Ministry of Education, Sri Lanka

Ministry of Education, Sri Lanka Welcome to the official page of the Ministry of Education (MOE) Sri Lanka! Visit us at www.moe.gov.lk or email us at [email protected]
(1)

දිවයිනේ ජාතික හා පළාත් පාසල්වල සේවයේ නියුතුශ්‍රී ලංකා ගුරු සේවයේ නිලධාරීන් සඳහා වන III කාර්යක්ෂමතා කඩඉම් විභාගය - 202620...
25/08/2026

දිවයිනේ ජාතික හා පළාත් පාසල්වල සේවයේ නියුතු
ශ්‍රී ලංකා ගුරු සේවයේ නිලධාරීන් සඳහා වන III කාර්යක්ෂමතා කඩඉම් විභාගය - 2026

2026 දෙසැම්බර් මස පැවැත්වීමට නියමිත දිවයිනේ ජාතික හා පළාත් පාසල්වල සේවයේ නියුතු ශ්‍රී ලංකා ගුරු සේවයේ නිලධාරීන් සඳහා වන III කාර්යක්ෂමතා කඩඉම් විභාගය සඳහා වන ගැසට් නිවේදනය 2026.08.21 දින පළ කෙරිණි.

මෙම කාර්යක්ෂමතා කඩඉම් විභාගය සඳහා 2026.08.25 දින සිට 2026.09.14 දින දක්වා අයදුම්පත් , ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුවේ නිල වෙබ් අඩවිය වෙත පිවිස මාර්ගගත ක්‍රමය ඔස්සේ යොමු කළ හැකිය.

ශ්‍රී ලංකා ගුරු සේවයේ සහ පළාත් රාජ්‍ය සේවාවල ගුරු සේවයේ 2 පන්තියේ I ශ්‍රේණියට උසස් වී වසර හතරක් (04) ගතවීමට පෙර III වන කාර්යක්ෂමතා කඩඉම් විභාගය සම්පූර්ණ කළ යුතුය. එම නිලධාරීන්ට අමතරව, 2-I ශ්‍රේණියට උසස්වීම් ලබා වසර 4 ක් ඉක්මවා ගිය ද, 2025.06.30 දිනෙන් පසු I වන ශ්‍රේණි උසස්වීම් යෙදෙන ගුරුවරුන් ද I ශ්‍රේණියට උසස්වීම් ලැබීම සඳහා III වන කාර්යක්ෂමතා කඩඉම් පරීක්ෂණ අවශ්‍යතාව සම්පූර්ණ කළ යුතු වේ.

මෙම කාර්යක්ෂමතා කඩඉම් විභාගයට අදාළ ස්වයං අධ්‍යයන මොඩියුලයන්හි විෂය නිර්දේශය ගැසට් නිවේදනයේ දක්වා ඇති පරිදි අධ්‍යාපන අමාත්‍යාංශයේ e – thaksalawa නිල වෙබ් අඩවියේ පළ කර ඇත.‍

මෙම විභාගය සඳහා පෙනී සිටින විභාග අපේක්ෂකයින්ට ස්වයං අධ්‍යයන ක්‍රමවේදය නිර්දේශ කරන අතර පහත දැක්වෙන සබැඳිය (Link) මගින් e - thaksalawa වෙබ් අඩවිය වෙත පිවිස එහි III කාර්යක්ෂමතා කඩඉම් විභාගය යටතේ ඉදිරිපත් කර ඇති විෂය කරුණු අධ්‍යයනය කිරීම තුළින් විභාගයට පෙනී සිටීමට දිරිමත් කරනු ලැබේ.

https://e-thaksalawa.moe.gov.lk/lcms/course/index.php?categoryid=125

நாட்டின் அனைத்துத் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளிலும் சேவையாற்றும் இலங்கை ஆசிரியர் சேவை உத்தியோகத்தர்களுக்கான III ஆம் வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சை - 2026

2026 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள, நாட்டின் அனைத்துத் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் சேவையாற்றும் இலங்கை ஆசிரியர் சேவை உத்தியோகத்தர்களுக்கான III ஆம் வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சைக்கான வர்த்தமானி அறிவித்தல் 2026.08.21 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சைக்காக, 2026.08.25 ஆம் திகதி முதல் 2026.09.14 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை, இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குப் பிரவேசித்து, இணையவழி முறையில் சமர்ப்பிக்கலாம்.

இலங்கை ஆசிரியர் சேவையினதும், மாகாண அரச சேவைகளின் ஆசிரியர் சேவையினதும் தரம் 2 வகுப்பிலிருந்து தரம் I வகுப்பிற்குப் பதவியுயர்வு பெற்று நான்கு (04) ஆண்டுகள் நிறைவடைவதற்கு முன்னர், III ஆம் வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சையைப் பூர்த்திசெய்தல் வேண்டும்.

அத்தோடு, தரம் 2 இலிருந்து தரம் I இற்குப் பதவியுயர்வு பெற்று நான்கு (04) ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், 2025.06.30 ஆம் திகதிக்குப் பின்னர் தரம் I இற்கான பதவியுயர்வு கிடைக்கப்பெறும் ஆசிரியர்களும், தரம் I இற்குப் பதவியுயர்வு பெறுவதற்காக III ஆம் வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சைத் தகுதியைப் பூர்த்திசெய்தல் வேண்டும்.

