30/04/2025
அஊதுபில்லாஹி மினசைத்தானிர்ரஜீம் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
புத்தளத்தில் பல்வேறு முன்மாதிரி வேலை திட்டங்களை 2019ல் இருந்து முன்னெடுத்து வரும் Dharussalaam Youths அணியானது இம்முறை இளைஞர்களைக் கொண்டு இளைஞர்களை பயிற்றுவித்தல் என்ற தொணிப் பொருளில் மூன்று நாள் பயிற்சி நெறியை 27,28,29 ம் திகதிகளில் நடாத்தியது. அதிலே சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு பற்றி சான்றிதழ்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை பெற்றதோடு இந்த நிகழ்வுக்கு அதிதிகளாக முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர்களுள் ஒருவரான திரு. நிஃமதுல்லா நிலோபர், Dharussalaam Youths ன் ஆலோசனைக் குழு உறுப்பினரும் SEC கல்வி நிலைய உரிமையாளருமான ஆசிரியர் திரு. A.C.M. றிபாயிஸ், Dharussalaam Youths ஆலோசனைக் குழு உறுப்பினர்களுள் மற்றும் ஒருவரும் School of Excellence ன் அதிபர் திரு.H.அஜ்மல், புத்தளம் பெரிய பள்ளியின் செயலாளர் வழக்கறிஞர் திரு. அஸீம், புத்தளம் மாவட்ட செயலகத்தின் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. S.A.M.பர்ராஜ், பிரபல உலவள ஆலோசகர் அஷ்ஷெய்க். இஹ்ஸான் ஹாமித், ஸாஹிரா தேசியக் கல்லூரியின் ஆசிரியர்கள் ஒருவரான ஆசிரியர் திரு. ஹகீம் கலந்து கொண்டனர். இந்த நிகழ்விலே மாணவர்கள் பெற்றோர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தோடு இந்த நிகழ்வின் வரவேற்புரையை Dharussalaam Youths அணியின் உப தலைவர் திரு. M.H.முராத் நிகழ்த்தியதோடு அதிதிஉரையை Dharussalaam Youths ஆலோசனைக் குழு உறுப்பினர்களுள் மற்றும் ஒருவரும் School of Excellence ன் அதிபர் திரு.H.அஜ்மல் அவர்கள் வழங்கியதோடு ஊக்குவிப்பு பேச்சை Dharussalaam Youths ன் தலைவர், Career Counselor, ஊக்குவிப்பு பேச்சாளர் திரு.M.R.M.ஷவ்வாப் நிகழ்த்தியதோடு நன்றியுறையை Dharussalaam Youths அணியின் நிர்வாக குழு உறுப்பினர்கள் ஒருவரான அஷ்ஷெய்க். R.H.ஹிஸ்லாஜ் நிகழ்த்தினார். ஏற்பாட்டுக் குழுவின் சார்பாக பங்கு பற்றிய மாணவர்கள் அதை ஊக்குவித்த பெற்றோர்கள் அதேபோல அனுசரணையாளர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் பரக்கத்தும் என்றென்றும் உண்டாவதாக
நாங்கள் இந்த நிகழ்வை அறிமுகப்படுத்தி Google form வெளியிட்டதிலிருந்து குறுகிய காலத்துக்குள் Google form ஐ நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது ஏனெனில் குறுகிய எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு மாத்திரமே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்ததால் இன்னும் 50க்கும் மேற்பட்ட மாணவர்களை நாங்கள் இந்த நிகழ்வுக்குள் உள்வாங்க முடியாமல் போனது இதற்காக ஏற்பாட்டுக் குழுவின் சார்பாக வருந்துகிறோம் மன்னிப்பு கோருகின்றோம். இனிவரும் காலங்களில் அதற்குரிய ஏற்பாடுகள் நடைபெறுமானால் ஏனையவர்களுக்கும் இவ்வாறான பயிற்சிநெறிகளை வழங்க தயாராக இருக்கின்றோம்.