06/07/2021
2021 .07.06 ம் திகதி காலை 9.30 மணியளவில் பொத்துவில் தேசிய பாடசாலையில் எமது SPECK HELPING FOUNDATION அமைப்பின் கல்விக்கான ஆரம்பத்தடம் பதிக்கப்பட்டது. இம்முறை கா பொ த சா/தர பரிச்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் பரீட்சை பெறுபேற்றை அதிகரிப்பதற்கான கற்றல் கையேடு வழங்கும் திட்டத்திற்கு அமைவாக 150 தேசிய பாடசாலை மாணவர்களுக்கான கையேடு வழங்கப்பட்டது
பொத்துவில் தேசிய பாடசாலை அதிபர் கலந்தர் ஹம்ஷா அவர்களின் தலைமையில். கொரோனா சுகாதார சட்ட திட்டத்திற்கு அமைவாக ஆரம்பமான இந் நிகழ்வில் தேசிய பாடசாலை அதிபர் நாகூர் தம்பி முபாறக் அலி அவர்களால் கல்வி நகர்வுகள் எட்டல்கள் பற்றிய ஆலோசனையும் வழங்கப்பட்டது. அதிபர் A.L . அப்துல் பாரி அவர்களோடு ஆசிரியர்ளும் மாணவர்களும் கலந்துகொண்ட நிகழ்வுக்கு, 32 அழகுகளினை உள்ளடக்கிய கற்றலுக்கான இஸ்லாம் பாட கையேட்டினை தயார் செய்து வழங்கிய தொகுப்பு ஆசிரியர் மதிப்புக்குறிய மௌலவி K. அஸீஸ் அவர்களிடம் ஒரு பிரதி வழங்கப்பட்டதோடு, கற்றல் இழகு ஏடு மாணவர்களின் கைகளிலும் நிகழ்வில் வழங்கப்பட்டது.
கல்வித்திட்டத்திற்கான SPECK HELPING FOUNDATION அமைப்பின் தலைவர் M.B.முபாறக் அவர்களின் வழிகாட்டலில், அமைப்பின் உப தலைவர் இக்பால் அவர்கள் அமைப்பின் நகர்வுகள் பற்றி சிறப்புரை வழங்கினார், அந்த நிகழ்வில் கல்விக்குப் பொறுப்பான கள உத்தியோகத்தர் முதஸ்ஸர், கிழக்குமாகாண நிருவாக கட்டமைப்பு பொறுப்பாளர் பௌஸ் நாசர், கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி அதிகாரி M.P. சுக்கூர், அம்பாறை மாவட்ட தொடர்புபாடல் இணைப்பதிகாரி M.I.லாபீர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
SPECK HELPING FOUNDATION தலைவர் M.B. முபாறக் அவர்களுக்கும், கிழக்கு மாகாண கோ பவுண்டர் நாமுஸ் மற்றும் அமைப்பின் அனைத்து முக்கியஸ்தர்களுக்கும் தேசிய பாடசாலை நிருவாகம் நன்றியினையும் பாராட்டினையும் தெறிவித்தது.
https://chat.whatsapp.com/F7y4VzxNldmDx1vkWhdzPn