இவ்வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சைக்குரிய சுயகற்றல் மொடியூல்களின் பாடத்திட்டம், வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, கல்வி அமைச்சின் e-thaksalawa உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இப்பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளுக்குச் சுயகற்றல் முறைமை பரிந்துரைக்கப்படுவதோடு, கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பு (Link) மூலமாக e-thaksalawa இணையத்தளத்திற்குப் பிரவேசித்து, அதில் III ஆம் வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சையின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள பாட விடயங்களைக் கற்று, பரீட்சைக்குத் தோற்றுமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர்.

https://e-thaksalawa.moe.gov.lk/lcms/course/index.php?categoryid=125

පාසල් දරුවන්ගේ පෝෂණය නොමිලේ ආහාර දීමට එහා ගිය සෞඛ්‍ය සම්පන්න වැඩසටහනක් විය යුතුයිඅග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරියරජයේ ...
24/08/2026

පාසල් දරුවන්ගේ පෝෂණය නොමිලේ ආහාර දීමට එහා ගිය සෞඛ්‍ය සම්පන්න වැඩසටහනක් විය යුතුයි

අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය

රජයේ පාසල් පෝෂණ වැඩසටහන හුදෙක් ඉලක්කගත පිරිසකට නොමිලේ ආහාර වේලක් ලබාදීමට පමණක් සීමා වූවක් නොවිය යුතු බව අධ්‍යාපන, උසස් අධ්‍යාපන සහ වෘත්තීය අධ්‍යාපන අමාත්‍ය, අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය පැවසුවාය.

අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය සහ ලෝක ආහාර වැඩසටහනේ (WFP) නියෝජිතයින් අතර අගෝස්තු 24 වනදා අරලියගහ මන්දිරයේදී පැවැති විශේෂ සාකච්ඡාවකට එක්වෙමින් අග්‍රාමාත්‍යතුමිය මේ බව සඳහන් කළාය.

එහිදී අදහස් දැක්වූ අග්‍රාමාත්‍යතුමිය අවධාරණය කළේ රජයේ පාසල් පෝෂණ වැඩසටහන හුදෙක් ඉලක්කගත පිරිසකට නොමිලේ ආහාර වේලක් ලබාදීමට පමණක් සීමා වූවක් නොවිය යුතු බවයි.

සමස්ත පාසල් පද්ධතිය තුළම සෞඛ්‍ය සම්පන්න ආහාර රටා, යහපත් පෝෂණ දැනුවත්භාවය සහ නිවැරදි සෞඛ්‍ය පුරුදු ඇති කිරීම එහි ප්‍රධාන අරමුණ විය යුතු බව අග්‍රාමාත්‍යතුමිය පෙන්වා දුන්නාය.

රට තුළ පෝෂණ ගැටලුව තවදුරටත් දැඩි අවධානය යොමු කළ යුතු කරුණක් බව සඳහන් කළ අග්‍රාමාත්‍යතුමිය, ප්‍රාථමික හා සෞඛ්‍ය සංරක්ෂණය සමඟින් නිවැරදි ආහාර රටා ප්‍රවර්ධනය කිරීමේ අත්‍යවශ්‍යතාව පැහැදිලි කළාය.

දැනට පාසල්, පූර්ව ළමා විය සහ තෝරාගත් පවුල් මට්ටමින් මෙම වැඩසටහන් ක්‍රියාත්මක වන බවත්, වර්තමානයේ ශීඝ්‍රයෙන් පැතිර යන බෝ නොවන රෝග (NCDs) වළක්වා ගැනීමට නම් ඊට බලපාන මූලික හේතු හඳුනා ගැනීම අත්‍යවශ්‍ය බවත් අග්‍රාමාත්‍යතුමිය සඳහන් කළාය.

පෝෂණය හා සෞඛ්‍යය පිළිබඳ ඉදිරි ප්‍රතිපත්තිමය තීරණ ගැනීමේදී හුදු අනුමාන මත නොව, නිවැරදි විද්‍යාත්මක පර්යේෂණ සහ දත්ත පදනම් කරගත යුතු බවද තවදුරටත් අවධාරණය කළාය.

ශ්‍රී ලංකාවේ පාසල් පෝෂණ වැඩසටහන් ශක්තිමත් කිරීම සඳහා රජය ගෙන යන මෙම ක්‍රියාමාර්ග අගය කළ ලෝක ආහාර වැඩසටහනේ (WFP) නියෝජිතයෝ, ඊට අඛණ්ඩව සහාය දක්වන බවට සහතික වූහ. දැනට සිදුවෙමින් පවතින ධනාත්මක වෙනස්කම් ඉදිරියට ගෙන යාමටත්, පෝෂණ වැඩසටහන්වල සාර්ථකත්වය උදෙසා විශ්වවිද්‍යාල, අධ්‍යාපන අමාත්‍යාංශය සහ එක්සත් ජාතීන්ගේ නියෝජිතායතන එක්ව කටයුතු කිරීමේ වැදගත්කමත් ලෝක අහාර වැඩසටහනේ නියෝජිත පිරිස පෙන්වා දුන්හ.

