Abu Bakkar Siddeeq Jummu'aa Masjidh, Hapugastalawa

Abu Bakkar Siddeeq Jummu'aa Masjidh, Hapugastalawa from Hapugastalawa

27/08/2026
19/08/2026

எவர், அல்லாஹ் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை; மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
(அல்குர்ஆன் : 2:174)

அவர்கள்தாம் நேர்வழிக்கு பதிலாக வழிகேட்டையும்; மன்னிப்பிற்கு பதிலாக வேதனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். இவர்களை நரக நெருப்பைச் சகித்துக் கொள்ளச் செய்தது எது?
(அல்குர்ஆன் : 2:175)

18/08/2026

புனித மாதங்கள் 4 இருக்க,
ரபிய்யுல்அவ்வலை புனிதமாக கருதும்,
மௌலூதை மார்க்கமாக கருதும்,
மீலாதை கொண்டாட்டமாக கருதும்,
மார்க்கத்தை விட சடங்கு சம்பிரதாயங்களை
மார்க்கமாக கருதும் காலத்தில்
எம்மையும் எமது குடும்பத்தையும் நரக நெருப்பில் இருந்து பாதுகாக்க முயறசிப்போம்.
Full Video
https://www.youtube.com/watch?v=xgrKCaL3mC4

"உள்ளம் அமைதிபெற" எம் எல்லோருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! நன்மையான விடயங்களில் எம்மை ஒன்று சேர்ப்பனாக! அதுபோலவே தீமைய...
09/08/2026

"உள்ளம் அமைதிபெற"

எம் எல்லோருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!
நன்மையான விடயங்களில் எம்மை ஒன்று சேர்ப்பனாக! அதுபோலவே தீமையான விடயங்களைவிட்டும் எம்மை பாதுகாப்பானாக!

பரீட்சை எழுதும் மாணவர்கள் பலரும் பதட்டமாகவே இருப்பதை காணக்கிடைக்கிறது. இருவருடம் மூவருடம் கற்றதை ஓரிரு மணிநேரத்தில் எழுத வேண்டும் என்பதாலோ தெரியாது.

எனினும் காலை எழுந்ததும் கலைக்கடன்கள் மற்றும் காலைநேர அமல்கள் முடிந்ததும் நிதானமாக கு ர்ஆனில் இருந்து குறைந்தது ஒரு பத்து வசனத்தையாவது ஓதி அதன் தமிழ் மொழிபெயர்ப்பை சத்தமாக வாசிப்பதை பழக்கப்படுத்த வேண்டும். இது உள்ளத்துக்கு அமைதியை கொண்டு வரும், இன்ஷாஅல்லாஹ்!

"அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன"
என்ற 13:28 எனும் அல்குரானின் வசனத்துக்கு அமைவாக குர்ஆனை ஓதல், பிரார்த்தனை, திக்ருகள் மூலம் எம் உள்ளங்கள் அமைதிபெறும்.

எனவே பதட்டத்தில் இருக்கும் எம் பிள்ளைகளுக்கு காலையிலே குர்ஆனின் வசனங்களை பொருளுணர்ந்து ஓத வழி காட்டுவோம். ஓதுவதில் ஒவ்வொரு எழுத்துக்கும் நன்மை என்பது குர்ஆனிய வசனங்களுக்கு மட்டுமே!

உயர்தரம் எழுதும் எம் சகோதர சகோதரிகளுக்கு அவர்கள் எண்ணம்போல் வெற்றிபெற அல்லாஹ் அருள் புரிவானாக! அவர்கள் பெற்ற, பெறப்போகும் கல்வி அவர்களை மறுமையில் வெற்றிபெற துணை நிட்கவும் அல்லாஹ் அருள்புரிவானாக!

பரீட்சைகளும் தூஆவும்பரீட்சைகள் நெருங்கும்போது துஆ பிரார்த்தனை மஜ்லிஸ்கள், விசேட துஆ பிரார்த்தனை நிகழ்வுகள் என எமது காதுக...
08/08/2026

பரீட்சைகளும் தூஆவும்

பரீட்சைகள் நெருங்கும்போது துஆ பிரார்த்தனை மஜ்லிஸ்கள், விசேட துஆ பிரார்த்தனை நிகழ்வுகள் என எமது காதுகளுக்கு எட்டும். இந்நிகழ்வுகளுக்கு ஊரில் பிரதான ஆலிம் ஒருவர் அழைக்கப்படுவார், துஆ கேட்கவென சிலர் அமர்த்தப்படுவர். ஏற்பாட்டாளர்களின் தேவைப்பிராகாரம் அவர்களும் தமது கடமையை செவ்வனே செய்துவிட்டு சென்றுவிடுவர். இது சரியா? தலறா? என்பன தாண்டி இது வாழையடி வாழையாக நடந்தேறுவதை காணலாம்.

எனினும் இஸ்லாமியர்கள் எமக்கு பிறப்பு முதல் இறப்பு வரை வாழ வழிகாட்டிவிட்டு சென்ற அல்லாஹ்வின் தூதரின் அழகிய பல போதனைகளை மறந்துவிடுகிறோம். அல்லது அறியாது இருக்கிறோம். அல்லது வழிகாட்டப்படாது வழிதவறவிடப்பட்டிருக்கின்றோம்.

எனவே நாம் எதிர்பார்க்கும் ஒன்றை நாம் பெற அல்லாஹ்வை நெருங்குவது எவ்வாறு? என அறியவேண்டியவர்களாக இருக்கின்றோம்.

அதில் பிரதானமானது துஆவாக இருக்கிறது.

எனவே சந்தேகம் இன்றி ஏற்றுகொள்ளப்படும் பட்டியலில் பெற்றோர்களின் துஆ இருப்பது என்பது நபிமொழி!

எனவே எம் பிள்ளைகளின் வெற்றிக்காக பெற்றோராகிய நாம் தஹஜ்ஜத்தில் பிரார்த்திப்போம்.

முதலில் அல்லாஹ்வை புகழ்ந்து நபிகளார் மீது ஸலவாத் கூறி பிரார்த்தனையை ஆரம்பிப்போம்..

தெரிந்த மொழியில் கேட்போம். மொழிகளுக்கு சொந்தக்காரன் அல்லாஹ்!

மூன்று பிரார்த்தனைகள் எந்த சந்தேகமுமின்றி ஏற்றுக் கொள்ளப்படும்,
1. அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை,
2. பிரயாணியின் பிரார்த்தனை,
3. பெற்றோர் தன் பிள்ளைக்கு செய்யும் துஆ
என நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்: திர்மிதி

எனவே ஊரில் பரீட்சைகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிந்து அவர்களது எண்ணங்களை பூர்த்தி செய்வானாக!
யா ரஹ்மானே! அவர்கள் பெற்றோர்களின் துஆக்களை ஏற்றுக்கோள்வானாக!

Address

Abu Bakkar Siddeek Jumma Masjidh
Hapugastalawa

Telephone

0771106106

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abu Bakkar Siddeeq Jummu'aa Masjidh, Hapugastalawa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Abu Bakkar Siddeeq Jummu'aa Masjidh, Hapugastalawa:

Shortcuts

Share

Category