Sainthamaruthu பசங்க

Sainthamaruthu பசங்க Disclaimer:- All meme are purely made for for entertainment purposes only. 💯
sainthamaruthu பசங்க©
(3)

  இது வரை அறியாத உண்மைச் சம்பவம் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பாலசுப்பிரமணியம் பிரகலதன் மற்ற...
18/08/2026


இது வரை அறியாத உண்மைச் சம்பவம்

சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பாலசுப்பிரமணியம் பிரகலதன் மற்றும் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஹசன் மௌலானா அனுஹர் ஆகியோரை நேற்றைய தினம் - லஞ்ச, ஊழல் குற்றங்களை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்தனர்.

சந்தேக நபர் ஒருவரிடமிருந்து 20ஆயிரம் ரூபாயை லஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் இவர்கள் கைதாகினர்.

🔴 இப்படித்தான் சிக்கினார்கள்

கடந்த 14ஆம் திகதியன்று மதியம் 1மணியளவில் sainthamaruthu புற நகர் பகுதியில் வைத்து இரண்டு நபர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்ததுடன்

1ம் நபரிடம் எந்த சான்றுப் பொருளும் கிடைக்கவில்லை

2ம் நபரிடம் கெரோயின் கைப்பற்றபட்டதுடன்
1ம் நபர் தான் போலீஸ் கைது செய்த விடயத்தை தனது வீட்டாருக்கு அறிவிக்க அவர்களும் உடன் விரைந்து சென்று நடந்த சம்பவத்தினை கேட்டு அறிந்து கொள்ளும் போது

2ம் நபர் தான் குற்றதை ஒப்புக்கொள்கிறேன் என்னை விட்டு விடுங்கள் நான் பொருள் வாங்கிய இடத்தை காட்டுவதாக இனங்கி போலீசாருடன் சென்று இன்னும் ஒரு நபரை arrest செய்து வந்தனர்.

அதற்கு அமைவாக போலீசும் அந்த 2ம் நபரை விடுவித்து விட்டு வந்தனர்
இதனை கண் முன்னே கண்ட
1ம் நபரின் வீட்டார் இது அநியாயம் என சத்தமிட நீங்கள் இங்கே பேசி காரியமில்லை court ல் பார்த்து கொள்ளுங்கள் நாங்கள் எங்களது கடமையை செய்வோம் என இருக்கமான தொணியில் கூறி இவர் இன்று கையில் இல்ல விட்டாலும் இவர் பாவனை செய்கிறார் என போலீசார் உறுதி செய்தனர்.

கோபமடைந்த வீட்டார் இவ்வாறான ஒரு பிள்ளை தேவயே இல்ல நீங்கள் உங்க கடமையை செய்யுங்கள் என கண் கலங்கி சொல்லிவிட்டு சென்றனர்.

மனசு தாங்க முடியாமல் அன்று இரவு இரவு சாப்பாடு எடுத்துட்டு பாக்க போலீஸ் நிலயம் வந்த வேளையில் அவர்களை OIC பிரேக்ளநாதன் தனது அறைக்குள் அழைத்து நீங்கள் உங்க பிள்ளையை பற்றி கவலை படாதீங்க .
இவர் இப்போதான் போதை பாவனைக்கு ஆரம்பிக்கிறார் அதனாலே பிரச்சினை இல்லை அதை நிறுத்தி கொள்ள ஏலும்.

இனிமேல் இவர் கூடும் நண்பர்களை நன்கு அவதனித்து கொள்ளுங்கள்.
நாங்கள் நாளைக்கே court ல் இதற்கானே fine ன கட்டி முடிக்குற மாறியாக செய்து தருகிறோம் என நம்பிக்கை அளித்தார்.

