சைவா அமைப்பு ॐ saivaa organization

சைவா அமைப்பு ॐ saivaa organization சைவா〖SAIVAA〗சமய பணியாளர்கள் அமைப்பு 📿 மட்டக்களப்பு / அம்பாறை
ᴄᴏɴᴛᴀᴄᴛ ɴᴜᴍʙᴇʀ : +94702299989 🍃

🌺🙏 மாபெரும் தாகசாந்தி திருப்பணி – மண்டூர் ஸ்ரீ முருகன் ஆலய பாதயாத்திரை 22.08.2026 🙏🌺காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கத்...
23/08/2026

🌺🙏 மாபெரும் தாகசாந்தி திருப்பணி – மண்டூர் ஸ்ரீ முருகன் ஆலய பாதயாத்திரை 22.08.2026 🙏🌺

காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில், பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 5,000 அடியார்கள் பக்தி பூர்வமாகக் கலந்து கொண்ட மண்டூர் ஆலயத்திற்கான மாபெரும் பாதயாத்திரை, நேற்றைய தினம் (22.08.2026) சிறப்பாக இடம்பெற்றது.

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற “சின்னக் கதிர்காமம்”, “தில்லை மண்டூர்” என அழைக்கப்படும் மண்டூர் ஸ்ரீ முருகன் ஆலயத்தை நோக்கி அதிகாலை வேளையில் பாதயாத்திரையாக வந்த அடியார்களின் தாகம் தீர்க்கும் புனித கைங்கரியமாக, SPAND & SAIVAA அமைப்புகளின் சமயப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களால் தாகசாந்தி திருப்பணி முன்னெடுக்கப்பட்டது. 🙏🌺

அதிகாலை ஆரம்பிக்கப்பட்ட இத்திருப்பணி சிறப்பாக நடைபெற்றது. இதன்போது பல்வேறு பிரதேசங்களில் இருந்து தொடர்ந்து பாதயாத்திரையாக வருகை தந்த ஆயிரக்கணக்கான அடியார்களுக்கு நீராகாரம் மற்றும் குளிர்பானங்கள் வழங்கி, அவர்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில் அன்புடனும் அர்ப்பணிப்புடனும் சேவை வழங்கப்பட்டது. 💧🙏

அடியார்களின் பாதயாத்திரையில் ஒரு சிறு ஆறுதலாக இருந்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்கும் இப்புனிதப் பணியை சிறப்பாக முன்னெடுக்க தங்களது நேரத்தையும் உழைப்பையும் அர்ப்பணித்த SPAND & SAIVAA அமைப்புகளின் நிர்வாக உறுப்பினர்கள், உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும். 🙏❤️

விசேடமாக, இப்பணியின் ஆரம்பகட்ட ஏற்பாடுகள் முதல் களப்பணி வரை பொறுப்பேற்று சிறப்பாக முன்னெடுத்த அமைப்பின் நிர்வாக உறுப்பினர்களான மண்டூரைச் சேர்ந்த சிந்துஜன், பிரணவன், கேதீஸ், SPAND அமைப்பின் உப தலைவர் திலக்சன், மூத்த உறுப்பினர் ஜெயந்த மற்றும் கவிமகள் ஜெயவதி ஆகியோரின் தலைமையில் இப்பணி சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டது. 🙏🌺

அன்புடன் வழங்கிய கரங்கள் பல…
அர்ப்பணிப்புடன் உழைத்த உள்ளங்கள் பல…
ஆண்டவனை நாடி பாதயாத்திரை மேற்கொண்ட அடியார்களின் தாகம் தீர்த்த மனநிறைவு ஒன்று… 🌺

முருகப்பெருமானின் திருவருளோடு நிறைவு பெற்றது இந்த தாகசாந்தி திருப்பணி! 🙏🌺

ஆலயங்களில் அன்னதானம் மற்றும் தாகசாந்தி போன்ற பணிகளை முன்னெடுப்பதோடு மட்டுமல்லாமல், சமயப் பணிகளை வளர்த்தெடுத்தல், இளைய தலைமுறையினரை சமய மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபடுத்துதல், தன்னார்வத் தொண்டர்களை உருவாக்குதல், ஒற்றுமையுடனும் அர்ப்பணிப்புடனும் சமூகத்திற்கு சேவை செய்தல் எனப் பல்வேறு தளங்களில் தொடர்ந்து செயற்பட்டு வருவது எமது அமைப்புகளின் நோக்கமாகும். 🌺🙏

