Kattankudy Public Library

Kattankudy Public Library Public Library Kattankudy

காத்தான்குடி நகரசபை பொதுநூலகத்தின் இலத்திரனியல் மயப்படுத்தல் மற்றும் மொறட்டுவை பல்கலைக்கழகத்துடன் சிநேகபூர்வ ஒப்பந்தம் த...
02/06/2026

காத்தான்குடி நகரசபை பொதுநூலகத்தின் இலத்திரனியல் மயப்படுத்தல் மற்றும் மொறட்டுவை பல்கலைக்கழகத்துடன் சிநேகபூர்வ ஒப்பந்தம் தொடர்பான கலந்துரையாடல்

காத்தான்குடி நகரசபை பொதுநூலகத்தினை இலத்திரனியல் மயப்படுத்துதல் மற்றும் மொறட்டுவை பல்கலைக்கழக நூலகத்துடன் சிநேகபூர்வ ஒப்பந்தம் (MOU) ஒன்றை மேற்கொள்வது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் இன்று (02) மொறட்டுவை பல்கலைக்கழக நூலக வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் காத்தான்குடி நகரசபை கெளரவ நகர முதல்வர் SHM. அஸ்பர் JP UM, கெளரவ நகரசபை உறுப்பினர் பொறியியலாளர் றியாஜ் மஹ்மூத், நகரசபையின் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சாகிர் மற்றும் நகரசபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இக் கலந்துரையாடலை மொறட்டுவை பல்கலைக்கழக நூலகக் குழுவினர் சிறப்பாக ஒருங்கிணைத்து வழிநடத்தினர். இதற்காக பல்கலைக்கழக நூலகர் அவர்களுக்கும், குறிப்பாக உதவி நூலகர் புடின் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகும்.

மேலும், எமதூரைச் சேர்ந்த மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பொறியியலாளர் நிஹாஜ் அவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயனுள்ள ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இக் கலந்துரையாடலின் முக்கிய அம்சங்களாக, காத்தான்குடி நகரசபை பொதுநூலகத்தை இலத்திரனியல் மயப்படுத்துவதற்கான ஒத்துழைப்பை ஏற்படுத்துதல் மற்றும் மொறட்டுவை பல்கலைக்கழக நூலகத்திற்கும் காத்தான்குடி நகரசபை பொதுநூலகத்திற்கும் இடையில் எதிர்கால கல்வி, ஆய்வு மற்றும் நூலக மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கான பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) ஒன்றை மேற்கொள்ள இணக்கம் காணப்பட்டன.

இந்நிகழ்வு, இரு நிறுவனங்களுக்கும் இடையிலான அறிவுப் பரிமாற்றம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் நூலக சேவைகளின் மேம்பாட்டிற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு முக்கிய முன்னெடுப்பாக அமைந்தது.

பட்டதாரி ஆசிரியர் போட்டிப் பரீட்சை சிறப்பு இலவச வழிகாட்டல் கருத்தரங்கு  - 2026 காத்தான்குடி நகர சபை மற்றும் காத்தான்குடி...
21/05/2026

பட்டதாரி ஆசிரியர் போட்டிப் பரீட்சை சிறப்பு இலவச வழிகாட்டல் கருத்தரங்கு - 2026

காத்தான்குடி நகர சபை மற்றும் காத்தான்குடி பொது நூலகம் இணைந்து ஏற்பாடு செய்த பட்டதாரி ஆசிரியர் போட்டிப்பரீட்சைக்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு
20.05.2026 புதன்கிழமை நகர முதல்வர் SHM அஸ்பர் JP UM அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இக்கருத்தரங்கிற்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 600க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.