මෙම සාකච්ඡාවට ලෝක අහාර වැඩසටහනේ ශ්‍රී ලංකා නියෝජිත සහ මෙරට අධ්‍යක්ෂ පිලිප් වෝඩ්, නියෝජ්‍ය අධ්‍යක්ෂ රොබට් ඔලිවර්, සිඩ්නි නිව් සවුත් වේල්ස් විශ්වවිද්‍යාලයේ මහාචාර්ය ජය ශ්‍රී අර්කොට් යන මහත්ම මහත්මීන් ඇතුළු නියෝජිතයින් පිරිසක් සහ අධ්‍යාපන අමාත්‍යාංශයේ නිලධාරීහු එක්ව සිටියහ.

பாடசாலைப் பிள்ளைகளின் ஊட்டச்சத்து இலவசமாக உணவளிப்பதற்கு அப்பாற்பட்ட ஆரோக்கியமான நிகழ்ச்சித்திட்டமாக அமைய வேண்டும்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அரச பாடசாலை ஊட்டச்சத்து நிகழ்ச்சித்திட்டம் வெறுமனே குறிப்பிட்ட பிரிவினருக்கு இலவசமாக உணவளிப்பதற்கு மாத்திரம் கட்டுப்படுத்தப்பட்டதொன்றாக அமையக் கூடாது என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் உலக உணவுத் திட்டத்தின் (WFP) பிரதிநிதிகளுக்கும் இடையே ஆகஸ்ட் 24 ஆம் திகதி அலரிமாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கருத்துத் தெரிவிக்கும்போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், பாடசாலை ஊட்டச்சத்து நிகழ்ச்சித்திட்டம் வெறுமனே குறிப்பிட்ட பிரிவினருக்கு இலவசமாக உணவளிப்பதற்கு மாத்திரம் கட்டுப்படுத்தப்பட்டதொன்றாக அமையக் கூடாது என வலியுறுத்தியதுடன், ஒட்டுமொத்தப் பாடசாலைக் கட்டமைப்பிலும் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள், நல்ல ஊட்டச்சத்து விழிப்புணர்வு மற்றும் சரியான சுகாதாரப் பழக்கவழக்கங்களை ஏற்படுத்துதலே இதன் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் ஊட்டச்சத்துப் பிரச்சினையானது, மேலும் தீவிரமான கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயம் எனக் குறிப்பிட்ட பிரதமர், ஆரம்ப சுகாதாரப் பராமரிப்புடன் சரியான உணவுப் பழக்கவழக்கங்களை மேம்படுத்துவதன் கட்டாயத் தேவையையும் தெளிவுபடுத்தினார்.

தற்போது முன்பள்ளிக் குழந்தைப் பருவம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்ப மட்டங்களில் இந்நிகழ்ச்சிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், வேகமாகப் பரவிவரும் தொற்றா நோய்களைத் (NCDs) தடுப்பதற்குப் பங்களிக்கும் அடிப்படைக் காரணங்களைக் கண்டறிதல் அத்தியாவசியம் என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் தொடர்பான எதிர்காலக் கொள்கைத் தீர்மானங்களை எடுக்கும்போது, வெறும் அனுமானங்களின் அடிப்படையில் அன்றி, சரியான அறிவியல் ஆராய்ச்சிகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

இலங்கையின் பாடசாலை ஊட்டச்சத்து நிகழ்ச்சிகளைப் பலப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் இத்தகைய நடவடிக்கைகளைப் பாராட்டிய உலக உணவுத் திட்டத்தின் (WFP) பிரதிநிதிகள், அதற்குத் தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்தனர். தற்போது இடம்பெற்றுவரும் நேர்மறையான மாற்றங்களை முன்னெடுத்துச் செல்வதற்கும், ஊட்டச்சத்து நிகழ்ச்சிகளின் வெற்றிக்குப் பல்கலைக்கழகங்கள், கல்வி அமைச்சு மற்றும் ஐக்கிய நாடுகளின் முகவர் அமைப்புகள் ஒன்றிணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகள் குழு சுட்டிக்காட்டியது.

இக்கலந்துரையாடலில் உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதியும் வதிவிடப் பணிப்பாளருமான பிலிப் வார்ட், பிரதிப் பணிப்பாளர் ரொபர்ட் ஒலிவர், சிட்னி நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜயா ஸ்ரீ அர்காட் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினரும் கல்வி அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

24/08/2026

සාර්ථකත්වය කියන්නේ තනි ගමනක් නෙමෙයි.

ජාතික මුල් ළමාවිය විෂයමාලා රාමුව (ECECF) යටතේ ප්‍රධාන පුහුණුකරුවන් 120ක් පුහුණු කෙරේ.ජාතික මුල් ළමාවිය විෂයමාලා රාමුව (E...
24/08/2026

ජාතික මුල් ළමාවිය විෂයමාලා රාමුව (ECECF) යටතේ ප්‍රධාන පුහුණුකරුවන් 120ක් පුහුණු කෙරේ.

ජාතික මුල් ළමාවිය විෂයමාලා රාමුව (ECECF) ක්‍රියාත්මක කිරීමේ ඉදිරි පියවරක් ලෙස පෙර පාසල් ප්‍රධාන පුහුණුකරුවන් පුහුණු කිරීමේ ජාතික වැඩසටහන (Master Trainer TOT) 2026 අගෝස්තු 17 සිට 21 දින දක්වා තලවතුගොඩ ග්‍රෑන්ඩ් මොනාක් හෝටල් පරිශ්‍රයේදී පවත්වන ලදී.