இப்புனிதப் பணிக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், எமது அமைப்புகளின் நிர்வாக உறுப்பினர்களுக்கும், சமயப் பணியாளர்களுக்கும், தன்னார்வத் தொண்டர்களுக்கும் SPAND & SAIVAA அமைப்புகளின் சார்பில் மனமார்ந்த நன்றிகள். 🙏❤️

“அடியவர்க்கு செய்யும் சேவை ஆண்டவனுக்கே செய்யும் பூஜை.” 🌺🙏

தொடர்ந்து இத்தகைய சமய மற்றும் சமூகப் பணிகளை முன்னெடுத்து, அன்பை விதைத்து, சேவையை வளர்த்து, சமய உணர்வை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வோம். 🌺

🙏 வேல் முருகா! 🙏

SPAND & SAIVAA
மட்டக்களப்பு / அம்பாறை

#தாகசாந்தி_திருப்பணி #மண்டூர் #ஸ்ரீமுருகன் #காரைதீவு_மண்டூர்_பாதயாத்திரை #பாதயாத்திரை #சமயப்பணி #அடியார்சேவை #வேல்முருகா

23/08/2026

🌺🙏 மண்டூர் ஸ்ரீ முருகன் ஆலயத்தை நோக்கி பாதயாத்திரை மேற்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான யாத்திரிகர்களின் தாகம் தீர்க்கும் புனித கைங்கரியமாக, வருடம் தோறும் முன்னெடுத்து வரும் தாகசாந்தி திருப்பணி, எமது SPAND & SAIVAA அமைப்புகளின் சமயப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களால் நேற்றைய தினம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. 🙏

இவ்வேளை பாதயாத்திரையாக வருகை தந்த காரைதீவு வி.ரி. சகாதேவராஜா ஐயா அவர்கள் எமது பணியை பாராட்டி நன்றி தெரிவித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள். 🙏

“அடியவர்க்கு செய்யும் சேவை ஆண்டவனுக்கே செய்யும் பூஜை.” 🌺🙏

🙏🌺 மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் அன்னதானப் பணி – 15.08.2026 🌺🙏மண்டூர் முருகப்பெருமானின் ச...
21/08/2026

🙏🌺 மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் அன்னதானப் பணி – 15.08.2026 🌺🙏

மண்டூர் முருகப்பெருமானின் சன்னதியில் நடைபெற்ற இப்புனித அன்னதானப் பணியில், ஆலயத்திற்கு வருகை தந்த அடியார்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்புடனும் அர்ப்பணிப்புடனும் அன்னம் வழங்கியமை எமக்கு பெரும் மனநிறைவை அளிக்கின்றது. 🙏

இந்த அன்னதானப் பணியை பிரணவன் மற்றும் கேதீஸ் ஆகியோரின் தலைமையில் சிறப்பாக முன்னெடுத்து நிறைவு செய்ய முடிந்தது. அவர்களுடன் இணைந்து பணியாற்றிய அருணா, ஜெகநாதன், ஜெயா, கயோ, தனுஷ், சஜித்,கஜித், உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். 🙏❤️

குறிப்பாக, உணவுப் பொருட்களைத் தயார்படுத்துதல், காய்கறிகள் மற்றும் ஏனைய பொருட்களைத் தயார் செய்தல், சமையல் மற்றும் உணவு தயாரிப்பு பணிகளில் நேரத்தையும் உழைப்பையும் அர்ப்பணித்து பங்களிப்பு வழங்கிய எமது அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள். 🙏

மேலும், Brilliant College ஆசிரியர் அருணா அவர்களின் தலைமையில், இப்புனித அன்னதானப் பணியில் ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் பங்களிப்பை வழங்கிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். 🌺🙏