குறிப்பு
இதற்கிடையில் OIC க்கு பணம் தருவதாக சொல்லவும் இல்லை OIC கேக்கவும் இல்லை.
அவ்விடத்தில் OIC மொபைல் நம்பர் கொடுத்து இதுக்கு அப்புறம் என்ன சரி தேவை ஏற்பட்டா நேரடியாக என்னை தொடர்பு கொள்ளுங்கள் எனக் கூறிஅவர்களின் நம்பரையும் பெற்றுக்கொண்டார்.

மறுநாள் 15ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 70mg தன் உடைமையில் வைத்திருந்ததாக போலீஸ் அறிக்கை கூறியாதற்கிணங்க குற்றத்தை ஒப்புக்கொண்டு 9000/= தண்டபானத்தினை செலுத்தி பல அறிவுறுத்தல்களுடன் விடுதலை செய்யப்பட்டார்.

15ம் திகதி மதியம் 3மணியளவில் OIC யின் போன்ல இருந்து parants க்கு call வந்தது மகன் எப்படி பாதுகாப்பா வந்துட்டாரா நல்லம் வேல எல்லாம் முடிச்சிட்டு ஈவினிங் என்ன வந்து சந்திங்க என OIC கூறினார்.

இதை பெரிசா நினைக்காம விட்டு விட்டாங்க
but OIC விர்ற மாதிரி தெரியல மறு நாளும் இருமுறை call பண்ணி வந்து meet பண்ணுங்க எனக்கூறினார்.

என்ன விஷயம் சொல்லுங்க sir என வினவ
இது ஒரு பெரிய கேஸ் நான் எண்ட பவர பயன்படுத்திதான் இவ்வளவு இலகுவா உங்களுக்கு முடிச்சி தந்து இருக்கோம் நாங்க இதுல சம்பந்தபட்டவங்க 4பேர் இருக்கோம் பார்த்து கவினீங்க என்று கூறினார்.

அதயும் பெரிசா பொருட்படுத்தாமல் ok sir பாப்போம் என கனக்கெடுக்காமே விட்டனர்.

பல முறை அழைத்தும் கண்டு கொள்ளாததினால் ஆத்திரமடைந்த OIC
மறுபடியும் அழைத்து கடும் தொணியில் பேசினார்.
இவரின் தேவையை உணர்ந்து உடனே சூட்சமமாக ok சார் சிறிது நேரத்தில் எடுக்கிறேன் எனக்கூரி ஆணைகுழுவின் உதவியை நாடி ஆணைக்குழுவின் அறிவுறுத்தளுக்கமைய
OIC க்கு அழைத்து எவ்வளவு பணம் கொண்டு வேணும் எனக் கேக்க OIC அதிகமா வேணும் நாங்க 4பேர் இருக்கோம் ஒரு ஆளுக்கு ஒரு 5000 கொடுங்க போதும் என கேட்டு கொண்டதிற்கிணங்க உரிய தொகை ஆணைக்குழுவால் தயார் செய்யபட்டு
சம்பவ தினம் பிரகலதன் - பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்திலும் பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றுவதால், அவர் நேற்றைய தினம், அங்கு சென்றிருந்தார்.

அதனால், குறித்த லஞ்சப் பணத்தை சந்தேக நபரிடமிருந்து பெற்றுக் கொள்ளுமாறு, சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கொன்ஸ்டபிள் அனுஹர் என்பவரிடம் பிரகலதன் கூறியுள்ளார்.

அதன்படி கொன்ஸ்டபிள் அனுஹர் பணத்தைப் பெறச் சென்றபோது, அங்கு தயார் நிலையிலிருந்த, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பொலிஸ் பரிசோதகர் பிரகலதனும் கைது செய்யப்பட்டார். .


கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில்,“20 வருடங்கள் தொடர்ச்சியாக வேலை செய்யும் சிற்றூழியர்களுக்கு பொருந்தும் இடமாற்ற விதிக...
18/08/2026

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில்,

“20 வருடங்கள் தொடர்ச்சியாக வேலை செய்யும் சிற்றூழியர்களுக்கு பொருந்தும் இடமாற்ற விதிகள் பின்பற்றப்பட்டனவா?”

