19/07/2026
நேற்றைய தினம் 18/07/2026, சனிக்கிழமை
இவ்வருடம் தரம் 5 புலமைப்பரீட்சைக்கு முகம் கொடுக்கவுள்ள மாணவர்களுக்கான கருத்தரங்கு, வடக்கு பூண்டுலோயா மேல் பிரிவில் தொடர்ச்சியாக இயங்கி வரும் " நட்பின் சிறகுகள் நற்பணி மன்றம் " ஏற்பாட்டில், எமது தாய் பாடசாலையான *வடக்கு பூண்டுலோயா தமிழ் வித்தியாலயத்தில்* மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இக்கருத்தரங்கை வெற்றிகரமாக நடத்த உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றிகள்:
👉இக் கருத்தரங்கு நடாத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அதிபர் திரு. ருத்ரகுமார் அவர்களுக்கும்
வகுப்பாசிரியர் திரு. துஷ்யந்தன் அவர்களுக்கும்,
வளவாளராக கலந்து சிறப்பித்து, மாணவர்களுக்கு சிறந்த முறையில் கருத்தரங்கை முழுமையாக கற்பித்த மடகும்புற கலாபுவன தமிழ் வித்தியாலயத்தின் ஆசிரியர் திரு. ரொபின் ராஜ் அவர்களுக்கும் மிக்க நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
மேலும்
ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து பெற்றோர்களுக்கும்,
👉💫இரண்டு நேர தேநீர் இடைவேளைக்கும் உணவு பண்டம்(cream bun, jam bun) தந்து உதவிய LAKSHMI STORES OWNER A.சதீஷ் அண்ணா அவர்களுக்கு எமது சிறகுகள் அணி சார்பாக மிக்க நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்...💫🙏