அன்புடன் வழங்கிய கரங்கள் பல…
அர்ப்பணிப்புடன் உழைத்த உள்ளங்கள் பல…
அன்புடன் உணவருந்திய அடியார்கள் பல…
முருகப்பெருமானின் திருவருளோடு நிறைவு பெற்றது இந்த அன்னதானப் பணி! 🌺🙏

இப்புனிதப் பணிக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், எமது அமைப்புகளின் நிர்வாக உறுப்பினர்களுக்கும், சமயப் பணியாளர்களுக்கும், தன்னார்வத் தொண்டர்களுக்கும் SPAND & SAIVAA அமைப்புகளின் சார்பில் மனமார்ந்த நன்றிகள். 🙏❤️

ஆலயங்களில் இதுவரை எமது அமைப்புகளின் மூலம் முன்னெடுக்கப்பட்ட அன்னதானப் பணிகளில் இது 11ஆவது அன்னதானப் பணியாக அமைந்தது என்பது எமக்கு பெரும் மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கின்றது. 🌺

தொடர்ந்து அன்னதான சேவைகளை முன்னெடுத்து, அடியார்களுக்கு அன்புடன் அன்னம் வழங்கி, இறைபணியில் எமது பங்களிப்பை வழங்குவோம். 🌺

🙏 வேல் முருகா! 🙏

SPAND & SAIVAA
மட்டக்களப்பு / அம்பாறை

எருவில் சிவனார் மடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய ஆடி அமாவாசை அலங்கார உற்சவத்தை முன்னிட்டு, 2026 ஆகஸ்ட் 08 முதல் 12ஆம் திகதி ...
20/08/2026

எருவில் சிவனார் மடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய ஆடி அமாவாசை அலங்கார உற்சவத்தை முன்னிட்டு, 2026 ஆகஸ்ட் 08 முதல் 12ஆம் திகதி வரை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட அன்னதானப் பணி இறையருளுடன் சிறப்பாக நிறைவடைந்தது.

ஆலயத்திற்கு வருகை தந்த அடியார்களுக்கு அன்போடும் அர்ப்பணிப்போடும் சைவ உணவு வழங்கி, அவர்களின் பசியைப் போக்கும் இப்புனித சேவையில் பங்கெடுக்கக் கிடைத்தமை எமக்கு பெரும் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்தது. 🙏

இறையருளோடு நிறைவு பெற்றது இந்த அன்னதானப் பணி! 🌺

இந்தப் பணியில் களத்திலே நின்று தலைமை தாங்கி, பணியினை சிறப்பாக முன்னெடுத்த ஜெகநாதன் அவர்களுக்கும், அவருடன் இணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்ட திலக்சன், பிரணவன், கேதீஸ், அருணா, சிந்துஜன், ரதீஸ்,ஜெகதீஷ்,ஜெயா,கயோ மற்றும் அனைத்து நிர்வாக உறுப்பினர்களுக்கும் சைவா அமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றிகள். 🙏❤️

மேலும், இப்பணிக்கு அனுசரணை மற்றும் ஆதரவு வழங்கிய SPAND அமைப்பினருக்கும், எமது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். 🙏❤️

எமது அன்னதானப் பணிக்கு முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கிய ஆலய நிர்வாகத்தினருக்கும், குறிப்பாக மழை நேரங்களிலும் சமையல் பணிகளுக்கு உறுதுணையாக நின்று உதவிய அயல்வீட்டு உறவுகள் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள். 🙏

எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி அன்புடன் கரம் கொடுத்து, இப்புனித சேவையை வெற்றிகரமாக நிறைவேற்ற உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், தன்னார்வத் தொண்டர்களுக்கும், சமயப் பணியாளர்களுக்கும் சைவா அமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ❤️🙏🌺

🙏 அடியவர்க்கு செய்யும் சேவை ஆண்டவனுக்கே செய்யும் பூஜை 🙏

சைவா (SAIVAA) சமயப் பணியாளர்கள் அமைப்பு – மட்டக்களப்பு / அம்பாறை

🌺🙏 தொடர்ச்சியாக இடம்பெற்ற மாபெரும் அன்னதானப் பணி – இன்று நிறைவு பெறுகிறது 🙏🌺எருவில் சிவனார் மடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய...
12/08/2026

