SLMC Youth Congress - Gampaha District

SLMC Youth Congress - Gampaha District ஓரத்தில் நின்று ஓயாமல் தர்க்கம் செய்யும் வீரத்திற்கு வையுங்கள் முற்றுப்புள்ளி

🔸 காத்தான்குடி வாவிக்கரை பூங்கா மற்றும் சுற்றுலா படகுச் சேவை ஹிஸ்புல்லாஹ் எம்.பியினால் அங்குரார்ப்பணம் செய்துவைப்பு..!கா...
24/03/2026

🔸 காத்தான்குடி வாவிக்கரை பூங்கா மற்றும் சுற்றுலா படகுச் சேவை ஹிஸ்புல்லாஹ் எம்.பியினால் அங்குரார்ப்பணம் செய்துவைப்பு..!

காத்தான்குடி நகரின் அழகையும் சுற்றுலாத் துறையின் முன்னேற்றத்தையும் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தீர்க்கதரிசனமான சிந்தனை மற்றும் வழிகாட்டலின் பேரில் உருவாக்கப்பட்ட "வாவிக்கரை பூங்கா மற்றும் சுற்றுலா படகுச் சேவை" ஞாயிற்றுக்கிழமை (22) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு திட்டத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

இவ்விழாவில் நகர சபை உபதவிசாளர், சபை உறுப்பினர்கள், சமூகத் தலைவர்கள், நலன்விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் என பெரும்திரளானோர் கலந்து சிறப்பித்தனர்.

-- ஊடகப்பிரிவு

இஸ்லாம் என்பது அமைதி, கருணை மற்றும் மகிழ்ச்சியை வலியுறுத்தும் மார்க்கமாகும். மனிதகுலம் முழுவதும் அமைதியாகவும் நலமாகவும் ...
21/03/2026

இஸ்லாம் என்பது அமைதி, கருணை மற்றும் மகிழ்ச்சியை வலியுறுத்தும் மார்க்கமாகும். மனிதகுலம் முழுவதும் அமைதியாகவும் நலமாகவும் வாழ வேண்டும் என்பதே அதன் உயர்ந்த போதனை..!

- கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்

புனித ரமழான் மாதத்தின் நோன்பு மற்றும் வணக்க வழிபாடுகளை நிறைவு செய்து இன்று மகிழ்ச்சியுடன் ஈதுல் பித்ர் பெருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய உடன்பிறப்புக்களுக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாற கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது..,

ஒரு மாத காலம் நோற்கப்பட்ட நோன்பானது பசியையும் தாகத்தையும் தாங்குவது மட்டுமல்லாது மனிதனின் மனதையும் ஆன்மாவையும் தூய்மைப்படுத்தும் உயர்ந்த ஆன்மிகப் பயிற்சியாகும். தன்னடக்கம், கருணை, சகிப்புத் தன்மை, ஏழை எளியவர்களிடம் இரக்கம் காட்டுதல் போன்ற உயர்ந்த பண்புகளை வளர்க்கும் அரிய வாய்ப்பாக ரமழான் மாதம் விளங்குகிறது.

ஈதுல் பித்ர் பெருநாள் நமக்கு மகிழ்ச்சியையும் பகிர்வையும் நினைவூட்டும் ஒரு சிறப்பு நாளாகும். இந்த நாளில் நாம் ஒருவருக்கொருவர் அன்பையும் ஒற்றுமையையும் வளர்த்துக் கொண்டு, சமாதானத்துடனும் புரிந்துணர்வுடனும் வாழ வேண்டும் என்ற செய்தியையும் இந்த புனித நாள் எடுத்துரைக்கிறது.

பல இனங்களும் பல மதங்களும் இணைந்து வாழும் எமது நாட்டில், ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர மரியாதை மேலும் வலுப்பெற வேண்டும் என்பது எனது விருப்பமாகும். இந்த பெருநாள், அனைத்து இலங்கை மக்களிடையே சகோதரத்துவ உணர்வையும் மனித நேயத்தையும் மேலும் உறுதிப்படுத்தட்டும்.

இஸ்லாம் என்பது அமைதி, கருணை மற்றும் மகிழ்ச்சியை வலியுறுத்தும் மார்க்கமாகும். மனிதகுலம் முழுவதும் அமைதியாகவும் நலமாகவும் வாழ வேண்டும் என்பதே அதன் உயர்ந்த போதனையாகும். ஆகையால் இந்த பெருநாள், உலகெங்கும் அமைதி நிலவவும், மனிதர்களுக்கிடையில் அன்பும் புரிந்துணர்வும் அதிகரிக்கவும் ஒரு வாய்ப்பாக அமையட்டும்.

