Vavuniya North MOH office

Vavuniya North MOH office Work on public health and maternal and child health services

பெண்களுக்கெதிரான வன்முறைக்கெதிராக ஒன்றிணைவோம்
28/11/2022

பெண்களுக்கெதிரான வன்முறைக்கெதிராக ஒன்றிணைவோம்

நேற்றைய தினம் (11.07.2022) எமது சு.வை.அ பணிமனையினால் ஒழுங்குசெய்யப்பட்டு வவுனியா பிராந்திய சுகாதார வைத்தியசேவைகள் பணிமனை...
12/07/2022

நேற்றைய தினம் (11.07.2022) எமது சு.வை.அ பணிமனையினால் ஒழுங்குசெய்யப்பட்டு வவுனியா பிராந்திய சுகாதார வைத்தியசேவைகள் பணிமனையின் ஒத்துழைப்புடன் கனகராயன்குளம் லைக்கா கிராமத்தில் (வாகனப்போக்குவரத்து மிகவும் குறைவான பிரதேசம்) நடமாடும் வைத்தியசேவை மற்றும் தொற்றா நோய்கள், சிறுநீரகநோய் மற்றும் என்பவற்றை கண்டறிவதற்கான இரத்தப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 50 இற்கு மேற்பட்டவர்கள் பரிசோதிக்கப்பட்டிருந்தனர். எரிபொருள் பற்றாக்குறையான நேரத்திலும் மக்களின் நலன்கருதி மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கைக்கு ஒத்துழைப்பை வழங்கிய பி.சு.வை.பணிப்பாளரிற்கும் கலந்துகொண்ட வைத்தியர்கள், மருந்தாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய சுகாதார ஊழியர்களிற்கு மனமாரந்த நன்றிகள்🙏

இன்று இடம்பெற்ற வவுனியா சுகாதார திணைக்களங்களிற்கிடையிலான சிநேகபூர்வ மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் இரண்டாம் இடத்...
17/04/2022

இன்று இடம்பெற்ற வவுனியா சுகாதார திணைக்களங்களிற்கிடையிலான சிநேகபூர்வ மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் இரண்டாம் இடத்தைக்கைப்பற்றிய எமது திணைக்கள அணியினரிற்கு பாராட்டுக்கள் உரித்தாகட்டும்👏💐

Saddened by the huge loss our beloved Vavuniya District Regional Epidemiologist Dr. Lavan🥲. May his lovely soul attain M...
05/04/2022

Saddened by the huge loss our beloved Vavuniya District Regional Epidemiologist Dr. Lavan🥲. May his lovely soul attain Moksha🙏💐

இன்றுமுதல் அனைவரிற்கும் Pfizer தடுப்பூசிகள்.இன்று சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைவாக, திங்கள் முதல...
12/03/2022

இன்றுமுதல் அனைவரிற்கும் Pfizer தடுப்பூசிகள்.

இன்று சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைவாக, திங்கள் முதல் எமது அலுவலகத்தில் (14/03/2022) 20 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் 1 ஆவது, 2ஆவது தடுப்பூசியாக Pfizer தடுப்பூசியை பெற்றுக்கொள்ளமுடியும்.

11/03/2022
கொவிட்-19 தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொள்ளாத எவரும் 2022 ஏப்ரல் 4 ஆந்திகதியின் பின்னர் பொது இடங்களில் பிரவேசிக்க தடை ...
04/02/2022

கொவிட்-19 தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொள்ளாத எவரும் 2022 ஏப்ரல் 4 ஆந்திகதியின் பின்னர் பொது இடங்களில் பிரவேசிக்க தடை விதித்து தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் புதிய ஒழுங்கு விதிகள் ஆக்கப்பட்டு 2022.1.25 ஆந்திகதிய 2264/9 ஆம் இலக்க வர்த்தமான பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே இதுவரை 1ஆவது, 2ஆவது மற்றும் 3 ஆவது தடுப்பூசியை பெற்றுக கொள்ளாதவர்கள் எமது அலுவலகத்தை தொடர்புகொண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

கொரோனா தடுப்பூசி வழங்கல் ஆரம்பிக்கப்பட்டு முதலாம் ஆண்டு நிறைவையொட்டி வவுனியா பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனையினால் வவுனி...
31/01/2022

கொரோனா தடுப்பூசி வழங்கல் ஆரம்பிக்கப்பட்டு முதலாம் ஆண்டு நிறைவையொட்டி வவுனியா பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனையினால் வவுனியா கச்சேரி மாநாட்டு மண்டபத்தில் 29.01.2022 அன்று நடைபெற்ற விழாவில் தடுப்பூசி வழங்கலை சிறப்பாக மேற்கொண்ட அனைவருக்கும் பாராட்டுத்தெரிவிக்கப்பட்டது. இதன்போது எமது அலுவலகத்தின் சார்பில் சுகாதார வைத்திய அதிகாரி, மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பதில் மேற்பார்வை குடும்பநல உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

கோவிட் 19 தடுப்பூசி வழங்கல் - முதலாம் ஆண்டு நிறைவு💉எமது நாட்டில் கோவிட் 19 இற்கு எதிரான தடுப்பூசி வழங்கல் ஆரம்பித்து இன்...
29/01/2022

