Online Mutur Library

Online Mutur Library E Library, Publisher, Book and Magazines Distributor, Media Unit

*என்னைக் கவர்ந்த நூல்**நூல் விமர்சன குறிப்பு*ஒன்லைன் மூதூர் வாசிகசாலை குழுமத்தின் அங்கத்தவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ம...
10/06/2024

*என்னைக் கவர்ந்த நூல்*
*நூல் விமர்சன குறிப்பு*

ஒன்லைன் மூதூர் வாசிகசாலை குழுமத்தின் அங்கத்தவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் மற்றுமொரு புதிய முயற்சியாக...

ஒவ்வொரு சனிக்கிழமையும் எமது குழும அங்கத்தவர் ஒருவரின் "என்னைக் கவர்ந்த நூல்" என்ற தலைப்பில் நூல் ஒன்றின் விமர்சனத்தை குழுவில் பகிர்ந்துகொள்ள ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது...

*மேற்படி விமர்சனம் எழுதும் நபர்கள்*
👉 தான் தேர்தெடுக்கும் நூலின் மின்நூல் வடிவத்தை அனுப்பவேண்டும்
👉 குறித்த நூலின் விமர்சனத்தை அட்மின் இலக்கம் 0750545536 என்ற இலக்கத்திற்கு அனுப்பிவைக்கவும்.
👉 விமர்சனம் எழுதியவர் தனது பெயர், பதவிநிலை, பிரதேசம், மாவட்டம் என்பவற்றை விரும்பினால் பகிர்ந்து கொள்ளலாம்.
👉 விமர்சனம் 100 ~ 250 சொற்களுக்கு உட்பட்ட வகையில் கருத்தாளமை மிக்க ஆக்கமாக இருப்பது வரவேற்கத்தக்கது.

குறிப்பு -
சிறந்த நூல் விமர்சனங்களை கொண்டு எதிர்காலத்தில் அவற்றை நூலுருவாக்கம் செய்யும் முயற்சியும் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி
*அட்மின்*

 #ஒன்லைன்_மூதூர்_வாசிகசாலை  #நூல்_அறிமுகம் - 474அந்தோன் செகாவ் ஒன்பது வேடிக்கைக் கதைகள்நூலாசிரியர்- அந்தோன் செகாவ்தமிழில...
13/05/2024

#ஒன்லைன்_மூதூர்_வாசிகசாலை
#நூல்_அறிமுகம் - 474

அந்தோன் செகாவ் ஒன்பது வேடிக்கைக் கதைகள்
நூலாசிரியர்- அந்தோன் செகாவ்
தமிழில்- வானதி
வகை- வேடிக்கைக் கதைகள்
பக்கம்- 77

இலக்கிய வரலாற்றில் மருத்துவத்தில் இருந்து எழுத்தாளரானவர்கள் பலரும் இருப்பது விபத்தல்ல. மருத்துவரின் அறை அனைத்து உண்மைகளும் பேசப்படும் இடமாகும். அவரது மனமும் மனித அனுபவங்களைப் பல்முனைகளில் இருந்து பார்க்குமிடமாகும். அவர் மருத்துவராக மட்டுமின்றி கற்பனையுள்ள மனிதராகவும் இருந்து விட்டால் அந்த அனுபவங்களைக் கதைகளின் வழியே வெளிக்கொண்டு வருகிறார்.

அந்தோன் செகாவ் தொழில் முறையில் மருத்துவராகவும், தன் விருப்பப்படி எழுத்தாளராகவும் இருந்தார். அவருடைய மருத்துவப் படிப்புகள் மூலம் பெறப்பட்ட அறிவையும், அவரது தந்தை பிறப்பால் விவசாயியாகவும், நகரத்தில் வணிகராகவும் இருந்தது அவரது கலையை விரிவாக்க உதவியது.உலகில் மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் செகோவ் கட்டாயம் இருப்பார்.

