23/09/2025
நிதிக் கல்வியறிவு மாத சிறப்பு நிகழ்ச்சி மற்றும் கண்காட்சி.
மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் நிதி கல்வியறிவை மேம்படுத்தும் இலங்கை மத்திய வங்கியின் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக, மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்திய அலுவலகம் நிதிக் கல்வியறிவு மாத சிறப்பு நிகழ்ச்சி மற்றும் கண்காட்சியொன்றை ஏற்பாடுசெய்துள்ளது.
திகதி: 26 செப்தெம்பர் 2025
நேரம் காலை 08.30 பிற்பகல் 05.00
இடம்- இலங்கை மத்திய வங்கி,கிளிநொச்சி பிராந்திய அலுவலகம்
இக் கண்காட்சியில் உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர் (MSMEs) காட்சிக் கூடங்கள், கொழும்பு பங்கு பரிவர்த்தனை (CSE) முதலீட்டு வழிகாட்டுதல்கள், ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிய (ETF) சேவைகள், கொடுகடன் தகவல் பணியக சேவைகள் (CRIB) மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டுதல்கள் என்பன இடம்பெறவுள்ளன.
மேலும், பார்வையாளர்களுக்கு இலங்கை நாணயங்களின் வரலாறு, அரிய மற்றும் நினைவு நாணயங்கள். நாணய அமைப்பின் வளர்ச்சி போன்றவற்றை உள்ளடக்கிய நாணய அரும்பொருட்காட்சியகமும் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
இந்த நிகழ்வானது தனிநபர் நிதியியல் முகாமைத்துவம், வங்கிச் சேவைகள், டிஜிட்டல் வங்கி சேவைகள், நிதியியல் மோசடிகள் மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டுதல்கள் போன்றவை குறித்து பொதுமக்கள் பயனுள்ள தகவல்களை பெற்றுக்கொள்ளும் வகையில் தேவையான நிதிக் கல்வியறிவு மற்றும் அவற்றின் பிரயோகம் தொடர்பான விடயங்களை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்கள் தேவைப்படின் 0779009356 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக கிளிநொச்சி பிராந்திய அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.
மாவட்ட ஊடகப்பிரிவு
மாவட்டச்செயலகம்
கிளிநொச்சி