Divisional Secretariat-Navithanveli

Divisional Secretariat-Navithanveli Official Page of Navithanveli Divisional Secretariat பிரதேச செயலகம் - நாவிதன்வௌி

▶ NAITA நிறுவனத்தின் அனுசரணையுடன் விதாதா வள நிலைய மூலமாக நடத்தப்பட்ட நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட இளைஞர் யு...
21/08/2026

▶ NAITA நிறுவனத்தின் அனுசரணையுடன் விதாதா வள நிலைய மூலமாக நடத்தப்பட்ட நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான உதவித் தாதியர் பயிற்சி நெறியின் முதலாம் கட்ட கற்க்கையினை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் தலைமையில் 2026 ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதியன்று நாவிதன்வெளி கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு அதிதிகளாக நாவிதன்வெளி பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் O.G.K. குசுமிந்த, காரைதீவு பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திரு. பே. பிரணவரூபன், NAITA நிறுவன மாவட்ட முகாமையாளர் திரு. M. மோகன் அபேசுந்தர, மதிப்பீட்டாளர்களான திரு. N. பயோஜன், திரு. K. செல்வபிரகாஸ், ஓய்வு பெற்ற தாதி உத்தியோகத்தர் A. M. சகாப்தீன் ஆகியோரும் மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலக திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் I. சுல்பிகா, நாவிதன்வெளி விதாதா அபிவிருத்தி உத்தியோகத்தர் M. N. M. உஸாமா, விதாதா வெளிக்கள இணைப்பாளர் திரு. K. நவநீதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

▶ கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை அலுவலகத்தின் நிதியுதவியின் ஊடாக நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் பொருளாதார வசதி குற...
20/08/2026

▶ கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை அலுவலகத்தின் நிதியுதவியின் ஊடாக நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் பொருளாதார வசதி குறைந்த குடும்பங்களை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட சிறுவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் தலைமையில் 2026 ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதியன்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. நாவிதன்வெளி பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி. D. யாசுகி அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நாவிதன்வெளி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. சீ. நிருபா, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. திலகராணி கிருபைராஜா, நிருவாக உத்தியோகத்தர் திரு. O.G.K. குசுமிந்த ஆகியோருடன் சிறுவர் நன்னடத்தை அலுவலகத்தின் கல்முனை நிலைய பொறுப்பதிகாரி திரு. T. மதியழகன், அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. S. B. சத்தியசீலன் அவர்களும் கலந்து கொண்டு சிறுவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்தனர்.

▶ நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் (Department of Probation and Child Care Services)  முன்ன...
20/08/2026

▶ நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் (Department of Probation and Child Care Services) முன்னெடுக்கப்படும் “கப்பகறு டெகுறு” நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பொருளாதார வசதி குறைந்த குடும்பங்களை சேர்ந்த சிறுவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. இதற்கான காசோலைகள் பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களினால் 2026 ஆகஸ்ட் 05ஆம் திகதியன்று வழங்கி வைக்கப்பட்டது. நாவிதன்வெளி பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி. D. யாசுகி அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறுவர் பெண்கள் அபிவிருத்தி பிரிவின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் S. சுதர்சினி அவர்களும் கலந்து கொண்டார்.

காணி ஆவணம் அற்ற மக்களுக்கு தமது காணிகளுக்கான காணி ஆவணம் வழங்கி வைக்கப்பட்டது. நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சாள...
20/08/2026

காணி ஆவணம் அற்ற மக்களுக்கு தமது காணிகளுக்கான காணி ஆவணம் வழங்கி வைக்கப்பட்டது.
நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சாளம்பைக்கேணி 01, 05 சொறிக்கல்முனை 03, மத்தியமுகாம் 06 மற்றும் அன்னமலை 02 ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த காணியற்ற பொதுமக்களுக்கு, 2008/04 சுற்றுநிருபத்தின் அடிப்படையில் உத்தரவுப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நாவெளி கலாசார மண்டபத்தில் 2026.08.19ஆம் திகதி நடைபெற்றது.

நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின்
தலைமையில்
நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மேலதிக அரசாங்க அதிபர் திரு. S. ஜெகராஜன் அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கான காணி அனுமதிப் பத்திரங்களை வழங்கி வைத்தார்.