இது அந்தோன் செகாவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளோ, அவரது மிகச் சிறந்த கதைகளோ அல்ல. அவரின் வேடிக்கையான கதைகள்.

இத்தொகுப்பில் இருக்கும் ஒன்பது கதைகளும் ஏதோ ஒரு விதத்தில் மனிதர்களையும், நிகழ்வுகளையும் பகிடி செய்கிறது. அவர்களின் நடத்தை, உணர்வுகள், சுயநலம் எனப் பலவற்றையும் மெலிதாகக் கேலி செய்தபடியே எழுதுகிறார். நாமும் இதில் இருப்பது போன்ற மனிதர்களைப் பார்த்திருப்போம். நிகழ்வுகளைச் சந்தித்திருப்போம். எதிர்பாராத வேடிக்கையாக நமது சிரமங்களில் வாழ்வு சிரித்திருக்கும். அதைத்தான் இவர் எழுதுகிறார்.

இந்நூலின் PDF வடிவிலான மின்நூலை பெற்றுக்கொள்ள
👇👇👇


👉 https://whatsapp.com/dl/

👉 https://t.me/MuturOnlineLibrary

👉 0771020030 / +94 71 789 1887

 #ஒன்லைன்_மூதூர்_வாசிகசாலை  #நூல்_அறிமுகம் - 4735 முதலாளிகளின் கதை  நூலாசிரியர் - ஜோதிஜி  வகை - தொழில் வழிகாட்டல்  வெளிய...
13/05/2024

#ஒன்லைன்_மூதூர்_வாசிகசாலை
#நூல்_அறிமுகம் - 473
5 முதலாளிகளின் கதை
நூலாசிரியர் - ஜோதிஜி
வகை - தொழில் வழிகாட்டல்
வெளியீடு - டாலர் நகரம்
ஆண்டு - 2008
பக்கம் - 93

என்பது வயதாகும் அம்மாவை மாதம் ஒரு முறையாவது ஊருக்குச் சென்று பார்த்து விடுவதும் அவரிடம் நல்ல பெயர் எடுத்து விட முடியுமா? என்ற ஆவல் இன்னமும் மாறவில்லை. அவருக்கு இன்னமும் என் மேல் நம்பிக்கையும் வரவில்லை. அவரிடம் உரையாடும் போது அவரின் பழமையான மாற்ற செல்ல திட்டு வாங்கி வருவதும் எனக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் அங்கீகாரமாகும்.

இந்தியா முழுக்க அடுத்த சில வருடங்களில் சுற்றி வந்து விட வேண்டும் என்ற எண்ணமுண்டு. ஆரோக்கியம் இருக்கும் வரையிலும் தினமும் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணமும், வாழும் ஊரான திருப்பூர் குறித்தும் வாழ்ந்த சிவகங்கை ஆவணப்படுத்த வேண்டும் என்ற ஆசையும் உண்டு.

டாலர் நகரம் (நினைவில் வாழும்) எழுத்தாளர் ஞாநி தலைமையில் நடந்த விழாவில் 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. விகடன் ஆண்டு தோறும் வெளியிடும் வருட மலரில் 2014 ஆம் ஆண்டின் தமிழ்நாட்டின் சிறந்த பத்து புத்தகங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்தனர்.

இந்தியாவின் ஆயத்த ஆடைகள் ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பெருமளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலகளாவிய பங்கில் இந்தியாவின் பங்கு 3.8 சதவீதம் ஆகும். இந்திய அளவில் பின்னலாடை ஏற்றுமதியில் 48 சதவீதத்தை
திருப்பூர் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறது. 2016-17-ம் நிதி ஆண்டில் ரூ.26 ஆயிரம் கோடி வர்த்தகம் செய்துள்ளது. இது 2017-18- நிதி குறைந்துள்ளது. பின்னலாடைத்தொழில் அறிமுகமாகி முதன் முதலில் கொல்கத்தாவில் 1893 ஆம் ஆண்டு கிட்டர்பூர் என்ற இடத்தில் சிறிய அளவில் பின்னலாடை உற்பத்தி
செய்யப்பட்டது.

