PACK Sri Lanka

PACK Sri Lanka A force that has been conceptualizing and committing for changes in attitude, aspiration and develop

■ சிவப்பு எச்சரிக்கை▪︎
08/01/2026

■ சிவப்பு எச்சரிக்கை▪︎

🎓 நாளை நடப்பது▪︎-----------------------------------Join the   for filling   organized by Kalmunai Undergraduate Associat...
16/05/2025

🎓 நாளை நடப்பது▪︎
-----------------------------------
Join the for filling
organized by
Kalmunai Undergraduate Association.

Under the guidance of
Dr. F.H.A.Shibly (Senior Lecturer, SEUSL)

Don’t miss this opportunity.
We are with you to help and guide!
Hurry up and register now!

📆 Date: Saturday, May 17, 2025
⏰ Time: 9:30 AM to 3:30 PM
📍 Venue: KM/Az-Zuhara Vidyalaya, Kalmunai
☎️ Contact: 076 641 4570 for more information

Follow the Undergraduate Association on
Facebook https://www.facebook.com/share/p/196ymVL7R9/ and on Instagram: https://www.instagram.com/p/DJs8tBzI_hK/?igsh=NGNscnNkZTNyNTAw




Happening Tomorrow
"Join the FREE UGC Application Form Filling Camp organized by Kalmunai Undergraduate Association! 📝🎓
Under the guidance of DR FHA.Shibly (Senior Lecturer,SEUSL)
Don’t miss this chance — We are with you to help! 🤝
Hurry up and register now! ✅"

📆Date: Saturday, 17 May 2025
⏰ Time: 9:30 AM to 3:30 PM
📍 Venue: KM/Az Zuhara Vidyalaya, Kalmunai
☎️ Contact: 076 641 4570 for more information



■ இம்முறை A/L பரீட்ச்சை மானவர்களுக்கான அனர்த்த உதவி▪︎-------------------------------------------------------------------...
23/11/2024

■ இம்முறை A/L பரீட்ச்சை மானவர்களுக்கான அனர்த்த உதவி▪︎
-------------------------------------------------------------------
எதிர்வரும் திங்களன்று, நவம்பர் 25, 2024 அன்று நடைபெறும் GCE A/L பரீட்சையின் போது ஏதேனும் இயற்கை அனர்த்தம் (புயல்/மழை/வெள்ளம்) காரணமாக பரீட்சைக்குத் தோற்றுவதில் மாணவர்ளுக்கு இயலாது போனால், சம்பந்தப்பட்ட பரீட்சை நிலையத்தை அடைவதற்கான உதவிகளைப் பெறுவதற்கு பல தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர இலக்கமான 117 அல்லது விசேட ஒருங்கிணைந்த அவசர செயற்பாட்டு செல்போன் இலக்கங்களான

0113 668 020
0113 668 100
0113 668 013
0113 668 010
076 3 117 117
க்கு அறிவிக்க முடியும்.

பரீட்சை திணைக்களத்தின் அவசர இலக்கமான 1911ஐ ஒருங்கிணைத்து நிலைமையை விரைவில் தவிர்க்க முடியும் எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

■ வாழ்த்துக்கள் நஸீர்(Mr. Nazeer Nazeer, SLPS Special)▪︎கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராகவும், ஆளணி மற்றும் பயிற்...
07/06/2024

■ வாழ்த்துக்கள் நஸீர்
(Mr. Nazeer Nazeer, SLPS Special)▪︎

கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராகவும், ஆளணி மற்றும் பயிற்சி பிரிவின் பிரதிப் பிரதம செயலாளராகவும் பதவியேற்கும் சிரேஷ்ட நிர்வாக அதிகாரி நஸீர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

கல்முனையில் பிரதேச செயலாளராக கடமை புரிந்த காலத்தில், நெருங்கிய தொடர்பில் பணியாற்றிய அரச அதிகாரி இவர், இயல்பான நடிப்பு அற்ற துணிச்சல் மிகுந்த அரச அதிகாரி.

இவர் தனது தகுதிக்கு ஏற்ற மக்களுக்கு சேவை புரியும் பொறுப்பிற்கு வந்தமை மகிழ்ச்சி.

வேண்டுகோள்!○---------------------------வறுமையில் வாடுகின்ற உண்ணுவதற்கு உணவுகூட இல்லாமல் தவிக்கின்ற வறியவர்களை என்னால் அட...
02/04/2024

வேண்டுகோள்!
○---------------------------
வறுமையில் வாடுகின்ற உண்ணுவதற்கு உணவுகூட இல்லாமல் தவிக்கின்ற வறியவர்களை என்னால் அடையாளம் காட்ட முடியும்.

இந்த மகத்தான உதவும் மாதத்தில் தங்களால் முடிந்தவர்கள் உதவுங்கள்.

