Divisional Secretariat Maritimepattu

Divisional Secretariat Maritimepattu Official site

07/04/2026
பிரதேச மட்டத்தில் சிறுவர் மேம்பாடு மற்றும் சமூகப் பங்கேற்பை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும்  சிறுவர் கழகங்களை ...
26/03/2026

பிரதேச மட்டத்தில் சிறுவர் மேம்பாடு மற்றும் சமூகப் பங்கேற்பை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் சிறுவர் கழகங்களை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ் கரைதுறைபற்று சிறுவர் சம்மேளனத்தின் கீழ் உள்ள சிறுவர் கழகங்களிற்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய காகிதாதி பொருட்களும் வழங்கிவைப்பு

குழந்தைப் பருவத்தில் உருவாகும் மனப்பான்மைகள், மதிப்புகள் மற்றும் நடத்தைகள் நெறிமுறைகள், சுற்றுச்சூழல் பொறுப்பு மற்றும் குடிமைப் பங்கேற்பு போன்ற துறைகளில் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, அவர்களை நெறிமுறை மதிப்புகள், சுற்றுச்சூழல் பொறுப்பு மற்றும் சமூகப் பங்கேற்பு ஆகியவற்றை உட்பொதித்த “சிறிய தலைவர்கள்” ஆக உருவாக்கி, குடும்பங்கள், பாடசாலைகள் மற்றும் சமூகங்களில் நல்ல நடத்தைகளை இயல்பாக பரப்பும் சமூக மாற்றத் தூதர்களாக உருவாக்குவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
கரைதுறைபற்று கிராம அலுவலர் பிரிவுகளில் சிறுவர் கழகங்கள் இயங்கிவந்தாலும், அவை நடத்தை மாற்றம், தலைமைத்துவ மேம்பாடு மற்றும் செயற்பாட்டு சமூகப் பங்கேற்புக்கான வலுவான தளங்களாக முழுமையாக பயன்படுத்தப்படாத நிலை காணப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு, பிரதேச செயலகங்களுடன் இணைந்து சிறுவர் கழகங்களின் செயற்பாடுகளை மேம்படுத்தி வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, இன்றைய உதவிப் பிரதேச செயலாளர் அவர்களது தலைமையுடன் World vision நிறுவனத்தின் நிதி அனுசரணையுடனும் அவர்களது திட்டத்தின் ஊடாக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர், கிராம அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆகியோருடன் சிறுவர் கழக த்திற்கு ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்களும் காகிதாதி பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டது.

அன்புடைய கைத்தொழிலாளர்களே,தங்களின் தொழிற்சாலை / உற்பத்தி நடவடிக்கைகளுக்காக எரிபொருள் (Fuel) தேவையுள்ளதாக இருந்தால், கீழே...
17/03/2026

அன்புடைய கைத்தொழிலாளர்களே,

தங்களின் தொழிற்சாலை / உற்பத்தி நடவடிக்கைகளுக்காக எரிபொருள் (Fuel) தேவையுள்ளதாக இருந்தால், கீழே வழங்கப்பட்டுள்ள Google Form-ஐ நிரப்பி தங்களின் விவரங்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த தகவல்கள் கைத்தொழில் அபிவிருத்தி சபை (IDB) – முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் மூலம் தொடர்புடைய அதிகாரிகளுக்கு அனுப்பப்படும்.

📌 Form-ஐ நிரப்ப Gmail கணக்கைப் பயன்படுத்தவும்.

🔗 Google Form Link:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfhiY8p3oUvQ_-qCoq4WpvWnmKgMissRkX7feERAafrEMjE8g/viewform?usp=publish-editor

தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி.

கைத்தொழில் அபிவிருத்தி சபை (IDB)
முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம்
📞 021-2290209/ 077 3738 765/ 077 6473 569

Dear Industrialists, You are kindly requested to fill out this form if you require fuel for manufacturing or industrial purposes. The information collected will be used by the Industrial Development Board (IDB) – Mullaitivu District Office to update the relevant authorities. 📌 Please use a Gmai...

ஈரநில தினத்தை முன்னிட்டு, இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலுள்ள பாடசாலை மாணவர்களுக்காக ஈரநில விழிப்புணர்வு நிகழ்நிலை வினாட...
09/01/2026

ஈரநில தினத்தை முன்னிட்டு, இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலுள்ள பாடசாலை மாணவர்களுக்காக ஈரநில விழிப்புணர்வு நிகழ்நிலை வினாடி–வினா போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த போட்டி Future Environment Club அமைப்பினால், Programme of Disaster Risk Reduction and Climate Resilience, NCCSL இன் ஒத்துழைப்புடன் நடத்தப்படுகிறது.

🗓️ போட்டி நடைபெறும் தேதி:
24 ஜனவரி 2026

🖥️ போட்டி முறை:
போட்டி முழுவதுமாக நிகழ்நிலை முறையில் நடைபெறும்

ஈரநிலங்கள் (Wetlands) தொடர்பான 25 பல்தேர்வு (Multiple Choice) வினாக்கள்

வினாடி–வினா தமிழ் மொழியில் மட்டுமே நடைபெறும்

👩‍🎓👨‍🎓 தகுதி:
இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலுள்ள பாடசாலை மாணவர்கள் பங்கேற்க தகுதியுடையவர்கள்

🏆 சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள்:
வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்படும்

வினாடி–வினாவில் தேர்ச்சி பெறும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்

வயது எல்லை 11-20

📢 மேலதிக தகவல்கள்:
போட்டியைப் பற்றிய மேலதிக தகவல்கள், வினாடி–வினா இணைப்பு, நேர அட்டவணை போன்ற விவரங்கள் அனைத்தும் WhatsApp குழு மூலம் பகிரப்படும்.