இந்நூலின் PDF வடிவிலான மின்நூலை பெற்றுக்கொள்ள
👇👇👇


👉 https://whatsapp.com/dl/

👉 https://t.me/MuturOnlineLibrary

👉 0771020030 / +94 71 789 1887

 #ஒன்லைன்_மூதூர்_வாசிகசாலை  #நூல்_அறிமுகம் - 472ஆடு ஜீவிதம் நூலாசிரியர் - பென்யாமின்தமிழில் - விலாசினிவகை - நாவல் வெளியீ...
13/05/2024

#ஒன்லைன்_மூதூர்_வாசிகசாலை
#நூல்_அறிமுகம் - 472

ஆடு ஜீவிதம்
நூலாசிரியர் - பென்யாமின்
தமிழில் - விலாசினி
வகை - நாவல்
வெளியீடு - எதிர் வெளியீடு
ஆண்டு - 2022
பக்கம் - 216

நஜீபின் ஆசையெல்லாம் கல்ஃபில் வேலைப்பார்த்து வீட்டிற்குத் தேவையான பணம் அனுப்புவதுதான். இரக்கமற்ற, அபத்தமானத் தொடர் நிகழ்வுகளால் உந்தப்படும் நஜீபிற்கு சவுதி பாலைவன த்தின் நடுவில் ஆடுகளை மேய்க்கும் அடிமை வாழ்வு வாழ நேரிடுகிறது. தனது கிராமத்தின் செழிப்பான பசுமையான நிலப்பரப்பின் நினைவுகளும் தன் அன்பான குடும்பத்தின் நினைவுகளும் ஆடுகளின் துணையில் மட்டுமே ஆறுதல் கொண்டிருக்கும் நஜீபைத் துன்புறுத்துகிறது. முடிவில், பாலைவனச் சிறையிலிருந்து தப்பிக்க இந்த இளைஞன் ஓர் ஆபத்தான திட்டத்தைத் தீட்டுகிறார்.

மலையாளத்தில் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்ற ஆடு ஜீவிதம் சிறந்த விற்பனைப் பட்டியலில் இடம்பெற்ற நாவல். மலையாள இலக்கியத்தின் அற்புதமான புதிய எழுத்தாளர்களில் ஒருவரான பென்யாமின், நஜீபின் விசித்திரமானதும் அவலச்சுவை கொண்டதுமான பாலைவன வாழ்க்கையை நையாண்டியாகாவும் மென்மையாகவும் கூறி, தனிமை மற்றும் புறக்கணிப்பின் உலகளாவிய கதையாக இதை உருமாற்றுகிறார். 2009 இன் கேரள சாகித்திய அகாதெமி விருதினை வென்ற நாவல்

'நீங்கள் படிக்கக்கூடிய மிகவும் சுவாரசியமான புத்தகங்களில் ஒன்று'- தி ஹிந்து' புலம்பெயர் மற்றும் அடிமைத்தனம் குறித்து மிக அருமையாக எழுதப்பட்ட வேதனை தரும் நாவல்'- மின்ட்' உலகளவில் பொருத்தப்பாடு கொண்ட, மிக்க அழகுடனும் வலியுடனும் எழுதப்பட்ட நாவல்'- இண்டியன் எக்ஸ்ப்ரஸ்' சுவாரசியமான கதை… புதிய திறப்புகளை உண்டாக்குகிறது'-

மிகச் சிறந்த கல்ஃப் நாவல் என்று ஒன்று இருக்குமானால், பொருளாதார புலம்பெயர் வாழ்வின் இருண்ட பக்கத்தைக் கருணையுடன் புரிந்துகொண்டிருக்கும் ஆடு ஜீவிதம் நாவலே முதலில் இருக்கும். ஆனால் இந்நாவல் அதைக் கடந்து மனிதனிலிருந்து விலங்கைப் பிரிப்பது எது என்றும் கேட்கிறது'

