07/12/2025
OCC12 Societyன் ஏற்பாட்டில் Gafoor Moulavi Legacy Pathன் அனுசரணையில் டிட்வா புயலினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள், கால்நடைகள், இயந்திரங்களது சேத விபரங்களை வேளாண்மை திணைக்களத்தினால் இணைய வழி மூலம் கோரப்பட்டிருந்த தகவல்களை இலவசமாக பதிவு செய்து சமர்ப்பிக்கும் நிகழ்வு மிகச் சிறப்பாக, நேர்த்தியாக இன்று நடைபெற்று முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
சுமார் 400 அளவிளான விவசாயிகள் இன, மத வேறுபாடின்றி கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு மிகத் திருப்திகரமாக அனைத்து சேதாரங்களது தகவல்களும் விவசாயிகளது சார்பாக எம்மால் பதிவு செய்துகொடுக்கப்பட்டதனை இங்கு உறுதிசெய்துகொள்கிறோம். பல விவசாயிகள் எம் சேவையில் திருப்திகரமாக சென்றதனையும் அவதானிக்க முடிந்தது.
இந் நிகழ்வை சிறப்பாக நடாத்தி முடிக்க உதவிய OCC'12 Society உறுப்பினர்களுக்கும், நிகழ்வினை நாடத்த இடம் தந்து உதவிய ஓட்டமாவடி ஜும்மா பள்ளிவாயல் நிர்வாகத்தினருக்கும், தளபாட வசதிகள் செய்து தந்த Siraj Excelent Collegeற்கும், ஆலோசனைகள் வழங்கிய Gafoor Moulavi Legacy Pathற்கும் மனமார்ந்த நன்றிகள்.
விவசாயிகள் இன்னும் விழிப்புணர்வுகள் தேவையுடைவர்களாக இருப்பதனை உணர முடிந்தது. ஆகவே இனிவரும் காலங்களில் OCC'12 Society விவசாயிகளோடு இணைந்து செயற்படும் பல செயற்திட்டங்களை மேற்கொள்ளும் என்கிற நற்செய்தியையும் பதிவு செய்துகொள்கிறது.
இன்னும் சேத விபரங்களை பதிவு செய்யாத விவசாயிகள் கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொண்டு உங்கள் சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.
சுதைஸ் அஹமட் - +94 77 043 3697
முவப்பாக் - +94 76 008 6864
தகவல் :
தலைவர்
OCC'12 Society