Mangaleswaran karththeepan.

Mangaleswaran karththeepan. வேலணை பிரதேசசபை உறுப்பினர் (இலங்கை தமிழ் அரசுக் கட்சி)

🚢🚢🚢 #நாளை  #முதல்(06.09.20206)  #நயினாதீவு  #குறிகட்டுவான்  #இடையிலான  #படகு   #போக்குவரத்து   #தற்காலிக  #நேர  #மாற்றம்...
05/09/2026

🚢🚢🚢 #நாளை #முதல்(06.09.20206) #நயினாதீவு #குறிகட்டுவான் #இடையிலான #படகு #போக்குவரத்து #தற்காலிக #நேர #மாற்றம்.

🛥️🛳️🚢⛴️குறிகட்டுவான் இறங்கு துறை புணரமைப்பு பணிகள் காரணமாக (06.09.2026 )நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் நயினாதீவு குறிகட்டுவான் இடையேயான படகு போக்குவரத்து தற்காலிக நேர அட்டவணை பின்வருமாறு

நயினாதீவு இறங்குதுறையில் இருந்து குறிகட்டுவான் இறங்குதுறைக்கு
காலை 6.30மணி தொடக்கம்
8.00மணி
8.30மணி
9.00மணி
9.30மணி
10.00மணி
10.30மணி
11.00மணி
11.30மணி
12.00மணி
12.30மணி
1.00மணி
1.30மணி
2.00மணி
2.30மணி
4.00மணி
4.30மணி
5.00மணி
மாலை 5.30மணிக்கு நயினாதீவு இறங்கு துறையில் இருந்து இறுதிப் படகுச் சேவை நடைபெறும்.

குறிகட்டுவான் இறங்கு துறையில் இருந்து நயினாதீவிற்கு
காலை 7.00மணி தொடக்கம்
8.30மணி
9.00மணி
9.30மணி
10.00மணி
10.30மணி
11.00மணி
11.30மணி
12.00மணி
12.30மணி
1.00மணி
1.30மணி
2.00மணி
2.30மணி
3.00மணி
4.30மணி
5.00மணி
5.30மணி
மாலை 6.00மணிக்கு இறுதிப் படகுச் சேவை குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து நடைபெறும்.
என்பதனை பயணிகளிற்கு அறியத்தருகின்றோம்

தகவல்.
நயினாதீவு தனியார் படகு உரிமையாளர் சங்கம் .

05/09/2026
05/09/2026

🫑🥬🫑🌿 #பசுமை #நயினாதீவு #வீட்டுத்தோட்டப் #போட்டி 2026🫑🥬🫑🌿

நயினாதீவில் வீட்டுத் தோட்ட விவசாயத்தினை ஊக்குவிக்கும் முகமாக நடாத்தப்படும் மாபெரும் வீட்டுத்தோட்டப் போட்டியில் ஆர்வம் உடையவர்கள் கலந்து கொள்ளுங்கள்...

🌱 #போட்டியின் #விபரங்கள்:
நயினாதீவின் ஒவ்வொரு கிராமசேவகர் பிரிவிலும் தலா 25பேர் வீதம், மொத்தமாக 75 போட்டியாளர்கள் மட்டுமே இணைத்துக் கொள்ளப்படுவர்கள்.
(முன்னுரிமை அடிப்படையில் முதலில் பதிவு செய்பவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்)

#விண்ணப்பிக்கும் #காலம்
02.09.2026தொடக்கம் 06.09.2026வரை விண்ணப்பிக்க முடியும்.

🎁 #பங்கேற்பாளர்களுக்கு #வழங்கப்படும் #சலுகைகள்:
தெரிவு செய்யப்படும் போட்டியாளர்களுக்கு உயர்தரத்திலான இலவச மரக்கறி விதைகள் வழங்கப்படும்.
வீட்டுத்தோட்டம் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் விளக்கங்கள் வழங்கப்படும்.

🏆 #பெறுமதியான #பரிசுகள்:
🥇 முதலாம் பரிசு
🥈 இரண்டாம் பரிசு
🥉 மூன்றாம் பரிசு
🎖️ 10 ஆறுதல் பரிசில்கள் வளங்கப்படும்.

🌿வெற்றியாளர்களுக்கான பரிசு அனுசரணையுடன் சமூக நலப் பயணத்தில்… 🤝
இத்தாலி மனிதநேய சங்கம் 🇮🇹
JKT ஒருங்கிணைந்த பண்ணை 🌱🐄 ஆகியவற்றின் நிறுவனர் & உரிமையாளர்
ம. கிருபாகரன் இணைந்து கொள்கின்றார்.