🌺🙏 தொடர்ச்சியாக இடம்பெற்ற மாபெரும் அன்னதானப் பணி – இன்று நிறைவு பெறுகிறது 🙏🌺

எருவில் சிவனார் மடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய ஆடி அமாவாசை அலங்கார உற்சவத்தை முன்னிட்டு, சைவா (SAIVAA) சமயப் பணியாளர்கள் அமைப்பு – மட்டக்களப்பு / அம்பாறை சார்பில் கடந்த 08.08.2026 முதல் தொடர்ந்து இடம்பெற்று வந்த மகாபெரும் அன்னதானப் பணி, இன்றைய தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெறுகின்றது. 🙏

🌿 கடந்த பல நாட்களாக ஆலய உற்சவத்தில் கலந்து கொண்ட அடியார்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்போடும் அர்ப்பணிப்போடும் சைவ உணவு அன்னதானமாக வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், உற்சவத்தின் இறுதி நாளான இன்று (12.08.2026) நடைபெறவுள்ள தீர்த்த உற்சவத்தை முன்னிட்டு, வழமைக்கும்மேல் சிறப்பாகவும் பிரம்மாண்டமாகவும் மாபெரும் அன்னதான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 🍚🌺🙏

🕉️ “அடியவர்க்கு செய்யும் சேவை
ஆண்டவனுக்கே செய்யும் பூஜை.”

இறைபணியோடு இணைந்த இந்த நிறைவு நாள் அன்னதான நிகழ்வில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு, இப்புனித சேவையின் நிறைவினை சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம். 🙏❤️

அன்புடன் வழங்கிய கரங்கள் பல…
அன்புடன் உணவருந்திய உள்ளங்கள் பல…
இறையருளோடு நிறைவு பெறுகிறது இந்த அன்னதானப் பணி! 🌺

🙏 இப்பணிக்கு ஆதரவளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும், சமயப் பணியாளர்களுக்கும், தன்னார்வத் தொண்டர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். 🙏

சைவா (SAIVAA) சமயப் பணியாளர்கள் அமைப்பு
மட்டக்களப்பு / அம்பாறை

#சைவா #மகாபெரும்அன்னதானம் #அன்னதானசேவை #எருவில் #சிவனார்மடு #ஸ்ரீசித்திவிநாயகர் #தீர்த்தஉற்சவம் #சமயப்பணி #அடியவர்சேவை

🌿🙏 மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய 2026 ஆம் ஆண்டிற்கான மஹோற்சவப் பணிகள் கொடியேற்ற நன்னாளில் ஆரம்பிக்கப்பட்டது…மட்டக்களப்பு ம...
11/08/2026

🌿🙏 மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய 2026 ஆம் ஆண்டிற்கான மஹோற்சவப் பணிகள் கொடியேற்ற நன்னாளில் ஆரம்பிக்கப்பட்டது…

மட்டக்களப்பு மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் 08.08.2026 சனிக்கிழமை கொடியேற்றத்துடன் பக்தி பூர்வமாக ஆரம்பமானது.

இந்நன்னாளில், ஆலயத்திற்கு வருகை தந்த அடியவர்களின் நலனையும், கொடிக்கம்பம் வெட்டச் செல்லும் சந்தர்ப்பத்தில் வெயிலின் தாக்கத்தைக் குறைப்பதையும் கருத்திற்கொண்டு, கொடியேற்ற நிகழ்விற்கான பாதை, ஆலயச் சுற்றுச்சூழல் மற்றும் ஆலய வீதிகளில் நீர் தெளிக்கும் திருப்பணியை எமது SPAND அமைப்பும் சைவா சமயப் பணியாளர்கள் அமைப்பும் இணைந்து முன்னெடுத்தன.

