23/10/2024
இன்று எமது நூலகத்திற்கு கிளி/ கிளிநொச்சி மத்திய கல்லூரியின் 2025 கலைப்பிரிவு மாணவர்கள் வருகை தந்திருந்தனர்.
மாணவர்கள் சில நூல்களைத்தெரிவுசெய்து வாசித்ததுடன், ‘The Elephant Whisperers’ (2022) ஆவணக்குறும்படத்தை பார்வையிட்டனர்.
தாய் யானையை இழந்த ஆதரவற்றக் குட்டி யானைகளுக்கும் அதைப் பராமரிக்கும் பழங்குடி இனத் தம்பதியர்களான பொம்மன் மற்றும் பெல்லி ஆகியேர்களிடையே உருவாகும் பாசப் பிணைப்பைப் பற்றி இக்குறும்படம் விவரிக்கிறது. இது 95வது ஒஸ்கார் விருது விழாவில் சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான ஒஸ்கார் விருதை வென்றமை குறிப்பிடத்தக்கது.
நூலகத்திற்கு வருகைதந்த மாணவி ஒருவரின் கருத்து:
“இன்று பாலுமகேந்திரா நூலகத்திற்கு எமது கலைத்துறை மாணவர்களுடன் வருகை தந்தோம். நான் இந்த நூலகத்தில் மிதயா கானவி எழுதிய ‘கருணை நதி’ நாவலை தெரிவு செய்து வாசித்தேன். மிகவும் அமைதியான நூலகமாக காணப்பட்டது. நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். புதிய விடயங்களை பார்வையிட்டேன். மிகவும் அருமையான நூல்கள் காணப்பட்டது, வாசிப்பதற்குரிய முறையாக காணப்பட்டது.”
நன்றி
கு. கீர்த்திகா
கிளி / கிளிநொச்சி மத்திய கல்லூரி
ஆசிரியரின் கருத்து:
“இன்று பாலுமகேந்திரா நூலகத்தின் கலை பிரிவு மாணவர்களை அழைத்து வந்திருந்தேன். சினிமா தொடர்பான நூலக ஆவண படங்கள் மிக நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. மிகப் பெறுமதியான முயற்சி. ‘The Elephant Whisperers’ ஆவணப்படத்தினை பார்வையிட்டோம். அறிவார்ந்த சமூகம் ஒன்றை கட்டமைக்கும் முயற்சிக்கு இந்த நூலகத்தின் பங்களிப்பு இன்னும் விரிய வேண்டும். ஈழத்து சினிமா படங்களும் தொகுக்க பட வேண்டும். இன்னும் மக்களை நோக்கி பயணிக்க வாழ்த்துகிறேன்.”
நன்றி
அ. சத்தியானந்தம்
ஆசிரியர்
கிளி / கிளிநொச்சி மத்திய கல்லூரி