01/08/2026
හෙම්මාතගම පොදු වැසිකිළිය ජනතා අයිතියට පත්කිරීම
__________________________________________
හෙම්මාතගම ප්රදේශයේ බස්නැවතුම්පල භූමියේ කලක පටන් විදිමත් වැසිකිළි පද්දතියක් නොවීය මේ හේතුවෙන් එම ප්රදේශයේ සහ එහි ප්රවාහන පහසුකම් සපයා ගන්නා මගීන්ද අපහසුතාවන්ට ලක්වීය.. රජය මගින් ගෙනයන සංවර්ධන ව්යාපෘති වැඩසටහන් අනුව හෙම්මාතගම නගර සංවර්ධනය කිරීම යටතේ එම බස්නැවතුම්පල භූමියේ පැවති අවිධිමත් වැසිකිළි පද්දතිය නවීකරනය කිරීමෙන් අනතුරුව ජනතා අයිතියට පත්කිරීම අද(01) මාවනැල්ල ප්රාදේශීය සම්බන්ධීකරණ කමිටු සභාපති පාර්ලිමේන්තු මන්ත්රී සමන්ත රණසිංහ සහෝදරයාගේ සහ කෑගල්ල දිස්ත්රික් පාර්ලිමේන්තු මන්ත්රී නන්ද බණ්ඩාර සහෝදරයාගේ ප්රධානත්වයෙන් සිදු කෙරිණි...,
මේ සඳහා මාවනැල්ල ආණ්ඩු පක්ශ සංවිදායක ජීවන හරිස්චන්ද්ර සහෝදරයා, මාවනැල්ල ප්රාදේශීය සභාවේ ජාතික ජන බලවේග කණ්ඩායම් නායක සිසිර හේරත් සහෝදරයා, ප්රාදේශීය සභා උප සභාපති, ජාතික ජන බලවේග ප්රාදේශීය සභා මන්ත්රී සහෝදර සහෝදරියන් පිරිසක්, මාවනැල්ල ප්රාදේශීය ලේකම් විජානි රත්නසේකර මහත්මිය ඇතුළු රාජ්ය අංශයේ නිළදාරි මහත්ම මහත්මීන් සහ ප්රාදේශීය සභාවේ සෙසු මන්ත්රී වරුන් ප්රදේශ වාසීන් ඇතුළු පිරිසක් සහභාගී වී සිටියහ...
ஹெம்மாத்தகம பொதுக் கழிப்பறை மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது
ஹெம்மாத்தகம பிரதேச பேருந்து நிலைய வளாகத்தில் நீண்ட காலமாக முறையான பொதுக் கழிப்பறை வசதி ஒழுங்காக இல்லாததால், பிரதேச மக்களும், அங்கு தினசரி பயணிக்கும் பயணிகளும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர்.
அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் கீழ், ஹெம்மாத்தகம நகர அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு பகுதியாக, பேருந்து நிலைய வளாகத்தில் இருந்த பழைய மற்றும் போதிய வசதியற்ற பொதுக் கழிப்பறை நவீனமயமாக்கப்பட்டு, இன்று (01) பொதுமக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வு மாவனல்லை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சமந்த ரணசிங்க மற்றும் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நந்த பண்டார ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவனல்லை தொகுதி ஆளும் கட்சி அமைப்பாளர் ஜீவன் ஹரிஷ்சந்திர, மாவனல்லை பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி குழுத் தலைவர் சிசிர ஹேரத், மாவனல்லை பிரதேச சபையின் உப தவிசாளர், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள், மாவனல்லை பிரதேச செயலாளர் விஜயானி ரத்னசேகர, அத்துடன் அரச அதிகாரிகள், பிரதேச சபையின் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் பிரதேச மக்கள் கலந்து கொண்டனர்.