இயற்கையுடன் இசைவுற இணைவோம்

  • Home
  • Sri Lanka
  • Jaffna
  • இயற்கையுடன் இசைவுற இணைவோம்

இயற்கையுடன் இசைவுற இணைவோம் About Nature's

"கொக்குவிலும் நந்தாவில் குளமும் ..."தூண்டாமணி விளக்கு என்பது இந்துக் கோவில்களின் கருவறையில் உள்ள ஒரு வகை விளக்காகும். இவ...
03/02/2025

"கொக்குவிலும் நந்தாவில் குளமும் ..."

தூண்டாமணி விளக்கு என்பது இந்துக் கோவில்களின் கருவறையில் உள்ள ஒரு வகை விளக்காகும். இவ்விளக்கினைத் தூங்காமணி விளக்கு, நந்தா விளக்கு என்றும் அழைக்கின்றார்கள். இவ்விளக்கினை, திருநுந்தா விளக்கு என்று முதலாம் இராஜேந்திரன் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளார்கள்.
நுந்துதல் என்பதற்கு தூண்டுதல் என்று பொருள். இவ்விளக்கின் சிறப்பு அமைப்பின் காரணமாகத் திரியைத் தூண்டுதல் அவசியமற்று இருப்பதால் நுந்தா விளக்கு என்றும் தூண்டாமணி விளக்கு என்றும் அழைக்கப்பெறுகிறது. நுந்தா விளக்கு என்பது திரிந்து நந்தா விளக்கு என்றும், தூண்டாமணி விளக்கு என்பது திரிந்து தூங்காமணி விளக்கு என்றும் அறியப்பெறுகிறது
முட்டை வடிவில் காணப்படும் இந்த அணையா விளக்கினை மணி விளக்கென்றும் தூங்காமணி விளக்கென்றும் குறிப்பிடுகிறார்கள். நந்தா விளக்கு என்றும் இதனைக் குறிப்பிடுவதுண்டு. நந்துதல் என்ற சொல்லுக்கு அணைதல் என்று பொருள். நந்தா விளக்கு என்றால் அணையாமல் எரியும் விளக்கு என்று பொருள். தூண்டா விளக்கு என்றும் தீண்டா விளக்கு என்றும் இத்தகைய விளக்குகள் குறிப்பிடப்படுவது உண்டு.

இரவும் பகலும் எரியும் இந்த விளக்கின் திரி தூண்டாமல் அல்லது மனிதனால் தீண்டாமல் எரியும் விளக்கு என்பது இதன் பொருள்.
இந்த விளக்குகளில் உருளை வடிவிலான எண்ணெய்க் கலயம், எண்ணெய் வழிவதறகான சிறு துவாரம், விளக்கு ஆகிய பகுதிகள் காணப்படுகின்றன. விளக்கில் திரி இட்டு ஏற்றப்பட்ட சுடர் எரிந்து கொண்டிருக்கும். எண்ணெய்க் கலயத்திலிருந்து சிறு துவாரம் வழியாகச் சிறிது சிறிதாக எண்ணெய் விளக்கில் சொட்டிக்கொண்டிருக்கும். இதன் காரணமாக விளக்கும் இரவு பகல் என்று தொடர்ந்து அணையாமல் எரிந்து கொண்டிருக்கும். உருள் கலயத்தின் மேற்பகுதியில் அன்னப்பறவை போன்ற உருவங்களை அமைத்து இருப்பார்கள். இந்த விளக்கு சங்கிலியால் இணைக்கப்பட்டுக் கூரையிலிருந்து தொங்கவிடப்பட்டிருக்கும். நந்தா விளக்குகள் குறித்த பல செய்திகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.
சிந்தாதேவி செழுங்கலை நியமத்து
நந்தா விளக்கே…” (மணிமேகலை)
“நந்தா விளக்குப் புறம் ஆகு என நான்கு கோடி நொந்தார்க் கடந்தோன் கொடுத்தான் பின்னை நூறு மூதூர்” (சீவகசிந்தாமணி:12:187)
”கொண்டி மகளிர் உண்டுறை மூழ்கி
அந்தி மாட்டிய நந்தா விளக்கின்
மலரணி மெழுக்க மேறிப் பரல்தொழ”
(பட்டினப்பாலை பாடல் வரிகள். 246 – 248)
நான் சொல்லவந்த விடயம் தடம் மாறி செல்வதால் .
விடயத்துக்கு வருகிறேன்

கொக்குவிலுக்கும் கோண்டாவிலுக்கும் இடையே உள்ளது கோழி முட்டை வடிவமான குளம், இது நந்தா விளக்குப்போல பரந்து காணப்பட்டதால் "நந்தாக் குளம் - நந்தாவில்" ஆயிற்று.
இது பல பதினாறு குளங்களை இணைத்து பெரும் ஏரியாக காணப்பட்டது. இன்று காணி பிடிபோரால் இந்தக் குளம் குறுகி குறுகி அழிந்து வருகிறது.