දින පහක් පුරා පැවති මෙම වැඩසටහන සඳහා දිවයිනේ විවිධ ප්‍රදේශ නියෝජනය කරමින් අධ්‍යාපන නිලධාරීන් සහ ප්‍රධාන පුහුණුකරුවන් 120 දෙනෙකු සහභාගී වී සිටි අතර, පෙර පාසල් ගුරුවරුන් සඳහා ඉදිරියේදී පවත්වන පුහුණු වැඩසටහන් ඵලදායීව මෙහෙයවීම සඳහා අවශ්‍ය දැනුම, කුසලතා සහ පුහුණුකරණ හැකියාවන් වර්ධනය කිරීම මෙම වැඩසටහන ඔස්සේ සිදුකෙරිණි.

ජාතික මුල් ළමාවිය විෂයමාලා රාමුවට අනුව සකස් කරන ලද පෙර පාසල් ගුරු මාර්ගෝපදේශ සංග්‍රහය, ක්‍රියාකාරකම් යෝජිත සංග්‍රහය, පෙර පාසල් ඉගැන්වීම් ඉගෙනුම් සම්පත් කට්ටලය සහ පුහුණුකරුවන්ගේ අත්පොත යන සංග්‍රහයන් තුළ දක්වා ඇති කරුණු උපයෝගී කරගනිමින් වූ ක්‍රියාකාරකම් මෙහිදී සිදු කරන ලදී.

මුල් ළමාවිය සංවර්ධන ජාතික ප්‍රතිපත්තියට අනුකූල වන සේ පෙරපාසල් ප්‍රමිතීන්ට අනුව පවත්වාගෙන යාමට අවශ්‍ය දැනුම මෙන්ම, පෙර පාසල් දරුවන්ගේ මොළයේ වර්ධනය වන ආකාරය පිළිබඳ නිවැරදි අවබෝධයක් ඇති කරගනිමින්, නිර්මාණාත්මක හා ක්‍රියාකාරකම් පාදක අධ්‍යාපන ක්‍රමවේදයකට ඔවුන්ව නිවැරදිව යොමු කිරීමට අවශ්‍ය ප්‍රායෝගික අත්දැකීම්ද මෙහිදී පැමිණ සිටි පිරිසට ලබා දීම සිදු කෙරිණි.

මෙම අවස්ථාව සඳහා අධ්‍යාපන, උසස් අධ්‍යාපන සහ වෘත්තීය අධ්‍යාපන අමාත්‍යාංශය, ජාතික අධ්‍යාපන ආයතනය සහ UNICEF යන ආයතන නියෝජනය කරමින් නිලධාරීන් පිරිසක් සහභාගී වූහ.

தேசிய முன் பிள்ளைப் பருவ கல்விக் கலைத்திட்டச் சட்டகத்தின் கீழ் 120 முதன்மைப் பயிற்றுநர்களுக்கான பயிற்சி

தேசிய முன் பிள்ளைப் பருவ கல்விக் கலைத்திட்டக் கட்டமைப்பை (ECECF) நடைமுறைப்படுத்துவதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக, முன்பள்ளி முதன்மைப் பயிற்றுநர்களுக்கான தேசிய பயிற்சியாளர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் (Master Trainers - TOT) 2026 ஆகஸ்ட் 17 முதல் 21 ஆம் திகதி வரை தலவத்துகொட கிராண்ட் மொனார்க் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது.

ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சித்திட்டத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி கல்வி அதிகாரிகள் மற்றும் முதன்மைப் பயிற்றுநர்கள் அடங்கிய 120 பேர் கலந்துகொண்டனர். எதிர்காலத்தில் முன்பள்ளி ஆசிரியர்களுக்காக நடத்தப்படவுள்ள பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை பயனுள்ள வகையில் முன்னெடுப்பதற்குத் தேவையான அறிவு, திறன்கள் மற்றும் பயிற்றுவிக்கும் ஆற்றல்களை மேம்படுத்துவதே இந்நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

தேசிய முன் பிள்ளைப் பருவ கல்விக் கலைத்திட்டக் கட்டமைப்பிற்கு அமைவாகத் தயாரிக்கப்பட்ட முன்பள்ளி ஆசிரியர் வழிகாட்டி, செயற்பாடுகளுக்கான வழிகாட்டித் தொகுப்பு, முன்பள்ளி கற்பித்தல்-கற்றல் வளத் தொகுப்பு மற்றும் பயிற்றுநர் கையேடு ஆகியவற்றில் உள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு செயற்பாடுகள் இந்நிகழ்ச்சித்திட்டத்தில் முன்னெடுக்கப்பட்டன.

முன் பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான தேசியக் கொள்கைக்கு அமைவாகவும், முன்பள்ளிக் கல்வித் தரநிலைகளுக்கு ஏற்பவும் முன்பள்ளிகளை முறையாக நடத்துவதற்குத் தேவையான அறிவை வழங்குவதுடன், முன்பள்ளிக் குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்தி, அவர்களை ஆக்கபூர்வமானதும் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டதுமான கற்றல் முறையை நோக்கி முறையாக வழிநடத்துவதற்குத் தேவையான நடைமுறை அனுபவங்களும் இந்நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம் மற்றும் UNICEF ஆகிய நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

23/08/2026

රාජ්‍ය විශ්වවිද්‍යාල තුළ නේවාසිකාගාර 55ක් ඉදිකිරීමේ ව්‍යාපෘතිය වවුනියාව විශ්වවිද්‍යාලයෙන් ඇරඹෙයි

රාජ්‍ය විශ්වවිද්‍යාල තුළ නේවාසිකාගාර 55ක් ඉදිකිරීමේ ව්‍යාපෘතිය වවුනියාව විශ්වවිද්‍යාලයෙන් ඇරඹෙයි.• විශ්වවිද්‍යාල තුළ පොහ...
22/08/2026

රාජ්‍ය විශ්වවිද්‍යාල තුළ නේවාසිකාගාර 55ක් ඉදිකිරීමේ ව්‍යාපෘතිය වවුනියාව විශ්වවිද්‍යාලයෙන් ඇරඹෙයි.

