05/08/2026
சுனாமி வெளியேற்றப் பாதைகள் புனரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு – முல்லைத்தீவு மாவட்டம்
முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவினால், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், சுனாமி வெளியேற்றப் பாதைகளை புனரமைக்கும் வேலைத்திட்டங்கள் இவ்வருடம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் கீழ், செல்வபுரம், முள்ளிவாய்க்கால் கிழக்கு மற்றும் முள்ளிவாய்க்கால் மேற்கு ஆகிய பகுதிகளில் சுனாமி வெளியேற்றப் பாதைகள் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
செல்வபுரம் மற்றும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதிகளுக்கான புனரமைப்பு பணிகள் தற்போது சமூக அமைப்புகள் ஊடாக ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் அமைந்துள்ள வெளியேற்றப் பாதையின் புனரமைப்பு வேலைகள் ஒப்பந்தக்காரர் ஊடாக மேற்கொள்ளப்படும்
சுனாமி போன்ற கடல்சார் அனர்த்தங்களின் போது மக்கள் விரைவாகவும் பாதுகாப்பாகவும் வெளியேறுவதற்கான வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு
Disaster Management Centre – DMC Mullaitivu