பொது மக்களால் கேட்கப்படும்
முக்கிய கேள்விகள்:

1. இவர்கள் நிரந்தர நியமனம் பெற்றவர்களா? அல்லது தற்காலிகமா? அல்லது
ஒப்பந்த அடிப்படையிலா?

2. இவர்களின் முதல் நியமனக் கடிதத்தில் வழங்கப்பட்ட சேவை நிலையம் எது?

3. நியமனத்தின் போது இவர்களுக்கு பொருந்தும் இடமாற்ற விதிகள் / கொள்கைகள் எவை?

4. கடந்த 20 ஆண்டுகளில் இவர்களுக்கு இடமாற்ற உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதா?

5. இடமாற்றம் வழங்கப்படவில்லை என்றால், அதற்கான அதிகாரப்பூர்வ காரணம் என்ன?

6. இடமாற்றத்திலிருந்து விலக்கு வழங்கப்பட்டிருந்தால், அதற்கான அதிகாரபூர்வ அனுமதி உள்ளதா?

7. இவர்களின் சேவைப் பண்புகள் (Transfer Scheme) எதை அடிப்படையாகக் கொண்டு நிர்வகிக்கப்படுகின்றன?

8. சம்பந்தப்பட்ட ஆண்டுகளில் ஒரே சேவை நிலையத்தில் நீண்டகாலமாக பணியாற்றியமை குறித்து உரிய அதிகாரிகளால் பரிசீலனை செய்யப்பட்டதா?

9. இவர்களுக்கு எதிராக ஏதேனும் ஒழுக்காற்று அல்லது சேவை குறைபாடுகள் பதிவாகியுள்ளனவா?

10. ஒரே வைத்தியசாலையில் நீண்ட காலம் பணியாற்றுவதற்கு சுகாதார அமைச்சு / மாகாண சுகாதார அதிகாரிகளின் அனுமதி அல்லது உத்தரவு உள்ளதா?

11. தற்போதைய பணியமர்த்தல் மற்றும் இடமாற்ற நடைமுறைகள் சுகாதார அமைச்சின் நடைமுறைகள் மற்றும் அரச சேவை விதிகளுக்கு ஏற்ப உள்ளதா?

பொதுமக்களின் கேள்வி

20 ஆண்டுகளாக ஒரே வைத்தியசாலையில் தொடர்ந்து பணியாற்றும் நிரந்தர சிற்றூழியர்களுக்கு பொருந்தும் இடமாற்ற விதிகள் முறையாகப் பின்பற்றப்பட்டனவா?

நியாயம் வேண்டும்!

* விதிகள் பின்பற்றப்பட வேண்டும்!
* வெளிப்படைத்தன்மை வேண்டும்!

சென்ற நூற்றாண்டில் சாதியக் கொடுமைகளுக்கு எதிராக "மேலாடை அணியும் போராட்டம்"  எனும் தன் மானத்தைக் காப்பதற்கான போராட்டத்தில...
17/08/2026

சென்ற நூற்றாண்டில் சாதியக் கொடுமைகளுக்கு எதிராக "மேலாடை அணியும் போராட்டம்" எனும் தன் மானத்தைக் காப்பதற்கான போராட்டத்தில் ஈடுபட்ட அதே "தமிழ்" பெண்கள்தான்... இப்போது துவேசம் பிடித்து

இன்று வேறு பெண்களின் மானத்தை காப்பதற்காக அணியப்படும் "ஆடையை" நீக்க மதவாதத்தை கையிலெடுத்து போராடுகிறார்கள்..

உலகம் எவ்வளவு விசித்திரமானது!!

