Ministry of Education, Cultural Affairs, Sports & Youth Affairs, NP

Ministry of Education, Cultural Affairs, Sports & Youth Affairs, NP Ministry of Education, Cultural Affairs, Sports & Youth Affairs, NP

தெய்வீக சுகானுபவம் - 12இன்று 08.09.2026 (செவ்வாய்க்கிழமை) பி.ப 7.15 முதல் கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலய வளாகத்தில்.....
08/09/2026

தெய்வீக சுகானுபவம் - 12

இன்று 08.09.2026 (செவ்வாய்க்கிழமை) பி.ப 7.15 முதல் கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலய வளாகத்தில்...

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.🙏🙏🙏

வடக்கு மாகாண சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர்கள்  / கலாசார உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த இடமாற்றம் – 2027  விண்ணப்பங்கள் கோ...
22/06/2026

வடக்கு மாகாண சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர்கள் / கலாசார உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த இடமாற்றம் – 2027 விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

விண்ணப்ப முடிவு திகதி - 2026.07.10

இடமாற்றத்தை எதிர்பார்க்கும் அலுவலர்களுக்கான விண்ணப்பம் (பின்னிணைப்பு I B)
https://tinyurl.com/COTransfer2027-IB
இடமாற்றம் பெற விரும்பாத சகல அலுவலர்களுக்கான விண்ணப்பம் (பின்னிணைப்பு II B)
https://tinyurl.com/COTransfer2027-IIB

16/06/2026

வடக்கு மாகாண வெசாக் உற்சவம் – 2026

வடக்கு மாகாண வெசாக் உற்சவம் – 2026வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின்...
12/06/2026

வடக்கு மாகாண வெசாக் உற்சவம் – 2026
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு நடத்திய 2026 ஆம் ஆண்டிற்கான வெசாக் உற்சவம் 02.06.2026 செவ்வாய்க் கிழமை அன்று வ/பரக்கும் மகாவித்தியாலய மைதானத்தில் வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.ம.பற்றிக் டிறஞ்சன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வடக்கு கிழக்கு பிரதம சங்கநாயக்கரும் மடுகந்த சிறிதலதா விகாராதிபதியூமான வணக்கத்திற்குரிய ஆனந்த தேரர், வடக்கு கிழக்கு உதவி சங்கநாயக்கர் அட்டமகஸ்கட கல்யான திஸ்ஸ தேரரும், உள்ளடங்கலாக வவுனியா மாவட்ட தேரர்களும், பிரதம விருந்தினர்களாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர்.எச். உபாலி சமரசிங்க அவர்களும் சிறப்புவிருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளா், திருமதி தனுஜா முருகேசன் அவர்களும் கௌரவ விருந்தினராக மாவட்ட செயலக மாவட்ட செயலாளர் திரு.பி.ஏ.சரத்சந்திரா அவர்களும் வவுனியா மாவட்ட மேலதிகச் செயலாளர், வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் இவர்களுடன் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர், 56 வது படையணியின் பிரிகேட் கொமாண்டர், வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர், திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், வவுனியா வடக்கு வலயக்கல்விப்பணிப்பாளர், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், கலைஞர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
முதலில் 4.00 மணியளவில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் தர்மபோதனைகள் இடம்பெற்றதுடன் தொடர்ந்து வெசாக் தினத்தை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட பண்பாட்டுப்பேரணி ஆரம்பமானது பௌத்த பண்பாட்டினை பிரதிபலிக்கும் பல்வேறு கலை நிகழ்வுகளுடன் ஆரம்பமானது தொடர்ந்து வ/பரக்கும் மகாவித்தியாலய மைதானத்தில் சிறப்புற வடிவமைக்கப்பட்ட வடக்கு மாகாண வெசாக் வலயம் விருந்தினர்களினால் திறந்து வைக்கப்பட்டது அதில் சுமார் இருபதிற்கு அதிகமான பாடசாலைகளினால் அமைக்கப்பட்ட வெசாக்கூடுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
தொடர்ந்து விருந்தினர்களினால் மங்கல விளக்கு ஏற்றப்பட்டு மேடைநிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளர் நி.தர்சினி அவர்களின் வரவேற்புரை, வரவேற்பு நடனம், தலைமையுரை, பிரதம விருந்தினர் உரையுடனும் 25 இற்கும் அதிகமான குழுவினரின் வெசாக் பக்திகீதங்கள், இனியநாடகங்கள் என்பன இடம்பெற்றதுடன் வெசாக்கூடு தயாரித்தல் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பணப்பரிசில்கள் மற்றும் கலைநிகழ்வில் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ்கள் என்பனவும் வழங்கிவைக்கப்பட்டன. தொடர்ந்து பொதுமக்களுக்கு ‘தன்சல’ விருந்தினர்களினால் ஆரம்பித்து வைகக்கப்பட்டது. ஏறத்தாழ 4000 பொதுமக்களுக்கு இன்நிகழ்வின் மூலம் உணவளிக்கப்பட்டது. நிறைவாக வவுனியா சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திரு.நித்தியானந்தன் அவர்களது நன்றி உரையுடன் வெசாக் கொண்டாட்டம் அதிகாலை 1.30 மணிக்கு இனிதே நிறைவுபெற்றது.