▪︎Kalmunai Jiffry Travels - 077 237 3979

■ தியாகிகளின் இராச்சியம்▪︎-----------------------------------------------------அன்பு ஆன்மாக்களே, நீங்கள் வெறுமனே அடங்கிவ...
24/10/2023

■ தியாகிகளின் இராச்சியம்▪︎
-----------------------------------------------------
அன்பு ஆன்மாக்களே,
நீங்கள் வெறுமனே அடங்கிவிடவில்லை.
மாறாக உங்களின் இன்னுயிரை இழந்து, நியாயமான உங்களின் நில மீட்பு போராட்டத்தையே செய்கின்றீர்கள்.

(இதுவரை சஹீதானவர்கள் 5,791, அதில்
சிறுவர்கள் 2,360 மற்றும் பெண்கள் 1,292.)

இங்கு இழப்புகள் பொறுட்டே இல்லை.
எமது போராட்ட அடைவே இலக்கு. தளர்ந்து விடாமல் அடைவை நோக்கி நகருங்கள்.

உங்களோடு இரண்டு பில்லியன் முஸ்லிம்கள் மட்டும் இல்லை. அதனோடு உலகில் அநீதியையும் கொடூரத்தையும் நின்று நிமிர்ந்து எதிர்க்கும் ஒவ்வொரு உள்ளமும் ஒருமித்திருக்கிறது. ஒட்டு மொத்த உலகும் இருக்கிறது.

நம்பிக்கை இழக்க வேண்டாம்.
வெற்றி எமக்கே. பலஸ்தீனம் மீழும்.

அல்லாஹு அக்பர்.

▪︎சகோதரன் Kaleelur Rahuman

■ வாழ்த்துக்கள் கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக நஸீர்▪︎கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (நிர்வாகம்) முன்னாள் ...
11/09/2023

■ வாழ்த்துக்கள் கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக நஸீர்▪︎

கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (நிர்வாகம்) முன்னாள் கல்முனை பிரதேசச் செயலாளர் எம்.எம்.நஸீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் தமது கடமைகளை இன்று திங்கள் செப்டம்பர் 11, 2023 இல் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டானினால் வழங்கப்பட்ட கடிதத்திற்கவாக பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயனாவினால் இன்று வழங்கி வைக்கப்பட்ட கடிதத்திற்கமைவாகவே தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.மன்சூர், விவசாய அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ.முத்துவண்டா, முதலமைச்சின் செயலாளர் என்.மதிவண்ணன், ஆளணி மற்றும் பயிற்சி பிரதிப் பிரதம செயலாளர் (திருமதி) ஆர்.யூ.ஜலீல், சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன், கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ. திஸாநாயக்கா உள்ளிட்ட பல உயரதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.

■ ஆறாம் ஆண்டு▪︎------------------------------------மர்ஹூம் ஏ.ஆர் .எம். மன்சூர் அவர்கள் கல்முனை மண்ணையும் மக்களயும் விட்ட...
26/07/2023

■ ஆறாம் ஆண்டு▪︎
------------------------------------
மர்ஹூம் ஏ.ஆர் .எம். மன்சூர் அவர்கள் கல்முனை மண்ணையும் மக்களயும் விட்டுப் பிரிந்து இன்று (ஜூலை 26, 2023 ) ஆறு ஆண்டுகள்.

கல்முனை பிரதேசத்தின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி ஏ.ஆர். மன்சூர் அவர்கள், 1977 தொடக்கம் 1994 ஆம் ஆண்டு வரையிலான 17 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராகவும், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அமைச்சராகவும், வர்த்தக வாணிப மற்றும் கப்பல்துறை அமைச்சராகவும் மேலும் சில ஆண்டுகள் குவைத் நாட்டின் இலங்கைக்கான தூதுவராகவும் பணியாற்றியவர்.

பல்லின மக்களை அரவணைக்கும் இவர் பிராந்திய பேதமின்றி வேறுபட்ட ஊர் மக்களின் தேவைகளையும் சமமாக மதித்து பணியாற்றியவர்.

மிகவும் நேர்மையான ஒழுக்கமான
இவரது இதமான பண்புகளால் என்றும் எமது பிராந்திய மக்கள் மனதில் வாழ்ந்து வருகின்றார்.


அவரது மறைவுக்கு முன்னதாக யஹாபால அரசு தாபிக்கபட்ட தருணத்தில், அன்னாரை அவரது இல்லத்தில் சாந்தித்து பேசும் வாய்ப்பு கிட்டியது. அந்த வயதிலும் அந்த நேர ஜனாதிபதி மைத்திரி அவர்களை சந்தித்து கல்முனை அபிவிருத்தி விடயமாக பேசுவதற்கு நேரம் கேட்டு எழுதிய கடித்ததின் பிரதியை என்னிடம் காட்டி பெருமிதம் கொண்டார்.


யா அல்லாஹ்!
ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவர்க்கத்தை அவருக்கு வழங்குவாயாக.

ஆமின்.

▪︎ சகோ. Kaleelur Rahuman

எவர் ஒருவர் காலையில் எழுந்ததும் தனது சமூகத்தை பற்றி சிந்திக்கவில்லையோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்.▪︎ முஹம்மது முஸ்தபா...
23/07/2023

எவர் ஒருவர் காலையில் எழுந்ததும் தனது சமூகத்தை பற்றி சிந்திக்கவில்லையோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்.