• විශ්වවිද්‍යාල තුළ පොහොසත් අධ්‍යාපන පරිසරයක් ගොඩනැගීම අපගේ ප්‍රධාන අරමුණයි.
-අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය -

රටේ අනාගත නායකත්වය බිහිකිරීමට අවශ්‍ය ශිෂ්‍ය ක්‍රියාකාරකම් සිදු කිරීම සඳහා සහාය වියහැකි වඩාත් නිදහස් පරිසරයක් විශ්වවිද්‍යාල තුළ ගොඩනැගීම රජයේ ප්‍රධාන අරමුණ වන බව අධ්‍යාපන, උසස් අධ්‍යාපන සහ වෘත්තීය අධ්‍යාපන අමාත්‍ය අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය ප්‍රකාශ කළාය.

දිවයින පුරා පිහිටා ඇති රාජ්‍ය විශ්වවිද්‍යාල තුළ නේවාසිකාගාර 55ක් ඉදිකිරීමේ ව්‍යාපෘතියේ ඇරඹුම සනිටුහන් කරමින්, 2026.08.22 දින වවුනියාව විශ්වවිද්‍යාලයේ නව ශිෂ්‍ය නේවාසිකාගාරය සඳහා මුල්ගල් තැබීමේ අවස්ථාවට එක්වෙමින් අග්‍රාමාත්‍යවරිය මේ බව ප්‍රකාශ කර සිටියාය.

රාජ්‍ය විශ්වවිද්‍යාල තුළ නේවාසිකාගාර 55ක් ඉදිකිරීමේ ව්‍යාපෘතියට අදාළව ඉදිවන ප්‍රථම නේවාසිකාගාරය මෙය වීම විශේෂත්වයකි.එම ව්‍යාපෘතිය යටතේ වවුනියාව විශ්වවිද්‍යාලයට හිමිවී ඇති සමස්ත නේවාසිකාගාර සංඛ්‍යාව 04කි.

එම ව්‍යාපෘතියට අනුව වවුනියාව විශ්වවිද්‍යාලය තුළ ඉදිකෙරෙන මෙම නේවාසිකාගාර ගොඩනැගිල්ල, මහල් හතරකින් සමන්විත වන අතර, සිසුන් 200 කට පමණ එකවර නේවාසිකාගාර පහසුකම් ලබාදිය හැකිය.ඒ සඳහා රජය ආයෝජනය කර ඇති මුදල රුපියල් මිලියන 231 කට අධිකය.

එමෙන්ම එම ව්‍යාපෘතිය යටතේ තවත් සිසුන් 200 කට පමණ නේවාසිකාගාර පහසුකම් ලබාදිය හැකි නේවාසිකාගාරයක් ද, සිසුන් 400 කට පමණ පහසුකම් සැපයිය හැකි නේවාසිකාගාර 02ක්ද මෙම විශ්වවිද්‍යාලය තුළ ගොඩනැගීමට නියමිතය.

මෙහිදී, නව ශිෂ්‍ය නේවාසිකාගාරය සඳහා අග්‍රාමාත්‍යවරියගේ ප්‍රධානත්වයෙන් මුල්ගල් තැබීම සිදුකිරීමෙන් අනතුරුව, අග්‍රාමාත්‍යවරිය මෙසේද පවසා සිටියාය,

2026 වසරේදී අපට පුළුවන් වුණා දශක ගණනාවකට පස්සේ රාජ්‍ය විශ්වවිද්‍යාල තුළ ශිෂ්‍ය සුබසාධනය නංවාලීම සඳහා ආයෝජනයක් කරන්න. ඒ හරහා නේවාසිකාගාර 55ක් ඉදිකිරීමට කටයුතු අප ආරම්භ කරන්න බලාපොරොත්තු වෙනවා. එම ව්‍යාපෘතියේ ආරම්භය වවුනියාව විශ්වවිද්‍යාලයෙන් පටන් ගැනීම පිළිබඳ මම ඇත්තටම සතුටු වෙනවා.

ඒ විතරක් නෙමෙයි මෙම නේවාසිකාගාරයට අමතරව තවත් නේවාසිකාගාර 03ක් මෙම ව්‍යාපෘතිය හරහා වවුනියාව විශ්වවිද්‍යාලයට හිමිවීමට නියමිතයි. ඒ හරහා එම විශ්වවිද්‍යාලයේ සිසුන් මුහුණදෙන නේවාසිකාගාර ගැටලුවලට තිරසාර විසඳුම් ලබාදීමට අප බලාපොරොත්තු වෙනවා.

