Al Bashayir Sri Lanka

Al Bashayir Sri Lanka A non-profit organization that caters to the needs of the underprivileged and the poor without caste

மூன்று சகோதர உறவுகளின் உதவியுடன் 25 ஏழைக் குடும்பங்களுக்கு சுமார் 70 பகல் உணவுப் பார்சல்கள் கடந்த தினங்களில் வழங்கி வைக்...
21/08/2026

மூன்று சகோதர உறவுகளின் உதவியுடன் 25 ஏழைக் குடும்பங்களுக்கு சுமார் 70 பகல் உணவுப் பார்சல்கள் கடந்த தினங்களில் வழங்கி வைக்கப் பட்டன.

21-08-2026-வெள்ளி

எம்மைத் தொடர்பு கொண்ட சகோதர உறவுகள் தாங்கள் வைத்த நிய்யத் ஒன்றிற்காக தேவையுடைய ஏழைக் குடும்பங்களுக்கு பகல் உணவுப் பார்சல்களை வழங்கி வைக்குமாறு எம்மிடம் வேண்டிக் கொண்டதற்கினங்க,

குறித்த ஏழைக் குடும்பங்களின் வீடுகளுக்குச் சென்று பகல் உணவுப் பார்சல்களை வழங்கி வைத்தோம்.

வல்ல அல்லாஹ் இதற்காக உதவிய அன்புச் சகோதரர்களின் பொருளாதாரத்தில் மென்மேலும் பரக்கத் செய்ய வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.

ஆமீன்...

சமூக சேவைப் பிரிவு
அல் பbஷாயிர் அமைப்பு
நிந்தவூர்(EP)இலங்கை

20/08/2026
தேவையுடைய அல்குர்ஆன் மனனக் கலாபீடம் ஒன்றிற்கு இன்றைய தினம் போட்டோ கொப்பி மெஷின் ஒன்று அன்பளிப்பாக வழங்கி வைக்கப் பட்டது....
19/08/2026

தேவையுடைய அல்குர்ஆன் மனனக் கலாபீடம் ஒன்றிற்கு இன்றைய தினம் போட்டோ கொப்பி மெஷின் ஒன்று அன்பளிப்பாக வழங்கி வைக்கப் பட்டது.

19-08-2026-புதன் கிழமை

நன்கொடையாளி ஒருவர் தான் நிலையான தர்மத்தின் பங்குதாரியாக வேண்டும் எனவும்,தகுதியான இடத்திற்கு தமது ஸதகா ஜாரியாவினை வழங்குமாறு எம்மிடம் வேண்டிக் கொண்டதற்கினங்க,

இன்றைய தினம் உரிய மத்ரசாவிற்கு போட்டோ கொப்பி மெஷின் ஒன்றினை நன்கொடையாக வழங்கி வைத்தோம்.

வல்ல அல்லாஹ் இதற்காக உதவிய அன்புச் சகோதரரிற்கு நோயற்ற வாழ்வினையும், குறைவற்ற செல்வத்தினையும் வழங்க வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.

ஆமீன்...

இது போன்று தகுதியான இடங்களுக்கு தங்களது நிலையான தர்மத்தினை வழங்கிட எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்:

0769265457
0752766730
0756797299

சமூக சேவைப் பிரிவு
அல் பbஷாயிர் அமைப்பு
நிந்தவூர்(EP)இலங்கை

AL உயர்தரத்தில் கல்வி கற்கும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவி ஒருவருக்கு இரண்டு வருடங்களாக மாதம் தோரும் 5000/= ரூபாய் நிதிப் ப...
18/08/2026

AL உயர்தரத்தில் கல்வி கற்கும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவி ஒருவருக்கு இரண்டு வருடங்களாக மாதம் தோரும் 5000/= ரூபாய் நிதிப் பங்களிப்பினை வழங்கி வைத்தோம்.

இத்தோடு இரண்டு வருடங்கள் பூர்த்தி
ஸதகா ஜாரியா அமல் நிறைவேற்றப் பட்டது.

18-08-2026-செவ்வாய்

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் எம்மைத் தொடர்பு கொண்ட ஏழை மாணவி, தாம் உயர்தரத்தில் கலைப் பிரிவில் கற்க ஆர்வமுள்ள நிலையில்,

தமது குடும்ப வறுமையின் காரணமாக தமது கல்வியினைத் தொடர முடியாமல் சிரமப் பட்டுக் கொன்டிரிப்பதாகவும்,

அதன் காரணமாக எமது அமைப்பினூடாக உயர்தரக் கல்வி முடியும் வரை தமக்கு உதவுமாறு வேண்டிக் கொண்டதற்கினங்க,

நாம் ஒவ்வொருவரும் மாதமும் ஒரு குடும்பத் தாய் ஒருவரின் உதவியுடன் இந் நன்கொடையினை வழங்கி வைத்தோம்.