(பதிவுகளின் அடிப்படையில் ஆர்வத்துடன் முதலில் வரும் 75 பேருக்கு மட்டுமே முன்னுரிமை)

📞 பதிவுகளுக்கும் மேலதிக விபரங்களுக்கும்.
ம. கார்த்தீபன்
உறுப்பினர், வேலணை பிரதேசசபை,
நயினாதீவு.
📱 077-5506972

04/09/2026

புலமைப் பரிசில் பரீட்சையில் நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலய மாணவர்களின் புள்ளி விபரங்கள் 2026

 #பெருங்குளம்  #விஸ்தரிப்பு  #செயற்திட்டம்   #தொடர்ந்தும்  #தமது  #ஆதரவினை  #வளங்கிவரும்  #காணிஉரிமையாளர்கள்..எமது கிராம...
04/09/2026

#பெருங்குளம் #விஸ்தரிப்பு #செயற்திட்டம்
#தொடர்ந்தும் #தமது #ஆதரவினை #வளங்கிவரும் #காணிஉரிமையாளர்கள்..

எமது கிராமத்தின் முன்னேற்றம் மற்றும் அபிவிருத்தியினை கருத்தில் கொண்டும் நயினாதீவின் நன்னீர் வளத்தினை பாதுகாக்கும் நோக்கிலும் நயினாதீவு பெருங் குளத்தின் விஸ்தரிப்பு செயற்திட்டத்திற்காக அமரர் #இராசையா #நாகம்மா அவர்களின் ஞாபகார்த்தமாக அவர்களின் குடும்பத்தினர் சார்பாக ( #இராசையா #மருதலிங்கம்) அவர்களும் அமரர் #பொன்னம்பலம் #சோமசுந்தரம் அவர்களின் ஞாபகார்த்தமாக அவர்களின் குடும்பத்தினர் சார்பாக ( #சோமசுந்தரம் #குமரகுரு) அவர்களும் அமரர் #இராமலிங்கம் #அம்பலவாணர் மற்றும் #அம்பலவாணர் #நாகம்மா அவர்களின் நினைவாக அவர்களின் குடும்பத்தினரும் குளத்தின் எல்லைப் பகுதிகளில் காணப்படும் தமது காணிகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளனர்
இவர்களை நன்றியுடன் பாராட்டி பெருமைப்படுத்துவதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம்.

நயினாதீவின் நன்னீர் வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள பெருங்குளம் அகலிப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதற்கு, தங்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மிகவும் அவசியமானதாகும்.
எனவே, இப்பொதுநலத் திட்டத்தில் அனைவரும் தங்களால் இயன்ற ஒத்துழைப்பை வழங்கி, எமது மண்ணின் நீர்வளப் பாதுகாப்பிற்கும் எதிர்கால சந்ததியினரின் நலனிற்கும் பங்காற்றுமாறு அன்புடனும் பணிவுடனும் அழைக்கப்படுகிறீர்கள்.
ஒன்றிணைவோம் – பெருங்குளத்தைப் பாதுகாப்போம்!
நயினாதீவின் நன்னீர் வளத்தை வளப்படுத்துவோம்!
நன்றி.

ஒருவர் கடவுளிடம் கேட்டார்:"எல்லாம் ஏற்கனவே விதியில் எழுதப்பட்டிருந்தால்,  #நான்  #ஏன்  #முயற்சிக்க  #வேண்டும்?"கடவுள் சி...
03/09/2026

ஒருவர் கடவுளிடம் கேட்டார்:
"எல்லாம் ஏற்கனவே
விதியில் எழுதப்பட்டிருந்தால்,
#நான் #ஏன் #முயற்சிக்க #வேண்டும்?"

கடவுள் சிரித்துக்கொண்டு சொன்னார்:
"சில பக்கங்களில் நான்,
' #உன் #முயற்சி #போல'
என்றும் எழுதியிருக்கிறேன்."என்று...

02.09.2026 இன்றைய தினம்  காலை 9.45 மணிக்கு வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மூன்றாம் காலாண்டிற்கான வேலணை பிரதேச ஒ...
02/09/2026

02.09.2026 இன்றைய தினம் காலை 9.45 மணிக்கு வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மூன்றாம் காலாண்டிற்கான வேலணை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வேலணை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் தலைவர் கெளரவ ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் (பா.உ) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் , பிரதேச செயலாளர் ,பிரதேசசபை உறுப்பினர்கள் திணைக்களங்களின் தலைவர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.இக் கூட்டத்தில் பிரதேச மட்ட அபிவிருத்திகள் தொடர்பாகவும் பல்வேறு துறைசார் விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டன.

