சிவபூமி திருக்குறள் வளாகம்

  • Home
  • Sri Lanka
  • Jaffna
  • சிவபூமி திருக்குறள் வளாகம்

சிவபூமி திருக்குறள் வளாகம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from சிவபூமி திருக்குறள் வளாகம், Library, Keerimalai Road, Maviddapuram, Jaffna.

சிவபூமி அறக்கட்டளையால் அமையபெற்றுவரும் திருக்குறள் வளாகத்தில் 1330குறள்களும் கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. திருக்குறள் ஆய்வு நூலகம், தியான மண்டபம்,ஆறு அடி உயரமான திருவள்ளுவர் சிலையும் அமையப்பெற்று வருகிறது.

30/01/2026
21/10/2025

சிவ பூமி திருக்குறள் வளாகம் யாழ்ப்பாணம்

09/10/2025

யாழ்ப்பாணம் சிவபூமி திருக்குறள் வளாகத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் லிடியன் மற்றும் அமிர்தவர்ஷினி

அனைத்து உலக திருக்குறள் மாநாட்டின் துவக்க விழாவின் போது தமிழ் கொஞ்சம் யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவருக்கும் திருக்குறளுக்கு...
20/09/2025

அனைத்து உலக திருக்குறள் மாநாட்டின் துவக்க விழாவின் போது தமிழ் கொஞ்சம் யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவருக்கும் திருக்குறளுக்கும் பெரு வளாகம் அமைத்து அத்துணை திருக்குறளினையும் கருங்கல்லில் பதித்து மனம் நெகிழ்ந்த பெருமகனார் கலந்து சிறப்பித்த தருணம்............

ஈரடிகளில் உலகின் தத்துவத்தினை தெள்ளத்தெளிவாக கூறி அனைவரும் எளிமையாக புரிந்து கொள்ளும் அளவிற்கு தன் கருத்துகளை அதில் முத்...
14/03/2025

ஈரடிகளில் உலகின் தத்துவத்தினை தெள்ளத்தெளிவாக கூறி அனைவரும் எளிமையாக புரிந்து கொள்ளும் அளவிற்கு தன் கருத்துகளை அதில் முத்து முத்தாக பொறித்த திருவள்ளுவரின் குருபூசை மாசி மாத உத்திர நட்சத்திர நாளில் அனுஷ்டிக்கப்படுவது வழக்கமாகும். திருவள்ளுவர் வைகாசி மாத அனுஷ நட்சத்திரத்தில் பிறந்து மாசி மாத உத்தர நட்சத்திரத்தில் பூரணமடைந்தார் குறித்த குருபூசை நாளான இன்று (14.03.2025) எமது சிவபூமி திருக்குறள் வளாகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு எமது அறக்கட்டளை தலைவர் கலாநிதி.ஆறு .திருமுருகன் ஐயா அவர்கள் மாலை அணிவிக்கும்போது.................

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை சிவபூமி தேவார மடத்தில் வருகின்ற 26/2/2025 புதன்கிழமை சிவராத்திரி விழா வினை முன்னிட்டு எம்பெரும...
20/02/2025

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை சிவபூமி தேவார மடத்தில் வருகின்ற 26/2/2025 புதன்கிழமை சிவராத்திரி விழா வினை முன்னிட்டு எம்பெருமானுக்கு அடியவர்கள் அவர்கள்தம் திருக்கரங்களினால் அபிஷேகம் செய்து எம்பெருமானை வழிபட முடியும் வருடத்தில் ஒரு முறை மட்டுமே இப்பேறு எமக்கு கிடைக்கின்றது. 11.30மணி அளவில் விசேட அபிஷேகத்துடன் 12 மணி அளவில் நடுநிசி சிறப்பு பூஜையும் நடைபெறும் அடியவர்கள் இவ் அரிய சிவராத்திரி நாளில் சிவலிங்க வடிவில் எழுந்தருளி இருக்கும் எம்பெருமானை வழிபட்டு எம்பெருமானின் ஆசியினை பெறுவோமாக

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க.

யாழ்.குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு புதன்கிழமை (26.02.2025) இரவு விசேட அபிஷேக, பூசை வ...
20/02/2025

யாழ்.குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு புதன்கிழமை (26.02.2025) இரவு விசேட அபிஷேக, பூசை வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற உள்ளன.
இன்று மாலை-06 மணியளவில் விசேட அபிஷேகம் ஆரம்பமாகும். அதனைத் தொடர்ந்து ஆச்சிரமத்தினுள் எழுந்தருளி உள்ள சிவலிங்கப் பெருமானுக்கு இரவு-09 மணி வரை
பால், தயிர் முதலான அபிஷேக திரவியங்களைக் கொண்டு வந்து அடியவர்கள் தங்கள் கைகளால் அபிஷேகம் செய்து வழிபட முடியும்.
அதனைத் தொடர்ந்து வில்வ அர்ச்சனையும், லிங்கோற்பவ காலமான நள்ளிரவு-12 மணிக்கு லிங்கோற்பவ விசேட பூசையும் நடைபெறும் என மேற்படி ஆச்சிரம நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Address

Keerimalai Road, Maviddapuram
Jaffna

Alerts

Be the first to know and let us send you an email when சிவபூமி திருக்குறள் வளாகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category