காலையிலிருந்து பிற்பகல் 5.00 மணி வரை, அடியவர்கள் சிரமமின்றி ஆலயத்திற்கு வருகை தரும் வகையில் தொடர்ச்சியாக நீர் தெளிக்கும் பணியை எமது பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் மேற்கொண்டனர்.

🌿 ஆலயத் திருவிழா என்பது வெறுமனே வழிபாட்டுக்கான காலம் மட்டுமல்ல… அடியவர்களுக்கு உதவும் ஒவ்வொரு கரமும் இறைவனுக்குச் செய்யும் சேவையாகும்.

அடியவர்களின் பாதையில் தூசி எழாமல் பார்த்துக் கொள்வதும், வெயிலின் தாக்கத்தைக் குறைப்பதும், அவர்களின் பயணத்தைச் சற்றேனும் இலகுவாக்குவதும் எமது சமூகப் பொறுப்பாகக் கருதி இந்தத் திருப்பணியை ஆரம்பித்துள்ளோம்.

இப்பணி கொடியேற்ற நாளுடன் நிறைவடைவதல்ல. மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய மஹோற்சவ காலப்பகுதியில், இயன்றளவு தொடர்ச்சியாக அடியவர்களின் நலனை முன்னிறுத்தி எமது சேவைப் பயணம் தொடரும்.

🙏 இப்பணியை முன்நின்று ஒருங்கிணைத்து ஆதரவு வழங்கிய அமைப்பின் தலைவர் சுவோஜன், நிர்வாக உறுப்பினர் சிந்துஜன், சைவா அமைப்பின் உப தலைவர் அன்பு, SPAND அமைப்பின் உப தலைவர் திலக்சன், ஜெயா, ஜயந்த ஐயா மற்றும் உறுப்பினர்களான கஜித், தனுஷ்ரூபன், அஜய், எனுராஜ் ஆகிய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அத்துடன், இச்சேவையை முன்னெடுத்துச் செல்ல தங்களது உழவு இயந்திரங்களை வழங்கி ஒத்துழைத்த சவலக்கடை அசோக்குமார் மற்றும் மண்டூர் சிவகுமாரன் சுபானுஜன் அவர்களுக்கும், அர்ப்பணிப்புடன் பணியாற்றிய சாரதிகள் மற்றும் சமயப் பணியாளர்கள் அனைவருக்கும் எமது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

🌺 எமது சேவைக்கு ஒத்துழைப்பு வழங்கிய மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய நிர்வாகத்தினர், அடியவர்கள் மற்றும் நல் உள்ளங்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

✨ இந்த மஹோற்சவப் பெருவிழா சிறப்புற நடைபெறவும், அனைத்து அடியவர்களும் இறையருளுடன் நலமாக தங்களது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றவும் எமது வாழ்த்துக்கள்.

🕉️ மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் எதிர்வரும் 28.08.2026 வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு வாவியில் சிறப்பாக நடைபெறவுள்ளது.

“அடியவர்க்கு செய்யும் சேவை ஆண்டவனுக்கே செய்யும் பூஜை.” 🙏

ஓம் முருகா சரணம். 🙏
══════════════════════════
ஸ்பாண்ட்〖𝗦𝗣𝗔𝗡𝗗〗அமைப்பு மற்றும்
சைவா〖SAIVAA〗சமய பணியாளர்கள் அமைப்பு
மட்டக்களப்பு /அம்பாறை

#நீர்தெளிக்கும்பணி

ந ன் றி யு ட ன்... 🙏திரு. க. பிரகலதன் அவர்கள்உரிமையாளர் – சரவணாஸ் நகைமாளிகை, கல்முனை2026 ஆம் ஆண்டு கதிர்காம பாதயாத்திரைய...
05/08/2026

ந ன் றி யு ட ன்... 🙏
திரு. க. பிரகலதன் அவர்கள்

உரிமையாளர் – சரவணாஸ் நகைமாளிகை, கல்முனை

2026 ஆம் ஆண்டு கதிர்காம பாதயாத்திரையை முன்னிட்டு, வனப்பாதையில் தொடர்ச்சியாக 17 நாட்கள் யாத்திரீகர்களின் தாகம் தீர்க்கும் புனித திருப்பணியை எமது அமைப்பினர் அர்ப்பணிப்புடன் முன்னெடுத்தனர்.