2026 பராபவ தமிழ் புதுவருடப்பிறப்பினை முன்னிட்டு மாகாணக் கல்வி அமைச்சின் நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கைவி...
15/04/2026

2026 பராபவ தமிழ் புதுவருடப்பிறப்பினை முன்னிட்டு மாகாணக் கல்வி அமைச்சின் நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கைவிஷேடம் பரிமாறும் நிகழ்வு 15.04.2026 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு அமைச்சின் செயலாளர் திரு.ம.பற்றிக் டிறஞ்சன் அவர்கள் தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
செயலாளர் திரு.ம.பற்றிக் டிறஞ்சன் அவர்களினால் உத்தியோகத்தர்களிற்கு கைவிஷேடம் வழங்கிவைக்கப்பட்டதனைத் தொடர்ந்து புதுவருட விருந்துபசாரம் நடைபெற்றது.

வட மாகாண இப்தார் நிகழ்வு – 2026வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண...
23/03/2026

வட மாகாண இப்தார் நிகழ்வு – 2026

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு நடாத்திய வடக்கு மாகாண இப்தார் நிகழ்வு 2026.03.16ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 05.00 மணிக்கு வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.ம.பற்றிக் டிறஞ்சன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் உயர்திரு. நா.வேதநாயகன், மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் கௌரவ ஆர்.எச் உபாலி சமரசிங்க அவர்களும் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் அவர்களும் கௌரவ விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திரு.பீ.ஏ சரத்சந்திர அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இவர்களுடன் சர்வமத தலைவர்கள் வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், வவுனியா பிரதேச மௌலவிகள் என பலரும் நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இப்தார் நிகழ்வின் ஆரம்பமாக பாடசாலை முன்றலில் இருந்து இஸ்லாமிய கலாசார முறைப்படி விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு கிராஅத் ஓதப்பட்டது. பண்பாட்டலுவல்கள் அலகின் உதவிப் பணிப்பாளர் திருமதி.நி.தர்சினி அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட ஜம்மியத்துல் உலாமா, தலைவர் அல்ஹாஜ் எஸ்.ஏ அப்துல் சமட் மௌலவி அவர்களின் நோன்பு ஆசியுரையுடன், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரின் தலைமையுரை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் உயர்திரு. நா.வேதநாயகன், கௌரவ பிரதியமைச்சர் ஆர்.எச்.உபாலி சமரசிங்க அவர்களதும் பிரதம விருந்தினர் உரை, வடக்கு மாகாண பிரதம செயலாளர் மற்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களது சிறப்பு விருந்தினர் உரைகள் என்பன சிறப்பு விடயங்களாக அமைந்திருந்தன.

நிகழ்வில் வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களின் வரவேற்பு நடனம், மன்னார் அல்மதீனா வித்தியாலய மாணவர்களின் றபான் நடனம், வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஹசீதா, நோன்பு திறத்தல் நிறைவுற்றதன் பின்னர், வவுனியா அல்மதீனா வித்தியாலய மாணவிகளின் கோலாட்டம், மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகளிர் மகாவித்தியாலய மாணவிகளின் களிகம்பு, ஹசீதா, றம்ழான் நடனம், வவுனியா அல்-அக்சா வித்தியாலய மாணவிகளின் ஹசீதா வவுனியா அல்-மதீனா வித்தியாலய மாணவிகளின் இஸ்லாமிய கீதங்கள் ஆகிய நிகழ்வுகள் இடம் பெற்றன. துஆப் பிரார்த்தனையுடன் இப்தார் நிகழ்வுகள் நிறைவுற்றன. வவுனியா வடக்கு கலாசார உத்தியோகத்தர் வீ.பிரதீபன் அவர்களின் நன்றியுரையுடன் இரவு 7.30 மணிக்கு இனிதே நிறைவடைந்தது.