▪︎ முஹம்மது முஸ்தபா (ﷺ).

■ தோல்வி அடைந்த சமூகமா நாம்...?▪︎(விடை காண  தொடர்ந்தும் கீழே வாசியுங்கள்.....)புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளரான Anton Chekhov...
11/07/2023

■ தோல்வி அடைந்த சமூகமா நாம்...?▪︎

(விடை காண தொடர்ந்தும் கீழே வாசியுங்கள்.....)

புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளரான Anton Chekhov விடம் ஒரு முறை "தோல்வியடைந்த ஒரு சமூகம் எப்படியிருக்கும்?" என்று கேட்கப்பட்டது.

அந்தக் கேள்விக்கு அவர் கீழ்வருமாறு பதிலளித்தார்.


"தோல்வியடைந்த சமூகங்களில், ஆரோக்கியமாக சிந்திக்கும் ஒவ்வொருவனுக்கும் எதிராக ஆயிரம் முட்டாள்கள் களத்திலிருப்பார்கள்.

அவ்வாறே, சிந்தனையோடும் கரிசனையோடும் உதிர்க்கப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும் எதிராக தீவிரமானதும் முட்டாள்தனமானதுமான ஆயிரம் சொற்கள் உதிர்க்கப்படும்.

அங்கே பெரும்பான்மை முட்டாள்தனத்தினாலேயே போஷிக்கப்பட்டிருக்கும்.

எந்த சமூகத்தில் அற்பமான விஷயங்கள் பெரும் தலைப்புகளாக மாற்றப்பட்டு, நல்லுணர்ச்சி பெரும் வகையிலான சிந்தனைகளையெல்லாம் மிகைத்ததாக அவை இடம்பிடித்திருக்கின்றனவோ, எந்த சமூகத்தில் அதன் களத்தை அற்பர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்களோ, அதுவே தோல்வியடைந்த சமூகமாகும்."

▪︎தமிழில் Affan Abdul Haleem

■ யார் கொலையாளி?▪︎---------------------------------------------நேற்று இரவு ஏற்பட்டது சாதாரண திடீர் வீதி விபத்தா?மனிதாபிம...
10/07/2023

■ யார் கொலையாளி?▪︎
---------------------------------------------

நேற்று இரவு ஏற்பட்டது
சாதாரண திடீர் வீதி விபத்தா?
மனிதாபிமானமற்ற படுகொலையா?

01. இத்த பாதையில் தொழிலில் ஈடுபட்டுவரும் "சச்சின் பஸ்" எனப்படும் நிறுவனத்தின் நான்கு பஸ்களில் இரண்டுக்கு மட்டுமே "ரூட் பெர்மிட்" இருக்கிறது. மற்ற இரண்டும் சட்ட விரோதமாகவே இயங்கி வருகின்றது. இது தொடர்பில் பாராமுகமாக இருந்த அல்லது அதனை "ஆசீர்வதித்த" சம்மந்தப்பட்ட அரச இயந்திரம் பிழை செய்திருக்கிறதா?

02. சட்டவிரோதமாக பஸ்களையும் மனிதநேயமற்ற சாரதிகளை சேவையில் ஈடுபடுத்திய சச்சின் பஸ் முதலாளி பிழை செய்திருக்கிறானா?

03. அவற்றை தாண்டி, சம்மந்தப்பட்ட பஸ் வண்டியை அசமந்தமாக செலுத்தி, 10 அப்பாவிப் பிராயாணிகளை இந்த
சாரதி கொலை செய்திருக்கிறானா?

04. தனது ஆட்சியின் போது பொலன்னறுவையை அவ்வளவு அழகாக அபிவிருத்தி செய்த முன்னாள் ஜனாதிபதி, இந்த பாலம் தமிழீழம் போகிறது என்று அப்படியே விட்டு விட்டாரா?

இவர்களில் யார் கொலையாளி?

எந்த வகையிலும் வாழப் பொருத்தமில்லாத நாடாக எமது அழகிய நாட்டை மாற்றிவரும் மேற்சொன்ன தரப்புகளை மக்களாகிய நாங்களே சட்டத்தின் முன் நிறுத்த போராட வேண்டும்.

இது தவிர்த்திருக்கப்பட வேண்டிய விபத்து. இதற்கு காரணமான அத்தனை தரப்பும் தண்டிக்கப்பட வேண்டும்.

▪︎சகோ. Kaleelur Rahuman

■ போராடு▪︎----------------------வல்ல அல்லாஹ், அவனது ஸ்திரமான போராளிகளுக்கேகடினப் போராட்டத்தை கொடுக்கிறான்.
05/07/2023

■ போராடு▪︎
----------------------
வல்ல அல்லாஹ்,
அவனது ஸ்திரமான போராளிகளுக்கே
கடினப் போராட்டத்தை கொடுக்கிறான்.

Address

Kalmunai

Website

Alerts

Be the first to know and let us send you an email when PACK Sri Lanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share