மறந்துவிட முடியாது...! மக்களின் துயரங்கள்.. #காலச்சுவடுகள் :LTTE தீவிரவாதிகளால் மூதூர் முற்றுகையிடப்பட்டு இன்றுடன் இருபத...
11/08/2026

மறந்துவிட முடியாது...! மக்களின் துயரங்கள்..
#காலச்சுவடுகள் :

LTTE தீவிரவாதிகளால் மூதூர் முற்றுகையிடப்பட்டு இன்றுடன்
இருபது (20) வருடங்கள்.

அப்பாவி முஸ்லிம் மக்களை கொலை செய்து அவர்களின் சொத்து, காசு, தங்கம், இருப்பிடத்தை விட்டு அவர்களை விரட்டிவிட்ட நாள் 2006/08/04 ஆம் திகதி ஆகும்.

விடுதலைப் புலி தீவிரவாதிகளினால் கொலை செய்யப்பட்ட அனைத்து உறவுகளுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் மேலான சுவனத்தை வழங்குவானாக! ஆமீன்.

இலங்கையின் கிழக்கே மூதூர் பிரதேச முஸ்லிம்கள் தமது பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 20ஆவது ஆண்டை இன்று நினைவு கொள்கின்றார்கள்.

மூதூர் தாக்குதலில் 54 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

2006 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி இரவு மூதூர் நகரிலுள்ள இராணுவம் மற்றும் பொலிஸ் நிலைகள் மீது LTTE தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலின் பின்னர் அந்த பிரதேசம் பல மணித்தியாலங்கள் புலிகள் தீவிரவாதிகள் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்தது.

ஓரிரு நாட்கள் இதே நிலை மூதூரில் இருந்ததாக கூறப்படுகின்றது.

அவ்வேளையில்தான் முஸ்லிம் மக்களை சொத்துக்களை ஒப்படைத்து விட்டு வெளியெறுமாறு தீவிரவாதிகளால் அறிவிக்கப்பட்டதாக முஸ்லிம்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இக்காலப்பகுதியில் இடம் பெற்ற எறிகணை வீச்சுக்களில் அகப்பட்டு 54 முஸ்லிம்கள் பலியானதாக அந்தப் பகுதியில் வாழும் மக்கள் கூறியிருந்தார்கள்.

மூதூர் பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த LTTE மக்களை வெளியேறுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவித்ததாக அன்று தெரிவிக்கப்பட்டது.

கினாந்திமுனை ஊடாக மட்டுமே வெளியேற அனுமதியை வழங்கியிருந்த நிலையில் அவ் வழியாக வெளியேறும் போது LTTE தீவிரவாதிகளால் தடுத்து வைக்கப்பட்ட முஸ்லிம்கள் தொழிலதிபர்கள் சிலர் காணாமல் போயுள்ளதாகவும் முஸ்லிம் மக்களால் அன்று தெரிவிக்கப்பட்டது.

உடுத்த உடையுடனும் பல மைல் தொலைவிலுள்ள கந்தளாய் பகுதியை சென்றடைந்த முஸ்லிம் மக்கள் ஒரிரு மாதங்கள் .அங்குள்ள நலன்புரி மையங்களில் தங்கியிருந்தார்கள்.

இந்த வன்முறைத் தாக்குதல்கள் தமிழ், முஸ்லிம் உறவுக்குத் குந்தகம் விளைவிக்கும் செயல்களாக அமைந்தபோதிலும் அன்று எவராலும் இந்த ஈனச் LTTE தீவிரவாதிகளை செயலைத் தடுத்து நிறுத்தப்படவில்லை;

இந்த இனப்படுகொலைகள் பற்றி தமிழர் தரப்புக் கூட இப்போது பேசுவதை மறந்து விட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது.

>2006.08.01ஆம் திகதி LTTE தீவிரவாதி புலிகளினால் மூதூர் முற்றுகையிடப்படுகிறது.

