04/06/2026
*_கிராம கழிவு முகாமைத்துவ திட்டம்_*
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அரசாங்கத்தின் Clean SRILANKA தேசிய முன்னெடுப்பின் கீழ் உள்ளூராட்சிமன்றங்களால் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களுள் ஒன்றாக "கிராம கழிவு முகாமைத்துவ திட்டம்" செயற்படுத்தப்படவிருக்கின்றது.
இம்முறை நாத்தண்டிய பிரதேச சபை வலயத்தில் இரண்டு பிரதான கிராம கழிவு முகாமைத்துவ மையங்கள் அமையப்பெற்று இருக்கின்றன.
அதனடிப்படையில் , பிரதேச சபை உறுப்பினர் Alhaj M.I.M Iqbal அவர்களின் வேண்டுதலின் பேரில் கொட்டராமுல்லை பிரதேசத்தை இலக்காகக் கொண்டு, நூலகத்தின் 🏢 பின்புறத்தில் ஒரு கிராமிய கழிவு சேகரிப்பு மையம் 🏛️ அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையம் நேற்றைய தினம் 04/06/2026 அதாவது வியாழக்கிழமை காலை 11:00 மணிக்கு உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து அங்குரார்ப்பணம் செய்து வைக்கபட்டது. மேற்படி வைபத்துக்கு நான் தாண்டிய பிரதேச சபை தலைவர் Sagara Wijesekara அவர்களும் பிரதேச சபை உறுப்பினர்களும் மற்றும் பல அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.
அத்தோடு பிரதேசத்தின் வியாபார சமூகத்தில் ஒரு பகுதியினருக்கு தெளிவூட்டும் நிகழ்வும் நடைபெற்றது.
இந்த மையம் வாரத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை திறந்திருக்கும். உங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கீழ்க்கண்ட பொருட்களை தனித்தனியாகப் பிரித்து கடமையில் இருக்கும் நபரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்:
💫 சுத்தமான பிளாஸ்டிக் / PET போத்தல்கள் (யோகர்ட் கப், ஜஸ்கிரீம் கப், ஷாம்பு போத்தல், பானப் போத்தல் போன்றவை)
💫 பொலித்தீன்
💫 அனைத்து வகையான காகிதங்கள்
💫 கண்ணாடிப் பொருட்கள் (மின்குமிழ் கண்ணாடி மற்றும் ஜன்னல் கண்ணாடி தவிர)
💫 அனைத்து வகையான உலோகங்கள்
💫 தேங்காய் ஒடுகள்
💫 பிளாஸ்டிக் போத்தல்
💫 உடைந்த செங்கற்கள்
💫 மின்சார மற்றும் மின்னணு கழிவுகள்
மேற்கண்டவற்றை தனித்தனியாகப் பிரித்து குறித்த அதிகாரியிடம் ஒப்படைக்கவும். தவறும் பட்சத்தில் பொறுப்பேற்கப்பட மாட்டாது. ஏனைய நாட்களில் பொருட்கள் வாங்கப்படமாட்டாது, அத்தோடு இந்த விடயத்தில் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்
உக்காத கழிவுகளை சாலையோரங்களில் அல்லது பொதுஇடங்களில் வீசாமல்,முறையாக வகைப்படுத்தி எங்களிடம் ஒப்படைப்பதன் மூலம் உங்கள் சுற்றுச்சூழலை சுத்தமாகவும் ஒழுங்காகவும் பராமரிக்க உதவுங்கள்.
இந்த முக்கியமான திட்டத்திற்கு அனைத்து பிரதேச மக்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
💫💫💫💫💫💫💫💫💫💫💫
*_ග්රාමීය අපද්රව්ය කළමනාකරණ ව්යාපෘතිය_*
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
"ග්රාමීය අපද්රව්ය කළමනාකරණ ව්යාපෘතිය" යනු රජයේ Clean SRILANKA ජාතික වැඩසටහන යටතේ පළාත් පාලන ආයතන විසින් ක්රියාත්මක කරනු ලබන ව්යාපෘතියකි.
