Srikanapathy Foundation

Srikanapathy Foundation "வியர்வை சிந்தாத உன்னாலும் மை சிந்தாத பேனாவாலும் எதையும் சாதிக்க முடியாது"

20/06/2021

இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்💖💖🌹🌹

20/06/2021

Many more Happy Returns of the Day SIR
🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹

ஆயிரம் சொந்தங்கள் அனைத்திட இருந்தாலும் ... 💖💖அன்னையே உன் போன்று அன்பு செய்ய யாரும் இல்லை இவ் உலகில் .... ❣️❣️தாயுள்ளம் க...
09/05/2021

ஆயிரம் சொந்தங்கள் அனைத்திட
இருந்தாலும் ... 💖💖
அன்னையே உன் போன்று அன்பு செய்ய யாரும் இல்லை இவ் உலகில் .... ❣️❣️

தாயுள்ளம் கொண்ட எல்லா அன்னையருக்கும்
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்🙏🙏
🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️

ஏற்றுக்கொள்ள முடியாதது உங்களின் மரணச் செய்தி தம்பி.🥲🥲🥲கிளிநொச்சி மலையாளபுர கிராமத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த கிராம வாழ்...
25/04/2021

ஏற்றுக்கொள்ள முடியாதது உங்களின்
மரணச் செய்தி தம்பி.🥲🥲🥲

கிளிநொச்சி மலையாளபுர கிராமத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த கிராம வாழ் இளைஞர்களுக்கும் மிகவும் முன்னுதாரணமாக இருந்த சிறந்த ஒரு இளைய தலைமுறை தலைவர்.
மனதில் விதைத்த சிந்தனைகள் வழியாக எதிர்கால தலைமுறைக்கு எடுத்து செல்லும் தலைவனே எதிர்பார்க்க முடியாத வலிகளில் மனதில் உங்கள்மரணம்....
உங்களின் ஆன்மா இளைப்பாறட்டும்

என்றும் மீள முடியாத துயரத்தில் தவிக்கும் குடும்பத்தாருடன் துணை நிற்போம்...💐💐💐

May soul rest in peace🌹

12/04/2021

✨”கல்வியின் சக்தி தேசத்தை பிணைக்கிறது,
நாம் ஒன்று கூடி கல்விக்கு பங்களிப்போம்.”✨

இந்த காணொளியை பார்த்து புரிந்துகொண்டவர்கள் லைக் செய்யலாமே. 👍🏻👍🏻💞💞

 #சூரரைப் போற்று .... 💥💥💥⚡️தமிழக மலைப்பகுதிகளில் உருவாகி , கேரளா மலைப்பகுதியில் கிழக்கு நோக்கி ஓடி , வீணாகக் கடலில் கலந்...
19/03/2021

#சூரரைப் போற்று .... 💥💥💥

⚡️தமிழக மலைப்பகுதிகளில் உருவாகி , கேரளா மலைப்பகுதியில் கிழக்கு நோக்கி ஓடி , வீணாகக் கடலில் கலந்து கொண்டிருந்த ஒரு ஆறு தான் முல்லை ஆறு . அப்படி வீணாக கடலில் கலந்த தண்ணீரை மேற்கு நோக்கி , அதாவது தமிழகத்தை நோக்கி திருப்பினால் , வறட்சியின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டிருந்த ஐந்து மாவட்டங்கள் வளம் பெறும் என்பதற்காக 300 ஆண்டுகளுக்கு முன்னர் அன்றைய சேதுபதி மன்னர்கள் காலத்திலும் , அதற்கு அடுத்து வந்த பிரிட்டிஷ் அரசாலும் , கிழக்கு நோக்கி செல்லும் முல்லை ஆற்றின் போக்கை தடுத்து அதை மேற்கு நோக்கி , தமிழ்நாட்டை நோக்கித் திருப்ப ஒரு திட்டம் போடப்பட்டது . அருமையான அந்தத் திட்டம் , திட்டம் என்றளவிலேயே காகிதத்திலேயே நின்றுவிட்டது . காரணம் , அந்தத் திட்டத்தில் இருந்த மிகக் கடினமான சவால்கள் . எந்த விதமான வசதிகளும் இல்லாத , முறையான பாதை கூட இல்லாத அடர்த்தியான வனப்பகுதி , வன விலங்குகள் , மலேரியா போன்ற கொள்ளை நோய்களைப் பரப்பும் கொசுக்கள் , அட்டைப் பூச்சிகள் .... என நீண்ட சவால்களுக்குப் பயந்து அந்த அணை கட்டும் திட்டத்தில் எந்தப் பொறியாளருமே ஆர்வம் காட்டவில்லை . இப்படியான ஒரு சூழ்நிலையில் சவால்களை உடைத்து அணையை சாத்தியமாக்கும் ஒரு சாகசக்காரனை பிரிட்டீஷ் அரசு வலை வீசித் தேடிக் கொண்டிருந்தது . 1885 களில் சென்னை மாகாணத்தில் ஓரிடத்தில் கிரிக்கெட் போட்டி நடத்திக் கொண்டிருந்த " அவரின் " காலில் வந்து அந்த வலை வந்து விழுந்தது .