அடர்ந்த வனாந்தரப் பகுதியில் இரவு பகலாகத் தங்கியிருந்து, ஆயிரக்கணக்கான அடியார்களுக்கு தடையின்றி சேவையாற்றுவதற்கு மின்சார வசதி மிகவும் இன்றியமையாத தேவையாக இருந்தது. அந்த அத்தியாவசிய தேவையை உணர்ந்து, 3000W திறன் கொண்ட ஜெனரேட்டரை எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் எமது திருப்பணிக்காக வழங்கி பேருதவி புரிந்த கல்முனை சரவணாஸ் நகைமாளிகையின் உரிமையாளர் திரு. க. பிரகலதன் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எமது அமைப்பின் மூத்த உறுப்பினர் திரு. ஜெயந்த அவர்கள் ஊடாக இந்த உதவி எமக்குக் கிடைத்தது என்பதையும் நன்றியுடன் நினைவுகூருகின்றோம்.

இந்த ஜெனரேட்டரின் உதவியால், வனாந்தரத்தில் இரவு வேளைகளிலும் எமது சமயப் பணியாளர்களும் தொண்டர்களும் பாதுகாப்பாகத் தங்கியிருந்து தங்களது திருப்பணிகளை சிறப்பாக முன்னெடுக்க முடிந்தது. மேலும், அடியார்களுக்கான அன்னதான உணவுகளை சமைப்பதற்கும், அதிகாலை வேளைகளில் பக்தர்களுக்கு சூடான தேநீர் தயாரித்து வழங்குவதற்கும் இந்த ஜெனரேட்டர் பெரும் துணையாக அமைந்தது. இதனால், வனப்பகுதியில் குறைந்த வசதிகளுடன் கூட எமது சேவைகள் இடையூறின்றி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன.

இந்த உதவி இல்லையெனில், அடர்ந்த வனப்பகுதியில் அச்சுறுத்தலான வனவிலங்குகள் நடமாடும் சூழலில், மின்சார வசதியின்றி இரவு நேரங்களில் தங்கி இருந்து சமையல் பணிகளையும், அதிகாலை தேநீர் தயாரிப்பு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளையும் முன்னெடுப்பது மிகவும் கடினமானதாக இருந்திருக்கும்.

இவ்வாறான நல்லுள்ளங்களின் அமைதியான ஆதரவும் தன்னலமற்ற ஒத்துழைப்பும்தான் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கதிர்காம பாதயாத்திரீகர்களின் தாகம் தீர்க்கும் புனித திருப்பணியை வெற்றிகரமாக முன்னெடுக்க எமக்கு உறுதுணையாக இருந்து வருகின்றது.

திரு. க. பிரகலதன் அவர்களின் உயர்ந்த சமூகப் பொறுப்புணர்விற்கும், தன்னலமற்ற பங்களிப்பிற்கும் எமது அமைப்பின் சார்பிலும், சேவையில் ஈடுபட்ட அனைத்து சமயப் பணியாளர்கள் மற்றும் தொண்டர்கள் சார்பிலும் மனமார்ந்த நன்றியையும் இறையாசிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அடியவர்க்கு செய்யும் சேவை ஆண்டவனுக்கே செய்யும் பூஜை.

ஓம் முருகா சரணம். 🙏
══════════════════════════
ஸ்பாண்ட்〖𝗦𝗣𝗔𝗡𝗗〗அமைப்பு மற்றும்
சைவா〖SAIVAA〗சமய பணியாளர்கள் அமைப்பு
மட்டக்களப்பு /அம்பாறை

ந ன் றி யு ட ன்... 🙏A.S. குமார் அவர்கள் – கல்முனை2026 ஆம் ஆண்டு கதிர்காம பாதயாத்திரையை முன்னிட்டு, வனப்பாதையில் தொடர்ச்ச...
02/08/2026

ந ன் றி யு ட ன்... 🙏
A.S. குமார் அவர்கள் – கல்முனை

2026 ஆம் ஆண்டு கதிர்காம பாதயாத்திரையை முன்னிட்டு, வனப்பாதையில் தொடர்ச்சியாக 17 நாட்கள் யாத்திரீகர்களின் தாகம் தீர்க்கும் புனித திருப்பணியை எமது அமைப்பினர் அர்ப்பணிப்புடன் முன்னெடுத்தனர்.