මෙවර නාත්තන්ඩිය ප්රාදේශීය සභා බල ප්රදේශය තුළ ප්රධාන ගම්මාන අපද්රව්ය කළමනාකරණ මධ්යස්ථාන දෙකක් ස්ථාපිත කර ඇත.
ඒ අනුව, ප්රාදේශීය සභා මන්ත්රී අල්හාජ් එම්.අයි.එම්. ඉක්බාල් මහතාගේ ඉල්ලීම පරිදි, කොට්ටරමුල්ල ප්රදේශය ඉලක්ක කර ගනිමින් පුස්තකාලයේ පිටුපස ග්රාමීය අපද්රව්ය එකතු කිරීමේ මධ්යස්ථානයක් ස්ථාපිත කර ඇත. ඉහත උත්සවයට නික්ම යන ප්රාදේශීය සභා සභාපති සාගර විජේසේකර මහතා, ප්රාදේශීය සභා මන්ත්රීවරුන් සහ බොහෝ නිලධාරීන් සහභාගී විය.
මෙම මධ්යස්ථානය ඊයේ, 2026/06/04 වන දින එනම් බ්රහස්පතින්දා පෙ.ව. 11:00 ට නිල වශයෙන් විවෘත කර විවෘත කරන ලදී.
මෙම මධ්යස්ථානය සෑම සිකුරාදා දිනකම පෙ.ව. 9:00 සිට ප.ව. 4:00 දක්වා විවෘතව පවතී. පහත සඳහන් අයිතම ඔබගේ නිවෙස්වලින් වෙන් කර රාජකාරියේ නියුතු පුද්ගලයාට භාර දෙන ලෙස අපි ඔබෙන් ඉල්ලා සිටිමු:
💫 පිරිසිදු ප්ලාස්ටික් / PET බෝතල් (යෝගට් කෝප්ප, යුෂ ක්රීම් කෝප්ප, ෂැම්පු බෝතල්, බීම බෝතල් ආදිය)
💫 පොලිතින්
💫 සියලු වර්ගවල කඩදාසි
💫 සියලුම ලෝහ වර්ග
💫 පොල් කටු
💫 ප්ලාස්ටික් බෝතල්
💫 කැඩුණු ගඩොල්
💫 විදුලි හා ඉලෙක්ට්රොනික අපද්රව්ය
ඉහත අයිතම වෙන වෙනම වෙන් කර අදාළ අධිකාරියට භාර දෙන්න. කිසියම් වැරැද්දක් සිදුවුවහොත් කිසිදු වගකීමක් නොගනු ඇත. වෙනත් දිනවල භාණ්ඩ මිලදී නොගන්නා අතර, මේ සම්බන්ධයෙන් ඉතා වගකීමෙන් කටයුතු කරන ලෙස ඔබෙන් ඉල්ලා සිටී.
ඔබේ අපද්රව්ය පාර අයිනේ හෝ පොදු ස්ථානවල විසි කිරීම වෙනුවට නිසි ලෙස වර්ග කර අපට භාර දීමෙන් ඔබේ පරිසරය පිරිසිදුව හා පිළිවෙලට තබා ගැනීමට උදව් වන්න.
ඊට අමතරව, ප්රදේශයේ ව්යාපාරික ප්රජාවේ කොටසක් සඳහා දැනුවත් කිරීමේ උත්සවයක් පවත්වන ලදී.
වර්ග නොකළ අපද්රව්ය මාර්ග දෙපස හෝ පොදු ස්ථානවල විසි නොකරන්න, නමුත් නිසි ලෙස බැහැර කරන්න.
මෙම වැදගත් ව්යාපෘතියට ඔවුන්ගේ පූර්ණ සහයෝගය ලබා දෙන ලෙස අපි සියලුම කලාපවල ජනතාවගෙන් කාරුණිකව ඉල්ලා සිටිමු.
💫💫💫💫💫💫💫💫💫💫💫