01/09/2026
நீதித்துறையை அரசியல்மயப்படுத்த நிறைவேற்று அதிகாரம் மேற்கொள்ளும் முயற்சியை தோற்கடிப்போம்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான மக்கள் ஆணையையே அரசாங்கம் பெற்றது. எனினும் தற்போது அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனநாயகத்தைச் சீரழித்து, நீதிமன்றத்தின் சுயாதீனத்திற்குப் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி, சட்டத்தின் ஆட்சிக்கு மிகப்பெரிய சவாலையும் நீதி வழங்கும் செயன்முறைக்கு அழிவையும் ஏற்படுத்த அரசாங்கம் முயல்கிறது. நீதித்துறையை அரசியல்மயப்படுத்த, நிறைவேற்று அதிகாரம் மேற்கொள்ளும் முயற்சியை நீதிமன்றச் செயன்முறையின் ஊடாகத் தோற்கடிப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று (01) உயர்நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வேளை நீதிமன்ற வளாகத்துக்கு வருகைதந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
உலகின் பல்வேறு வழிமுறைகள், நடைமுறைகளை ஆராயும்போது அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தமானது அனைத்து வகையிலும் நீதிமன்றத்தின் சுயாதீனத்தை அழிப்பதாக அமைகிறது. பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல சட்டத்தரணிகள் சங்கங்களும் அமைப்புகளும் கூட இந்த திருத்தத்தினால் நாட்டின் நீதிமன்றத்தின் சுயாதீனத்திற்குப் பாரிய பாதிப்பு ஏற்படும்.
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தமானது நாட்டின் நீதிபதிகளின் கண்ணியத்தைச் சீர்குலைப்பதற்காக நிறைவேற்று அதிகாரத்தினால் திட்டமிட்டு கொண்டுவரப்பட்ட ஒரு திருத்தமாகும். நீதிமன்றத்தின் சுயாதீனம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கை காணப்படுகிறது. பெரும்பாலான பொதுமக்கள் நாட்டின் நீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் மதிப்பதுடன் அவர்கள் மீது பெரும் நம்பிக்கையும் வைத்துள்ளனர். ஆனால், தற்போதைய அரசாங்கம் தனது அரசியல் இலக்குகளை அடைவதற்காக நாட்டில் ஒற்றைக் கட்சி ஆட்சியை நிறுவுவதற்கும், இளைஞர் கழகத் தேர்தல்கள் மற்றும் சிவில் பாதுகாப்புச் குழு நியமனங்கள் முதற்கொண்டு ஜனநாயகத்தைச் முடக்குவதற்கும், நீதிமன்றத்தின் சுதந்திரத்தைப் பாதிப்பதற்கும் இத்திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
இவ்வாறான செயற்பாடுகள் மக்கள் இறைமையைப் பாதிக்கும் என்பதற்கான பல முன்னுதாரணங்கள் உள்ளன. நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்க அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று நிறுவனங்களுக்கும் இடையே பரஸ்பர சமநிலை மற்றும் கட்டுப்பாடுகள் காணப்படுகின்றன. எனவே 22 ஆவது திருத்தம் பொதுஜன வாக்கெடுப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் முன்னுதாரணங்கள் பல உள்ளன. ஒரு ஜனநாயக நாட்டில் நீதிமன்றத்தின் சுயாதீனத்தைப் பாதுகாப்பது அத்தியாவசியமான ஒன்றாகும். அதிலிருந்து விலகிச் செல்ல முடியாது. தற்போது தொழிற்துறைகள் வீழ்ச்சியடைதல், வேலையின்மை அதிகரிப்பு போன்ற பல பாரிய பிரச்சினைகள் நாட்டில் நிலவுகின்றன. இவ்வாறான பிரச்சினைகள் இருக்கும்போது அரசாங்கத்திடம் உள்ள ஒரே தேசிய வேலைத்திட்டம் நகைச்சுவையான ஒரு தீர்வினை வழங்குவது மட்டுமே ஆகும் என்று
எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்திற்குப் பதிலாக அடிப்படை உரிமைகளை மேம்படுத்தும் அரசியலமைப்பைக் கொண்டுவருவதே அரசாங்கத்தின் கடமையாகும். அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தை மாற்றியமைக்கும் அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் ஒட்டுமொத்த மக்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும். அரசாங்கம் மக்கள் பற்றிச் சிந்திப்பதற்குப் பதிலாக தனிக் கட்சி ஆட்சியை நிறுவ முயல்கிறது. எனவே பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மட்டுமல்லாது, இந்த சந்தர்ப்பத்தில் பொதுஜன வாக்கெடுப்பிற்குச் செல்லவேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
*22 වැනි සංශෝධනය යනු රජය ජනතාව අමතක කර තනි පක්ෂ පාලනයක් වෙනුවෙන් කර...