එමෙන්ම, විශ්වවිද්‍යාල තුළ යටිතල පහසුකම් ගොඩනැගීමේදී අප අලුතෙන් පටන් ගත්ත විශ්වවිද්‍යාල සහ නගරබද ප්‍රදේශවලින් පිටත ඇති විශ්වවිද්‍යාල සඳහා මූලික අවධානයක් යොමු කර තිබෙනවා. ඒ අනුව රජරට, අග්නිදිග සහ නැගෙනහිර යන විශ්වවිද්‍යාලවලට නේවාසිකාගාර 55ක් ඉදිකිරීමේ ව්‍යාපෘතිය හරහා අප ප්‍රමුඛතාවක් ලබා දී තිබෙනවා. එම ව්‍යාපෘතිය හරහා ශ්‍රී ලංකාවේ සමස්ත විශ්වවිද්‍යාල පද්ධතිය තුළ සිටින සිසුන් 16000 කට පමණ නේවාසිකාගාර පහසුකම් ලබා දෙන්න අප බලාපොරොත්තු වෙනවා.

එම නේවාසිකාගාර 55ක් ගොඩනැගීමේ ව්‍යාපෘතිය ඔස්සේ, සබරගමුව විශ්වවිද්‍යාලයට සහ රජරට විශ්වවිද්‍යාලයට ව්‍යාපෘති 7 බැගින් වෙන් කරලා තියෙනවා. එසේම, අග්නිදිග විශ්වවිද්‍යාලයට නේවාසිකාගාර ව්‍යාපෘති 6කුත්, නැගෙනහිර විශ්වවිද්‍යාලයට ව්‍යාපෘති 5කුත්, ඌව වෙල්ලස්ස විශ්වවිද්‍යාලයටත් ව්‍යාපෘති 6කුත් වශයෙන් ලබා දෙන්න අප සැලසුම් කරලා තියෙනවා.

ඒ වගේම, ශ්‍රී ජයවර්ධනපුර විශ්වවිද්‍යාලයට සහ වයඹ විශ්වවිද්‍යාලයට ව්‍යාපෘති 4 බැගින් වෙන් කරලා තියෙනවා. රුහුණු විශ්වවිද්‍යාලයට ව්‍යාපෘති 4කුත්, යාපනය විශ්වවිද්‍යාලයට ව්‍යාපෘති 2කුත් ලැබෙනවා. අවසාන වශයෙන්, මොරටුව, ත්‍රිකුණාමලය සහ ගම්පහ වික්‍රමආරච්චි යන විශ්වවිද්‍යාල සඳහා නේවාසිකාගාර ව්‍යාපෘති 2 බැගින් අප එම ව්‍යාපෘතිය හරහා වෙන් කරලා තියෙනවා.

එසේම, මෙම නේවාසිකාගාරය ඉදිකිරීමේ ව්‍යාපෘතිය සිසුන්ට නිසි ප්‍රතිලාභ ලබාගත හැකි වන අයුරින් නිවැරදි කාල සීමාව තුළ අවසන් කිරීමට අප කටයුතු කළ යුතුයි. ඒ වගේම, නිසි පරිදි එම සම්පත් ආරක්ෂා කරමින්, නඩත්තු කටයුතු නිසි පරිදි සිදු කරමින් ඊළඟ පරම්පරාවට භාරදීමේ වගකීමද ඔබ සියලු දෙනාම භාරගත යුතු වෙනවා.

විශ්වවිද්‍යාල යනු රටේ අනාගත නායකත්වය බිහිකරන ස්ථාන වන බැවින්, විශ්වවිද්‍යාල සිසුන්ට ගුණාත්මක අධ්‍යයන ක්‍රියාකාරකම්, අංගසම්පූර්ණ යටිතල පහසුකම් මෙන්ම නිවැරදි දේශපාලන සංස්කෘතික ජීවිතයක් ද ලබාදිය යුතු වෙනවා. ඒ නිසා තමයි විශ්වවිද්‍යාල තුළ නිදහස් අධ්‍යාපන සංස්කෘතියක් තිබෙන පරිසරයක් ඇති කිරීම සඳහා අප රජයක් ලෙස ආයෝජනය කරන්නේ.

මෙම අවස්ථාව සඳහා උතුරු පළාත් ආණ්ඩුකාර එන්. වේදනායගන්, දිස්ත්‍රික් සම්බන්ධීකරණ කමිටු සභාපති සහ නියෝජ්‍ය අමාත්‍ය ආර්. එච්. උපාලි සමරසිංහ යන මහත්වරුන් ඇතුළු පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන් වන එස්. තිලගනාදන් සහ එම්. ජෙගදීස්වරන් යන මහත්වරුන් මෙන්ම, වවුනියාව විශ්වවිද්‍යාලයේ උප කුලපතිතුමා ප්‍රමුඛ අධ්‍යයන හා අනධ්‍යයන කාර්ය මණ්ඩල නිලධාරීන් සහ සිසුන් පිරිසක් සහභාගී වූහ.

அரச பல்கலைக்கழகங்களில் 55 விடுதிகளை நிர்மாணிக்கும் திட்டம் வவுனியா பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்.