இந்த மகிழ்ச்சியான ஈதுல் பித்ர் பெருநாளில், எல்லாம் வல்ல அல்லாஹ் இலங்கை நாடுக்கும் அதன் மக்களுக்கும் அமைதி, ஒற்றுமை, அபிவிருத்தி மற்றும் முன்னேற்றம் அருள்வானாக என்றும், தற்போதைய சூழ்நிலையில் உலகம் முழுவதும் பூரண சமாதானமும் அமைதியும் நிலவச் செய்வானாக என்றும் பிரார்த்திக்கிறேன்- எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவடைந்து  சமாதானம் நிலவுவதற்கு   பிரார்த்திப்போம் "ஈதுல் பித்ர்" பெருநாள் செய்தியில்   முஸ்லிம் காங்கிரஸ் தலை...
21/03/2026

யுத்தம் முடிவடைந்து சமாதானம் நிலவுவதற்கு பிரார்த்திப்போம்

"ஈதுல் பித்ர்" பெருநாள் செய்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு

மத்திய கிழக்கில் மூண்டுள்ள யுத்தம் முடிவுக்கு வந்து நிரந்தர சமாதானம் நிலவுவதற்கு "ஈதுல் பித்ர்" பெருநாள் தினத்தில் அல்லாஹ்வை பிரார்த்திப்போம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள "ஈதுல் பித்ர்"வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் ,அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

புனித ரமழான் மாதம் ஆன்மீகப் புத்தெழுச்சி , தியாக மனப்பான்மை ஆகியவற்றுடன் எல்லாம் வல்ல அல்லாஹ்வுடன் நெருக்கமான தொடர்பை பேணக்கூடிய சிறந்த கால கட்டமாக இருந்தது. ஆயினும், இந்த ஆண்டு, உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களை மிகவும் துயரமான காலத்தில் இந்த புனித மாதம் கடந்து செல்கிறது.

ஏனெனில், முஸ்லிம்கள் வாழும் பல்வேறு நாடுகளில், குறிப்பாக மேற்கு ஆசியாவில் ஈவிரக்கமற்ற யுத்த கெடுபிடிகள் அதிகரித்தவண்ணம் உள்ளன. எனவே, இம்முறை நாம் கனத்த இதயங்களுடன் இந்த பெருநாளைச் சந்திக்கிறோம்.

தியாகம் மற்றும் விடாமுயற்சியின் தாற்பரியத்தை ரமழான் மீண்டுமொரு முறை நமக்கு நினைவூட்டியிருக்கிறது. நம் படைப்பாளனான அல்லாஹ்வை நெருங்கவும், ஆன்மீக வழிகாட்டல்களைப் பெறவும் அந்த நற்பண்புகளில் உறுதியாக நிலைத்து நிற்கவும் அது நம்மைத் தயார் படுத்தியிருக்கிறது.

ஒப்பீட்டளவில் பார்க்கும் போது தற்போதைய சூழ்நிலையில் , இலங்கையில் வெள்ளப் பெருக்கு, மண் சரிவு போன்ற காலநிலை சீர்கேடுகளினால் பாதிக்கப்பட்ட மக்கள் அனுபவித்துவரும் துன்பங்களுக்கு அப்பால், உலகின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு மத்தியில் நோன்பின் மாண்புகளை நன்கு அனுசரித்து, உச்சக் கட்ட சகிப்புத் தன்மையுடன் பொறுமையைப் பேணி வருவதற்காக எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு நாங்கள் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

அதே வேளை, காஸா வில்,பலஸ்தீனத்தில் இஸ்ரேலின் மூர்க்கமான தாக்குதலாலும், இப்பொழுது ஈரான் மீதுஅடர்ந்தேற்றப்பட்டுள்ள அமெரிக்க-இஸ்ரேல் யுத்தத்தினாலும் குறிப்பாக மத்திய கிழக்கில் உயிரிழப்புகள் மற்றும் ஏனைய பாதிப்புகளினால் துன்புறுபவர்களுக்காக எங்கள் இதயங்கள் இரத்தத்தைச் சிந்துகின்றன.

மத்திய கிழக்கில் மூண்டுள்ள யுத்தம் அவசரமாக முடிவுக்கு வருவதற்கும், நிரந்தரமான சமாதானமும், நீதியும் நிலைநாட்டப்படுவதற்கும் இறைவனிடம் நாங்கள் மனம் உருகப் பிரார்த்திப்போமாக.

இந்தப் பெருநாள் நமது சகோதரத்துவப் பிணைப்புகளை வலுப்படுத்தி, ஒருவருக்கொருவர் பரஸ்பரம் ஒத்துழைக்க நம்மை ஊக்குவிக்குமாக.

அனைவருக்கும் இனிய "ஈதுல் பித்ர்" பெருநாள் வாழ்த்துக்கள்

ஈத் முபாரக்!

Eid-ul-Fitr Message from Rauff Hakeem Leader, Sri Lanka Muslim Congress
Marking Eid-ul-Fitr with Heavy Hearts — Rauff Hakeem

Ramadan has always been my favourite month of the year — a time of spiritual renewal, sacrifice and closeness to our Creator the most Merciful, Almighty Allah. Yet this year, it passed amid the saddest of times for Muslims around the world, as merciless onslaughts of old and new wars continue in many lands where the Muslim brethren lives especially in West Asia. Hence, we mark Eid-ul-Fitr today with heavy hearts.

Ramadan once again reminded us of the profound essence of sacrifice and perseverance. It inspired us to strive earnestly in these virtues, seeking only to draw closer to our Creator and to earn His divine love.

We are deeply thankful to the Almighty Allah for the peace that many of our brothers and sisters are still able to sustain in different parts of the world, including the relative safety we experience here in Sri Lanka. At the same time, our hearts bleed for those who continue to suffer the brutal onslaught of Israel in Gaza, and now the US-Israel war in Iran, spreading fear across the Middle East and the rest of the world.