To , Mr. " கர்னல் ஜான் பென்னி குவிக் " என்று தொடங்கிய அந்த கடிதம் , " மிஸ்ட்டர் , ஜான் , மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் , ஒரு அணையைக் கட்ட பிரிட்டிஷ் அரசு முடிவு செய்துள்ளது.அதை நீங்கள் தான் செய்ய வேண்டும்.உடனடியாக மதுரைக்கு வரவும் .. " --அவரது கைகளுக்குக் கிடைத்தது . கிரிக்கெட் பேட்டை கீழே வைத்துவிட்டு இன்ஜீனியரிங் டிராப்ட்டரை கையில் எடுத்துக் கொண்டு மதுரைக்கு கிளம்பினார் பென்னி குவிக்.அவரிடம் அணை கட்டும் திட்டத்திற்கான வரைவு உட்பட பல விவரங்கள் தரப்பட்டது .

1887 ல் அணை கட்டும் பணி தொடங்கியது . தொடங்கியது என்ற இந்த வார்த்தையை எளிதாக வாசிப்பதைப் போல இருக்கவில்லை அந்தப் பணி.எந்தவொரு பொருள் தேவைப்பட்டாலும் , அந்த சிறியதோ , பெரிதோ , அது மதுரையில் இருந்து தான் வர வேண்டும்.கடுமையான காட்டுப் பகுதியின் வழியாக , வர பல நாட்களாகும்.இப்படியான சூழ்நிலையில் அணை கட்டும் பணி தொடங்கியது . எக்காரணம் கொண்டும் அணை கட்டும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களைத் துன்புறுத்தக் கூடாது.அவர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்க வேண்டும்.நமக்கு இருக்கிறதோ இல்லையோ , தொழிலாளர்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் .... என்பன போன்றவைகளில் , தான் கட்டப் போகும் அணையை விட உறுதியாக இருந்தார் , பென்னி குவிக் . அணை கட்டும் பணியும் வேகமாக வளர்ந்தது.பாதி அணை கட்டி முடிவடைந்த நிலையில் காட்டில் கடுமையான மழை வெளுத்தெடுத்தது.அந்த மழையில் பாதி கட்டப்பட்ட அணை உடைந்து , வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.சர்வ நாசம்.மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும் . மனம் தளரவில்லை பென்னி குவிக்.மீண்டும் தொடங்கினார் . ஓரளவு வளர்ந்த நிலையில் இருந்த அணைக்கான சவால் , இம்முறை வன விலங்குகள் வடிவத்தில் வந்தது.மிகப் பெரும் யானைக் கூட்டம் வந்து அணையை முட்டி , மோதி , உடைத்துச் சிதைத்துப் போட்டன . இரண்டாவது முறையாக துவங்கிய இடத்திலேயே பூஜ்ஜியத்தில் வந்து நின்றார் பென்னிகுவிக் . மூன்றாம் முறை பணியைத் தொடங்கலாம் என்று நினைத்த பென்னி குவிக்கின் படைகளை மலேரியா தாக்கியது .