பல்கலைக்கழகங்களுக்குள் வளமான கல்விச் சூழலொன்றைக் கட்டியெழுப்புவதே எமது முதன்மை நோக்கமாகும்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நாட்டின் எதிர்காலத் தலைமையை உருவாக்குவதற்குத் தேவையான மாணவர் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு உதவக்கூடிய மிகவும் சுதந்திரமான சூழலொன்றைப் பல்கலைக்கழகங்களுக்குள் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இலங்கை முழுவதிலும் அமைந்துள்ள அரச பல்கலைக்கழகங்களில் 55 விடுதிகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில், 2026.08.22 ஆம் திகதி வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர் விடுதிக்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

அரச பல்கலைக்கழகங்களில் 55 விடுதிகளை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு அமைவாக நிர்மாணிக்கப்படும் முதலாவது விடுதி இதுவென்பது குறிப்பிடத்தக்கதாகும். இத்திட்டத்தின் கீழ் வவுனியா பல்கலைக்கழகத்திற்குக் கிடைக்கவிருக்கின்ற மொத்த விடுதிகளின் எண்ணிக்கை 04 ஆகும்.

இத்திட்டத்திற்கு அமைய வவுனியா பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்படும் இந்த விடுதிக் கட்டிடம், நான்கு மாடிகளைக் கொண்டதாக அமைவதோடு, ஒரே நேரத்தில் சுமார் 200 மாணவர்களுக்கு விடுதி வசதிகளை வழங்கக்கூடியதாகும். இதற்காக அரசாங்கம் முதலீடு செய்துள்ள தொகை 231 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமானதாகும்.
இந்தப் பல்கலைக்கழக விடுதித் திட்டத்தின் கீழ் மேலும் சுமார் 200 மாணவர்களுக்கு விடுதி வசதிகளை வழங்கக்கூடிய ஒரு விடுதியும், சுமார் 400 மாணவர்களுக்கு வசதிகளை வழங்கக்கூடிய 02 விடுதிகளும் இந்தப் பல்கலைக்கழகத்தில் கட்டியெழுப்பப்படவுள்ளன.

பிரதமர் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டதனைத் தொடர்ந்து, அங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்,

பல தசாப்தங்களின் பின்னர் 2026 ஆம் ஆண்டிலேயே அரச பல்கலைக்கழக மாணவர்களின் நலன்புரித் துறையினை மேம்படுத்துவதற்காக முதலீடு செய்ய எம்மால் முடிந்தது. இதன் மூலம் 55 விடுதிகளை நிர்மாணிப்பதற்கான பணிகளை நாம் ஆரம்பிக்க எதிர்பார்க்கின்றோம். இத்திட்டத்தின் ஆரம்பம் வவுனியா பல்கலைக்கழகத்திலிருந்து தொடங்குவது குறித்து நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகின்றேன்.

அதுமட்டுமன்றி, இந்த விடுதிக்கு மேலதிகமாக மேலும் 03 விடுதிகள் இத்திட்டத்தின் மூலம் வவுனியா பல்கலைக்கழகத்திற்கு கிடைக்க இருக்கின்றன. அதனூடாக இந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் எதிர்நோக்கிவரும் விடுதிப் பற்றாக்குறை பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்கக்கூடியதாக இருக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.
பல்கலைக்கழகங்களுக்குள் உட்கட்டமைப்பு வசதிகளைக் கட்டியெழுப்பும்போது, புதிதாக ஆரம்பித்த பல்கலைக்கழகங்கள் மற்றும் நகரப் பகுதிகளுக்கு வெளியில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்களுக்கே முன்னுரிமை கொடுத்திருக்கின்றோம். அதற்கமைய ரஜரட்ட, தென்கிழக்கு மற்றும் கிழக்கு ஆகிய பல்கலைக்கழகங்களுக்கே இந்த 55 விடுதிகளை நிர்மாணிக்கும் திட்டத்தில் முன்னுரிமையளித்துள்ளோம். இத்திட்டத்தினூடாக இலங்கையின் ஒட்டுமொத்த பல்கலைக்கழகக் கட்டமைப்பிலுள்ள சுமார் 16,000 மாணவர்களுக்கு விடுதி வசதிகளை வழங்க முடியும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

இந்த 55 விடுதிகளைக் கட்டியெழுப்பும் திட்டத்தினூடாக, சபரகமுவா பல்கலைக்கழகத்திற்கும் ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கும் தலா 7 விடுதித் திட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு 6 விடுதித் திட்டங்களும், கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு 5 திட்டங்களும், ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்திற்கு 6 திட்டங்களும் பெற்றுக்கொடுக்க நாம் திட்டமிட்டிருக்கின்றோம்.

அதேபோல, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கும் வயம்ப பல்கலைக்கழகத்திற்கும் தலா 4 திட்டங்கள் வீதம் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ருஹுணு பல்கலைக்கழகத்திற்கு 4 திட்டங்களும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு 2 திட்டங்களும் கிடைக்க இருக்கின்றன. இறுதியாக, மொறட்டுவை, திருகோணமலை மற்றும் கம்பஹா விக்ரமாரச்சி ஆகிய பல்கலைக்கழகங்களுக்கு தலா 2 விடுதித் திட்டங்கள் வீதம் இத்திட்டத்தின் மூலம் நாம் ஒதுக்கியுள்ளோம்.