இந்தப் புனித திருப்பணியை சுட்டெரிக்கும் வனாந்தர வெயிலிலும் தடையின்றி முன்னெடுக்கப் பெரும் உறுதுணையாக இருந்தவர் கல்முனையைச் சேர்ந்த திரு. A.S. குமார் அவர்கள்.

தாம் வாடகைக்கு வழங்கும் கூடாரங்களை எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல், எமது திருப்பணிக்காக வழங்கியதன் மூலம், யாத்திரீகர்களுக்கு குளிர்பானம் மற்றும் குடிநீர் வழங்கிய எமது சமயப் பணியாளர்களும் தொண்டர்களும் வெயிலின் கடும் தாக்கத்திலிருந்து பாதுகாப்புடன் சேவையாற்றும் வாய்ப்பை உருவாக்கித் தந்தார்.

அவர் வழங்கிய இந்தப் பேருதவி இல்லையெனில், சுட்டெரிக்கும் வனாந்தர வெயிலில் நின்று ஆயிரக்கணக்கான அடியார்களுக்கு சேவையாற்றுவது எமது பணியாளர்களுக்கு மிகவும் சிரமமானதாக இருந்திருக்கும். இவ்வாறான நல்லுள்ளங்களின் தன்னலமற்ற ஆதரவினால்தான் ஆண்டுதோறும் கதிர்காம பாதயாத்திரையின் புனித திருப்பணியை சிறப்பாக நிறைவேற்ற முடிகிறது.

மேலும், திரு. A.S. குமார் அவர்கள் கூடாரங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்குத் தேவையான உபகரணங்களை வாடகை அடிப்படையில் வழங்கி வருகின்றார். சமய, சமூக மற்றும் ஏனைய நிகழ்வுகளுக்குத் தேவையான உபகரணங்களைப் பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் நேரடியாக அவரைத் தொடர்புகொள்ளலாம்.

தொடர்புக்கு: +94 77 310 4216

திரு. A.S. குமார் அவர்களின் தன்னலமற்ற ஒத்துழைப்பிற்கும், உயர்ந்த சமூகப் பொறுப்புணர்விற்கும் எமது அமைப்பின் சார்பிலும், சேவையில் ஈடுபட்ட அனைத்து சமயப் பணியாளர்கள் மற்றும் தொண்டர்கள் சார்பிலும் மனமார்ந்த நன்றியையும், இறையாசிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அடியவர்க்கு செய்யும் சேவை ஆண்டவனுக்கே செய்யும் பூஜை.

ஓம் முருகா சரணம். 🙏

★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

ஸ்பாண்ட்〖𝗦𝗣𝗔𝗡𝗗〗அமைப்பு மற்றும்
சைவா〖SAIVAA〗சமய பணியாளர்கள் அமைப்பு
மட்டக்களப்பு /அம்பாறை

தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய யாத்திரிகர்களுக்கான தாகசாந்தி திருப்பணி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது 🙏29.07.2026தாந்தாமலை தி...
31/07/2026

தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய யாத்திரிகர்களுக்கான தாகசாந்தி திருப்பணி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது 🙏

29.07.2026

தாந்தாமலை திருத்தல பாதயாத்திரையை முன்னிட்டு, பல்வேறு பிரதேசங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கந்த பெருமானை தரிசிப்பதற்காக பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்தனர்.
இவ்வேளையில், யாத்திரிகர்களின் தாகம் தீர்க்கும் புனித கைங்கரியமாக, எமது 𝗦𝗣𝗔𝗡𝗗 [ஸ்பாண்ட்] மற்றும் சைவா அமைப்புகளின் சமயப் பணியாளர்களும் தொண்டர்களும் வருடா வருடம் முன்னெடுக்கும் தாகசாந்தி திருப்பணி .

