NPP - Mutur

NPP - Mutur Welcome to National people's power Official Mutur Area page.Please Follow and Share to all

01/02/2026

மூதூர் பிரதேச சபை உறுப்பினர் ராஜிதா
சபை அமர்வில்

🚜🛣️ தோப்பூர் – பிரம்புவெளி 1Km விவசாய வீதிதோப்பூர் பிரம்புவெளி பகுதியில் அமைந்துள்ள 1 கிலோமீற்றர் விவசாய வீதி,நீர்ப்பாசன...
29/01/2026

🚜🛣️ தோப்பூர் – பிரம்புவெளி 1Km விவசாய வீதி

தோப்பூர் பிரம்புவெளி பகுதியில் அமைந்துள்ள 1 கிலோமீற்றர் விவசாய வீதி,
நீர்ப்பாசன திணைக்களத்தின் நேரடி ஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த வீதி விவசாயிகளின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதுடன்,
விவசாய உற்பத்திகளை சீரான முறையில் எடுத்துச் செல்லவும்
பிரதேச மக்களின் அன்றாட தேவைகளுக்கும் முக்கிய பங்காற்றுகிறது.

🌾🚜 விவசாய அபிவிருத்திக்கும், கிராம வளர்ச்சிக்கும் அவசியமான இந்த வீதி, மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக உள்ளது.

27/01/2026

❤️

27/01/2026
மூதூர் ஆனைச்சேனை  #அல்ஹிதாயா பாடசாலை வீதி – பாலம் மற்றும் வீதி புனரமைப்பு பணிக்காக நிதி ஒதுக்கீடுமூதூர் பிரதேசத்தின் கல்...
26/01/2026

மூதூர் ஆனைச்சேனை #அல்ஹிதாயா பாடசாலை வீதி – பாலம் மற்றும் வீதி புனரமைப்பு பணிக்காக நிதி ஒதுக்கீடு

மூதூர் பிரதேசத்தின் கல்வி மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், தேசிய மக்கள் சக்தியின் மற்றுமொரு முன்னெடுப்பாக மூதூர் ஆனைச்சேனை பாடசாலை வீதியில் உள்ள பாலம் மற்றும் வீதி புனரமைப்பு தொடர்பான நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.

இந்தப் பணிகள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொண்டுவரும் போக்குவரத்து சிரமங்களை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக மழைக்காலங்களில் பாதிக்கப்படும் பாலம் மற்றும் வீதி பகுதிகளை சீரமைத்து, பாதுகாப்பான பயண சூழலை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் மூதூர் அமைப்பாளர் தோழர் சப்றான், பிரஜா சக்தி தலைவர்கள்,உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, பணிகளின் அவசியம் மற்றும் விரைவான நிறைவேற்றம் குறித்து கலந்துரையாடினர்.

உள்ளூர் சமூகத்தின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்தப் புனரமைப்பு நடவடிக்கை, மூதூர் பிரதேசத்தின் அடிப்படை வசதிகள் மேம்பாட்டில் முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

👏✅கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் சம்பூரில் சிரமதானம்சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்குடன், “கிளீன் ஸ்ரீலங்கா” தேசி...
24/01/2026

👏✅கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் சம்பூரில் சிரமதானம்

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்குடன், “கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இன்று (24) சனிக்கிழமை சம்பூர் பிரதேசத்தில் சிரமதான நடவடிக்கை வெற்றிகரமாக இடம்பெற்றது.