இதற்காக பெரும் மனம் கொண்டு உதவிய அன்புத் தாயாருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும், அக்குடும்பத்தில் உள்ள பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காக துஆச் செய்கின்றோம்.

ஆமீன்

இது போன்று வறுமையின் காரணமாக கல்வியினைத் தொடர முடியாமல் சிரமப் படும் மாணவ, மாணவிகளை பொறுப்பேற்று உதவக் கூடிய நல் உள்ளங்கள் எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்.

0752766730
0769265457
0756797299

சமூக சேவைப் பிரிவு
அல் பbஷாயிர் அமைப்பு
நிந்தவூர்(EP)இலங்கை

இன்றைய தினம் தேவையுடைய 10 ஏழைக் குடும்பங்களுக்கு சுமார் 35 பகல் உணவுப் பார்சல்கள் வழங்கி வைக்கப் பட்டது.14-08-2026-வெள்ள...
14/08/2026

இன்றைய தினம் தேவையுடைய 10 ஏழைக் குடும்பங்களுக்கு சுமார் 35 பகல் உணவுப் பார்சல்கள் வழங்கி வைக்கப் பட்டது.

14-08-2026-வெள்ளி

எம்மைத் தொடர்பு கொண்ட சகோதரர்கள் இருவர் தாம் வைத்த நிய்யத் ஒன்றிற்காக பகல் உணவுப் பார்சல்களை எமது அமைப்பிடம் வழங்கி வைப்பதாகவும்,

அதனை தகுதியான ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கி வைக்குமாறு எம்மிடம் வேண்டிக் கொண்டதற்கினங்க,

இன்றைய தினம் உரிய ஏழைக் குடும்பங்களின் வீடுகளுக்குச் சென்று வழங்கி வைத்தோம்.

வல்ல அல்லாஹ் இதற்காக உதவிய அன்புச் சகோதரரிற்கு நோயற்ற வாழ்வினையும், குறைவற்ற செல்வத்தினையும், வழங்க வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.

ஆமீன்...

சமூக சேவைப் பிரிவு
அல் பbஷாயிர் அமைப்பு
நிந்தவூர்(EP)இலங்கை

அரபுக் கல்லூரி ஒன்றில் இறுதி வகுப்பில் கல்வி கற்கும் வறுமை நிலையில் உள்ள மாணவர் ஒருவரின் ஜுலை மாதக் கட்டணம் 10000/= ரூபா...
12/08/2026

அரபுக் கல்லூரி ஒன்றில் இறுதி வகுப்பில் கல்வி கற்கும் வறுமை நிலையில் உள்ள மாணவர் ஒருவரின் ஜுலை மாதக் கட்டணம் 10000/= ரூபாய் இன்றைய தினம் செலுத்தப் பட்டது.

12-08-2026-புதன் கிழமை

எம்மைத் தொடர்பு கொண்ட மாணவர் ஒருவர் தாம் மத்ரசாவில் இறுதி வகுப்பில் கல்வி கற்றுக் கொன்டிரிப்பதாகவும்,

இச் சூழ்நிலையில் தனது தந்தை நிரந்தர சுகயீனம் காரணமாக தமது குடும்பம் பொருளாதார ரீதியாக பாதிக்கப் பட்டுள்ள நிலையில்,தமது மத்ரசா நிலுவையினை இன்னும் 07 மாதத்திற்கு செலுத்தும் பட்சத்தில் தாம் பூர்த்தியான ஆலிம் ஆக முடியும் எனவும்,

இதற்காக தமது மாதாந்த கட்டனத்தினைப் பொறுப்பேற்று செலுத்துவதற்கு உதவுமாறு எம்மிடம் வேண்டிக் கொண்டதற்கினங்க,
இன்றைய தினம் குறித்த மாணவரின் மாதாந்த பணம் செலுத்தப் பட்டது.

இதற்காக உதவிய அன்புச் சகோதரர்களுக்கு வல்ல அல்லாஹ் நோயற்ற வாழ்வினையும் குறைவற்ற செல்வத்தினையும் வழங்க வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.

ஆமீன்...

