Kattankudy Urban Council

Kattankudy Urban Council Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kattankudy Urban Council, Government Official, Kattankudi.

குத்தகை கேள்வி அறிவித்தல் 2026 நகரசபை, காத்தான்குடி.காத்தான்குடி நகரசபையினால் பஸ்மலா சதுக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள 2ம் இ...
31/08/2026

குத்தகை கேள்வி அறிவித்தல் 2026 நகரசபை, காத்தான்குடி.

காத்தான்குடி நகரசபையினால் பஸ்மலா சதுக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள 2ம் இலக்க கடை 01.10.2026 தொடக்கம் 31.12.2027ம் திகதி வரை குத்தகைக்கு விடுவதற்கான பொறியிடப்பட்ட கேள்விகள் எதிர்வரும் 15.09.2026ம் திகதி நண்பகல் 12.00 மணி வரை என்னால் ஏற்றுக்கொள்ளப்படும்.

காத்தான்குடி நகரசபையின் ஜூலை  மாத 14 வது சபை அமர்வின் கூட்டறிக்கை மற்றும் கணக்கரிக்கை என்பவற்றை கீழே உள்ள லிங்க்கினை பயன...
21/08/2026

காத்தான்குடி நகரசபையின் ஜூலை மாத 14 வது சபை அமர்வின் கூட்டறிக்கை மற்றும் கணக்கரிக்கை என்பவற்றை கீழே உள்ள லிங்க்கினை பயன்படுத்தி பார்வையிட முடியும்.

The Official Website of Kattankudy Urban Council

காத்தான்குடி நகரசபையின் 15வது சபை அமர்வு தற்போது நகர முதல்வர் SHM அஸ்பர் JP UM அவர்களின் தலைமையில் நகரசபை சபா மண்டபத்தில...
20/08/2026

காத்தான்குடி நகரசபையின் 15வது சபை அமர்வு தற்போது நகர முதல்வர் SHM அஸ்பர் JP UM அவர்களின் தலைமையில் நகரசபை சபா மண்டபத்தில் நடைபெறுகின்றது .

அன்புப் பொதுமக்களுக்குகாத்தான்குடி நகரசபை விடுக்கும் முக்கிய அறிவித்தல்அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபர...
18/08/2026

அன்புப் பொதுமக்களுக்கு
காத்தான்குடி நகரசபை விடுக்கும் முக்கிய அறிவித்தல்

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு!

‘க்ளீன் ஸ்ரீலங்கா’ நாடளாவிய வேலைத்திட்டத்தின் கீழ், காத்தான்குடி நகரசபையினால் வட்டார ரீதியாக திண்மக்கழிவு சேகரிப்பினை துரிதப்படுத்தும் நடவடிக்கை.

இரண்டாம் கட்டமாக 19.08.2026 நாளை தாருஸ்ஸலாம் வட்டாரத்தில் அமைந்துள்ள வீடுகளிலிருந்து திண்மக்கழிவுகளை முழுமையாகச் சேகரிக்கும் விசேட வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அன்றைய தினம் பொதுமக்களாகிய நீங்கள் உக்கக்கூடிய மற்றும் உக்க முடியாத கழிவுகளை முறையாகத் தரம் பிரித்து, எமது கழிவு சேகரிப்பு வாகனங்களுக்கு ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

குறித்த நடவடிக்கையின் பின்னர் தரம் பிரிக்காமல் வழங்கப்படும் கழிவுகள் எம்மால் பெற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

அத்துடன், எமது நகரசபையினால் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே கழிவுகள் சேகரிக்கப்படும். அதில் இரண்டு நாட்கள் உக்கக்கூடிய கழிவுகளும், ஏனைய இரண்டு நாட்கள் உக்க முடியாத கழிவுகளும் சேகரிக்கப்படும்.

எனவே, பொதுமக்களாகிய நீங்கள் இத்திட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

S.H.M. அஸ்பர் JP UM
நகரமுதல்வர்
காத்தான்குடி,
நகரசபை.

காத்தான்குடி குட்வின் சந்தி ‘ஸ்ட்ரீட் புட்’ வர்த்தகர்களுடன் நகர முதல்வர் விசேட கலந்துரையாடல். வீதி ஒழுங்குபடுத்தல் மற்று...
18/08/2026

காத்தான்குடி குட்வின் சந்தி ‘ஸ்ட்ரீட் புட்’ வர்த்தகர்களுடன் நகர முதல்வர் விசேட கலந்துரையாடல். வீதி ஒழுங்குபடுத்தல் மற்றும் சுகாதார நடைமுறைகளைத் தீவிரப்படுத்தத் தீர்மானம்!

காத்தான்குடி குட்வின் சந்தியில் இயங்கிவரும் ஸ்ட்ரீட் புட் கடை உரிமையாளர்களுடனான விசேட கலந்துரையாடல் ஒன்று நகரசபை சபா மண்டபத்தில் நேற்று (17.08.2026) இடம்பெற்றது.

நகர முதல்வர் SHM. அஸ்பர் JP, UM அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், பொதுமக்களுக்கு எவ்வித அசௌகரியங்களும் ஏற்படாத வகையில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு பின்வரும் முக்கிய தீர்மானங்கள் எட்டப்பட்டன.

* பாதசாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வகையில் வியாபார நிலையங்களை முறைப்படுத்தல்.

* பாதுகாப்பு உத்தியோகத்தர்களை (Private security service) நியமித்து வாகனத் தரிப்பிடங்களை ஒழுங்குபடுத்துவதுடன், போக்குவரத்து நெரிசல்களைக் கட்டுப்படுத்துதல்.