காலை வேளையில் ஆரம்பமாகி பிற்பகல் வரை தொடர்ச்சியாக நடைபெற்றது. இதன்போது பல்லாயிரக்கணக்கான யாத்திரிகர்கள் இத்திருப்பணியின் மூலம் பயன்பெற்றனர்.
இவ்வாறான புனிதமான கைங்கரியத்தை சிறப்பாக முன்னெடுத்து வெற்றிகரமாக நிறைவு செய்ய எம்முடன் இணைந்து பங்களிப்பு வழங்கிய எமது அமைப்பின் உறுப்பினரான கோட்டைக்கல்லாற்றைச் சேர்ந்த சுஜி அவர்களுக்கும், அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய அனைத்து உறுப்பினர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அத்துடன், இந்நிகழ்வின் ஏற்பாடுகளை சிறப்பாக முன்னெடுத்த நிர்வாக உறுப்பினர்களான பிரணவன்,கேதீஷ், (உப தலைவர் – SPAND) திலக்சன், ஆகியோருக்கும் எமது அமைப்பின் சார்பில் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், நீர் இழுவைத் தாங்கியுடன் உழவு இயந்திரத்தை வழங்கி இத்திருப்பணிக்கு உறுதுணையாக இருந்த மகளூர்முனையைச் சேர்ந்த ஜெயா அவர்களுக்கும் எமது உளமார்ந்த நன்றிகள்.
அதேபோல், திருப்பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்காக காலை உணவை அன்புடன் தயாரித்து வழங்கிய நிர்வாக உறுப்பினர் ஜயத்ரமி அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம்.

இத்திருப்பணி அனைவரது ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப்பின் மூலம் சிறப்பாக நிறைவேறியமை எமக்கு பெருமையளிக்கிறது.

"அடியவர்க்கு செய்யும் சேவை ஆண்டவனுக்கே செய்யும் பூஜை."

அனைவருக்கும் எமது இதயப்பூர்வமான நன்றிகள். 🙏

#தாகசாந்தி_திருப்பணி #தாந்தாமலை #முருகன் #பாதயாத்திரை #சேவை

கதிர்காமக் கந்தன் ஆலய புனித தீர்த்தோற்சவம்🙏இன்று (30.07.2026) காலை மாணிக்கக் கங்கையில் கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் புனித...
30/07/2026

கதிர்காமக் கந்தன் ஆலய புனித தீர்த்தோற்சவம்🙏

இன்று (30.07.2026) காலை மாணிக்கக் கங்கையில் கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் புனித **தீர்த்தோற்சவம் (நீர் வெட்டு)** வெகுசிறப்பாக நடைபெற்றது.

மாணிக்கக் கங்கையின் புனித நீரில் கதிர்காமக் கந்தன் தீர்த்தமாடிய இந்த அருள்மிகு தருணத்தை தரிசிக்க இலங்கை முழுவதிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று திரண்டனர். பக்தர்கள் அனைவரும் இறையருள் நிறைந்த மனதுடன் புனித நீராடி, கதிர்காமக் கந்தனின் திருவருளைப் பெற்றனர்.

**"அரோகரா! அரோகரா!"** என்ற பக்தி முழக்கங்களால் மாணிக்கக் கங்கை கரை முழுவதும் அதிர்ந்த வேளையில், கதிர்காமக் கந்தனின் அருளொளி பக்தர்களின் உள்ளங்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது.

எல்லாம் வல்ல கதிர்காமக் கந்தனின் திருவருள் உலகெங்கும் நிலவட்டும்.

**🙏 ஓம் முருகா சரணம்! 🙏**

#2026 #கதிர்காமம் #கதிர்காம_கந்தன் #தீர்த்தோற்சவம் #நீர்வெட்டு #மாணிக்கக்கங்கை

Address

Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when சைவா அமைப்பு ॐ saivaa organization posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to சைவா அமைப்பு ॐ saivaa organization:

Shortcuts

Share

Category