07/08/2025
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹூ
2025.08.04 திகதி இரவு 8.30 மணிக்கு பாடசாலை அதிபர் உட்பட JAS அமைப்பின் தலைவர், செயளாளர், பொருளாலர், மற்றும் ஏனைய உறுப்பினர்களுடன் 29 வது நிர்வாக கூட்டம் இடம்பெற்றது இக்கூட்டத்தில் பிரதானமாக இரண்டு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன அவை பின்வறுமாறு
1. விஞ்ஞான கணித பாடங்கள் மற்றும் கருத்தரங்குகள் சம்பந்தமாக.
2. இச் செயற்பாட்டிட்கான வளவாளர்கள் & மற்றும் பரீட்சை மாதிரி வினா பத்திரங்கள் & கருத்தரங்குகள் செய்வதற்கான பணத்தேவை சம்பந்தமாக
1. விஞ்ஞான கணித பாடங்கள் மற்றும் கருத்தரங்குகள் சம்பந்தமாக. இவ்வருடம் எமது பாடசாலையில் விஞ்ஞான கணித பிரிவுகளில் இருந்து பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கான மீதமுள்ள 3 மாத காலத்திற்குமான கருத்தரங்குகள் வார இறுதி வகுப்புகளை ஒழுங்கமைக்க அலோசனைகள் மற்றும் கருத்துகள் முன் வைக்கப்பட்டு அதட்கான வளவாளர்களையும் ஏற்பாடு செய்ய தீர்மாணிக்கப்பட்டது.
2. இச் செயற்பாட்டிட்கான வளவாளர்கள் & மற்றும் பரீட்சை மாதிரி வினா பத்திரங்கள் & கருத்தரங்குகள் செய்வதற்கான பணத்தேவை சம்பந்தமாக.
எமது JAS அமைப்பிற்க்கு ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை எமது பாடசாலையின் நலன் கறுதி எமக்காக பலர் பல வழிகலிள் பண உதவிகளை செய்துகொண்டுள்ளார்கள் அதே போல் பலர் இடை விலகிவிட்டார்கள் அதன் அடிப்படையில் ஜாயாவின் பழைய மாணவர்கள்,பாடசாலயில் கடமையாற்றும் ஆசிரியர்கள்,ஊர் வியாபாரிகள், தனவந்தர்கள் , ஊரில் உள்ள பல பொது சேவை செய்யக்கூடிய சங்கங்கள் எம்மோடு உறுதுனையாக நின்றன ஆனால் தற்பொது அவைகளினுடைய பங்களிப்பு இல்லாமல் சென்று கொண்டுள்ளது ஒரு சில தனவந்தர்கள் மற்றும் வியாபாரிகள் மற்றும 2006 O/L பழைய மாணவர்களும் இன்றுவரை ஒத்தாசையாக உள்ளனர்
இந்த இக்கட்டான காலத்தருவாயில் JAS அமைப்பின் முக்கியத்துவம் கறுதி அதனுடைய எதிர்கால தேவையை உனர்ந்து எமது ஊர் பிள்ளைகள் இலகுவாகவும் அதிக பண விரையம் இன்றி ஒரு விவசாயின் மகன் அல்லது மகள் எமது ஊரிற்கான ஒரு வைத்தியரையோ பொறியியளாளறையோ உருவாக்க வேண்டும் என்று JCO அமைப்பில் உள்ள உருப்பினர்ள் முன்வந்து அவர்களது அனுசரனையை முழுமையாக JAS அமைப்பிற்கு வழங்குவதாக உறுதி அளித்து அவர்களின் உறுப்பினர்களிடம் இறுந்து சேர்கப்பட்ட ஒரு தொகை பணத்தை (487000/=) அதற்கு பாதுகாப்பாக இருந்த உறுப்பினர் சகோதர்ர் M.L. AASATH அவர்கள் JAS அமைப்பின் தலைவர்,செயளாளர்,உறுப்பிரகள் கையில் பணமாக வழங்கி வைத்தார் .
பின்னர் JAS அமைப்பின் தலைவர் அவர்களினால் இப் பணத்தொகையினை சேர்பதற்காகவும் பணங்களை கொடுத்து உதவிய சகல நல் உள்ளங்களுக்கும் நெஞ்ஞார்ந்த நன்றிகளையும் கூறி அவர்களின் வாழ்விலும் தொழிலிலும் பரக்கத் செய்ய இறைவனிட்ம் பிரார்தனையம் கேட்டு கூட்டம் நிறைவுற்றது.
ஜஸாக்குமுல்லாஹ் ஹைரன்
செயளாளர் JAS .