கோவிட் 19 தடுப்பூசி வழங்கல் - முதலாம் ஆண்டு நிறைவு💉
எமது நாட்டில் கோவிட் 19 இற்கு எதிரான தடுப்பூசி வழங்கல் ஆரம்பித்து இன்றுடன் ஒரு வருடம் பூரத்தியாகியுள்ளது. ஆரம்பத்தில் கோவிட் 19 முன்களப்பணியாளர்களிற்கு வழங்கப்பட்டு படிப்படியாக 60வயதிற்கு மேற்பட்டோர், 30-60 வயதானவர்கள், 20 வயதிற்கு மேற்பட்டவர்கள், 16 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 12 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களென அனைவரிற்கும் வழங்கப்பட்டு வருகின்றது.
தடுப்பூசி வழங்கல் ஆரம்பிக்கப்பட்டதன்பின்பு படிப்படியாக நோய்த்தாக்கம் மற்றும் கோவிட்டால் ஏற்படும் மரணங்கள் என்பன குறைவடைந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் நாடு முடங்கல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டு படிப்படியாக சாதாரண செயற்பாடுகள் அனைத்தும் வழமைக்கு திரும்பியுள்ளன.
இவ்வாறாக நாட்டை சாதாரண நிலைமைக்கு மறுபடி கொண்டுவருவதற்கு கோவிட் 19 தடுப்பூசிகளை நாட்டிற்கு உடனடியாக வரவழைத்த கெளரவ ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சிற்கு நன்றிகளை தெரிவிப்பதுடன் எமது பிரதேசத்தில் தடுப்பூசிகளை உரிய நேரத்தில் வழங்க தடுப்பூசிகளை பெற்றுத்தந்த வவுனியா பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் பணிமனையிற்கும் எமது நன்றிகளைத்தெரிவிக்கின்றோம்.
அத்துடன் எமது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தடுப்பூசிவழங்கலின் போது ஒத்தாசை வழங்கிய வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பணிமனை, வவுனியா வடக்கு வலையக்கல்வி பணிமனை, கனகராயன்குளம் வைத்தியசாலை, நெடுங்கேணி வைத்தியசாலை, புளியங்குளம் வைத்தியசாலை, வவுனியா வடக்கு பிரதேசசபை, இராணுவத்தினர், விமானப்படையினர், கிராமசேவையாளர்கள் அனைவரிற்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எல்லாவற்றிற்கும் மேலாக இந்த தடுப்பூசி வழங்கலை எமது பிரதேசத்தில் உரியநேரத்தில் வினைத்திறனான முறையில் விரைவாக வழங்குவதற்கு இரவு பகல் பாராது உழைத்த வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதார குடும்பநல உத்தியோகத்தர்கள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் நிர்வாகசேவை உத்தியோகத்தர்கள், பட்டதாரிப்பயிலுணர்கள், வாகன சாரதிகள், சுகாதாரசேவை உதவியாளர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அனைவரிற்கும் சிரம்தாழ்த்திய நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன் தடுப்பூசி வழங்கப்பட்டோர் பற்றிய எம்மால் வழங்கப்பட்ட விபரங்களை கோர்வையாக்கி தந்து அடுத்தடுத்த தடுப்பூசி வழங்கலின்போது தரவுகளை பதிவதை இலகுவாக்கிய Covid cell இற்கும் மனமார்ந்த நன்றிகள். “தடுப்பூசி உயிர் காக்கும்”.

சுகாதார வைத்திய அதிகாரி,
சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை,
வவுனியா வடக்கு

நேற்றைய தினம் எம்மால் நெடுங்கேணி மகா வித்தியாலயத்தை சேரந்த 12-15 வயதான மாணவர்களிற்கு pfizer தடுப்பூசி வழங்கப்பட்டது. இதன...
25/01/2022

நேற்றைய தினம் எம்மால் நெடுங்கேணி மகா வித்தியாலயத்தை சேரந்த 12-15 வயதான மாணவர்களிற்கு pfizer தடுப்பூசி வழங்கப்பட்டது. இதன்போது மாணவர்கள் மட்டுமல்லாது பெற்றோர்களும் தமது 3 ஆவது தடுப்பூசியை ஆர்வத்துடன் பெற்றுக்கொண்டனர்.

வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள பாடசாலைகளில் கற்கும் மாணவர்களில் 12 வயது முதல் 15 வயது வரையானவர்களி...
20/01/2022

வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள பாடசாலைகளில் கற்கும் மாணவர்களில் 12 வயது முதல் 15 வயது வரையானவர்களிற்கான பைசர் தடுப்பூசிகள் பின்வரும் பாடசாலைகளில் குறித்த தினங்களில் வழங்கப்படும். மாணவர்கள் அவர்களது பெற்றோர்/பாதுகாவலர்களுடன் வருகைதந்து தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்ளவும். 16 வயது முதல் 19 வயது வரையானவர்களிற்கான தடுப்பூசிகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளபோதும், யாராவது தடுப்பூசி பெறத்தவறியிருப்பின் அவர்களும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளமுடியும். 3 ஆவது (பூஸ்டர்) தடுப்பூசியை பெறத்தவறிய அதிபர், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் தமது தடுப்பூசி அட்டையை கொண்டுவருமிடத்து அவர்களிற்கும் தடுப்பூசி வழங்கப்படும்.

Address

Puliyankulam

Telephone

+94242051920

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vavuniya North MOH office posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Vavuniya North MOH office:

Share