09/11/2020
Copy
கோரோனா, பிக்பொஸ், IPL எண்டு கவனக் கலைப்பான்கள் இருக்கிறதால இந்தச் செய்தி எங்கட கண்ணில் பட சந்தர்ப்பம் குறைவாக இருக்கலாம்.
கண்ணில் பட்டிருந்தாலும் நாங்கள் நிதானமாக வாசிக்காமல் விட்டிருக்கலாம்.
வசித்தாலும் நாங்கள் விண்ணப்பிக்காமல் இருக்கலாம்.
ஆனால் இது மிக முக்கியமான ஒரு விடயமாகத் தெரிகின்றது. பாவனையில் இல்லாத அரச காணிகளை, மத்தியதர வகுப்பு திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு உரிமையாளர்களால் பராமரிக்கப்படாமல் இருக்கின்ற காணித்துண்டுகளை உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் காணி கோரும் இளம் தொழில் முனைப்பாளர்களுக்கு (45 வயதுக்கு உட்பட்டோர்) நிபந்தனைகளுடன் வழங்க அரசாங்கம் முடிவசெய்திருப்பதாக முல்லைத்தீவு மாவட்டத்தின் காணி அலுவலர் ஒருவர் மூலம் தெரிந்து கொண்டேன்.
இதற்காக நீங்கள் இப்போதைக்கு செய்ய வேண்டியது முதலாவது கொமண்டில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உங்களது பிரதேச செயலகத்தில் கையளிப்பது மட்டுமே. இறுதித் திகதி நவம்பர் 15ம் திகதி.
//நீங்கள் எந்த பிரதேசத்தில் காணியொன்றினை எதிர்பார்க்கிறீர்கள்?// என்ற கேள்விக்கு விழுந்தடிச்சு யாழ்ப்பாணம், நல்லூர், உடுவில் என்று போட வேண்டாம். உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட அது காரணமாக இருக்கும். ஏனெனில் யாழ்ப்பாணத்தில் அரச காணிகள் இல்லை.
பயன்பாடற்ற அரச/ மத்தியதர வகுப்பு (MC land) காணிகள் அதிகம் உள்ள புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று, நெடுங்கேணி, வவுனியா வடக்கு, ஒட்டுசுட்டான், மாந்தை கிழக்கு போன்ற பிரதேச செயலர் பிரிவுகளில் ஒன்றைக் குறிப்பிடுங்கள். வாய்ப்புக்கள் அதிகம்.
இரண்டு ஒற்றையில பிரிண்ட் எடுத்து... நிரப்பி பதிவுத்தபாலில் பிரதேச செயலருக்கு அனுப்பி வைக்க ஒரு மணித்தியாலம் காணும். நண்பர்களாகச் சேர்ந்து விளையாட்டு விளையாட்டாக உழுந்து விதைத்தாலும் 90 நாள்ல ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சம் நிகர லாபம் வரும்.
சந்தர்ப்பத்தைத் தவறவிட்ட பின்னர்...
கார்ட்போட் மட்டையில் "எமது நிலம் எமக்கே" என்று எழுதிப் பிடிச்சிட்டு ரீவி/யூடியூப் சனலுகளுக்கு பேட்டி குடுக்க வேண்டாம்
தயவு செய்து இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வோம். நான் நிரப்பிக் கொடுத்திட்டேன்.