We also pray fervently for an immediate end to the wars in the Middle East and for the restoration of lasting peace and justice. May the coming year bring healing, unity and security to all worldwide.
On this blessed Eid, I wish everyone joy, good health, prosperity, barakah and blessings. May this festival strengthen our bonds of brotherhood, inspire us to support one another, and continue working for the progress and dignity of all.
Eid Mubarak! Taqabbalallahu minna wa minkum.

Rauff Hakeem MP
Leader
Sri Lanka Muslim Congress

යුද්ධය නිමාවට පත්ව, "සාමය උදාවේවායි" ප්‍රාර්ථනා කරමු!

"ඊදුල් ෆිත්ර්" රමසාන් අළුත් අවුරුද්ද නිමිත්තෙන් ශ්‍රී ලංකා මුස්ලිම් කොංග්‍රස් නායක , පාර්ලිමේන්තු මන්ත්‍රී රවුෆ් හකීම් මහතා විසින් නිකුත් කරන ලද පණිවිඩයේ එසේ සදහන්
කර ඇත.

මැද පෙරදිග රටවල් මධ්‍යයේ හට ගෙන ඇති යුදමය වාතාවරණය නිමාවට පත්ව සදහටම සාමය උදාවීමට "ඊදුල් ෆිත්ර්"දින සර්ව බලධාරී අල්ලාහ් දෙවියන් වෙත ප්‍රාර්ථනා කරමු.

ශුද්ධ රාමසාන් මාසයක් පුරාවටම අල්ලාහ් දෙවියන්ට අවනතව සහ කැපැවීමෙන් කටයුතු කිරීම නිසා දෙවියන්ට සමීපව හා ආශිර්වාදයට ලක් පිරිසක් බවට පත්වීමට හැකි විය.
එහෙත් මෙම වසරේ රාමසාන් කාල වකවානුව, ලෝකවාසී මුස්ලිම් ජනයා පසුකර ගෙන ගියේද, දුක්බර කනස්සල්ල මැදින් විය.
මුස්ලිම් ජනතාව වෙසෙන රටවල් අතර බටහිර ආසියාවේ මිලේච්ඡ යුද්ධය සහ ප්‍රචණ්ඩකාරී තත්ත්වය උච්චතම අවස්ථාවට එලඹ තිබේ.
කැපවීම් හා අනන්ත උත්සාහයේ ප්‍රතිඵලයක් ලෙස අල්ලාහ් දෙවියන්ට සමීපවීමට මෙම රාමසාන් වකවානුව අප සියල්ලන්ටම උපකාරී විය.
මෑත කාලයේ අප රට වැසියන් මුහුණ දීමට සිදුවූ, ගංවතුර ගැලීම්, නෑය යෑම්, අයහපත් කාලගුණික අභියෝගවලටත් එහා ගිය දුෂ්කර පරිසරයක් මධ්‍යයේ උපවාසය රැකිමින් ඉවසීමෙන් කටයුතු කිරීමට එම රටවැසියන් සදහා දෙවියන් වහන්සේගේ ආශිර්වාදය හිමිවිය.
පලස්තීන ගාසා තීරයටත් සහ දැනට ඉරානය දෙසටත් ඊශ්‍රායලය සහ ඇමරිකානු මිලේච්ඡිත ප්‍රහාරයන් නිසා මැද පෙරදිග කලාපයම යුද පිටියක් බවට පත්වීම, කාගෙත් හදවත් කම්පනයට ලක්වන සිදුවීමකි. ලෝක ආර්ථිකයට බලවත් ප්‍රහාරයෙකි. ලේ වැගිරීමෙකි.

මැදපෙරදිග කලාපයේ හටගෙන ඇති අවාසනාවන්ත යුද වාතාවරණය නිමාවට පත්ව ලොව පුරා සාමය උදාවේවායි , මෙම උතුම් රාමසාන් මාසය නිමාවන "ඊදුල් ෆිත්ර් " අවුරුදු දිනයේ ප්‍රාර්ථනා කරමු!

மஸ்ஜித்தின் மகுடங்கள் - என்றும் போற்றப்பட வேண்டியவர்கள்! 🔸​மட்டக்களப்பு மாவட்ட பள்ளிவாயல்களில் அர்ப்பணிப்புடன் பணியாற்று...
07/03/2026

மஸ்ஜித்தின் மகுடங்கள் - என்றும் போற்றப்பட வேண்டியவர்கள்! 🔸

​மட்டக்களப்பு மாவட்ட பள்ளிவாயல்களில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் இமாம்கள், முஅத்தின்கள் மற்றும் மஸ்ஜித் ஊழியர்களைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு! 🕌🌙

​அல்ஹம்துலில்லாஹ்!

​புனித ரமழான் மாதத்தினை முன்னிட்டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு மாவட்ட மஸ்ஜித் ஊழியர்களுக்கான உலர்ந்த உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

​✅ பயனாளிகள்: 600-க்கும் மேற்பட்ட இமாம்கள், முஅத்தின்கள் மற்றும் ஊழியர்கள்.

​✅ நோக்கம்: இறை இல்லங்களில் தங்களை அர்ப்பணித்துள்ள ஆன்மீகப் பணியாளர்களின் சேவையை மதிப்பளித்தல்.