* உணவுகளைத் தயாரித்தல் மற்றும் பரிமாறுதல் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் மிக உயர்ந்த சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்தல்.

* அன்றாடம் சேரும் திண்ம மற்றும் திரவக் கழிவுகளைச் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் முறையாக அகற்றுதல்.

* கடை உரிமையாளர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் தொழில்சார் சவால்கள் மற்றும் களப் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்து, அவற்றுக்கு உடனடி மற்றும் சாத்தியமான தீர்வுகள் வழங்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் நகரசபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர், வருமானப் பரிசோதகர்கள், நகரசபை உத்தியோகத்தர்கள் மற்றும் குட்வின் சந்தி ஸ்ட்ரீட் புட் வர்த்தகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

அன்புப் பொதுமக்களுக்குகாத்தான்குடி நகரசபை விடுக்கும் முக்கிய அறிவித்தல்அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபர...
14/08/2026

அன்புப் பொதுமக்களுக்கு
காத்தான்குடி நகரசபை விடுக்கும் முக்கிய அறிவித்தல்

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு!

‘க்ளீன் ஸ்ரீலங்கா’ நாடளாவிய வேலைத்திட்டத்தின் கீழ், காத்தான்குடி நகரசபையினால் வட்டார ரீதியாக திண்மக்கழிவு சேகரிப்பினை துரிதப்படுத்தும் நடவடிக்கை.

18.08.2026 அன்று அன்வர் மற்றும் நூராணியா வட்டாரங்களில் அமைந்துள்ள வீடுகளிலிருந்து திண்மக்கழிவுகளை முழுமையாகச் சேகரிக்கும் விசேட வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அன்றைய தினம் பொதுமக்களாகிய நீங்கள் உக்கக்கூடிய மற்றும் உக்க முடியாத கழிவுகளை முறையாகத் தரம் பிரித்து, எமது கழிவு சேகரிப்பு வாகனங்களுக்கு ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

குறித்த நடவடிக்கையின் பின்னர் தரம் பிரிக்காமல் வழங்கப்படும் கழிவுகள் எம்மால் பெற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

அத்துடன், எமது நகரசபையினால் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே கழிவுகள் சேகரிக்கப்படும். அதில் இரண்டு நாட்கள் உக்கக்கூடிய கழிவுகளும், ஏனைய இரண்டு நாட்கள் உக்க முடியாத கழிவுகளும் சேகரிக்கப்படும்.

எனவே, பொதுமக்களாகிய நீங்கள் இத்திட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

S.H.M. அஸ்பர் JP UM
நகரமுதல்வர்
காத்தான்குடி,
நகரசபை.

13/08/2026
முக்கிய அறிவித்தல்.
05/08/2026

முக்கிய அறிவித்தல்.

பொலன்னறுவை மாநகரசபை குழுவினர் காத்தான்குடி திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்தினை பார்வையிட்டனர்.காத்தான்குடி நகர சபையின்...
04/08/2026

பொலன்னறுவை மாநகரசபை குழுவினர் காத்தான்குடி திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்தினை பார்வையிட்டனர்.

காத்தான்குடி நகர சபையின் கீழ் இயங்கி வரும் திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்தினைப் பார்வையிடுவதற்காக, பொலன்னறுவை மாநகரசபையின் மேயர் தலைமையில் உயர்மட்டக் குழுவொன்று நேற்றைய தினம் (ஆகஸ்ட் 3) விசேட விஜயம் ஒன்றினை மேற்கொண்டது.

இக் குழுவில் பொலன்னறுவை மாநகரசபையின் மேயர், ஆணையாளர், வைத்திய அதிகாரிகள் மற்றும் பொறியியலாளர் உள்ளிட்ட பலர் இடம்பெற்றிருந்தனர்.

இவ்விஜயத்தின் போது, காத்தான்குடி நகர முதல்வர் SHM. அஸ்பர் (J.P) அவர்கள், விருந்தினர்களை வரவேற்று திண்மக் கழிவகற்றல் மேலாண்மை நிலையத்தின் அனைத்துப் பிரிவுகளையும் சுற்றிக் காண்பித்ததுடன் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கழிவு மேலாண்மைச் செயற்பாடுகள், மறுசுழற்சி முறைகள் மற்றும் திண்மக் கழிவுகளைப் பயனுள்ள வகையில் கையாளுதல் தொடர்பான முழுமையான விளக்கங்களையும், தெளிவூட்டல்களையும் நகர முதல்வர் அவர்களுக்கு வழங்கினார்.

காத்தான்குடி நகர சபையின் இத்தகைய முன்மாதிரியான கழிவு மேலாண்மைச் செயற்பாடுகளைக் கண்டறிந்த பொலன்னறுவை மாநகரசபைக் குழுவினர், தமது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.

காத்தான்குடி நகரசபையின் 14வது சபை அமர்வு தற்போது நகர முதல்வர் SHM அஸ்பர் JP UM அவர்களின் தலைமையில் நகரசபை சபா மண்டபத்தில...
30/07/2026

காத்தான்குடி நகரசபையின் 14வது சபை அமர்வு தற்போது நகர முதல்வர் SHM அஸ்பர் JP UM அவர்களின் தலைமையில் நகரசபை சபா மண்டபத்தில் நடைபெறுகின்றது .

Address

Kattankudi
30100

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Friday 08:00 - 17:00

Telephone

+94652245925

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kattankudy Urban Council posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Kattankudy Urban Council:

Shortcuts

Share