கிராமத்து இளைஞர்கள் ஒன்றிணைந்து இந்த ஏரியை தூர் வார்ந்து மழை நீரை சேகரித்து .நிலத்தடிநீரை வளம் படுத்துவீர்களாக ...

நன்றி : மாணிக்கவாசகர் வைத்திலிங்கம்

வான்பாயும் இரணைமடுக்குளம் ...
23/01/2025

வான்பாயும் இரணைமடுக்குளம் ...

15/01/2025
"ஹிலியர் ஏரி" அவுஸ்திரேலியாவிலுள்ள உப்பு நீர் ஏரி ஆகும். 2000 அடி நீளமும் 820 அடி அகலமும் கொண்ட இதன் நீர் இளஞ்சிவப்பு நி...
02/12/2024

"ஹிலியர் ஏரி" அவுஸ்திரேலியாவிலுள்ள உப்பு நீர் ஏரி ஆகும். 2000 அடி நீளமும் 820 அடி அகலமும் கொண்ட இதன் நீர் இளஞ்சிவப்பு நிறத்தில் இருப்பதால் "பிங்க் லேக்" என அழைக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவின் தென்மேற்கு பகுதியில் இந்தியப் பெருங்கடல் அருகே இந்த ஏரி அமைந்துள்ளது. ஏரியை சுற்றி மணற்பரப்பும் அதனை சுற்றி அடர்ந்த காடும் உள்ளது.

இளஞ்சிவப்பு நிறமானது நிரந்தரமாக ஏரி நீரில் உள்ளது. அதற்கு காரணம் அந்நீரில் வாழும் "டுனாலேய்லா சலினா" எனும் ஓர் செல் உயிரினம்.

தண்ணீரை கையில் அள்ளினாலும் அதே நிறத்தில்தான் இருக்கும். (பகிரப்பட்டது)

வவுனிக்குளம் - நீர்மட்டம் 17’ 3"  - 24.11. 2024 |  பி.ப 01:00 மணி ...
24/11/2024

வவுனிக்குளம் - நீர்மட்டம் 17’ 3" - 24.11. 2024 | பி.ப 01:00 மணி ...

பெரு முழுநிலவு எனப்படும் "Supermoon"நேற்று வியாழக்கிழமை உலகின் பல நாடுகளிலும் காட்சி கொடுத்து வானியல் இரசிகர்களை மீண்டும...
18/10/2024

பெரு முழுநிலவு எனப்படும் "Supermoon"
நேற்று வியாழக்கிழமை உலகின் பல நாடுகளிலும் காட்சி கொடுத்து வானியல் இரசிகர்களை மீண்டும் ஒருமுறை உற்சாகப்படுத்தியுள்ளது.

2024ல் காட்சியளித்த 04 பெரு முழுநிலவுகளில்
இது மூன்றாவது பெரு முழுநிலவு அதாவது 'Supermoon' ஆகும்.

அதிலும் ஒக்டோப‌ர் மாதத்தில் வரும்
பெரு முழுநிலவு ஆங்கிலத்தில் மேலும் விசேடமாக Hunter's Moon எனவும் அழைக்கப்படும். காரணம், வேட்டையாடுபவர்கள் குளிர்காலங்களில் தமக்கு தேவையான
உணவுகளை தேடிக்கொள்வார்கள்.

ஏன் இந்த பெரு முழுநிலவு - Supermoon
முக்கியத்துவம் பெறுகிறது,

நிலவு ஒரு சில நேரங்களில் புவிக்கு அருகிலும் சில நேரங்களில் புவியை விட சற்று தொலைவிலும் இருக்கும்.

அப்படி அண்மையில் இருக்கும்போது அன்று நிலவு வழக்கத்தை விட பலமடங்கு பெரிதாக இம்முறை 30 % பெரிதாகவும், மிகவும் ஒளிர்வுடனும் இம்முறை வழக்கத்தை விட 15 % அதிகமான பிரகாசமாகவும் காணப்பட்டுள்ளது.

அவ்வாறு சிறப்பான பெரு முழுநிலவு
உலகத்தின் பல நாடுகளிலும் குறிப்பாக
சுவீடன் , பின்லாந்து, கட்டார், யேர்மனி,
அமெரிக்கா ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்ட அற்புதமான காட்சிகள் இங்கு தரப்பட்டுள்ளன.

தொடர்ந்து மூன்று நாட்கள் இக் காட்சிகள் வானியல் நிகழ்வுகளாக தொடரும் எனவும் வானியல் அவதானிகள் தெரிவித்துள்ளார்கள்.

நன்றி : NT Jegan (18.10.2024)

ஆகாயப்பந்தல் ...
02/10/2024

ஆகாயப்பந்தல் ...

பசுமை ...
29/09/2024

பசுமை ...

Address

Jaffna
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when இயற்கையுடன் இசைவுற இணைவோம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share