02/09/2026
பொத்துவில் பிரதேச காழி நீதிமன்ற நீதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்யும் அஷ்-ஷைய்க், அல்ஹாபிழ் A.L. இர்ஷாத் (ஹமைதி) ஹஸ்ரத் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பொத்துவில் வரலாற்றில் ஆலிம் ஒருவர் காழி நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெறும் முதல் சந்தர்ப்பம் என்ற வகையில் இது ஒரு முக்கியமான வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும்.
மார்க்கப் பணிகளிலும், சமூகப் பணிகளிலும் தன்னை அர்ப்பணித்து மக்களுக்கு சிறந்த சேவையாற்றி வரும் ஹஸ்ரத் அவர்களின் அனுபவமும், அறிவும், சமூக அக்கறையும் காழி நீதிமன்றப் பணியிலும் சிறப்பாகப் பிரதிபலிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஸித் நம்புகின்றார்.
அவரது புதிய பொறுப்பு நீதியையும், நியாயத்தையும் நிலைநாட்டி, மக்களின் நலனுக்காக சிறப்பான சேவையை வழங்குவதற்கு வழிவகுக்க வேண்டும் என இறைவனைப் பிரார்த்திப்பதுடன், அவரது எதிர்காலப் பணிகள் சிறப்பாக அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றார்.
ஊடக பிரிவு
எம்.எஸ். அப்துல் வாஸித்
பாராளுமன்ற உறுப்பினர்