அத்துடன், இந்த விடுதியை நிர்மாணிக்கும் திட்டமானது மாணவர்களுக்கு உரிய நன்மைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நிறைவுசெய்யப்பட வேண்டும். அதேபோன்று, உரிய முறையில் அந்த வளங்களைப் பாதுகாத்து, பராமரிப்புப் பணிகளைச் சரியாக மேற்கொண்டு அடுத்த தலைமுறையிடம் கையளிக்கும் பொறுப்பையும் நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பல்கலைக்கழகங்கள் என்பவை நாட்டின் எதிர்காலத் தலைமையை உருவாக்கும் இடங்கள் என்பதால், பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தரமான கற்றல் செயற்பாடுகள், முழுமையான உட்கட்டமைப்பு வசதிகளைப் போன்றே சரியான அரசியல் மற்றும் கலாச்சார வாழ்க்கையையும் வழங்க வேண்டியுள்ளது. அதனாலேயே பல்கலைக்கழகங்களுக்குள் சுதந்திரமான கல்விக் கலாச்சாரமொன்று நிலவும் சூழலை உருவாக்குவதற்காக நாம் ஓர் அரசாங்கம் என்ற வகையில் இந்த முதலீட்டைச் செய்கின்றோம், எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கௌரவ மாகாண ஆளுநர் என். வேதநாயகன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான ஆர். எச். உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். திலகநாதன், எம். ஜெகதீஸ்வரன் ஆகியோரும், வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உள்ளிட்ட கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் பெருந்திரளான மாணவர்களும் கலந்துகொண்டனர்.

ශ්‍රී ලාංකේය සංගීත ක්ෂේත්‍රයේ අද්විතීය සලකුණක් තැබූ ආචාර්ය නන්දා මාලිනි මහත්මියගේ අභාවය පිළිබඳව අධ්‍යාපන, උසස් අධ්‍යාපන ...
21/08/2026

ශ්‍රී ලාංකේය සංගීත ක්ෂේත්‍රයේ අද්විතීය සලකුණක් තැබූ ආචාර්ය නන්දා මාලිනි මහත්මියගේ අභාවය පිළිබඳව අධ්‍යාපන, උසස් අධ්‍යාපන හා වෘත්තිය අධ්‍යාපන අමාත්‍යාංශයේ බලවත් සංවේගය ප්‍රකාශ කරමු. එතුමිය හුදෙක් සම්භාවනීය ගායන ශිල්පිනියක පමණක් නොව, දේශයේ දරු පරපුරේ රසවින්දනය හා ආකල්ප පෝෂණය කිරීමෙහිලා අනුපමේය මෙහෙවරක් ඉටු කළ අසමසම ගුරුවරියකි. දේශයේ දරුවන් වෙනුවෙන් ඇය තැබූ සෞන්දර්යාත්මක පියසටහන් කිසිදා නොමියනු ඇත.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் சார்பில், இலங்கை இசைத்துறையில் அழியாத தடம் பதித்த கலாநிதி, விஷாரத நந்தா மாலினி அம்மையாரின் மறைவிற்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இலங்கை இசைத்துறையின் புகழ்பெற்ற பாடகியாகத் திகழ்ந்த அவர், தமது இனிமையான குரலாலும் கலைப்பணியாலும் நாட்டின் மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பிடித்தவர். அதுமட்டுமன்றி, நாட்டின் பிள்ளைகளின் அழகியல் உணர்வையும் கலைரசனையையும் நற்பண்புகளையும் வளர்ப்பதில் அளப்பரிய பங்களிப்பை வழங்கிய இணையற்ற கலைஞரும் ஆசானுமாவார்.

நாட்டின் இளைய தலைமுறையினருக்காக அவர் ஆற்றிய கலை மற்றும் பண்பாட்டுப் பணிகள் என்றும் நினைவுகூரப்படும். இலங்கை இசைத்துறைக்கும் நாட்டின் பிள்ளைகளுக்கும் அவர் விட்டுச்சென்ற அழியாத கலைப்பாதையும் அழகியல் மரபும் என்றும் நிலைத்திருக்கும்.

The Ministry of Education, Higher Education, and Vocational Education expresses its deepest condolences on the passing of Dr. Visharada Nanda Malini, an iconic figure in the Sri Lankan music industry. She was not merely a distinguished vocalist, but an incomparable teacher who rendered an immense service in nurturing the aesthetic appreciation and values of the nation's children. The aesthetic footprint she left behind for the children of our nation will never fade away.

2027 පාසල් වාර සටහන ප්‍රකාශයට පත් කෙරේ.2027 ஆம் ஆண்டிற்கான பாடசாலை தவணைகள் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
21/08/2026

2027 පාසල් වාර සටහන ප්‍රකාශයට පත් කෙරේ.

2027 ஆம் ஆண்டிற்கான பாடசாலை தவணைகள் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

55 பல்கலைக்கழக மாணவர் விடுதிகள் நிர்மாணிக்கப்படும் திட்டத்தின் கீழ், முதலாவது மாணவர் விடுதியை நிர்மாணிக்கும் பணிகள் 2026...
19/08/2026

55 பல்கலைக்கழக மாணவர் விடுதிகள் நிர்மாணிக்கப்படும் திட்டத்தின் கீழ், முதலாவது மாணவர் விடுதியை நிர்மாணிக்கும் பணிகள் 2026.08.22 அன்று வவுனியா பல்கலைக்கழகத்தில், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

19/08/2026

Address

Ministry Of Education 'Isurupaya'
Pelawatta
10120

Opening Hours

Monday 08:30 - 16:15
Tuesday 08:30 - 16:15
Wednesday 08:30 - 16:15
Thursday 08:30 - 16:15
Friday 08:30 - 16:15

Telephone

+94 112 785141-50

Alerts

Be the first to know and let us send you an email when Ministry of Education, Sri Lanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ministry of Education, Sri Lanka:

Shortcuts

Share