இந்நூலின் PDF வடிவிலான மின்நூலை பெற்றுக்கொள்ள
👇👇👇


👉 https://whatsapp.com/dl/

👉 https://t.me/MuturOnlineLibrary

👉 0771020030 / +94 71 789 1887

 #ஒன்லைன்_மூதூர்_வாசிகசாலை  #நூல்_அறிமுகம் - 471மௌனி படைப்புகள்  நூலாசிரியர் - மௌனி  தொகுப்பு - சுகுமாரன்  வகை - சிறுகதை...
30/04/2024

#ஒன்லைன்_மூதூர்_வாசிகசாலை
#நூல்_அறிமுகம் - 471

மௌனி படைப்புகள்
நூலாசிரியர் - மௌனி
தொகுப்பு - சுகுமாரன்
வகை - சிறுகதை
வெளியீடு - காலச்சுவடு பதிப்பகம்
ஆண்டு - 2011
பக்கம் - 316

மௌனியின் படைப்புகள் மொத்தம் இருபத்தி நான்கு கதைகளும் இரண்டு கட்டுரைகளும். இவை இதுவரை நான்கு நூல்களாக வெவ்வேறு காலங்களில் வெளியிடப்பட்டன. க.நா. சுப்ரமணியம் தொகுத்து ஸ்டார் பிரசுர வெளியீடாக வந்த 'அழியாச் சுடர்' (1967), பதிப்பாளர் பெயர் குறிப்பிடப்படாமல் தருமு சிவராமூ முன்னுரையுடன் 1975இல் வெளிவந்த 'மௌனி கதைகள்', 1978இல் க்ரியா வெளியிட்ட 'மௌனி கதைகள் - தொகுப்பு இரண்டு' நூல். அனைத்துக் கதைகளையும் உட்படுத்தி பீக்காக் பதிப்பகம் 1992இல் வெளியிட்ட 'மௌனியின் கதைகள்' நூல். மௌனி கதைகள் (1975), மௌனி கதைகள் - தொகுப்பு இரண்டு (1978) இவ்விரு நூல்களும் அடியொற்றியே உருவாக்கப்பட்டிருக்கிறது.

மௌனியின் மொத்த எழுத்துக்களும் 1936 முதல் 1971 வரையிலான காலப்பகுதியில் வெளியானவை. பீக்காக் வெளியீடு தவிர்த்த பிற நூல்கள், தேர்ந்தெடுத்த கதைகளைக் கொண்டிருந்தவை. இவை நான்குமே கால
வரிசைப்படி அமைக்கப்படாதவை.
எந்தெந்த காலத்தில் கடினமாக இருந்தது.

மௌனியின் படைப்பையும் வாழ்வையும் பற்றி இலக்கியச் சிந்தனை அமைப்புக்காக, திலீப்குமார் எழுதிய 'மௌனியுடன் கொஞ்ச தூரம்' (வானதி பதிப்பக வெளியீடு, 1992) என்ற நூல் இந்தச் சிக்கலிலிருந்து விடுவித்தது. 1936இல் மணிக்கொடியில் வெளியான 'ஏன்?' மௌனியின் முதல் கதை. 1971இல் கசடதபற இதழில் அச்சேறிய 'தவறு' அவரது இறுதிக் கதை என்ற தெளிவை திலீப்குமாரின் புத்தகத்தில் உள்ள பட்டியல் அளித்தது.