​✅ தொடர்ச்சி: பாராளுமன்ற உறுப்பினரால் இந்த உதவித் திட்டம் வருடாந்தம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

​"மக்களுக்காக இறை இல்லங்களில் தங்களை அர்ப்பணித்துள்ள இந்த ஆன்மீகப் பணியாளர்களின் சேவையை மதிப்பளிப்பதும், அவர்களுக்குத் தோள் கொடுப்பதும் எமது சமூகக் கடமையாகும்."

​இவர்களின் தன்னலமற்ற மார்க்க மற்றும் சமூக சேவை என்றும் போற்றப்பட வேண்டியவை. எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த நற்பணிகளை அங்கீகரிப்பானாக! 🤲✨

ஆயதுல்லாஹ் அலி கொமெய்னியின் மறைவுக்கு அனுதாபம் இலங்கை அரசின் நிலைப்பாட்டுக்கு கண்டனம்  - முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்...
02/03/2026

ஆயதுல்லாஹ் அலி கொமெய்னியின் மறைவுக்கு அனுதாபம்
இலங்கை அரசின் நிலைப்பாட்டுக்கு கண்டனம்

- முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

ஈரான் மீது அமெரிக்காவும் ,இஸ்ரேலும் நடத்திய மிகவும் கொடூரமான, ஒருதலைப்பட்சமான தாக்குதல் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார். இதன் விளைவாக ஈரானின் உயர் தலைவர் ஆயதுல்லாஹ் அலி கொமெய்னி மற்றும் உயர்மட்ட அரச பாதுகாப்பு அதிகாரிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

அதிர்ச்சியூட்டும் வகையில்,சர்வதேச சட்டத்தை முற்றாக மீறி, அமெரிக்கா, ,இஸ்ரேல் அகியவற்றால் தேவையற்ற விதத்திலும், பொறுப்பற்ற விதத்திலும் மேற்கொள்ளப்பட்டதாக விவரிக்கப்படும் இந்த தாக்குதலில் தங்கள் பெருமதிப்பிற்குரிய உயர் தலைவரின் இழப்புக்கு மத்தியில் ஈரான் மக்கள் துயரத்தில் ஆழ்திருக்கும் வேளையில், அவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த கவலையையும், உளப்பூர்வமான அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதன் மூலம் பிராந்தியத்தில் பதற்றத்தைக் குறைக்க ஈரான் தெளிவாக முயன்று வந்திருக்கிறது.

மேலும், (GoSL), அமெரிக்க-இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்கள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது பாதிக்கப்பட்ட அரசின் பதிலடி குறித்து இலங்கை அரசாங்கம்(GoSL)நேற்று ஞாயிற்றுக்கிழமை (1) அதிருப்தி தரும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது, அதில், ஈரான் அல்லது அதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாரிய இழப்புகள் பற்றிய எந்தவிதமான குறிப்பையும் தவிர்த்துக்கொண்டுள்ளது,ஈரான், இலங்கையுடன் வரலாற்று ரீதியாக நட்புறவைப் பேணி வரும் ஒரு நாடு என்பதை மறந்துவிடக் கூடாது.

இலங்கை அரசாங்கம் கையாண்டிருக்கும் சொல்லாட்சி, ஈரானின் உயர் தலைவரின் மரணத்தைச் சூழ்ந்திருந்த மிலேச்சத்தனத்தை அங்கீகரிப்பதாகவே தோன்றுகிறது, இந்த இழி செயலைக் கண்டிப்பதற்கும், இறையாண்மை கொண்ட ஒரு தேசத்திற்கு எதிரான அவர்களின் "வெற்றிகரமான" (?) இராணுவத் தாக்குதல்களைப் பற்றிப் பீற்றிக் கொள்ளும் ஆக்கிரமிப்பாளர்களினால் அவர் கொல்லப்பட்டதற்கு அனுதாபம் தெரிவிப்பதற்குப் பதிலாக,அணிசேரா கொள்கை மற்றும் நடுநிலைமையைக் கடைப்பிடிப்பதாகக் கூறிக் கொண்டே, இலங்கை அரசாங்கம் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய நிலைப்பாட்டிலும், பல சந்தர்ப்பகளில் காசா மீதான செயற்பாட்டிலும் அதன் தொடர்ச்சியான நழுவல் போக்கை வெளிக்காட்டியுள்ளது கவலையளிக்கிறது.

காசா மீதான இஸ்ரேலியப் போர் மற்றும் ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை பாதிக்கும் விஷயங்கள் குறித்து பதவியேற்றதிலிருந்து இலங்கை அரசாங்கம் வெளியிட்டுவரும் அதிகாரப்பூர்வ கருத்துக்கள் கண்டிக்கத்தக்கவை.

அறிவுபூர்வமாகவும், தார்மீக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் உற்று நோக்கினால்,இந்த அரசாங்கத்தின் வெளி விவகார அமைச்சு, இந்த அளவுக்கு மட்டரகமான நிலையில் இதற்கு முன்னர் இருந்ததில்லை. மிகப்பெரிய ஆக்கிரமிப்பு நாடான இஸ்ரேலின் சுய பாதுகாப்புக்காக என்ற போலியான கூற்றுக்களை இன்னும் தங்கள் தனிப்பட்ட சொந்த விருப்பு,வெறுப்புக்களை நியாயப்படுத்துவதற்குப் பயன்படுத்திக் கொள்ளும் சில மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடுகளுடன் தற்போதைய இலங்கை ஆட்சியாளர்களிள் நடவடிக்கைகளும் பெரிதும் ஒத்துப்போவதாகவே தென்படுகிறது.