இதன் ஆரம்ப நிகழ்வில் காத்தான்குடி நகர சபையின் செயலாளர் கணக்காளர் மற்றும் நகரசபையின் உறுப்பினர்கள் நகரசபை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

பட்டதாரி ஆசிரியர் போட்டிப் பரீட்சை சிறப்பு இலவச வழிகாட்டல் கருத்தரங்கு  - 2026 எதிர்வரும் 2026 மே மாதம் 24 ஆம் திகதி  நட...
17/05/2026

பட்டதாரி ஆசிரியர் போட்டிப் பரீட்சை சிறப்பு இலவச வழிகாட்டல் கருத்தரங்கு - 2026

எதிர்வரும் 2026 மே மாதம் 24 ஆம் திகதி நடைபெறவுள்ள பட்டதாரி ஆசிரியர் போட்டிப்பரீட்சைக்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்கினை பின்வரும் ஒழுங்கில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரச சேவையில் உள்ள DO பட்டதாரிகள் மற்றும் ஏனைய அனைத்து பட்டதாரிகளும் கலந்துகொள்ள முடியும்.

கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் எதிர்வரும் 19.05.2026 திங்கள்கிழமை மாலை 4.00 மணிக்கு முன்னர் கீழே உள்ள Google Forms இணை பூர்த்தி செய்து முன்பதிவு செய்துகொள்ளவும்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSctbX_dxupR-EI7s2Tl21fp4OldNU_j7GlwFw7bhpzJoAjc6g/viewform?usp=publish-editor

(பதிவு செய்தவர்கள் மத்திரமே கருத்தரங்கில் கலந்து கொள்ள முடியும்)

மேலதிக தகவல்களுக்கு : 077 88 98 180

A/L பரீட்சையினை நிறைவு செய்த மாணவர்களுக்கானஇலங்கை சமுத்திரவியல் பல்கலைக்கழகம் வழங்கும் பட்டப்படிப்பு பாடநெறிகள் பற்றிய இ...
03/05/2026

A/L பரீட்சையினை நிறைவு செய்த மாணவர்களுக்கான

இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்கழகம் வழங்கும் பட்டப்படிப்பு பாடநெறிகள் பற்றிய இலவச அறிமுக நிகழ்ச்சி.

GIT பரீட்சை எழுதக்கூடிய (January 11) மாணவர்களுக்கான Learning Materials.தேவையான மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
08/01/2026

GIT பரீட்சை எழுதக்கூடிய (January 11) மாணவர்களுக்கான Learning Materials.
தேவையான மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....05.01.2026 , 06.01.2026  ஆகிய  தினங்களில் காத்தான்குடி நகர சபை பொது நூலகத்தினால் 2025/ 2026 ம...
06/01/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

05.01.2026 , 06.01.2026 ஆகிய தினங்களில் காத்தான்குடி நகர சபை பொது நூலகத்தினால் 2025/ 2026 ம் ஆண்டு உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக GIT பாட நெறிக்கான கருத்தரங்கு ஒன்று ஹிஸ்புல்லாஹ் கலாச்சார மண்டபத்தில் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டது.

MMM. ZINDA MUFAS
BSC (HONS) IN IT, MSC IN CYBER SECURITY, SOFTWARE ENGINEER. UNIVERSITY OF MORATUWA. அவர்களை வளவாளராகக் கொண்டு நடாத்தப்பட்ட இக் கருத்தரங்கில் மாணவர்களுக்கான GIT பாட நெறி தொடர்பான பயனுள்ள பல்வேறுபட்ட விடயங்களுக்கான விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன் கடந்த கால வினாத் தாள்களும் பயிற்றுவிக்கப்பட்ட பட்டது.

காத்தான்குடி நகர சபை பொது நூலகம் நடத்தும் 2025 / 2026 மாணவர்களுக்கான GIT கருத்தரங்கு.காத்தான்குடி மற்றும் அதனை அண்மித்த ...
04/01/2026

காத்தான்குடி நகர சபை பொது நூலகம் நடத்தும்

2025 / 2026 மாணவர்களுக்கான GIT கருத்தரங்கு.

காத்தான்குடி மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

அனுமதி முற்றிலும் இலவசம்.

Address

Kattankudi
30100

Opening Hours

Monday 08:30 - 17:30
Tuesday 08:30 - 17:30
Wednesday 08:30 - 17:30
Thursday 08:30 - 17:30
Saturday 08:30 - 17:30
Sunday 08:30 - 17:30

Telephone

+94654929190

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kattankudy Public Library posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share