இந்நூலின் PDF வடிவிலான மின்நூலை பெற்றுக்கொள்ள
👇👇👇


👉 https://whatsapp.com/dl/

👉 https://t.me/MuturOnlineLibrary

👉 0771020030 / +94 71 789 1887

 #ஒன்லைன்_மூதூர்_வாசிகசாலை  #நூல்_அறிமுகம் - 470இதுதான் என் பெயர்நூலாசிரியர் - சக்கரியா தமிழில் - சுகுமாரன் வகை - நாவல் ...
30/04/2024

#ஒன்லைன்_மூதூர்_வாசிகசாலை
#நூல்_அறிமுகம் - 470

இதுதான் என் பெயர்
நூலாசிரியர் - சக்கரியா
தமிழில் - சுகுமாரன்
வகை - நாவல்
வெளியீடு - காலச்சுவடு பதிப்பகம்
ஆண்டு - 2001
பக்கம் - 60

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் உருளிக்குன்னத்தில் ஜூன் 5ஆம் தேதி பிறந்தவர். உருளிக்குன்னம், பாலா, மைசூர், பெங்களூர் ஆகிய
இடங்களில் கல்வி பயின்றார். பெங்களூர், காஞ்ஞிரப்பள்ளி கல்லூரிகளில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இருபது ஆண்டுகளுக்கும்
பத்திரிகையாளராகவும் வெளியீட்டாளராகவும் இருந்தவர். 'ஏஷியாநெட்' மலையாளத் தொலைக்காட்சியின் நிறுவன
திருவனந்தபுரத் தில் வசிக்கிறார்.

சொந்தப் படைப்புகளின் மொழிபெயர்ப்புகள் உட்பட இருபத்துமூன்று நூல்களுக்கு ஆசிரியர். சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு என எல்லா இலக்கியப் பிரிவுகளிலும் ஈடுபாட்டுடன் இயங்கி வருகிறார். அருந்ததி ராயின் 'தி எண்ட் ஆஃப் இமாஜினேஷன்' கட்டுரையை மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

இந்த நாவல் மலையாளத்தில் அறவே விவாதிக்கப்படவில்லை. எனினும் இந்த எளிய படைப்பின் காலம் இனிதான் வரவிருக்கிறதோ என்று
சிந்திக்கும்போது நான் அஞ்சுகிறேன். இன்று இந்தியாவை நெரிக்கும் நவீன கோட்சேக்களின் காலம் அதன் உச்சத்தை எட்டும்போதுதான் ஒருவேளை மலையாளிகள் இந்த நாவலை நினைவுகொள்ளக்கூடும்.
ஆனால் அதற்குள் இந்தியா முழுவதிலும் கேரளத்திலும் காந்தியைப் போன்ற ஆயிரக்கணக்கான களங்க மற்றவர்களின் ரத்தம் ஆறாக ஓடி முடிந்திருக்கும்.

மதவெறிக்கான பொறுப்பை யார் ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் வியப்பதுண்டு. மதக் கொலையாளியின் உன்மத்தத்துக்கான உயிரணு அந்தந்த தங்களுக்குள்ளேயே தான் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

இந்நூலின் PDF வடிவிலான மின்நூலை பெற்றுக்கொள்ள
👇👇👇


👉 https://whatsapp.com/dl/

👉 https://t.me/MuturOnlineLibrary

👉 0771020030 / +94 71 789 1887

 #ஒன்லைன்_மூதூர்_வாசிகசாலை  #நூல்_அறிமுகம் - 469ஞானக்கூத்தன் கவிதைகள்   தொகுப்பு - திவாகர்   வகை - கவிதைத் தொகுப்பு  வெள...
30/04/2024

#ஒன்லைன்_மூதூர்_வாசிகசாலை
#நூல்_அறிமுகம் - 469

ஞானக்கூத்தன் கவிதைகள்
தொகுப்பு - திவாகர்
வகை - கவிதைத் தொகுப்பு
வெளியீடு - காலச்சுவடு பதிப்பகம்
ஆண்டு - 2018
பக்கம் - 888

ஞானக்கூத்தனின் கூறல் முறை மேலோட்டமாகப் பார்ப்பதற்கு எளிமையாகத் தோற்றம் கொண்டாலும் மிகவும் ஆழம் மிக்கவையாக அமைந்தது. தத்துவம் என்று சொல்லப்படும் விஷயம் அவரது கவிதையில் புதிய உருவத்தை மேற்கொண்டது. அதுவரை தமிழ்க்கவிதை கண்டிராத தெருக்காட்சிகள், புதிய கவிதானுபவங்களை அவரது கவிதை வாசகருக்குத் தந்தது.