இலங்கை அரசாங்கத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விதத்தில்,அமெரிக்க -இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்பின் அட்டூழியத்தைப் பற்றி அறவே குறிப்பிடாமல், பாதிக்கப்பட்டுள்ள ஒரு நாட்டின் மீது பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் சுமையை ஒரு விவேகமான அரசாங்கம் எவ்வாறு சுமத்த முடியும்?

ஒரு பொறுப்பு வாய்ந்த அரசியல் கட்சியினர் என்ற அடிப்படையில், அமெரிக்க-இஸ்ரேலிய படையினரின் அத்துமீறிய ஆக்கிரமிப்பையும் ஈரானின் உயர் தலைவரின் வெறுக்கத்தக்க படுகொலையையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஈரானின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம். உலகளாவிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய நீண்டகால பிராந்திய மோதலின் படுகுழியில் பிராந்தியத்தைத் தள்ளிவிடக் கூடிய ஒரு மோதலைத் தணிப்பதிலும்,தவிர்ப்பதிலும் தான் பாதுகாப்பான பிராந்தியத்தின் நன்மையும்,நலனும் தங்கியுள்ளன.

ஈரானுக்கும், பிராந்தியத்திற்கும் இடையிலான தற்போதைய பதற்றநிலை எங்கள் கவனத்தை ஈர்த்துள்ளது . அமெரிக்க இராணுவ தளங்களை வைத்துக் கொண்டிருக்கும் வளைகுடா நாடுகள், அமெரிக்க இராணுவ இருப்புக்கு எதிராக ஈரானிய பழிவாங்கலின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய அளவுக்கு நிலைமை உருவாகுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. இதுபோன்ற சூழ்நிலை பிராந்தியத்தை குழப்பத்தில் வைத்திருப்பது பெரிதும் வருந்தத்தக்கது.

பரந்த பிராந்திய மோதல் மற்றும் உலகளாவிய உறுதியற்ற தன்மை குறித்த அச்சம் அதிகரித்து வருவதால், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டான், அவற்றில் வசிக்கும் மக்கள் மற்றும் பரந்த பிராந்தியத்துடன் நாங்கள் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த விரும்புகிறோம். ஆக்கபூர்வமான ராஜதந்திரத நடவடிக்கைளில் ஈடுபட அனைத்து தரப்பினரையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

அமைதியான அணு ஆய்வு மற்றும் அதன் பயன்பாட்டிற்கான நாடுகளின் உரிமையைப் பாதுகாப்பதே எங்கள் நம்பிக்கையும் பிரார்த்தனையும் ஆகும். இது, பரஸ்பர மரியாதை, ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஓர் அமைதி நிலவும் மத்திய கிழக்கை மிளிரச் செய்யும்.

புதிய ஜாமிஉல் மனார் ஜும்ஆ பள்ளிவாசல் காத்தான்குடி கர்பலா கிராமத்தில் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வ...
20/02/2026

புதிய ஜாமிஉல் மனார் ஜும்ஆ பள்ளிவாசல் காத்தான்குடி கர்பலா கிராமத்தில் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைப்பு! 🕌✨

​ஹிரா பவுண்டேஷன் (Hira Foundation) அனுசரணையில் காத்தான்குடி கர்பலா கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஜாமிஉல் மனார் ஜும்ஆ பள்ளிவாசலை, ஹிரா பவுண்டேஷன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இன்று (20) ஜும்ஆ தொழுகையின் பின்னர் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
​காத்தான்குடி கர்பலா கிராமம், 1980 ஆம் ஆண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் அகமட் பரீட் அவர்களுடைய காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கிராமமாகும்.

இப்பள்ளிவாசலுடன் இணைந்து, ஆண் மற்றும் பெண் ஜனாஷாக்களை தனித்தனியாக குளிப்பாட்டுவதற்கான வசதிகளுடன் கூடிய விசேட கட்டிடமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

​இந்நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள்:
​“இப்புதிய ஜும்ஆ பள்ளிவாசலுடன் இணைந்து ஜனாஷா குளிப்பாட்டும் இடத்தையும் திறந்து வைப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணிக்கும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஜனாஷாக்களை குளிப்பாட்டுவதில் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.

இதனை கருத்திற்கொண்டு, ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக ஜனாஷா குளிப்பாட்டுவதற்கான வசதிகள் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன. டாக்டர் அகமட் பரீட் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த கிராமத்தில் இவ்வாறான ஒரு பெரிய ஜும்ஆ பள்ளிவாசலை கட்டி திறந்து வைப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.
​மேலும், இத்திட்டத்திற்கு உதவிய சவூதி அரேபியாவைச் சேர்ந்த தனவந்தர்களுக்கும், ஹிரா பவுண்டேஷன் செயலாளர் மும்தாஸ் மதனி உட்பட பள்ளிவாசல் நிர்வாகத்தினர், நலன்விரும்பிகள் அனைவருக்கும் அவர் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

​இன்று திறந்து வைக்கப்பட்ட இப்பள்ளிவாசலின் ஜும்ஆ பிரசங்கத்தை அஷ்ஷெய்க் ஜெலீல் மதனி அவர்கள் நிகழ்த்தினார்.