வர்ண இரவு – 2025வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் 49வது தேசிய மட்ட விளையாட்டு விழாவில் சாதனை படைத்த வ...
09/03/2026

வர்ண இரவு – 2025

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் 49வது தேசிய மட்ட விளையாட்டு விழாவில் சாதனை படைத்த வீர, வீராங்கனைகளைக் கௌரவிக்கும் “வர்ண இரவு-2025” நிகழ்வு சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில் புதன்கிழமை 04.03.2026 அன்று பிற்பகல் 4.00 மணியளவில் கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு.நா.வேதநாயகன் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் தேசிய மட்டத்தில் சாதனை படைத்தவர்களுக்கான விருதுகளையும் பணப்பரிசில்களையும் வழங்கி கௌரவித்திருந்தார்.

விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு பா.முகுந்தன் அவர்களின் வரவேற்புரையுடனும், அதனைத் தொடர்ந்து கல்வி அமைச்சின் செயலாளர் திரு.ம.பற்றிக் டிறஞ்சன் அவர்களின் தலைமையுரையுடனும் ஆரம்பமான இந்நிகழ்வில், நடைபெற்று முடிந்த 49வது தேசிய மட்ட விளையாட்டு நிகழ்வுகளில் தடம் பதித்த வீர, வீராங்கனைகள் 95 பேருக்கும் மற்றும் அவர்களின் பயிற்றுவிப்பாளர்கள் 13 பேர் உட்பட மொத்தம் 108 பேருக்கு வெற்றிக்கேடயங்கள், சான்றிதழ்கள், பணப்பரிசில்கள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

தனிப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பெற்றவர்களுக்கு நூறாயிரம் ரூபாவும், இரண்டாமிடம் பெற்றவர்களுக்கு 60000.00 ரூபாவும் மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு 30000.00 ரூபாவும் பணப்பரிசில்களாக வழங்கப்பட்டன. குழுநிலை விளையாட்டுக்களில் முதலிடம் பெற்ற அணியின் ஒவ்வொரு வீரருக்கும் தலா 20000.00 ரூபாவும், இரண்டாமிடம் பெற்றவர்களுக்கு தலா 15000.00 ரூபாவும், மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு தலா 10000.00 ரூபாவும் வழங்கப்பட்டன. மேலும் சாதனை படைத்த வீரர்களை உருவாக்கிய பயிற்றுவிப்பாளர்களில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்ற வீரர்களை பயிற்றுவித்தவர்களுக்கு முறையே 20000.00, 15000.00, 10000.00 ரூபா பணப்பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

வர்ண இரவு நிகழ்வில் யாழ் மாவட்டச் செயலக மேலதிக மாவட்டச் செயலாளர், சாவகச்சேரி பிரதேச செயலாளர், கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர், வடக்கு மாகாண பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர், விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள், விளையாட்டுத்திணைக்கள உத்தியோகத்தர்கள், வீர வீராங்கனைகள், பயிற்றுவிப்பாளர்கள், பெற்றறோர் எனப் பலர் கலந்து சிறப்பித்திருந்தனர். நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுபெற்றது.

கேள்வி அறிவித்தல் சுத்திகரிப்புச் சேவை - 2026 / 2027கல்வி, பண்பாட்டலுவல்கள்  விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச...
27/02/2026

கேள்வி அறிவித்தல்
சுத்திகரிப்புச் சேவை - 2026 / 2027

கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு - வ.மா
விபரங்களுக்கு கீழ் இணைப்பினை சொடுக்குக.
https://tinyurl.com/tender4cleaningser

வடக்கு மாகாண சிவராத்திரி தினம் – 2026வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்ச...
26/02/2026

வடக்கு மாகாண சிவராத்திரி தினம் – 2026

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் தேவஸ்தான முகாமைத்துவ சபையோடு இணைந்து நடாத்திய வடக்கு மாகாண சிவராத்திரி தினமானது 2026.02.15ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 05.30மணிக்கு முதலாம் சாமப் பூஜைக்குரிய அபிஷேகத்துடன் ஆரம்பமாகி இரவு 7.00 மணிவரை நடைபெற்றது.