இது போன்று குடும்ப வறுமை காரணமாக மத்ரசா கல்வியினைத் தொடர முடியாமல் சுமார் 03 மாணவர்கள் சிரமப் படுவதால்,

இம் மாணவர்களைப் பொறுப்பேற்று, ஆலிமாக்க அல்லது ஹாபிழாக்க நிய்யத் உள்ளவர்கள் உடன் எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்.

0769265457
0752766730
0756797299

கற்பவனாக இரு!
கற்றுக் கொடுப்பவனாக இரு!
கற்பவனுக்கு உதவுவனாக இரு!
நான்காமவனாக இருந்து விடாதே!
-அலி ரழி-

சமூக சேவைப் பிரிவு
அல் பbஷாயிர் அமைப்பு
நிந்தவூர்(EP)இலங்கை

தாய் தந்தையின் அரவனைப்பின்றி வாழும் ஓர் ஏழைக் குடும்பத்திற்கு இன்றைய தினம் புதிய மின்சார் இனைப்பு வசதி வழங்கி வைக்கப் பட...
11/08/2026

தாய் தந்தையின் அரவனைப்பின்றி வாழும் ஓர் ஏழைக் குடும்பத்திற்கு இன்றைய தினம் புதிய மின்சார் இனைப்பு வசதி வழங்கி வைக்கப் பட்டது.

மின்சார இனைப்புத் திட்டம்- 21
ஸதகா ஜாரியா அமல் நிறைவேற்றப் பட்டது

11-08-2026-செவ்வாய்

மேற்படி எம்மைத் தொடர்பு கொண்ட ஓர் ஏழைக் குடும்பமானது,தாய் தந்தையின் அரவனைப்பின்றி உம்மம்மாவின் அரவனைப்பில் வாழக் கூடிய நிலையில்,

தமது புதிய வீட்டிற்கு மின்சார வசதி இல்லாமல் இருப்பதாகவும்,அதனை எமது அமைப்பினூடாக பெற்றுத் தருமாறு எம்மிடம் வேண்டிக் கொண்டதற்கினங்க,

இன்றைய தினம் உரிய ஏழைக் குடும்பத்திற்கு புதிய மின்சார இனைப்புத் திட்டத்தினை வழங்கி வைத்தோம்.

எந்த நோக்கத்திற்காக ஸதகா ஜாரியா உதவியினை தந்துதவினார்களோ,
அந்த நோக்கத்தினை வல்ல அல்லாஹ் நிறைவேற்றி வைப்பதோடு, இதற்காக உதவிய அன்புச் சகோதரறிற்கு வல்ல அல்லாஹ் உயர்ந்த ஜன்னத்துல் பிர்தெளஸினை வழங்க வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.

ஆமீன்...

சமூக சேவைப் பிரிவு
அல் பbஷாயிர் அமைப்பு
நிந்தவூர்(EP)இலங்கை

தேவையுடைய பள்ளிவாசல் ஒன்றிற்கு புதிய குடிநீர் மோட்டர் ஒன்று ஸதகா ஜாரியாவாக இன்றைய தினம் வழங்கி வைக்கப் பட்டது.05-08-2026...
05/08/2026

தேவையுடைய பள்ளிவாசல் ஒன்றிற்கு புதிய குடிநீர் மோட்டர் ஒன்று ஸதகா ஜாரியாவாக இன்றைய தினம் வழங்கி வைக்கப் பட்டது.

05-08-2026-புதன் கிழமை

மேற்படி எம்மைத் தொடர்பு கொண்ட பள்ளிவாசல் நிருவாக சபையினர், தமது பள்ளிவாசலில் மிக நீண்ட காலமாக இயங்கி வந்த குடிநீர் மோட்டரானது,

தற்போது இயக்க நிலையில் இல்லாமல் உள்ளதாகவும்,அதன் காரனமாக பள்ளிவாசலின் நாளாந்த வுழு செய்யும் நடவடிக்கைகள் ஸ்தம்பித்தம் அடைந்துள்ள நிலையில்,

புதிய குடிநீர் மோட்டர் ஒன்றினை எமது அமைப்பினூடாக பெற்றுத் தருமாறு எம்மிடம் வேண்டிக் கொண்டதற்கினங்க,இன்றைய தினம் புதிய மோட்டர் ஒன்றினை ஸதகா ஜாரியாவாக வழங்கி வைத்தோம்.

வல்ல அல்லாஹ் இதற்காக உதவிய அன்புச் சகோதரரிற்கு நோயற்ற வாழ்வினையும், குறைவற்ற செல்வத்தினையும், வழங்க வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.

ஆமீன்...

