National People's Power - Hemmathagama

National People's Power - Hemmathagama தூய்மையான அரசியலை நோக்கி.......
தேசிய மக்கள் சக்தி
අදූෂිත දේශපාලනයක් කරා........
ජාතික ජනබල වේගය

07/05/2025

இதுவே நேற்றைய சம்பவத்திற்கான ஊன்றுதல்

ஐக்கிய மக்கள் சக்தி மடுள்போவ வட்டாரத்தில் பெற்ற வெற்றியின் பின்னர் அந்த கட்சியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மடுள்போவ மற்றும் ஹிஜ்ராகம பகுதிகளில் பட்டாசு வெடிக்க வைத்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதன்போது பல இடங்களில் எமது தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கிய மற்றும் உதவியவர்களின் வீடுகளுக்கு முன்பாகவும் வேண்டும் என்றே பட்டாசு வெடிக்க வைத்த கசப்பான சம்பவங்கள் பதிவாகியதை அனைவரும் அறிவோம். இதன்போது ஒரு வீட்டில் நோயுற்ற வயோதிபத் தாய் ஒருவர் இருந்தார் என்பதும் கவலையான விடயம்.

குறிப்பாக, கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் என்பவற்றில் தேசிய மக்கள் சக்தி, முழு நாட்டிலும் மக்கள் ஆதரவைப் பெற்று மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற வேளைகளிள்கூட நாட்டில் எந்தவொரு இடத்திலும் இவ்வாறான பட்டாசு வெடிப்பு சம்பவமோ கீழ்த்தரமான சம்பவமோ இடம்பெறவில்லை.

எனினும், நேற்றைய இந்த சம்பவம் அந்த கட்சியின் பழைய கலாசாரத்தை மீண்டும் ஊரில் புதுப்பிக்கும் விதத்தில் இருந்தது.

”எங்களது பிரச்சார பணியில் நாங்கள் பட்டாசு போடுவோம், அதன்போது ஊரில் இருக்கின்ற இரண்டு வீட்டிற்கு பாதிப்புகள் ஏற்படும். அதற்கு மன்னித்துக்கொள்ளுங்கள்…..“ இது ஐக்கிய மக்கள் சக்தியின் பிரச்சார கூட்டத்தில் பகிரங்கமாக தெரிவிக்கப்பட்ட கருத்து. இந்த கருத்தே இவ்வாறான கீழ்த்தரமான செயலுக்கு ஊன்றுதல் என்று நாம் நம்புகிறோம்.

இந்நிலையில், நேற்றைய சம்பவத்திற்கும் தமக்கும் தொடர்பில்லை என்று கூறிய அவர்கள் குறித்த வீடுகளில் மன்னிப்பும் கோரியிருந்தனர். எனினும், அவர்களது ஆதரவாளர்களுடன் இருந்த அந்த கீழ்த்தரமான நபரை ஆதாரத்துடன் அடையாளம் காண்பிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். அவ்வாறு செய்வது அவர்களது கடமை.

அவர்கள் குறித்த நபரை அல்லது குழுவை அடையாளப்படுத்தினால் நேற்றைய கீழ்த்தரமான சம்பவத்திற்கும் அவர்களுக்கும் தொடர்பு இல்லை என்பதை எம்மால் நம்பலாம்.

குறித்த நபரை அவர்கள் ஆதாரத்துடன் அடையாளம் காண்பிப்பார்களா?
இதற்கும் அவர்களுக்கும் தொடர்பு இல்லை என்பதை நிரூபிப்பார்களா?

03/05/2025
09/04/2025
07/09/2024

මිනිසුන් උපදින්නේ නිදහස් මානසිකත්වයෙන්... වහල් කම එකතු වෙන්නේ ගොන් කමින් හා නූගත් කමින්....
" තම අතේ ඇති විලංගු කැඩීමට තමා කැමති නැත්තම් කවුරු කෙසේ උත්සාහ කලත් එය නොකැඩේ... "

மனிதன் பிறக்கும் போதே சுதந்திரமாக பிறக்கிறான். அடிமைத்தனம் என்பது அவனுடைய முட்டாள் தனத்தாலும் அறிவு கெட்ட தனத்தாலும் உருவாகிறது.
" தன் கரங்களின் விளங்கை அவிழ்க்க தான் விருப்பமில்லை என்றால் யார் எவ்வாறு முயற்சித்தாலும் அதனை அவிழ்க்க முடியாது."

Address

Hemmatagama

Telephone

+94701988555

Alerts

Be the first to know and let us send you an email when National People's Power - Hemmathagama posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to National People's Power - Hemmathagama:

Share