நவீனத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிக் கவிஞர்களுள் ஒருவரான ஞானக்கூத்தன், முன்னோடித்தன்மையைத் தாண்டியும் முக்கியத்துவம் கொண்ட கவிஞர்களுள் ஒருவர். 18 வயதில் தோத்திரப் பாடல்களுடன் தொடங்கிய அவரது கவிதை இயக்கம் 2016-ல் அவர் மரணமடையும் வரை 60 ஆண்டு காலம் நீடித்தது. இந்த நெடிய இலக்கியச் செயல்பாட்டின் ஆவணமாக 2018-ல் வெளியான ‘ஞானக்கூத்தன் கவிதைகள்’ நூல் திகழ்கிறது. ‘நடை’, ‘கசடதபற’ காலங்களில் எழுதிய கவிதைகளுக்காக அதிகம் அறியப்படும் ஞானக்கூத்தன், அந்தக் காலகட்டத்துக்குப் பிறகுதான் அதிகமாக எழுதியிருக்கிறார். தன் இறுதிக் காலம் வரை தொய்வின்றி எழுதியிருக்கிறார் என்பதன் சாட்சியம்தான் இந்தப் பெருந்தொகுப்பு.

நவீனத் தமிழ்க் கவிதை வாசகர்களுக்கு ஞானக்கூத்தன் என்றால், உடனடியாக அவரது பகடி, நகைச்சுவைக் கவிதைகளும் கதைசொல்லும் கவிதைகளும்தான் நினைவுக்கு வரும். இந்தப் பண்புகளெல்லாம் அவரது இறுதிக் காலம் வரை தொடர்ந்தாலும் அவரது கவிதைச் செயல்பாட்டின் பிற்பகுதியில் அழகியல் அம்சம் கொண்ட கவிதைகள் அதிகமாகக் காணப்படுகின்றன.
அவரது கவிச் செயல்பாட்டின் முற்பகுதியில் எழுதப்பட்ட ‘அழிவுப்பாதை’ போன்ற ஒருசில கவிதைகளை விட்டுவிட்டால், பிற்பகுதியில் எழுதப்பட்ட கவிதைகள்தான் செறிவும் அழகும் கூடியவையாக இருக்கின்றன. பெரும்பாலான கவிஞர்களுக்கு ஏற்படும் ‘சென்றுதேய்ந்திறுதல்’ ஞானக்கூத்தனுக்கு ஏற்படவில்லை. அப்படி ஆகாமல் அவரது கவிதையானது தொடர்ந்து பரிணாமம் அடைந்துகொண்டே இருந்திருக்கிறது.

இதனால், அவரது கவிமொழி ஒரே மாதிரி இல்லாமல் பலவகைப்பட்டதாக இருக்கிறது. இதனால், ஒட்டுமொத்தமாகப் படிக்கும்போது சலிப்பு ஏற்படுவதில்லை.

இந்நூலின் PDF வடிவிலான மின்நூலை பெற்றுக்கொள்ள
👇👇👇


👉 https://whatsapp.com/dl/

👉 https://t.me/MuturOnlineLibrary

👉 0771020030 / +94 71 789 1887

 #ஒன்லைன்_மூதூர்_வாசிகசாலை  #நூல்_அறிமுகம் - 468யார் அறிவாரோ  நூலாசிரியர் - திவாகர்   வகை - நாவல்  வெளியீடு - காலச்சுவடு...
30/04/2024