​-- ஊடகப் பிரிவு

Dr. MLAM Hizbullah

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியை இழந்தார் சுஹரா புகாரிஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் கொழும்பு மாநகர சபைக்குப் பட்ட...
12/02/2026

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியை இழந்தார் சுஹரா புகாரி

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் கொழும்பு மாநகர சபைக்குப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்த திருமதி முஹம்மது புகாரி பாத்திமா சுஹரா (Mrs. Mohamed Buhari Fathima Sohara), தனது உறுப்பினர் பதவியை இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தின் (Budget) போது, கட்சியின் தீர்மானத்தை மீறி ஆளும் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு அவர் ஆதரவாக வாக்களித்தார். இதன் காரணமாக அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் வகித்த மாநகர சபை உறுப்பினர் பதவியும் வெற்றிடமானது.

உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல் கட்டளைச் சட்டத்தின் 10A(1)(a) பிரிவின் கீழ், கொழும்பு மாநகர சபையின் தெரிவத்தாட்சி அதிகாரி பியுமி அத்திகலவினால் (Piumi Attygalle) இதற்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 2026 பெப்ரவரி மாதம் 09 ஆம் திகதியிடப்பட்ட 2475/05 இலக்க விசேட வர்த்தமானி மூலம், திருமதி சுஹரா புகாரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினராக இல்லாது போனமையால், அவரது மாநகர சபை உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வத்துபிட்டிவலை போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜனாதிபதி செயலகம் அதிரடி நடவடிக்கை! பிரதேச சபை உறுப்பினர் அல...
11/02/2026

வத்துபிட்டிவலை போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜனாதிபதி செயலகம் அதிரடி நடவடிக்கை! பிரதேச சபை உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.பி.ஜி. பிர்தௌஸின் முயற்சிக்கு வெற்றி.

​நிட்டம்புவ - அத்தனகல்ல வீதியின் வத்துபிட்டிவலை சந்தியில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தருமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, ஜனாதிபதி செயலகம் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

​ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய தேசியக் கூட்டமைப்பின் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.பி.ஜி. பிர்தௌஸ் அவர்களினால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட விசேட கோரிக்கை கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

​📍 ஜனாதிபதி செயலகத்தின் பதில்:
ஜனாதிபதி உதவிச் செயலாளர் (பொதுமக்கள் தொடர்பு) பி.எம். அபேசேகரவினால் அனுப்பப்பட்டுள்ள உத்தியோகபூர்வ கடிதத்தில், மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

​மேலும், எடுக்கப்படும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கோரிக்கையை முன்வைத்த அல்ஹாஜ் பிர்தௌஸ் அவர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகார சபைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

​👥 மக்களின் எதிர்பார்ப்பு:
நிட்டம்புவ மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வத்துபிட்டிவலை சந்தி மிக முக்கியமான ஒரு போக்குவரத்து மையமாக காணப்படுகிறது.

நீண்டகாலமாக நிலவி வந்த இந்தப் பிரச்சினைக்கு, உறுப்பினர் பிர்தௌஸ் அவர்களின் முயற்சியால் ஜனாதிபதி செயலகம் நேரடியாகத் தலையிட்டுள்ளமை பிரதேச மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

​விரைவில் இதற்கு ஒரு சுமூகமான தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

🔸குருக்கள் மட விவகாரம்: ஹிஸ்புல்லாஹ்வின் கோரிக்கை நியாயமானது, அவரது நல்ல கோரிக்கைகளை பாராட்டுகின்றேன்.- ஹிஸ்புல்லாஹ்வின்...
08/02/2026

🔸குருக்கள் மட விவகாரம்: ஹிஸ்புல்லாஹ்வின் கோரிக்கை நியாயமானது, அவரது நல்ல கோரிக்கைகளை பாராட்டுகின்றேன்.

- ஹிஸ்புல்லாஹ்வின் கோரிக்கைக்கு பதிலளித்தார் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார.
--------------------------------------------

குருக்கள் மடத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சகோதரர்களின் ஜனாஸாக்களை தோண்டியெடுத்து அவர்களது குடும்பத்தினர் விரும்பியவாறு மார்க்க அடிப்படையில் மீள் அடக்கம் செய்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) நிலையியற் கட்டளை 27 2இன் கீழ் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தா்ர்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

1990 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் திகதி புனித ஹஜ் கிரிகைகளை நிறைவு செய்து விட்டு தங்களது வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்த முஸ்லிம் யாத்திரியர்கள் கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதயில் குருக்கள் மடம் எனும் இடத்தில் தமிழீல விடுதலைப்புலிகளினால் வலிந்து காணாமலாக்கப்பட்டுள்ளனர் என காத்தான்குடியைச் சேர்ந்த அப்துல் மஜீத் முகம்மது றவூப் என்பவரினால் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றில் 2014.04.09ஆம் தகதி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பிலே கடந்த வரவு செலவுத் திட்ட நீதி அமைச்சு தொடர்பான விவாதத்தின் போதும் நான் பேசியிருந்ததை நினைவுகூறுகின்றேன்.