 #போதைப்  #பொருள்  #பயன்பாட்டினால் ....🚨 போதைப் பொருள் பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய உடல்ரீதியான பாதிப்புகள்போதைப் பொருட்க...
31/08/2026

#போதைப் #பொருள் #பயன்பாட்டினால் ....

🚨 போதைப் பொருள் பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய உடல்ரீதியான பாதிப்புகள்
போதைப் பொருட்கள் உடலின் முக்கிய உறுப்புகளை நேரடியாகப் பாதிக்கக்கூடும். வெளிப்புறத்தில் ஆரோக்கியமாகத் தோன்றும் ஒருவரின் உட்புற உறுப்புகளும் நீண்டகால போதைப் பொருள் பயன்பாட்டினால் கடுமையாகப் பாதிக்கப்படலாம்.

🔴 #இதயம் #மற்றும் #இரத்த #ஓட்ட #அமைப்பு #பாதிப்பு

போதைப்பொருட்கள் இரத்த அழுத்தத்தையும் இதயத் துடிப்பு வேகத்தையும் அசாதாரணமாக மாற்றக்கூடும். சில போதைப்பொருட்கள் இரத்த நாளங்களைச் சுருக்குவதோடு, இதயத்தின் செயல்பாட்டையும் பாதிக்கக்கூடும். இதனால் மாரடைப்பு மற்றும் திடீர் இதய செயலிழப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம்.

🔴 #சுவாச #அமைப்பு #பாதிப்பு

புகையாக உள்ளிழுக்கப்படும் சில போதைப்பொருட்கள் நுரையீரலைக் கடுமையாகப் பாதிக்கக்கூடும். நீண்டகால பயன்பாடு நுரையீரல் பாதிப்பு, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் பிற சுவாச நோய்களுக்கு வழிவகுக்கலாம்.

🔴 #கல்லீரல் #மற்றும் #சிறுநீரக #பாதிப்பு

போதைப்பொருட்களில் உள்ள நச்சுப் பொருட்களை உடல் செயலாக்க வேண்டியிருப்பதால், நீண்டகால பயன்பாடு கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

🔴 #மூளை #மற்றும் #நரம்பு #மண்டல #பாதிப்பு

போதைப்பொருட்கள் மூளையின் இயல்பான செயல்பாட்டை மாற்றக்கூடும். இதனால் நினைவாற்றல் குறைபாடு, நடுக்கம், நரம்பியல் பிரச்சினைகள், குழப்பம் மற்றும் ஒருங்கிணைப்பு குறைபாடுகள் போன்றவை ஏற்படலாம்.

🔴 #நோய் #எதிர்ப்பு #சக்தி #மற்றும் #ஊட்டச்சத்து #குறைபாடு

போதைப்பொருள் பயன்பாட்டுடன் உணவு மீதான ஆர்வம் குறையக்கூடும். இதனால் உடல் எடை குறைதல், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உடல் பலவீனம் ஏற்படலாம்.

🔴 #தொற்றுநோய்களின் #அபாயம்

ஊசி மூலம் போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் ஊசிகளைப் பகிர்ந்து பயன்படுத்தும் போது HIV மற்றும் Hepatitis B, Hepatitis C போன்ற இரத்தத்தின் மூலம் பரவும் தொற்றுகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

🧠 #போதைப்பொருளின் மனநல பாதிப்புகள்

போதைப்பொருட்கள் உடலை மட்டுமல்ல, மூளையின் இயல்பான இரசாயன செயல்பாடுகளையும் கடுமையாக மாற்றக்கூடும்.

🔴 மாயத்தோற்றங்கள் மற்றும் மனநலக் கோளாறுகள்

சில போதைப்பொருட்கள் இல்லாதவற்றைக் காண்பது அல்லது கேட்பது போன்ற மாயத்தோற்றங்களை (Hallucinations) ஏற்படுத்தக்கூடும். சிலருக்கு போதைப்பொருள் தூண்டிய மனநோய் (Drug-induced psychosis) ஏற்படலாம்.

🔴 Anxiety மற்றும் Depression

போதைப்பொருளின் தாக்கம் குறைந்த பின்னர் சிலருக்கு கடுமையான பதற்றம், மனச்சோர்வு, பயம் மற்றும் தனிமை உணர்வு ஏற்படலாம்.

