Information Technology

Information Technology lets know computer technology.....

12/08/2014

பேஸ்புக்கில் எமது PROFILEஐ பார்வையிட்டவர்களைக் கண்டுபிடிக்க இலகுவான வழி…

நாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை பார்த்துள்ளார் இதனையும் அறிய முடியும்.
சரி முதலாவதாக உங்களின் Facebook LOGIN செய்து உங்கள் Profile பகுதிக்கு செல்லவும்.

அடுத்து Profile பக்கத்தில் வைத்து [ ctrl + u ] அழுத்தவும். அப்பொழுது profile பக்கம் Source Code இல் புதிய Window மூலம் Open ஆகும்.

அதன்பிறகு Source Code இன் Window இல் [ ctrl + f ] அழுத்தவும், இப்போது Search Bar Open ஆகும்.
அந்த Search Bar இல் {“list” இதை Type செய்து Enter பண்ணவும்.

இது மாதிரி {“list””1000011345400-2″,”10000043254566-3″ இருக்கும் list கிடைக்கும்.

உங்களுக்கு தெரியுமா Facebook Username System அறிமுகமாக முன் அனைவருக்கும் இதுமாதிரி Code
அதாவது இதில் 1000011345400 இது உங்களுடைய FB Profile க்கு வந்தவர் -2″ இது எத்தனை முறை வந்துள்ளார் என்பது

சரி இலக்கத்தை வைத்து நண்பரை கண்டுபிடிப்போம்?

புதிய பக்கத்தில் www.facebook.com என்று type செய்து [ / ] sigh இதை இட்டு உங்கள் நண்பரின் இலக்கத்தை
paste பண்ணவும்.

இதுமாதிரி [ www.facebook.com/1000011345400]

இப்போது Enter கொடுக்கவும் உங்களின் profile இக்கு வந்தவரின் profile ஓபன் ஆகும்.

நண்பர்களுக்கு பகிருங்கள் இதன் மூலம் அவர்களும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்பதை அறியட்டும்.

உலகின் முதலாவது வயர்லெஸ் ஸ்கானர் மவுஸ் உருவாக்கம்ஹொங்ஹொங்கினை தளமாகக் கொண்டு இயங்குதம் Design to Innovation (DTOI) நிறுவ...
03/08/2014

உலகின் முதலாவது வயர்லெஸ் ஸ்கானர் மவுஸ் உருவாக்கம்

ஹொங்ஹொங்கினை தளமாகக் கொண்டு இயங்குதம் Design to Innovation (DTOI) நிறுவனம் உலகின் முதலாவது வயர்லெஸ் ஸ்கானர் மவுஸினை உருவாக்கியுள்ளது.
சாதாரண ஒப்டிக்கல் மவுஸ்களை போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த Zcan மவுஸ் ஆனது புகைப்படங்கள், டெக்ஸ்ட் ஆகியவற்றினை ஸ்கான் செய்யும் வசதியை பயனர்களுக்கு வழங்குகின்றது.

2.4 GHz மீடிறனில் Wi-Fi தொழில்நுட்பத்தில் செயற்படக்கூடியதாக இருக்கும் Zcan மவுஸினை Windows 7, Windows 8, Mac OS X 10.6 ஆகியவற்றிலும் மூன்றாம் தலைமுறைக்குரிய iPad, இரண்டாம் தலைமுறைக்குரிய iPad Mini மற்றும் iPhone 5/5S ஆகியவற்றிலும் பயன்படுத்த முடியும்.

இதன் மூலம் Excel, Word, PDF, TXT JPEG, TIFF, PNG அல்லது BMP கோப்புக்களை ஸ்கான் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
http://tech.lankasri.com/view.php?200dBnZZdbc44Q6AA334ea6609Fee033HlOmmcddccmOl3d220eFF906aae43yIMQQ4cbddZnBdd03

சாதாரண ஒப்டிக்கல் மவுஸ்களை போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த Zcan மவுஸ் ஆனது புகைப்படங்கள், டெக்ஸ்ட் ஆகியவற்றினை ஸ்கான் செய்யும் வசதியை பயனர்களுக்கு வழங்குகின்றது.

17/05/2014

Google Chrome-இல் ஒரே நேரத்தில் இரண்டு Facebook கணக்குகளை Log In செய்வது எப்படி...?
உங்களுக்கு சில நேரங்களில் இரண்டு Facebook கணக்குகளில் Log In செய்ய வேண்டி வரும். அதற்கு நீங்கள் வேறு எதாவது Web Browser-களை பார்ப்பீர்கள். இல்லையென்றால் உங்களுடைய முதலாவது Facebook கணக்கை Log Out செய்து விட்டு உங்களுடைய இரண்டாவது கணக்கை Log In செய்வீர்கள். ஆனால் Google Chrome-இல் ஒரே நேரத்தில் இரண்டு Facebook கணக்குகளை Log In செய்யலாம் அது எப்படி என்று பார்ப்போம்.
► உங்களுடைய Google Chrome-ஐ திறந்து மேலே வலது பக்கத்தில் உள்ள Setting Icon-ஐ click செய்யவும் அதில் மூன்றாவதாக உள்ள New incognito window-இல் click செய்யவும்.
இப்படி எல்லாம் செய்வது கடினம் என்றால்...
உங்கள் Keyboard-இல் Ctrl+Shift+N என்பதை அழுத்தவும்.
► இப்போது உங்களுக்கு ஒரு விஷேட Window தோன்றும். அதில் Facebook தளத்துக்கு சென்று உங்களுடைய மற்றைய Facebook கணக்கை Log In செய்து இரண்டு Facebook கணக்குகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்

Toshiba அறிமுகம் செய்யும் புத்தம் புதிய லப்டொப்Toshiba நிறுவனம் அடுத்த வாரம் புத்தம் புதிய லப்டொப் ஒன்றினை அறிமுகம் செய்...
20/04/2014

Toshiba அறிமுகம் செய்யும் புத்தம் புதிய லப்டொப்

Toshiba நிறுவனம் அடுத்த வாரம் புத்தம் புதிய லப்டொப் ஒன்றினை அறிமுகம் செய்துவைக்கவுள்ளது.