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.ம.பற்றிக் டிறஞ்சன் அவர்களது தலைமையில் மேடைநிகழ்வுகள் இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகியது. மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து தேவஸ்தானத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ ரஞ்சித கீர்த்திவாசக் குருக்களது ஆசியுரை, பண்பாட்டலுவல்கள் அலகின் உதவிப்பணிப்பாளர் திருமதி தர்சினி நிதர்ஷன் அவர்களது வரவேற்புரை, வவுனியா பரத நர்த்தன கலாலயா மாணவர்களது வரவேற்பு நடனம் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் திரு ம.பற்றிக் டிறஞ்சன் அவர்களது தலைமையுரையுடன் கலைநிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றன.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டிலும் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் தேவஸ்தான முகாமைத்துவ சபையின் ஏற்பாட்டிலும் முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய பல்வேறு கிராமங்களையும் சேர்ந்த கலைமன்றங்கள் மற்றும் கலைஞர்களது பக்திபூர்வமான கலைநிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன. முள்ளியவளை ஐயனார் நாடக கலாமன்றம், துணுக்காய் ஆரணி நர்த்தனாலய, ஒட்டுசுட்டான் மலரும் முல்லை கலாலய, அளம்பில் விரலிசை மன்றம் முள்ளியவளை நுண்கலைக்கல்லூரி, மாங்குளம் முத்தமிழ் கலாமன்றம், மாந்தை கலையருவி கலாமன்றம், ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம், ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் அறநெறிப்பாடசாலை, கல்யாண வேலவர் அறநெறிப்பாடசாலை, மல்லாவி ஆரணி நர்த்தனாலய போன்ற மன்றங்களில் இருந்து விநாயகர் ஸ்துதி, சிவவர்ணம், அக்னி லிங்கஸ்துதி, விரலிசைநாதம், குழுஇசை, கீர்த்தனை நடனம், காவடி நடனம், வில்லுப்பாட்டு திருமதி சாந்தா தர்சன் ஆசிரியரது மாணவர்களது நடன ஆற்றுகைகள் என்பனவும் சிறப்பாக மேடையை அலங்கரித்தன

சிவராத்திரி தினத்தில் கலைநிகழ்வுகளை வழங்கிய மாணவர்களுக்கும் அவற்றினை நெறியாளுகை செய்த ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்களுடன் அன்பளிப்புப் பொருள்களும் வழங்கி வைக்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் அவர்களின் நன்றியுரையுடன் அதிகாலை 5.00 மணிக்கு சிவராத்திரி தின மேடை நிகழ்வுகள் நிறைவுபெற்றன.

விளையாட்டு உத்தியோகத்தர் 11 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டனவடக்கு மாகாண சபையின் விளையாட்டு உத்தியோகத்தர் (தரம் I...
25/02/2026

விளையாட்டு உத்தியோகத்தர் 11 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன

வடக்கு மாகாண சபையின் விளையாட்டு உத்தியோகத்தர் (தரம் III) சேவைக்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 11 பேருக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று (24.02.2026) செவ்வாய்க்கிழமை பிற்பகல் கௌரவ ஆளுநர் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் விளையாட்டு உத்தியோகத்தர்கள் (தரம் III) சேவைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டதற்கு அமைவாக, தகுதியான 125 பேர் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 20 பேர் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டு, அவர்களில் தகுதி பெற்ற 11 பேருக்கே இன்றைய தினம் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர் , ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர், விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர்கள், புதிதாக நியமனம் பெற்றோர் என பலரும் கலந்துகொண்டனர்.

Address

Chemmany Road, Jaffna
Nallur
41000

Opening Hours

Monday 08:30 - 16:15
Tuesday 08:30 - 16:15
Wednesday 08:30 - 16:15
Thursday 08:30 - 16:15
Friday 08:30 - 16:15

Telephone

+94212211343

Alerts

Be the first to know and let us send you an email when Ministry of Education, Cultural Affairs, Sports & Youth Affairs, NP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ministry of Education, Cultural Affairs, Sports & Youth Affairs, NP:

Shortcuts

Share