சமூக சேவைப் பிரிவு
அல் பbஷாயிர் அமைப்பு
நிந்தவூர்(EP)இலங்கை

பள்ளிவாசல் ஒன்றிற்கு அவசரமாக குடிநீர் மோட்டர் ஒன்று தேவை!வபாத்தான தங்களது தாய்,தந்தை உறவுகளின் பெயரால் ஸதகா ஜாரியாவாக தந...
30/07/2026

பள்ளிவாசல் ஒன்றிற்கு அவசரமாக குடிநீர் மோட்டர் ஒன்று தேவை!

வபாத்தான தங்களது தாய்,தந்தை உறவுகளின் பெயரால் ஸதகா ஜாரியாவாக தந்துதவுங்கள். Plz Share... அதிகம் பகிருங்கள்
_____________________________________________

30-07-2026-வியாழன்

மேற்படி குறித்த பள்ளிவாசலானது மிகவும் கஸ்டப் பிரதேசத்தில் அமைந்துள்ள நிலையில்,

கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக இயங்கி வந்த தன்னீர் மோட்டரானது, கடந்த ஒரு வார காலமாக குறித்த பள்ளிவாசலில் பழுதடைந்து,இயக்க நிலையில் இல்லாமல் உள்ளது.

இதன் காரணமாக பள்ளிவாசலிற்கு தொழுகைக்காக வரும் நபர்கள் வுழு செய்ய முடியாமல் பெரும் சிரமத்தினை எதிர் நோக்கிக் கொண்டிரிக்கின்றனர்.

நாம் வபாத்தானாலும் எமது கப்றுடைய வாழ்வினை பிரகாசமாக்கி வைக்கும் நிரந்தரமான அமல்

எனவே அல்லாஹ்வுடைய இல்லத்தின் நிரந்தர பயன்பாட்டிற்கு, தங்களது மேலான பங்களிப்பினை தந்துதவுங்கள்.

√புதிய மோட்டர் ஒன்றின் விலை-
57000/=ரூபாய்

இதற்கான Quotation இத்தோடு இனைக்கப் பட்டுள்ளது.

மேலதிக தொடர்புகளுக்கு:
0769265457
0752766730
0756797299(வட்சப்)

சமூக சேவைப் பிரிவு
அல் பbஷாயிர் அமைப்பு
நிந்தவூர்(EP)இலங்கை

வபாத்தான தனது மனைவியின் பெயரால் ஸதகா ஜாரியாவாக நிந்தவூர் ஹக் அல்குர்ஆன் மனனக் கலாபீடத்திற்கு புதிய மின்விசிறியும் மற்றும...
24/07/2026

வபாத்தான தனது மனைவியின் பெயரால் ஸதகா ஜாரியாவாக நிந்தவூர் ஹக் அல்குர்ஆன் மனனக் கலாபீடத்திற்கு புதிய மின்விசிறியும் மற்றுமோர் ஏழைக் குடும்பமொன்றிற்கு புதிய குடிநீர் இனைப்பு வசதியும் வழங்கி வைக்கப் பட்டது.
__________________________________________

ஒரு தாய்க்காக இரண்டு ஸதகா ஜாரியா அமல் நிறைவேற்றப் பட்டது.

24-07-2026-வெள்ளி

எம்மைத் தொடர்பு கொண்ட சகோதரர் ஒருவர் 22-07-2026ம் திகதி தனது அன்பு மனைவி வபாத்தாகி 01வருடம் பூர்தியடைந்த நிலையில்,

தனது மனைவிக்கு பிராத்திப்பதற்கு ஸதகா ஜாரியா அமல் ஒன்றினை நிறைவேற்ற வேண்டும் எனவும்,அதனை நிறைவேற்றுவதற்கு தகுதியான இடம் ஒன்றினை அடையாளப் படுத்துமாறு எம்மிடம் வேண்டிக் கொண்டதற்கினங்க,

இன்றைய தினம் அல்குர்ஆன் மனனக் கலாபீடம் ஒன்றிற்கு ஸதகா ஜாரியாவாக புதிய மின்விசிறி ஒன்றையும், தகுதியான ஏழைக் குடும்பமொன்றிற்கு புதிய குடிநீர் இனைப்பு வசதியினையும் ஏற்படுத்திக் கொடுத்தோம்.

வல்ல அல்லாஹ் வபாத்தான இச் சகோதரியின் கப்றுடைய வாழ்வினை ஈடேற்றமாக்கி வைக்க வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.

ஆமீன்...

சமூக சேவைப் பிரிவு
அல் பbஷாயிர் அமைப்பு
நிந்தவூர்(EP)இலங்கை

Address

Theatter Road
Nintavur
32340

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Bashayir Sri Lanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category