08/10/2024
*வடகீழ் பருவப் பெயர்ச்சி மழைக்கு முன்னாயத்தமாதல் குழுக்கூட்டம் -2024*
காத்தான்குடி பிரதேச செயலக அனர்த்த நிவாரணப்பிரிவின் ஏற்பாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சி மழைக்கு முன்னாயத்தமாதல் குழுக்கூட்டம் 2024.10.07 ஆந் திகதி திங்கட்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் உதவிப் பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக கிராம உத்தியோகத்தர், மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர், மாவட்ட அனர்த்த நிவாரண உத்தியோகத்தர்கள், ஏனைய அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், மேலும் பல நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தின் போது எதிர்வரும் காலங்கள் மழை காலம் என்பதால் வெள்ள அனர்த்தத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள், தோணாக்கள் மற்றும் நீர் வழிந்தோடக்கூடிய இடங்களை துப்பரவு செய்தல், டெங்கு நோயை குறைப்பதற்கான பொறிமுறைகள் போன்ற விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.