🔴 ஆக்ரோஷமான நடத்தை மற்றும் தற்கொலை அபாயம்

போதைப்பொருளை திடீரென நிறுத்தும்போது ஏற்படும் Withdrawal symptoms காரணமாக உடல் மற்றும் மனரீதியான கடுமையான துன்பங்கள் ஏற்படலாம். சில சந்தர்ப்பங்களில் கட்டுப்பாடற்ற கோபம், ஆக்ரோஷம் மற்றும் தற்கொலை எண்ணங்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

🔴 நினைவாற்றல் குறைதல்

நீண்டகால போதைப்பொருள் பயன்பாடு மூளையின் செயல்பாட்டைப் பாதிப்பதால் குறுகிய கால மற்றும் நீண்டகால நினைவாற்றல் பாதிக்கப்படலாம்.

🏠 சமூக மற்றும் பொருளாதார தாக்கங்கள்

இந்தப் பிரச்சினையின் தாக்கம் ஒரு தனிநபருடன் முடிவதில்லை. அது முழு குடும்பத்தையும் சமூகத்தையும் பாதிக்கக்கூடும்.

🔴 குடும்ப உறவுகள் சீர்குலைதல்

போதைப்பொருள் அடிமைத்தனம் குடும்பத்தில் தொடர்ந்து மோதல், சந்தேகம், பொருளாதார பிரச்சினைகள் மற்றும் வன்முறை போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும். இதனால் வாழ்க்கைத்துணை, குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் பெரிதும் பாதிக்கப்படலாம்.

🔴 பொருளாதார வீழ்ச்சி மற்றும் குற்றச்செயல்கள்

போதைப்பொருளைப் பெறுவதற்கான பணத் தேவை அதிகரிப்பதால் சிலர் தங்களுடைய சொத்துக்களை விற்கும் நிலைக்குச் செல்லலாம். கடுமையான அடிமைத்தனத்தில், பணம் கிடைக்காதபோது சிலர் திருட்டு மற்றும் பிற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் அபாயம் உள்ளது.

🔴 கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பாதிப்பு

இளம் வயதிலேயே போதைப்பொருளுக்கு அடிமையாகும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படலாம். பெரியவர்களின் வேலைத்திறன் குறைந்து, வேலை இழப்பு மற்றும் சமூகத் தனிமை ஏற்படலாம்.

🚨 போதைப்பொருள் Overdose — உயிருக்கு நேரடி ஆபத்து!

போதைப்பொருளை அதிக அளவில் உட்கொள்வதால் சுவாசம் மிகவும் மெதுவாகுதல் அல்லது நின்றுவிடுதல், மூளைக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை, இதயத் துடிப்பு மற்றும் இதய செயல்பாட்டில் கடுமையான பாதிப்பு போன்றவை ஏற்பட்டு திடீர் மரணம் கூட நிகழலாம்.

சிலர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் போதே மூளை மற்றும் பிற முக்கிய உறுப்புகளுக்கு நிரந்தரமான பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். சிலர் உயிர் பிழைத்தாலும் நீண்டகால உடல் அல்லது மனநல பாதிப்புகளுடன் வாழ வேண்டிய நிலை ஏற்படலாம்.

💔 இதனால் அதிகம் பாதிக்கப்படுவது அவர்களது பெற்றோர்கள், வாழ்க்கைத்துணை மற்றும் குழந்தைகளே.

போதைப்பொருள் என்பது ஒரு தனிநபரின் பிரச்சினை மட்டுமல்ல. அது ஒரு குடும்பத்தையும், சமூகத்தையும், நாட்டின் எதிர்காலத்தையும் பாதிக்கக்கூடிய மிகப்பெரிய சவாலாகும்.

⚠️ நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவர் போதைப்பொருள் பயன்பாட்டில் சிக்கியிருந்தால், அவரை ஒதுக்கிவிடாதீர்கள்.

அவரை குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக, தாமதிக்காமல் தகுதியான மருத்துவரின் ஆலோசனையைப் பெறச் செய்து, போதைப்பொருள் விடுபாடு மற்றும் மறுவாழ்வு சேவைகளின் உதவியை நாடுங்கள்.

❤️ ஒருவரை மீட்பது ஒரு உயிரைக் காப்பாற்றுவது மட்டுமல்ல — ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தையும் காப்பாற்றுவதாகும்.

🚫 போதைப்பொருளுக்கு “இல்லை” என்று சொல்வோம்.
❤️ வாழ்க்கைக்கு “ஆம்” என்று சொல்வோம்.

Address

Jaffna
4000

Telephone

+94775506972

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mangaleswaran karththeepan. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Mangaleswaran karththeepan.:

Shortcuts

Share