முற்றுகையின் விளைவாக ஏற்பட்ட யுத்த களத்தில் அப்பாவி பொதுமக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டார்கள்:

>மரணமானோர் - 54

>படுகாயமடைந்தோர் - 196

>காணாமற்போனோர் - 05

>மனநிலை பாதிக்கப்பட்டோர் - 24

>பகுதியளவில் பாதிக்கப்பட்ட வீடுகள் - 1425

>முற்றாக பாதிக்கப்பட்ட வீடுகள் - 286

>மக்கள் அனைவரிடமும் 100% மானோரின் வீடுகளிலிருந்த சொத்துக்கள், தங்கம் ,பணம் கொள்ளையிடப்பட்டது.

>வயல்நிலங்கள், கால்நடைகள், மீன்பிடி, விவசாயம், வியாபாரத் தளங்கள் என அனைத்தும் முற்றாக அளிக்கப்பட்டது.

>2006.08.04 ஆம் திகதி யுத்தத்தின் கொடூரத்தை தாங்க முடியாது மூதூர் மக்கள் கந்தளாய்க்கு இடம்பெயர்தார்கள்.

>சுமார் 1 மாதகாலம் அகதி வாழ்வை அனுபவித்த மூதூர் மக்கள் மீண்டும் தாயகம் திரும்பி சொந்த மண்ணில் குடியேறினார்கள்.

இந்தியாவோ… இலங்கையோ…. ஆன பாவம் அந்த insurance company manager வடக்கன் வடக்கன் தான் யா😂
10/08/2026

இந்தியாவோ… இலங்கையோ….

ஆன பாவம் அந்த insurance company manager

வடக்கன் வடக்கன் தான் யா😂

என்னடா இந்தியா jokker டீம் Ku  சம்பவம் பண்ணிட்டு இருக்கானுங்க 😂😂 💯
07/08/2026

என்னடா இந்தியா jokker டீம் Ku சம்பவம் பண்ணிட்டு இருக்கானுங்க 😂😂 💯

🔥🔥 father of Indian team 😂😂😂
07/08/2026

🔥🔥 father of Indian team 😂😂😂

டே. அண்ணன் இப்போ cm டா நீ அவ்ளோ தான் பாத்துக்க....
07/08/2026

டே. அண்ணன் இப்போ cm டா நீ அவ்ளோ தான் பாத்துக்க....

Cake 🍰 மெஹந்தி கு பட்டமளிப்பு நடக்குது முட்டை சாணக்கு ஒரு அவார்ட் வாங்கற என்ன பிரச்சினை 😂😂
06/08/2026

Cake 🍰 மெஹந்தி கு பட்டமளிப்பு நடக்குது
முட்டை சாணக்கு ஒரு அவார்ட் வாங்கற என்ன பிரச்சினை 😂😂

🚨 UGC Recognized ≠ UGC Approved 🚨மக்களை ஏமாற்றி பிழைப்பு நடந்தும் Influencers மற்றும் இவர்களை follow பண்ணும் முட்டாள் மா...
06/08/2026

🚨 UGC Recognized ≠ UGC Approved 🚨

மக்களை ஏமாற்றி பிழைப்பு நடந்தும் Influencers மற்றும் இவர்களை follow பண்ணும் முட்டாள் மாணவர்களின் கவனத்திற்கு…



கல்வி தொடர்பான விளம்பரங்களில் “UGC Recognized” மற்றும் “UGC Approved” என்ற வார்த்தைகளை பயன்படுத்தி மக்களை குழப்ப வேண்டாம்.

முதலில் ஒரு விடயத்தை புரிந்துகொள்ளுங்கள்.

📌 Recognized வேறு… Approved வேறு!

Recognized (அங்கீகரிக்கப்பட்டது):
ஒரு பல்கலைக்கழகம் அல்லது தகுதி அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் உள்ளது என்பதைக் குறிக்கும்.

Approved (அனுமதி வழங்கப்பட்டது):
ஒரு குறிப்பிட்ட நிறுவனம், பாடநெறி அல்லது செயல்பாட்டை நடத்துவதற்கு ஒரு அதிகாரப்பூர்வ அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது என்பதைக் குறிக்கும்.