அதாவது எதிர்வரும் 22ம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ள Toshiba 4K எனும் இந்த லப்டொப் ஆனது 15.6 அங்குல அளவுடைய திரையினைக் கொண்டுள்ளது.

மேலும் நான்காம் தலைமுறைக்குரிய Intel Core I7 Processor, பிரதான நினைவகமாக 16GB RAM, சேமிப்பு நினைவகமாக 5400 RPM வேகம் கொண்ட 1TB வன்றட்டு என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1,500 டொலர்கள் பெறுமியான இந்த லப்டொப்பில் 2GB AMD Radeon R9 M265 கிராபிக்ஸ் கார்ட்டும் இணைக்கப்பட்டுள்ளது.

16/02/2014
16/02/2014

ஒவ்வோரு பொருட்களையும் எவ்வாறு தயாரிக்கின்றனர் என்பதை அறிந்து கொள்ள ஒரு இணையத்தளம் இருக்கின்றது.

அது பற்றி தான் இந்த பதிவு உலகில் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான எத்தனை எத்தனை சாதனங்கள் பொருட்கள் என தயாரிக்கப்பட்டு கொண்டு இருக்கின்றன. இப் பொருட்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன. என அறிய யாருக்குதான் ஆர்வமிருக்காது, சிறிய பொருட்களில் இருந்து பெரிய பொருட்கள் வரை அவை எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதை விபரமாக வழங்கும் தளம்தான் இந்த இணையத்தளம்
இந்த இணையத்தளம் இங்கு குறித்த பொருட்களின் உருவாக்கம் பற்றிய நிழற்படங்களுடன் கூடிய கட்டுரை எழுதப்பட்டுள்ளது இது மிகவும் பயனுள்ள இணையத்தளம் என்பது குறிப்பிடதக்கது .
http://www.madehow.com/

How Products Are Made: Volume 1, Volume 2, Volume 3, Volume 4, Volume 5, Volume 6, and Volume 7

மற்றவர் நம்மமொபைலை பயன்படுத்த முடியாமல் மென்பொருள்!........ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி கைபேசி திரையை தொட்டு பயன்படுத்துவ...
16/02/2014

மற்றவர் நம்மமொபைலை பயன்படுத்த முடியாமல் மென்பொருள்!........

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி கைபேசி திரையை தொட்டு பயன்படுத்துவோம். அழுத்தும் வேகம், மேலே கீழே நகர்த்துவது என இந்த செயல்கள் ஒவ்வொரு ஆளுக்கும் வேறுபடும்.
இந்த வேறுபாடுகளை வைத்து அந்தக் கைப்பேசியின் உரிமையாளர் யார் என்பதை கண்டறிந்து மற்றவர் தொட்டால் திரையை அணைத்துவிடும் புதிய மென்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இலியாநஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் Cheng Bo மற்றும் அவரின் நண்பர்கள் Silent Sense எனும் இந்த மென்பொருளை எழுதியுள்ளார்கள்.

இதை நிறுவியது முதல் உங்களின் விரல் அசைவு வேகம், தொடும் அழுத்தம், இழுக்கும் முறை போன்றவற்றை உள்வாங்கி பதிந்துகொள்ளும்.

100 நபர்களிடம் நடத்திய சோதனையில் இந்த மென்பொருள் 98% அளவில் உரிமையாளரை சரியாகக் கண்டுபிடித்துவிட்டது.

பிற மென்பொருள்கள் மற்றும் விளையாட்டுகள் விளையாடும் போது இந்த மென்பொருள் வேலை செய்யாது. ஆனால் முக்கியமாக மின்னஞ்சல், குறுந்தகவல் மற்றும் புகைப்படங்களை பார்க்கும் போது இது செயல்பட்டு பிறர் பயன்படுத்தாத வண்ணம் காக்கும்.

விரைவில் Silent Sense மென்பொருள் அனைவரின் பயன்பாட்டிற்கும் வர இருக்கிறது.

i phone 6 தொடர்பான தகவல்......ஸ்மார்ட் தொலைபேசிகளில் பலர்  எதிர்பார்ப்பைப் பெற்றுள்ள அப்பிள் தாரிப்பான iPhone   கைப்பேசி...
16/02/2014

i phone 6 தொடர்பான தகவல்......

ஸ்மார்ட் தொலைபேசிகளில் பலர் எதிர்பார்ப்பைப் பெற்றுள்ள அப்பிள் தாரிப்பான iPhone கைப்பேசி என்பது எல்லோருக்கும் தெரிந்ததே அப்பிள் இன் அடுத்த iPhone 6 தொடர்பில் புதிய தகவல்கள் ஒன்று வெளியாகியுள்ளது.

முன்னதாக வெளியான திரையின் அளவு தொடர்பாக 4.8 அங்குல அளவுடையதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது 5 அங்குல அளவுடைய Sapphire Glass தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்ட தொடுதிரையினைக் கொண்டதாகவே iPhone 6 அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமில்லாமல் இக்கைப்பேசியில் அப்பிளின் iOS 8 இயங்குதளம் நிறுவப்பட்டலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது பொறுத்திருந்து பார்ப்போம் .

Address

Jaffna Town

Opening Hours

Saturday 08:00 - 21:00
Sunday 08:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Information Technology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category