சம்பூர் வைத்தியசாலை முன்பாக ஆரம்பமான இந்த சிரமதானம், சுற்றுப்புறத்தை சுத்தமாகவும் அழகாகவும் மாற்றும் நோக்கில் நடத்தப்பட்ட இந்நிகழ்வு, பிரதேச மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

“அழகான நாடு – புன்னகைக்கும் மக்கள்” என்ற தொனிப்பொருளில், கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சமூக சேவை நிகழ்வு நடை பெற்றது. மூதூர் பிரதேசத்திற்கான கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்ட அமைப்பாளர் திரு. ராம்சி அவர்களின் தலைமையில் சிரமதானம் ஒழுங்குபடுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் கிளீன் ஸ்ரீலங்கா அமைப்பாளர் திரு. ராம்சி, தேசிய மக்கள் சக்தி மூதூர் அமைப்பாளர் திரு. சப்ரான், தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள், சம்பூர் பொதுமக்கள், கடற்படையினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இத்தகைய சமூக சேவை முயற்சிகள் சுற்றுலா வளர்ச்சிக்கு மட்டுமன்றி, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் நீடித்த பயன்களை வழங்கும் என பங்கேற்பாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
#சம்பூர் #வளமானநாடு #மூதூர்

 #59 ஜின்னா நகர் – பாடசாலை திருத்தப் பணிகள் கள விஜயம்💪🔥🇱🇰இன்றைய தினம் காலை 10.00 மணியளவில், தி/மு அல்தாஜ் மகா வித்தியாலய...
22/01/2026

#59 ஜின்னா நகர் – பாடசாலை திருத்தப் பணிகள் கள விஜயம்💪🔥🇱🇰

இன்றைய தினம் காலை 10.00 மணியளவில், தி/மு அல்தாஜ் மகா வித்தியாலயத்திற்கு நேரடி கள விஜயம் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது, டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து எமது பாடசாலைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.10 இலட்சம் நிதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருத்தப் பணிகள் பார்வையிட்டு கண்காணிக்கப்பட்டன.

அத்துடன், பாடசாலை பாதுகாப்பிற்காக புதிதாக அமைக்கப்பட்ட வீதியும் ஆய்வு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பாடசாலை அதிபரை சந்தித்து, பாடசாலையின் இதர தேவைகள் மற்றும் குறைபாடுகள் குறித்து கேட்டறியப்பட்டது.

இந்த கள விஜயத்தில்,
மூதூர் தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர் தோழர் M.K.M. சப்றான்,
59 ஜின்னா நகர் பிரஜா சக்தி தலைவர் சலீம் முஹமட் சிபான்,
மேலும் எமது சக தோழர்கள் மற்றும் பிரஜா சக்தி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தி/மூ/கட்டைப்பறிச்சான் விபுலானந்தா  வித்தியாலய பாடசாலைக்குஇரண்டு மாடி கட்டிடத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது ❤️ ❤️மாகாண...
22/01/2026

தி/மூ/கட்டைப்பறிச்சான் விபுலானந்தா வித்தியாலய பாடசாலைக்கு
இரண்டு மாடி கட்டிடத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது ❤️ ❤️
மாகாணசபை நிதியின் ஊடாக

Construction of two-storied classroom building (70*25) (Ground Floor) at T/Mu/Kattaiparichan Vipulananda Vidyalayam.

மாகாண சபை நிதியின் ஊடாக, நீண்ட காலமாக நிலவி வந்த மாணவர்களின் வகுப்பறை தேவையை கருத்தில் கொண்டு, இப்பாடசாலைக்கான ஒரு மாடி கட்டிடத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்படுவதன் மூலம்,
மாணவர்கள் பாதுகாப்பான, வசதியான கற்றல் சூழலில் கல்வி பயில்வதற்கான வாய்ப்பு உருவாகுவதுடன்,
பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் மேலும் வலுப்பெறவும் உதவும்.

இந்நிதி ஒதுக்கீடு, கட்டைப்பறிச்சான் பிரதேச மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு கிடைத்த ஒரு முக்கியமான தீர்வாகும்.
இதற்காக பாடுபட்ட அனைவருக்கும், குறிப்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், கல்வித் துறையினருக்கும், பாடசாலை நிர்வாகத்திற்கும் நன்றிகள் தெரிவித்துக் கொள்ளப்படுகின்றன.

