Thenmaradchi DS Office

Thenmaradchi DS Office Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thenmaradchi DS Office, Government Organization, A9 Road, Chava, Chavakacheri.

பிரிவுபசார விழா 2021
29/01/2022

பிரிவுபசார விழா 2021

பட்டதாரிப் பயிலுனர்களுக்கான மொழிபெயர்க்கப்பட்ட Project தலைப்புகளை is.gd/evLi7M  எனும் இணைப்பிலும் (மொழிபெயர்ப்பில் ஆங்கா...
16/09/2020

பட்டதாரிப் பயிலுனர்களுக்கான மொழிபெயர்க்கப்பட்ட Project தலைப்புகளை is.gd/evLi7M
எனும் இணைப்பிலும் (மொழிபெயர்ப்பில் ஆங்காங்கே சில தவறுகள் இருக்கின்றன என்பதை கவனத்தில் கொள்ளவும்)

அதேபோல Project செய்வதற்கான Guidelines அடங்கிய ஆவணத்தை
is.gd/f3fVPZ
எனும் இணைப்பிலும் தரவிறக்கம் செய்ய முடியும்.

தென்மராட்சி பிரதேச செயலக பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக ( பட்டதாரி பயிலுனர்) தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளின் வி...
24/07/2019

தென்மராட்சி பிரதேச செயலக பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக ( பட்டதாரி பயிலுனர்) தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளின் விபரம்

Great social service # by planning staffs # tube well # without machine # Innovation..
19/07/2019

Great social service # by planning staffs # tube well # without machine # Innovation..

Model village  # sarasalai south # shramadhana
19/07/2019

Model village # sarasalai south # shramadhana

போதையற்ற தேசத்தை உருவாக்குவோம்போதையற்ற தேசத்தை உருவாக்குவோம் என்ற செயற்றிட்டத்தின்கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்ற விழிப்ப...
26/06/2019

போதையற்ற தேசத்தை உருவாக்குவோம்
போதையற்ற தேசத்தை உருவாக்குவோம் என்ற செயற்றிட்டத்தின்கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்ற விழிப்புணர்வு வார பல்வேறு செயற்பாடுகளில் இன்று 26.06.2019 பிரதேசெயலகம் சுகாதாரதிணைக்களம் சாவகச்சேரி நகரசபை பிரதேசசபை மதுவரித்திணைக்களம் என்பவற்றுடன் இணைந்து சமுர்த்தித் திணைக்களத்தின் ஒழுங்மைப்பில் இன்றைய நிகழ்வாக போதைக்கெதிரான ஊர்வலமும் விழிப்புணர்வு தெருநாடகமும் சிறப்புரையும் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வு காலை பத்து மணியளவில் பிரதேசசெயலகத்துக்கு முன்னால் இருந்து பிதேசசெயலரின் தலைமையில் ஊர்வலம் ஆரம்பமாகியது . இந்த ஊர்வரலம் சாவகச்சேரி பேரூந்து நிலையம் சென்றடைந்து அங்கிருந்து நகரபை மைதானத்துக்கு சென்றடைந்தது பின்னர் பிரதேசெயலரின் உரை இடம் பெற்றது. அதன்பின்னர் பிரதேச செயலக பொருளாதார உத்தியோகத்தர்களால் விழிப்புணர்வு வீதிநாடகம் அரங்கேற்றப்பட்டது. மேற்படி ஊர்வலத்திலும் அதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகளிலும் பாடசாலை மாணவர்களும் இடம்பெற்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தககது.
வீதி நாடகத்தினைத்தொடர்ந்து பிரதேச சமையின் தவிசாளர் உரை இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து போதைக்கெதிரான விழிப்புணர்வு தொடர்பான சிறப்புச் சொற்பொழிவும் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து போதைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பலூன்கள்பறக்க விடப்பட்டது. இறுதியாக உதவித்திட்டமிடல் பணிப்பாளரின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது

அறநெறி மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வுஇந்து கலாசாரதிணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு தென்மராட்சிப் பிரதேசத்தில்...
26/06/2019

அறநெறி மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

இந்து கலாசாரதிணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு தென்மராட்சிப் பிரதேசத்தில் இயங்குகின்ற இருபத்தியாறு அறநெறிப்பாடசாலையில் கற்கும் மாணவர்களுக்கிடையில் 2018 ஆம் ஆண்டு இந்துகலாசார திணைக்களத்தினால் நடாத்தப்பட்டதேசிய ஆக்கத்திறன் பிரதேசமட்ட போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 21.06.2019 வெள்ளிக்கிழமை மாலை மூன்று மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது இந்த நிகழ்வுக்கு உதவிப் பிரதேசசெயலர் க.வினோஐிதா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நூறு மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இச் சான்றிதழ்களை இந்துகலாசார திணைக்களம் வழங்கியிருந்நது

17/07/2018

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்க வாயூறிடுமே

குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே

வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

நவாலியூர் சோமசுந்தர புலவர்

Happy marrid life Senthan & dinsika
01/07/2018

Happy marrid life
Senthan & dinsika

WORLD DAY TO COMPACT DESERTIFICATION AND DROUGHT.உலக பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஒழிப்பு தினம். "DON'T DESERT DRYLANDS !"...
17/06/2018

WORLD DAY TO COMPACT DESERTIFICATION AND DROUGHT.
உலக பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஒழிப்பு தினம்.

"DON'T DESERT DRYLANDS !"
😊 PROTECT EARTH 😊 RESTORE LAND 😊 ENGAGE PEOPLE .

Address

A9 Road, Chava
Chavakacheri
40000

Alerts

Be the first to know and let us send you an email when Thenmaradchi DS Office posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share