மேற்படி சம்பவத்தின்போது 100 க்கும் மேற்பட்வர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டு அவர்களது உடமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு இறுதியில் கொலை செய்யப்பட்டு குருக்கள்மட கடற்கரையை அண்டிய ஒரு பகுதியில் புதைக்கப்பட்டுள்ளார்கள் என்ற நியாயமான சந்தேகத்தின் அடிப்படையில் நீதிமன்றத்தின் மேலான தலையீட்டைக் கோரிய போது, 2014.04.28ஆம் திகதியாகிய சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே குறித்த புதைகுழியை அகழ்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நீதிவான் கட்டளை பிரப்பித்திருந்தார். எனினும் இன்றுவரை குறித்த புதைகுழி அகழப்படவில்லை.

மேற்படி சம்பவமானது வலிந்து காணாமலாக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள் தொடர்பானதாகும். தங்களது உறவினர்களுக்கும் அன்பர்களுக்கும் என்ன நேர்ந்தது என்பதை அறிகின்ற தார்மீக உரிமை பாதிக்கப்பட்ட அனைவருக்கும் காணப்படுகின்றது. அதன் அடிப்படையில் குருக்கள்மடப் புதைகுழியில் மேற்படி வலிந்து காணாமலாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்தால் புதைக்கப்பட்ட எச்சங்களைத் தோண்டியெடுத்து மரபணுப்பரிசோதனைகள் மூலம் அடையாளங்கண்டு அவ் எச்சங்களை அவர்களது குடும்பத்தினர் விரும்பியவாறு மார்க்க அனுஷ்டானங்களை மேற்கொண்டு கடமைகளை நிறைவேற்றி மீள் அடக்கம் செய்வதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதும் இவ் உயரிய சபையினுடைய கடமையாகும்.

இவ்விடயம் தொடர்பில் இவ் உயரிய சபையில் நான் பேசிய பின்பு நீங்களும் அவ்விடத்திற்கு நேரடியாக விஜயம் செய்து பார்வையிட்டு அகழ்வு பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அதற்குத் தேவையான சகல ஒத்துழைப்புகளையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தீர்கள். இதற்காக பாதிக்கட்ட மக்கள் சார்பாக உங்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனினும் இதற்குத் தேவையான நிதி விடுவிக்கப்படாமை காரணமாகவே இவ்விடயம் இன்னும் பிற்படுத்தப்பட்டு செல்வதாக அறிகின்றேன். ஏற்கனவே இவ் அகழ்வுப் பணிக்காக சுமார் இருபத்தொன்பது இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவ் ஒதுக்கப்பட்ட நிதியானது குறித்த அகழ்வுப் பணிக்கு விடுவிக்கப்படாததன் காரணமாக கடந்த 2026.01.06ஆம் திகதிய வழக்குத் தவணையின் போது நீதிவான் மேலதிக நிதியினைக் கோரியிருப்பதாகவும் நான் அறிகின்றேன்.

நீதிவானின் உத்தரவின் பேரில் குருக்கள்மட மனிதப் புதைகுழி அகழ்வுப்பணியை மண்முனை தென்எருவில்பற்று, களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகமே பொறுப்பேற்றுள்ளதாக அறிகின்றேன். எனவே இதற்குத் தேவையான மொத்த நிதியையும் குறித்த பிரதேச செயலகத்திற்கு விடுவித்து தங்களது உறவுகளின் ஜனாஸாக்களையாவது மார்க்க முறைப்படி நல்லடக்கம் செய்வதற்கு ஆவண செய்யுமாறு தங்களிடம் வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

எனவே வலிந்து காணாமலாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சகோதரர்களின் ஜனாஸாக்களை தோண்டியெடுத்து அவர்களது குடும்பத்தினர் விரும்பியவாறு இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் கடமைகளை நிறைவேற்றி மீள் அடக்கம் செய்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா? என கேட்கிறேன் என்றார்.

இதற்கு பதிலளித்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் கோரிக்கை நியாயமானது, அதற்கான நிதி மிக விரைவில் ஒதுக்கீடு செய்யபப்படும் என்பதோட நான் தனிப்பட்ட ரீதியில் இவ்விடயத்தில் அதிக கவனம் செலுத்துவேன் என்பதோடு இவ்விடயம் தொடர்பில் ஹிஸ்புல்லாஹ்வின் நல்ல முயற்சிகளை பாராட்டுகிறேன். அவன் எந்த நேரத்திலும் என்னோடு தொடர்பு கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

-- ஊடகப்பிரிவு

🔸தேசத் துரோகிகளாக அறிவிக்கப்பட்ட முஸ்லிம் வீரர்களை தேச பற்றார்களாக அறிவிக்க புத்தசாசனஅமைச்சர் இணக்கம்.  அமைச்சர்களான பிம...
06/02/2026

🔸தேசத் துரோகிகளாக அறிவிக்கப்பட்ட முஸ்லிம் வீரர்களை தேச பற்றார்களாக அறிவிக்க புத்தசாசன
அமைச்சர் இணக்கம்.

அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, கலாநிதி ஹினிதும சுனில் செனவி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கிடையில் முக்கிய சந்திப்பு..!
-------------------------------------------

தேசத் துரோகிகளாக அறிவிக்கப்பட்ட முஸ்லிம் வீரர்கள் தொடர்பான விவகாரத்தில், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இன்று (06) பாராளுமன்றத்தில் அமைச்சர்கள் பிமல் ரத்நாயக்க மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி ஆகியோரை தனித்தனியே சந்தித்து கலந்துரையாடினார்.