இப்படி தொடர்ச்சியான துன்பங்களைப் பார்த்த பிரிட்டீஷ் அரசு , அணை கட்டும் பணியை நிறுத்தி விடலாம் என்று முடிவு செய்து பென்னி குவிக்கை திரும்ப அழைத்தது . சென்னையில் வைத்து நடந்த பிரிட்டீஷ் அதிகாரிகள் கூட்டத்தில் பென்னி குவிக்கிடம் அணை கட்டும் பணியை அப்படியே நிறுத்திவிட்டு , நீங்கள் வட இந்தியாவில் பணிக்குச் செல்லுங்கள் என்ற உத்திரவு தரப்பட்டது . ஆனால் அந்த உத்திரவை பென்னி குவிக் திட்டவட்டமாக மறுத்துவிட்டார் . " நான் இந்த பூமிக்கு வருவது ஒரு முறை மட்டுமே.ஆகையால் நான் வந்து சென்றதன் அடையாளமாக மக்களுக்கு ஏதேனும் செய்ய நினைக்கிறேன் . அந்த அணை கட்டப்பட்டால் , அதனால் பல லட்சக்கணக்கான நிலங்கள் பாசன வசதி பெறும்.லட்சக்கணக்கான மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியாகும்.எனவே நான் என் சொந்தத் பணத்தில் அணையைக் கட்டப் போகிறேன் ... " --என்று கூறிவிட்டு வெளியேறினார் .

வெளியே வந்தவர் , உடனடியாக தன் சொந்த நாடான இங்கிலாந்துக்கு - அயர்லாந்துக்கு கப்பலேறினார்.அங்கு சென்று தனக்கு சொந்தமானது என்றிருந்த சகலத்தையும் விற்றார்.எதையும் விடவில்லை.தன் பாட்டனார் தனக்குத் தந்த வீட்டையும் விற்றார்.ஓரளவிற்குப் பணம் கிடைத்தது.எடுத்துக் கொண்டு மதுரைக்கு வந்தார் . மீண்டும் அணையைக் கட்டும் பணியைத் தொடங்கினார் . இம்முறை இயற்கை ஒத்துழைத்தது . அணை வேகமாக வளர்ந்தது . கடல் மட்டத்தில் இருந்து 2980 அடிகள் உயரத்தில் , அடர்ந்த காட்டின் நடுவே , முல்லை என்ற ஒரு காட்டாற்றின் போக்கை மாற்றியவாறு , 146 அடிகள் கொள்ளளவுடன் , 1895 ல் முல்லைப் பெரியாறு அணை கம்பீரமாக எழுந்து நின்றது .

💥பொறியாளர் கர்னல் ஜான் பென்னி குவிக் அவர்களுக்கு ,
179 வது பிறந்தநாள் வாழ்த்துகள் ..💥💥

✨தடுக்கி விழுந்தோம் என்பதில் நிற்பதல்ல
வாழ்க்கை ✨
⚡️விழுந்த இடத்திலிருந்து எழுந்தோம் என்பதே
முதன்மை ⚡️

படித்ததில் பிடித்தது

வாழ்க்கையில் கடந்து செல்லும்     சிலவற்றை நேசிப்பதற்கு வாழ்க்கையை நேசிக்க பழகிவிட்டால்      கடந்து விடலாம் எங்கேயும் எப்...
19/03/2021

வாழ்க்கையில் கடந்து செல்லும்
சிலவற்றை நேசிப்பதற்கு
வாழ்க்கையை நேசிக்க பழகிவிட்டால்
கடந்து விடலாம் எங்கேயும் எப்போதும்....✍

#இனிய_நற்காலை #🙏🙏🙏🌹🌹🌹

22/02/2021

Address

No. 15, Viveganadhanagar
Kilinochchi
44000

Telephone

+94765250792

Website

Alerts

Be the first to know and let us send you an email when Srikanapathy Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Srikanapathy Foundation:

Share

Category