எனவே யாராவது “UGC Approved” என்று விளம்பரப்படுத்தினால், கேட்க வேண்டிய கேள்விகள்:

✅ UGC எந்த அடிப்படையில் Approval வழங்கியது?
✅ Approval வழங்கப்பட்டது எதற்கு? (நிறுவனத்திற்கா? பாடநெறிக்கா? Degree Awarding Authority-க்கா?)
✅ அதற்கான உத்தியோகபூர்வ ஆவணம் எங்கே?

⚠️ வெளிநாட்டு பட்டங்கள் குறித்து UGC என்ன சொல்கிறது?

இலங்கையின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC), ஒரு வெளிநாட்டு பல்கலைக்கழகத்தின் பெயர் Commonwealth Universities Yearbook அல்லது World Higher Education Database (WHED) போன்ற தரவுத்தளங்களில் இடம்பெற்றுள்ளதா என்பதை அடிப்படையாகக் கொண்டு அந்தப் பல்கலைக்கழகத்தை Recognized எனக் குறிப்பிடுகிறது.

ஆனால்…

UGC ஒரு தனிநபர் பெற்ற வெளிநாட்டு பட்டச் சான்றிதழின் உண்மைத்தன்மையை (Authenticity) உறுதிப்படுத்துவதில்லை.

அதாவது:

❌ அந்த நபர் உண்மையில் அந்தப் பல்கலைக்கழகத்தில் படித்தாரா?
❌ அந்தப் பட்டம் உண்மையாக வழங்கப்பட்டதா?
❌ அந்தச் சான்றிதழ் உண்மையானதா அல்லது போலியானதா?

என்பதை UGC தனிப்பட்ட முறையில் உறுதி செய்யாது.

அதனை வேலை வழங்கும் நிறுவனங்கள், பதவி உயர்வு வழங்கும் நிறுவனங்கள் அல்லது சம்பந்தப்பட்ட அமைப்புகள் அந்தப் பல்கலைக்கழகத்துடன் நேரடியாக தொடர்புகொண்டு சரிபார்க்க வேண்டும்.

🌍 வெளிநாட்டு பட்டங்கள் தொடர்பான எச்சரிக்கை

குறிப்பாக சில நாடுகளிலிருந்து வழங்கப்படும் வெளிநாட்டு பட்டங்கள் தொடர்பில் அதிக கவனம் அவசியம்.

தென் அமெரிக்க நாடுகள், கம்போடியா போன்ற நாடுகளிலிருந்து வழங்கப்படும் சில பட்டங்கள் தொடர்பில், மாணவர்கள் முழுமையான சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும்.

ஒரு வெளிநாட்டு பல்கலைக்கழகத்தின் பெயர் இருப்பதால் மட்டும், அந்தப் பட்டத்தின் தரம், சட்டபூர்வ நிலை அல்லது உண்மைத்தன்மை (Authenticity) தானாக நிரூபிக்கப்படாது.

“Foreign University”, “International Degree”, “UGC Recognized”, “UGC Approved ” போன்ற வார்த்தைகள் மட்டும் ஒரு பட்டத்தின் தரத்தை உறுதி செய்யாது.

மாணவர்கள் கட்டாயம் சரிபார்க்க வேண்டியது:

✅ பட்டம் வழங்கும் பல்கலைக்கழகம் உண்மையில் உள்ளதா?
✅ அந்தப் பல்கலைக்கழகத்திற்கு உரிய நாட்டில் சட்டபூர்வ அங்கீகாரம் உள்ளதா?
✅ அந்த குறிப்பிட்ட பட்டம் உண்மையில் அந்தப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுகிறதா?
✅ அந்தப் பட்டத்தின் உண்மைத்தன்மையை (Authenticity) பின்னர் நேரடியாக சரிபார்க்க முடியுமா?

Address

Kalmunai
32280

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sainthamaruthu பசங்க posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share