04/09/2026
🤝இளைஞர்களுக்கான திட்ட அறிமுக நிகழ்வு – நாச்சிக்குடா, கிளிநொச்சி
செல்வநாயகம் நினைவு அறக்கட்டளை (Chelvanayakam Memorial Trust – CMT) முன்னெடுத்து வரும், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் (ONUR) “இளைஞர்கள் மற்றும் சமூகத்தினருக்கிடையில் ஒன்றுகூடல், தொடர்புவலையமைப்பு மற்றும் உரையாடல் பகிர்வு ஊடாக சமூக ஒருமையை வலுப்படுத்தும் ஒருங்கிணைந்த செயற்பாடுகள்” செயற்திட்டத்தின் கீழ், இளைஞர்களுக்கான அறிமுக மற்றும் வழிகாட்டல் நிகழ்வு 04.09.2026 இன்று கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரிப் பிரிவுக்குட்பட்ட நாச்சிக்குடா கிராமத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் செயற்திட்டத்தின் நோக்கங்கள், எதிர்பார்க்கப்படும் செயற்பாடுகள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. மேலும், அமைதி, நல்லிணக்கம், சமூக ஒற்றுமை, பரஸ்பர புரிந்துணர்வு, உரையாடல் மற்றும் வலையமைப்பை மேம்படுத்துவதில் இளைஞர்களின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.
இந்த அறிமுக மற்றும் வழிகாட்டல் நிகழ்வு, இளைஞர்களை சமூக மட்டத்தில் நேர்மறையான மாற்றத்திற்கான செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதற்கான முக்கியமான ஆரம்ப கட்டமாக அமைந்தது. 🕊️🤝🌱
⸻
🤝Orientation Programme for Youth – Nachchikkuda, Kilinochchi
An Orientation Programme for Youth under the “Integrated Actions for Social Cohesion through Gathering, Networking and Dialogue Sharing – Youth and Community” project, implemented by the Chelvanayakam Memorial Trust (CMT) in collaboration with the Office for National Unity and Reconciliation (ONUR), was successfully held on 04 September 2026 in Nachchikkuda village, Poonakary Division, Kilinochchi District.
The programme provided an opportunity for youth to gain an understanding of the project objectives, planned activities, and their expected role in the initiative. Discussions also focused on the importance of youth engagement in promoting peace, reconciliation, social cohesion, mutual understanding, dialogue, and community networking.
The orientation marked an important first step towards empowering young people to actively contribute to positive change and strengthen social cohesion at the community level. 🕊️🤝🌱