#ஒன்லைன்_மூதூர்_வாசிகசாலை
#நூல்_அறிமுகம் - 468

யார் அறிவாரோ
நூலாசிரியர் - திவாகர்
வகை - நாவல்
வெளியீடு - காலச்சுவடு பதிப்பகம்
ஆண்டு - 2017
பக்கம் - 110

'யார் அறிவாரோ' (அத்ருஷ்ட்), நேர் மொழிபெயர்ப்பில்
கொங்கணியிலிருந்து தமிழுக்கு நூல் வடிவில் வெளிவரும் முதல் படைப்பு. மூலத்திற்கு நெருக்கமான ஒரு பிரதியாக மொழிபெயர்ப்பை அமைத்திட முயன்றிருக்கிறேன். எழுத்துலகிற்கான எனது இருப்பை வெளிக்கொணர்ந்திருக்கிற இத்தருணத்தில் அதனோடு இணைந்த நினைவுகள், பயணித்து வந்த பாதைகள் சிலவற்றை இங்குப் பதிவு செய்ய விழைகிறேன்.

'அத்ருஷ்ட்' என்பதன் நேர்பொருள் 'பார்க்க முடியாதது"
என்பதாகும். அதாவது 'எதிர் காலத்தில் என்ன நடக்கும் என்பதை முன்பே அறிய முடியாது' (மஹாபளேஷ்வர் ஸைல் - தொலைபேசி உரையாடல், 09 ஆகஸ்டு 2012) என்பதே இதற்கான பொருள். காட்டில் தனிமையில் வாழும் வனப்பாதுகாவலாளி ஒருவன் தன்னை அதனையொட்டிய
மனப் போராட்டங்களுமே இக்கதையின் மையம். விளம்பும் தனிமையின் ஒழுங்கின்மையுடன் ஒவ்வாது நிற்கும் காமம், நோய்க்கூறு நிரம்பிய சமூகப் போக்கு இவையனைத்தும் கதையில் நிஜத்தில் கடந்து வந்த மனிதர்களைக் கதையிலும் கடக்க நேரிடுகிற அனுபவம் வாசிப்போருக்கு வாய்க்கும் என்பது என் அறிதல்.

முதல் என்னுள்ளிருந்த இப்படைப்பு இரண்டாவது, மூன்றாவது வாசிப்பில்
என்னுள் பயணித்துக்கொண்டிருப்பதை நானே அறிவேன். இப்பிரதியினூடாக மறையாது நெஞ்சில் நிலைத்து நிற்கிற கர்த்தாக்கள் பலருண்டு. அவர்கள் நூலாக்கத்தைச் சாத்திய மாக்கக் கரம் கொடுத்தவர்கள்.

இந்நூலின் PDF வடிவிலான மின்நூலை பெற்றுக்கொள்ள
👇👇👇


👉 https://whatsapp.com/dl/

👉 https://t.me/MuturOnlineLibrary

👉 0771020030 / +94 71 789 1887

"ஒன்லைன் மூதூர் வாசிகசாலை" குழுமத்தின் அங்கத்தவர்களை ஊக்குவிக்கும் மற்றுமொரு செயற்திட்டம் "நூறு கவிதைகளும் கவிஞர்களும்" ...
27/04/2024

"ஒன்லைன் மூதூர் வாசிகசாலை" குழுமத்தின் அங்கத்தவர்களை ஊக்குவிக்கும் மற்றுமொரு செயற்திட்டம்

"நூறு கவிதைகளும் கவிஞர்களும்"

இலங்கையில் கவிதையில் மிளிர்ந்து வரும் கலைஞர்களுக்கான ஓர் களம்.

உங்கள் கவிதையும் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்ற ஆசையா ?
இதோ உங்களுக்கான சந்தர்ப்பம்

👉 எழுத்துப்பிழைகள் இன்றி வரிக்கு 4 சொற்கள் 20 வரிகளை கொண்ட கவிதையாக இருக்க வேண்டும்.