📲 எனவே, தயவுசெய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள WhatsApp இணைப்பை கிளிக் செய்து குழுவில் இணையுங்கள்:

👉 WhatsApp குழு இணைப்பு:
https://chat.whatsapp.com/K8LoBkfyQiFHPZraxdBTRF

விண்ணப்ப படிவ இணைப்பு:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfMJfbGKkAKjTf8LCzt9z_sN5SIqDsmMAF0ImgIpq26IBhfBg/viewform?usp=publish-editor

"கரைதுறைப்பற்று பிரதேச  செயலகம் நல்லாட்சிக்கும், மக்கள் நலனுக்கும் ஒரு மாதிரி பிரதேச செயலகமாக உருவாக்க, ஒரே நோக்குடன், ஒ...
01/01/2026

"கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் நல்லாட்சிக்கும், மக்கள் நலனுக்கும் ஒரு மாதிரி பிரதேச செயலகமாக உருவாக்க, ஒரே நோக்குடன், ஒரே அர்ப்பணிப்புடன் செயல்படுவோம்." பிரதேச செயலாளர் உரை*
=====================================
பிரதேச செயலகத்தின் 2026ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று(01-01-2026) காலை 9.00 மணிக்கு தேசிய கொடி ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் ஆரம்பமானது பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் செல்வி.சி.ஷர்மி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து பிரதேச செயலாளர் திரு. R. விஜயகுமார் அவர்கள் தலைமை உரையாற்றினார் அவர்கள் தனது கருத்துரையில் = ஒரு புதிய ஆண்டின் பணிகளை நாம் ஆரம்பிக்கும் இந்நேரத்தில், நாட்டின் தற்போதைய சவால்களையும், நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பையும் ஆழமாக சிந்திக்க வேண்டிய தருணத்தில் உள்ளோம்.

இத்தகைய சூழலில், அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “வளமான நாடு – அழகான வாழ்க்கை” கொள்கை, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் ஒரு செயல்திட்டமாகும். மக்கள் மையப்படுத்தப்பட்ட அபிவிருத்தி, திறன் மிக்க மற்றும் பொறுப்புள்ள அரச நிர்வாகம், நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவை இதன் மையக் கருத்துகளாகும்.

இந்தக் கொள்கைகள் வெற்றி பெற வேண்டுமெனில், அதற்கான முக்கிய தூண் அரச உத்தியோகத்தர்களே. கொள்கைகள் ஆவணங்களாக மட்டுமே இருப்பதில்லை; அவை மக்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றமாக மாறுவது, நமது தினசரி சேவைகளின் மூலமே. .

நாம் செய்த வேலை எவ்வளவு எவ்வளவு பணம் செலவிட்டோம் என்பதைக் காட்டிலும் அதனால் மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் என்ன என்பதை மதிப்பிடும் நிர்வாகமாக நாம் செயல்பட வேண்டும்.

எனவே, ஒவ்வொரு திட்டத்திற்கும் தெளிவான இலக்குகள் இருக்க வேண்டும்,
ஒவ்வொரு நடவடிக்கைக்கும் அளவிடக்கூடிய முடிவுகள் இருக்க வேண்டும்,
ஒவ்வொரு செலவுக்கும் பொது நலன் பிரதிபலிக்க வேண்டும்.

மீள்குடியேற்றம், வாழ்வாதார மேம்பாடு, பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு, இளைஞர் திறன் வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நல்லாட்சியை வலுப்படுத்துதல் போன்ற துறைகளில் ஒருங்கிணைந்த, முடிவுகள் சார்ந்த செயல்பாடு அவசியமாகிறது. இதற்கு துறை ரீதியான ஒத்துழைப்பும், மனிதநேயத்துடன் கூடிய சேவை மனப்பாங்கும் தேவை.

அரச உத்தியோகத்தர் என்ற வகையில், நமது பங்களிப்பு சில அடிப்படை அம்சங்களில் வெளிப்பட வேண்டும்:
கடமை உணர்வு, நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை, மக்கள் மையப்படுத்தப்பட்ட சேவை.
மேலும், புதுமை, தொழில்நுட்பப் பயன்பாடு, நேர முகாமை மற்றும் குழுப் பணியாற்றல் ஆகியவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அத்துடன் நலன்புரி நன்மைகள் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை அடுத்த ஆண்டு குறைப்பதற்கு அவர்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். அத்துடன் திட்டங்கள் தயாரித்து உரிய இடங்களுக்கு அனுப்பி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

2026 ஆம் ஆண்டை, நம்பிக்கையின் ஆண்டாக, செயல்திறன் கொண்ட அரச சேவையின் ஆண்டாக,மக்கள் நம்பும் நிர்வாகத்தின் ஆண்டாக
மாற்றுவோம்.

இந்த புதிய ஆண்டு, அனைவருக்கும் பொறுப்புணர்வும், சேவை மனப்பாங்கும் நிறைந்ததாக அமைய வாழ்த்தி,
எனது உரையை இத்துடன் நிறைவு செய்தார்.

தொடர்ந்து உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், கிராம நிர்வாக உத்தியோகத்தர், மேலதிக மாவட்ட பதிவாளர், சமுக சேவை உத்தியோகத்தர், சமுர்த்தி முகாமையாளர் என அனைவரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்

Address

Mullaitivu
Mullaitivu
42000

Opening Hours

Monday 08:30 - 16:15
Tuesday 08:30 - 16:15
Wednesday 08:30 - 16:15
Thursday 08:30 - 16:15
Friday 08:30 - 16:15

Telephone

+942122290039

Alerts

Be the first to know and let us send you an email when Divisional Secretariat Maritimepattu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share