21/11/2024
😂
மாப்புள கல்யாத்துக்கு முந்தி நல்லாத்தான் பேசினார்.
இனி இப்படியொரு மாப்புள நம்மட புள்ளக்கி கிடைக்கிறில்லண்டு மாமியாரே பெருமையாப்பேசினார்.
கடன்ல ஈக்கிற பொண் ஊட்டு குடும்பத்தை கரை சேர்ப்பதாகவும் வாக்குறுதியளித்தார்.
நல்ல நேர்மையான சூதுவாது இல்லாத மாப்புணு ஊர்ல ஈக்கிற ஆக்களும் ஷென்ன தானாம்.கல்யாணமும் முழு ஊருலயும் ஈக்கிற முக்காவாசிப்பேர்டயும் ஆசீர்வாதத்துல நடந்திச்சாம்!
ஆனா ஒரு கேஸ் இப்ப போய்க்கிட்டிருக்கு..
அது என்னென் கேஸ் எண்டா.....
கல்யாணத்துக்கு பிறகு மாப்புள பொண் ஊட்டாருக்கு உடுப்பு வாங்கி குடுக்குறது நம்மூர்ல சம்பிரதாயம் தானே இனி... இந்த மனிஷன் மூணு மைனி இருக்கும் போது ரெண்டு மைனிக்கி உடுப்பு வாங்கிக் குடுத்துட்டு மூணாவது மைனிய விட்டுட்டார்.
இது கேஸ் பாரமாகி மூணாவது மைனி கொழம்பிட்டா... இவவ ஷேப் பண்றத்துக்கு இவட புள்ளகளுக்கு சின்னப்புள்ள உடுப்பு வாங்கிக்குடுக்குறதா கேள்வி..
இருந்தாலும் மைனிட கொழப்பம் முடியல்ல, தனக்கு விலையான உடுப்பு வாங்கித்தரவாகும்ணு தான் மச்சான் இப்படி சின்னப்புள்ள உடுப்பு தந்து சமாளிக்கிறாருணு சொல்றா...
மாப்புளட மனசுல என்ன ஈக்குணு அல்லாஹ் அறிவான்.
ஒரு வேளை மூணாவது மைனிக்கி உடுப்ப விட வர்த்தா கைப்பட்டி ஒண்ண கூட கொடுக்கலாம் பிற்பட்ட காலங்கள்ல..
ஆனால், மைனிட கொழப்பம் சம்பிரதாயப்படி உடுப்பே வேணும் என்பது தானாம்... இது அவட மதிப்பு,உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சினையாம்..
ஸ்பெஷல் விஷியம் என்னண்டா இந்த கல்யாணம் நடக்குறதுக்கு விருப்பமே இல்லாத பொறாமப்புடிச்ச கோள்மூட்டின கேஸ்வல் எல்லாம் இந்த உள்வீட்டு பனிப்போர்ல குளிர்காய்றது தானாம் 😂
இந்த கோமாளிக்கேஸ்களுக்கு கல்யாணத்த கவுக்குற எண்ணம் கூட ஈக்கிதுணு நம்மூரு ஸீ ஸீ டீவிகளான ஆச்சிமார் சங்கம் எதிர்வுகூறுது
மாப்புள இந்த சமாச்சாரத்த நீதமான முறைல முடிக்காட்டி கேஸ் பாரம் தான் போல ஈக்கி ...😂
குறிப்பு:
இது அரசியல் பதிவு தான் 😜
முஜாஹிதா ராஸிக்