16/03/2026
'Clean Srilanka’ மற்றும் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் தலைமையில், கந்தளாய், வெவ்சிறிகம கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமத்தின் செயல்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
‘Clean Srilanka’ தேசிய திட்டத்திற்கு இணங்க, ஒழுக்கமான மற்றும் நல்லொழுக்கமுள்ள சமூகத்தை உருவாக்கும் நோக்கில் சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை அணுகுமுறையுடன் செயல்படுத்தப்படும் “சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமங்கள்” திட்டம், திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பதியகம-வெவ்சிறிகம கிராம உத்தியோகத்தர் பிரிவில் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் தோழர் அருண் ஹேமச்சந்திர மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தோழர் ரொஷான் அக்மீமன ஆகியோரின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அனைத்து மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைந்து, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சின் கீழ் உள்ள தேசிய உற்பத்தித்திறன் செயலகம் தலைமையிலான இந்த தேசிய திட்டம், “தேசத்தை உயர்த்தும் கிராமம்” என்ற கருப்பொருளின் கீழ் மூன்று ஆண்டு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
ஒரு கிராமத்தின் வளர்ச்சிக்கு மட்டுப்படுத்தப்படாத இந்த சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமங்கள் திட்டம், சமூக உற்பத்தித்திறன் என்ற கருத்தின் கீழ் ஆறு துறைகள் மூலம் மக்களுக்கு வலுவூட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, கல்வி மேம்பாடு, பொருளாதார மேம்பாடு, சுகாதாரம் மற்றும் உடல்நலம், சமூக நல்வாழ்வு மற்றும் கலாச்சார, ஆன்மீகம் அத்துடன் சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகிய முக்கிய கூறுகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.
Clean Srilanka தேசிய திட்டத்தின் அடிப்படை அடித்தளமான தூய்மையான மற்றும் நிலையான சூழலைப் பராமரிப்பதற்கான தேசிய உறுதிப்பாட்டை இந்த மாதிரி கிராமங்கள் மூலம் அடிமட்டத்திற்கு எடுத்துச் செல்வதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும். இந்த தேசிய திட்டத்தின் இறுதி இலக்கு, கொள்கை வழிகாட்டுதலின் கீழ் முழு அரச இயந்திரத்தையும் பயன்படுத்தி செயன்முறை நடவடிக்கைகள் மூலம் நாட்டின் ஒவ்வொரு கிராமத்தையும் உற்பத்தித்திறன் மிக்க, முன்மாதிரியான பிரதேசமாக, நகரமாக மாற்றுவதாகும்.
‘ක්ලීන් ශ්රී ලංකා’ සහ ජාතික ඵලදායිතා ලේකම් කාර්යාලයේ මෙහෙයවීමෙන් ප්රජා ඵලදායිතා කන්තලේ වැව්සිරිගම ආදර්ශ ගම්මානයේ කටයුතු ආරම්භ කෙරේ.
‘ක්ලීන් ශ්රී ලංකා’ ජාතික වැඩසටහනට සමගාමීව සදාචාරාත්මක, සුපිළිපන් ජන සමාජයක් බිහි කිරීමේ අරමුණින් සමාජීය, පාරසරික සහ ආචාරධර්මීය ප්රවේශයක් සහිතව ක්රියාත්මක "ප්රජා ඵලදායිතා ආදර්ශ ගම්මාන" වැඩසටහන විදේශ රැකියා හා විදේශ කටයුතු නියෝජ්ය අමාත්ය අරුන් හේමචන්ද්ර සහෝදරයාගේ හා ත්රීකුණාමලය දිස්ත්රීක් පාර්ලිමේන්තු මන්ත්රී රොෂාන් අක්මීමන සහෝදරයාගේ ප්රධානත්වයෙන් ත්රීකුණාමලය දිස්ත්රික්කයේ කන්තලේ ප්රාදේශීය ලේකම් කොට්ඨාසයේ භතියගම- වැව්සිරිගම ගම්මානයේ ආරම්භ කෙරිණි.
කර්මාන්ත සහ ව්යවසායකත්ව සංවර්ධන අමාත්යාංශය යටතේ පවතින ජාතික ඵලදායිතා ලේකම් කාර්යාලය විසින් සියලුම දිස්ත්රික් ලේකම් කාර්යාල, ප්රාදේශීය ලේකම් කාර්යාල සමඟ එක්ව මෙහෙයවනු ලබන මෙම ජාතික වැඩසටහන, "දැය නංවන සපිරි ගමක්" තේමාව යටතේ තෙවසරක සැලැසැමක් යටතේ ක්රියාත්මකය.
මෙම ප්රජා ඵලදායිතා ආදර්ශ ගම්මාන ව්යාපෘතිය මගින්, ගම්මානයක භෞතික සංවර්ධනයට පමණක් සීමා නොවී, ප්රජා ඵලදායිතා සංකල්ප යටතේ අංශ හයක් ඔස්සේ ජනතාව බලගැන්වීමට සැලසුම් කර ඇත. ඒ අනුව අධ්යාපනික සංවර්ධනය, ආර්ථික සංවර්ධනය, සෞඛ්යය සහ සනීපාරක්ෂාව, සමාජ යහපැවැත්ම මෙන්ම සංස්කෘතික, අධ්යාත්මික, පාරිසරික දියුණුව යන ප්රධාන සංරචකයන් කෙරෙහි විශේෂ අවධානයක් යොමු කෙරේ.
ක්ලීන් ශ්රී ලංකා ජාතික වැඩසටහනේ මූලික පදනම වන ආචාරධර්මීය අගයන් හා වටිනාකම් වැඩිදියුණු කිරීම සහ පිරිසිදු සහ තිරසාර පරිසරයක් පවත්වා ගැනීම සඳහා වන ජාතික කැපවීම මෙම ආදර්ශ ගම්මාන මඟින් බිම් මට්ටමට රැගෙන යාම රජයේ ප්රමුඛතම අපේක්ෂාවයි. ප්රතිපත්තිමය මඟපෙන්වීමක් යටතේ සමස්ත රාජ්ය යාන්ත්රණය යොදා ගනිමින් ප්රායෝගික ක්රියාකාරකම් තුළින් මෙරට සෑම ගම්මානයක්ම ඵලදායිතාවෙන් පිරිපුන්, ආදර්ශමත් ඒකකයක් බවට පත් කිරීම මෙම ජාතික වැඩසටහනේ අවසන් ඉලක්කයයි....................................