முதற்கட்டமாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்களை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ், இவ்விவகாரம் தொடர்பில் விரிவான விளக்கங்களை முன்வைத்தார். இதன்போது, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஊடாக இவ்விடயத்தை முன்னெடுத்து நடவடிக்கை எடுப்பது குறித்து தீர்மானிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின்போது, காலனித்துவ ஆட்சிக்கெதிராக போராடிய பல முஸ்லிம் வீரர்கள், ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் ‘தேசத் துரோகிகள்’ என முத்திரை குத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களை உரிய வகையில் தேசப் பற்றாளர்களாக அங்கீகரிக்க வேண்டிய அவசியம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்தினார்.

மேலும், இவ்விவகாரம் தொடர்பான முழுமையான ஆவணங்கள், வர்த்தமானி அறிவித்தல்கள் உள்ளிட்ட தேவையான அனைத்து தகவல்களையும் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி அவர்களிடம் அவர் கையளித்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், குறித்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

தேசத் துரோகிகளாக அறிவிக்கப்பட்ட முஸ்லிம் வீரர்கள் தொடர்பான இந்த விவகாரம் குறித்து, பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் இதற்கு முன்னரும் பல தடவைகள் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் விரிவாக கருத்துகளை முன்வைத்து, தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

-- ஊடகப் பிரிவு

Dr. MLAM Hizbullah

🚨 மாகாண அமைச்சர்கள் இல்லாததால் தொடரும் நிர்வாக சிக்கல்கள் ; மாகாண சபைத் தேர்தலை அவசரமாக நடத்துங்கள்! - பாராளுமன்றத்தில் ...
05/02/2026

🚨 மாகாண அமைச்சர்கள் இல்லாததால் தொடரும் நிர்வாக சிக்கல்கள் ; மாகாண சபைத் தேர்தலை அவசரமாக நடத்துங்கள்! - பாராளுமன்றத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல்

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாததால் நாட்டில் தற்போது மாகாண அமைச்சர்கள் இல்லை எனவும், ஆளுநர்களே விடயங்களைக் கவனித்து வருவதால் நிர்வாகச் சிக்கல்கள் ஏற்படுவதாகவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஆகையால், அவசரமாக மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.

செவ்வாய்க்கிழமை (3) பாராளுமன்றத்தில், "தித்வா" சூறாவளியினால் பாதிக்கப்பட்ட கண்டி மாவட்ட பாடசாலைகளின் நிலைமை குறித்து பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய போதே அவர் இதனை வலியுறுத்தினார்.

🏫 பாடசாலைகளின் அவலநிலை குறித்த முக்கிய சுட்டிக்காட்டல்கள்:

* தெல்தோட்டை முஸ்லிம் மகா வித்தியாலயம்: நிலச்சரிவு அச்சுறுத்தல் காரணமாக பாடசாலை விளையாட்டு மைதானம் மற்றும் ஆரம்பப் பிரிவு கட்டிடங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன (NBRO) அதிகாரிகள் இதுவரை இப்பகுதியைப் பார்வையிட வரவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

* கம்பளை கல்வி வலயம்: பேரவில, படித்தலாவ மற்றும் பரணகல போன்ற பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டு, மாணவர்கள் தற்காலிக இடங்களில் போதிய வசதியின்றி கல்வி கற்று வருகின்றனர்.

* அல்-ஹிக்மா பாடசாலை: நிலச்சரிவு அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்ட இப்பாடசாலைக்கு யுனிசெப் (UNICEF) நிதி மூலம் தற்காலிக கட்டிடங்களை அமைக்கும் பணிகள் மூன்று மாதங்களாகியும் இன்னும் தொடங்கப்படவில்லை.

* கஹட்டபிட்டிய மினா வித்தியாலயம்: நன்கொடையாளர் ஒருவர் கட்டிடம் கட்ட முன்வந்தும், மாகாண சபையின் அனுமதி கிடைக்காததால் பணிகள் தாமதமாகின்றன.

✅ பிரதமரின் பதில்:
பாதிக்கப்பட்ட பாடசாலைகள் குறித்து கல்வி அமைச்சின் பொறியியல் பிரிவு மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) ஆகியவற்றின் அறிக்கைகளை உறுதிப்படுத்திய பின்னரே உரிய நடவடிக்கை எடுக்க முடியும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். மேலும், தெல்தோட்டை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் எஞ்சிய கட்டிடப் பணிகளை முடிக்க இந்த ஆண்டு நிதி கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மாகாண சபைத் தேர்தல் நடக்காததால் மாகாணக் கல்வி அதிகாரிகள் மூலம் பணிகளை முன்னெடுப்பதில் உள்ள தடைகளை நீக்க கல்வி அமைச்சு ஒரு கூட்டத்தைக் கூட்ட வேண்டும் எனவும் ரவூப் ஹக்கீம் இதன்போது கேட்டுக்கொண்டார்.

கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிர...
03/02/2026

கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரதப் போராட்டக் களத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்கள் நேரில் விஜயம் செய்தார்.

​இதன்போது அவருடன் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாசித் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

​போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களைச் சந்தித்த தலைவர்கள், அவர்களின் கோரிக்கைகள் மற்றும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தனர். உத்தியோகத்தர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத் தீர்வு காணத் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

Address

Gampaha

Alerts

Be the first to know and let us send you an email when SLMC Youth Congress - Gampaha District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SLMC Youth Congress - Gampaha District:

Share