw28M9

Dear Participant, You are invited to take part in a short online survey aimed at understanding the impact of the Ditwah cyclone on university students in Sri Lanka, particularly in terms of physical, mental, and emotional wellbeing. This survey is conducted purely for academic purposes and post-disa...

Address

Main Road
Batticoloa

Alerts

Be the first to know and let us send you an email when Batticaloa - மீன்பாடும் தேன் நாடு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share