இந்த கட்டிடம் விரைவில் நிறைவேறி, மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு ஒரு உறுதுணையாக அமைய வாழ்த்துகள். 🌱

மூதூர் தள வைத்தியசாலையின் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வெளிநோயாளர் பிரிவு ஆளுநரால் திறந்து வைப்பு!மூதூர் தள வைத்தியசாலையில...
21/01/2026

மூதூர் தள வைத்தியசாலையின் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வெளிநோயாளர் பிரிவு ஆளுநரால் திறந்து வைப்பு!

மூதூர் தள வைத்தியசாலையில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வெளிநோயாளர் பிரிவு (OPD), கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர அவர்களினால் இன்று (21) புதன்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக ஒதுக்கப்பட்ட 20 மில்லியன் நிதியைக் கொண்டு இந்தப் புனர்நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மூதூர் தள வைத்தியசாலையில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த வெளிநோயாளர் பிரிவு, சிகிச்சைக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான வசதிகளைக் கொண்டிருக்கவில்லை

இதனால் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர்.

வைத்தியசாலை நிர்வாகத்தினர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, நோயாளர்களின் நலன் கருதி இந்த விசேட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நவீன வசதிகளுடன் இப்பிரிவு புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள புதிய வெளிநோயாளர் பிரிவில், சிதறி இருந்த அனைத்து சிகிச்சைப்பிரிவுகளும் ஒரே கட்டிடத் தொகுதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதன் மூலம் நோயாளர்கள் ஒரே இடத்தில் தமக்கான மருத்துவ ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும் என வைத்தியசாலைத் தரப்பினர் தெரிவித்தனர்.

மூதூர் தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம். எம். எம். அயாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தத் திறப்பு விழா நிகழ்வில், மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி. டாக்டர் என். எம். ஹஸ்ஸாலி மூதூர் பிரதேச தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் எம். கே. எம். சப்ரான் உத்தியோகத்தர்கள், தாதிகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 #மூதூர் பொது விளையாட்டு மைதான பின் வீதி மாகாண சபை நிதி ஒதுக்கீடு ஊடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது 300M ❤️
20/01/2026

#மூதூர் பொது விளையாட்டு மைதான பின் வீதி மாகாண சபை நிதி ஒதுக்கீடு ஊடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது 300M ❤️

NPP அரசாங்கத்தால் மூதூர் பஸார் பள்ளி வீதி சாத்தியமானது கபட் வீதியும் வாடிகனும்∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆இது,திருகோணமல...
20/01/2026

NPP அரசாங்கத்தால் மூதூர் பஸார் பள்ளி வீதி சாத்தியமானது கபட் வீதியும் வாடிகனும்
∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆

இது,திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் #அருண் ஹேமந்திரா,ரொஷான் அக்மீமன (NPP) ஒப்புதலுக்கு அமைவாக,

மூதூர் அமைப்பாளர் சப்றான்

NPP பிரதேச சபை உறுப்பினர்கள்,
பிரஜா சக்தி தலைவர் அஸ்மி

பிரதேச மற்றும் பிரதேச சபைகளில் NPP யில் போட்டியிட்ட தோழர்கள்,

மேலும் அப்பகுதி மக்களின் அயராத முயற்சியின் விளைவாகவே,
இவ்வளவு குறுகிய காலத்தில் கிடைத்த முக்கிய நிதி ஒதுக்கீடு என்பது குறிப்பிடத்தக்கது.

RDA நிதி ஒதுக்கீட்டில் நீண்டகாலமாக தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி

அபிவிருத்தி செய்யப்படாமல் இருந்த முக்கியமான பகுதிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது ❤️

தேசிய மக்கள் சக்தியின் மற்றுமொரு வேலை #பாட்டாளிபுரம்_நல்லூர்_பிரதான வீதி 1.200M காபட் அடுத்த வாரத்தில் இருந்து வேலை ஆரம்...
19/01/2026

தேசிய மக்கள் சக்தியின் மற்றுமொரு வேலை

#பாட்டாளிபுரம்_நல்லூர்_பிரதான வீதி
1.200M காபட்
அடுத்த வாரத்தில் இருந்து வேலை ஆரம்பம்

Address

Mutur

Alerts

Be the first to know and let us send you an email when NPP - Mutur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share