👉 கவிதையின் தலைப்பு குழுவில் இணைந்த பின்பு உங்களுக்கு தரப்படும்.

👉 முதலில் இணைந்து தமது பெயரை பதிவு செய்பவர்களின் கவிதைகள் முதல் புத்தகத்தில் வெளிவரும்.

👉 கவிதைக்கான காலம் குழுவில் தலைப்பு இட்டு 20 நாட்கள் வரை வழங்கப்படும்.

👉 கவிதை பதிவு செய்யும் பொழுது
கவிதையின் இறுதியில் உங்கள் பெயர்,
வதிவிடம், மாவட்டம் என்பவற்றை பதிவு செய்ய வேண்டும்

குழுவில் இணைந்து கொள்ள கீழுள்ள லிங்கை தொடருங்கள்
https://chat.whatsapp.com/IzJP9rv1MGrCVxaASkzPqz

*மேலதிக தொடர்புகளிற்கு*
*+94 78 458 1407 | 0717891887*

19/04/2024

 #ஒன்லைன்_மூதூர்_வாசிகசாலை  #நூல்_அறிமுகம் - 468டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனநூலாசிரியர்- மனுஷ்ய புத்திரன்வகை- ...
19/04/2024

#ஒன்லைன்_மூதூர்_வாசிகசாலை
#நூல்_அறிமுகம் - 468

டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன
நூலாசிரியர்- மனுஷ்ய புத்திரன்
வகை- கட்டுரைகள்
வெளியீடு- உயிர்மை பதிப்பகம்
ஆண்டு- 2012
பக்கம்- 480

சமகால அரசியல் ஊழல்களுக்கு எதிராக மக்கள் புரட்சிகள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் கருப்பு ஆடுகளாய் அதில் போலிப் புரட்சியாளர்களும், போலிச் சிந்தனாவாதிகளும் கலந்திருப்பது அதன் பலனை அடையவிடாமல் தடுக்கின்றது.

நாம் ஒரு ஒடுக்குமுறையாளனை எதிர்த்துத் தெளிவாகப் போராட முடியும். ஆனால் ஒரு போலிப் புரட்சியாளனை எதிர்த்து அவ்வளவு எளிதாகப் போராட முடியாது. அவன் எல்லா சித்தாந்தங்களையும் குழப்பி விடுகிறான். எல்லாப் பாதைகளிலும் தவறான மைல் கற்களை நாட்டி விடுகிறான்.

நாம் நீதிமிக்க ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் திரும்பத் திரும்பத் தோற்கடிக்கப்படுகிறோம், காட்டிக்கொடுக்கப்படுகிறோம். இன்றைய அரசியல் தத்துவமற்ற, எதிர்ப்பு சாரமற்ற சமூக இயக்கங்களை உருவாக்குகின்றன.இந்த தலையங்கங்கள் அரசியல் ஆய்வுகள் அல்ல. மக்களின் கோபங்களையும் நிராசைகளையும் சந்தேகங்களையும் நேரடியாகவும் உணர்வுபூர்வமாகவும் பிரதிபலிப்பதே இவற்றின் நோக்கம். அரசியல் கோமாளிகளையும் அரசியல் சூதாடிகளையும் எதிர்ப்பதன் மூலம், எள்ளி நகையாடுவதன் மூலம் இவை இந்தியாவின் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தின் பல்வேறு பரிமாணங்களை உங்கள் பார்வைக்கும் பரிசீலனைக்கும் முன்வைக்கின்றன.

இந்நூலின் PDF வடிவிலான மின்நூலை பெற்றுக்கொள்ள
👇👇👇


👉 https://whatsapp.com/dl/

👉 https://t.me/MuturOnlineLibrary

👉 0771020030 / +94 71 789 1887

03/04/2024

Address

Mutur JMI
Mutur
31200

Alerts

Be the first to know and let us send you an email when Online Mutur Library posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Online Mutur Library:

Share

Category