அத்துடன் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி S. நிருபா, திட்டமிடல் பணிப்பாளர் திருமதி T. கிருபைராஜா,நிருவாக உத்தியோகத்தர் OGK. குசுமிந்த, சமுர்த்தி தலைமையாகமுகாமையாளர் திரு. S. சிவம், குடியேற்ற உத்தியோகத்தர் NMMA. சுஜான், காணி வெளிக்கள போதானாசிரியர் திரு. .. அன்பழகன், கிராம உத்தியோகத்தர்கள், மற்றும் காணிப் பிரிவு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் 75 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உத்தரவுப் பத்திரங்களைப் பெற்றுக்கொண்டனர் என்பது சிறப்பம்சமாகும்

பிரஜா சக்தி வறுமை ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ரூபா.3,300,000.00 நிதி ஒதுக்கீட்டில் அன்னமலை-01, அன்னமலை-02 மற்று...
19/08/2026

பிரஜா சக்தி வறுமை ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ரூபா.3,300,000.00 நிதி ஒதுக்கீட்டில் அன்னமலை-01, அன்னமலை-02 மற்றும் நாவிதன்வெளி-01 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இயங்கும் மீனவர் சங்கங்களுக்கு Pen Culture நன்னீர் மீன் வளர்ப்புத் திட்டத்தின் ஒரு அங்கமாக அன்னமலை-01, அன்னமலை-02 கிராமங்களுக்கு குடியிருப்புமுனை கிராமத்தின் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள Pen Culture இல் 5000 நன்னீர் மீன்குஞ்சுகளை இடும் நிகழ்வானது 19.08.2026ஆம் திகதியாகிய இன்று நண்பகல் 12.00 மணியளவில் பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. எஸ்.ஜெகராஜன் அவர்களும் சிறப்பு அதிதிகளாக தேசிய மக்கள் சக்தியின் நாவிதன்வெளி பிரதேச இணைப்பாளர் திரு.ஆர்எ.எஸ். சந்தன திசாநாயக்க, பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. எஸ்.நிருபா, கணக்காளர் திரு. கே.றிஸ்வி யஹ்ஸர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. திலகராணி கிருபைராஜா மற்றும் இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் திரு. எஸ்.ரவிக்குமார் அவர்களும் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் இரண்டு கிராமங்களின் பிரஜா சக்தியின் தலைவர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் இவ்விரு கிராமங்களின் மீனவர் சங்க உறுப்பினர்கள் போன்றோரும் கலந்து கொண்டனர்.

▶ மாகாண சமூக சேவை திணைக்களத்தின் PSDG வேலைத்திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெண் தலைமைத்துவ, ...
11/08/2026

▶ மாகாண சமூக சேவை திணைக்களத்தின் PSDG வேலைத்திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெண் தலைமைத்துவ, சிறப்பு தேவையுடையோர் மற்றும் முதியோர் உறுப்பினர்களை கொண்ட தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கான வீடு மற்றும் மலசல கூடம் திருத்துவதற்க்கான நிதியுதவிக்கான காசோலைகள் பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களினால் 2026 ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதியன்று வழங்கி வைக்கப்பட்டது. நாவிதன்வெளி பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் திரு. C. குணரெட்ணம் அவர்களும் கிராம உத்தியோகத்தர் மற்றும் விடய உத்தியோகத்தர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

📍 அத்தம - தேசிய தூய்மை தின நிகழ்ச்சி"ஒற்றுமையாக ஒன்றிணைவோம் - கிளீன் ஸ்ரீலங்காவை கட்டியெழுப்புவோம்" 🇱🇰 📍අත්තම - ජාතික පව...
07/08/2026

📍 அத்தம - தேசிய தூய்மை தின நிகழ்ச்சி
"ஒற்றுமையாக ஒன்றிணைவோம் - கிளீன் ஸ்ரீலங்காவை கட்டியெழுப்புவோம்" 🇱🇰
📍අත්තම - ජාතික පවිත්‍රතා දින වැඩසටහන
“එකමුතුව එක්වෙමු - පිවිතුරු ශ්‍රී ලංකාවක් ගොඩනගමු!” 🇱🇰
#අත්තම #அத்தம

📢”அத்தம” தேசிய தூய்மை தினம் | சிரமதான சமூக வலைத்தள விளம்பரம் 🧹✨📢”අත්තම”  ජාතික පිරිසිදු කිරීමේ දිනය | ශ්‍රමදාන සමාජ මාධ්...
06/08/2026

📢”அத்தம” தேசிய தூய்மை தினம் | சிரமதான சமூக வலைத்தள விளம்பரம் 🧹✨

📢”අත්තම” ජාතික පිරිසිදු කිරීමේ දිනය | ශ්‍රමදාන සමාජ මාධ්‍ය ප්‍රචාරණය 🧹✨

Address

Navithanveli

Opening Hours

Monday 08:30 - 16:15
Tuesday 08:30 - 16:15
Wednesday 08:30 - 16:15
Thursday 08:30 - 16:15
Friday 08:30 - 16:15

Telephone

+94672223256

Alerts

Be the first to know and let us send you an email when Divisional Secretariat-Navithanveli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Divisional Secretariat-Navithanveli:

Shortcuts

Share